‘சேலம் மத்திய சிறைச்சாலை-07’
என்று வில் வடிவில் எழுதபட்டிருந்தது.சிறைச்சாலையில் இருந்து வெளிபட்டார் வேணுகோபால்.முகம்
முழுவதும் கவலைகள் குடியேரிந்திருந்தன.பார்ப்பதற்கு நடுத்தர உயரமும்.அவரின் தொப்பை
சமீபகால சிறையின் உணவின் காரணமாக வற்றியும் காணப்பட்டார்.சற்று மாநிறம்,கடவுள் படைத்த
கண்கள் பாதி செயல் இழந்ததால் மனிதன் படைத்த மூக்கு கண்ணாடியே அவருக்கு கண்களாக செயல்பட்டுகொன்டிருந்தன.பல
கட்டங்களால் நிரப்பபட்ட சட்டையும் பழுப்பு நிற பேன்ட்டும் அணிந்திருந்தார்.
எவ்வளவு நாட்கள் தன் வாழ்நாளில் சிறைவாசம் இருந்தேன்,என்று
மனதில் நினைவுகளுக்கு உயிர் கொடுக்க தொடங்கினார்.
“கணம் நீதிபதி அவர்களே இதோ குற்றவாளி
கூன்டிலே நிற்க்கும் வேனயம்கோட்டை’வேணுகோபால்’என்பவர் பிரபல பத்திரிக்கை ஒன்றில் எழுத்தாளர்
மட்டுமல்லாமல்,திரைபடங்களுக்குவசனங்களும்,பல நாவல்களும் எழுதியுள்ளார் .சென்ற மாதம்
இவர் எழுத்தில் வெளிவந்த ‘கருப்பு நட்சத்திரங்கள்’ என்னும் நாவலில் ,இரு மதங்களை பற்றி
குறிப்பிட்டிருந்தார்,ஒன்று தாழ்ந்ததாகவும் மற்றொன்று உயர்வாகவும் கூறியுள்ளார்.இதனால்
சேலம் அம்மாபேட்டை பகுதியில் சம்மந்தபட்ட இருமதங்களை சார்ந்த மக்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதற்கான
சாட்ச்சியங்கள் அனைத்தும் தங்கள் பார்வைக்கு ஏற்கனவே சமர்பிக்கபட்டுவிட்டன.ஆதலால் இவருக்கு
தக்கதண்டனை வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்,என்று தான் மனம் செய்த பொய்கள்
அனைத்தையும் முற்றுபுள்ளி அல்லாமல் கக்கினார் அந்த வழக்கறிஞர்.
அங்கே அமர்ந்திருந்த மக்கள் யாரும் வேணுவிற்கு
தெரியவில்லை,பொழுதுபோக்கிற்காக அமர்ந்திருந்தனர்.ஆனால் இருவரை அடையாலம் கண்டான்,சற்று
கருமை நிறம் கொன்டு வேணுவை பாவமாக பார்த்துகொன்டிர்ப்பவன்,அவனின் ஒரே நண்பனான மகேந்திரன்.இன்னொருவன்
வெள்ளை கர்தா சட்டையும்,வேட்டியும் உடுத்தி வேணுவை பார்த்து நக்கலாக சிரிப்பவன் பனிவேந்தன்,அம்மாபேட்டை
நகராட்ச்சியின் செயலாளர் மட்டுமில்லாமல் , வேணு தற்போது கோர்ட்டில் நிற்க காரணமான அம்மாபேட்டை
நகராட்ச்சியின் தலைவர் சதாசிவத்தின் நண்பனுமாவான்.நான் இங்கே அசிங்கபடுவதை பார்த்து
ரசித்து வா என்று அவன்தான் இவனை அனுப்பி வைத்திருக்கவேண்டும்.
நீதிபதி அவர்கள் ஓர் பேப்பரில்
மும்முரமாக குற்றத்தையும் தண்டனையும் எழுதிகொன்டிருந்தார்.
‘கலவரம் ஏற்பட காரணம் நான் அல்ல,அந்த
சதாசிவமே.அவனையும் அவன் கட்சிகளும் இரவில் செய்யும் ஊழல்களையும்,குற்றங்களையும் பத்திரிக்கையின் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததால்தான்
நான் இப்போ இந்த கூண்டிலே.நான் எழுதிய எத்தனையோ கதைகளில் இதே நீதிமன்றத்தில் பல நிரபராதிகளுக்கு
தண்டனை வழங்கியிருக்கின்றேன்,ஆனால் இன்று எனக்கு தண்டனை வழங்கபோகிறார்கள்.
‘உங்கள் எழுத்துகளுக்கு நானும்
என் மனைவியும் அடிமை,உங்கள் நாவல்கள் அனைத்தையும் பொக்கிஷங்களாக வைத்துள்ளேன்’,என்று
மனதில் எண்ணிகொன்டவாரேயிருந்த நீதிபதி பெருமூச்சொன்றை விட்டுவிட்டு தீர்ப்பை வாசிக்கதொனடங்கினார்.
‘’குற்றம் சுமத்தபட்டிர்க்கும் வேணுகோபால் என்பவர்
அவர் நாவலில் மதங்களை பற்றி உயர்வாகவும் தாழ்வாகவும் குறிப்பிட்டுள்ளார்.அதனால் அம்மாபேட்டை
பகுதியில் ஏற்பட்ட மதகலவரத்திற்கும் காரணமாகின்றார்.இதனால் அவருக்கு இ.பி.கோ செக்ஷன்
153ன் கீழ் ஐந்து மாதங்கள் சிறைதண்டனை விதித்து இந்த கோர்ட் தீர்ப்பளிக்கின்றது’
நான்கு
மாதங்களுக்கு பிறகு
அதே கோர்ட்,அதே நீதிசக்ரவர்த்தி,அதே
நண்பன்,அதே பனிவேந்தன் ,அதே பொய்களை பொழியும் வழக்கறிஞர்,அதே குற்றவாளி கூண்டில் நான்.
வழக்கறிஞர் பாரபட்ச்சயம் பாராமல்
பொய்களை வாரிஇரைத்தார்.’’ குற்றவாளி கூன்டிலே நிற்க்கும்’வேணுகோபால்’என்பவருக்கு இதே நீதிமன்றம் ஐந்துமாதங்கள் சிறைதண்டனை விதிக்கபட்டிருந்தன.ஆனால்
அவரோ சிறைகாவலர்களை தாக்கி தப்பிக்கமுயன்றுள்ளார்.இதற்கான ஆதாரங்கள் உங்கள் முன் சமர்பிக்கபட்டுவிட்டன.ஆதலால்
குற்றவாளிக்கு இ.பி.கோ 224 ,225 மற்றும் 226ன் கீழ் மேழும் மூன்று மாதங்கள் சிறைவிதிக்குமாறு
கேட்டுகொள்கிறேன்’’
நீதிபதி வழக்கறிஞரிடம் ‘நீங்கள்
மறுபடியும் சட்டபுத்தகத்தை படித்துவிடுவது நல்லது,ஏனென்றால் செக்ஷன் 226 எப்போதோ நீக்கபட்டுவிட்டதே’
என்றார். கோர்ட்டில் சற்று கலகலப்பும் சலசலப்பும் ஏற்பட்டது.
நீதிபதி சம்பிரதாயமாக தீர்ப்பை
படித்துவிட்டு மேலும் மூன்று மாதங்கள் சிறைதண்டனையை பரிதாபமாக வழங்கினார்.
ஐந்து
மாதங்களுக்கு பிறகு
இப்போது,
இன்று நான் சிறைவாசி அல்ல.ஆனால்
இங்குள்ள மக்களால் அப்பட்டத்தை விரைவில் பெற்றுவிடுவேன்.இனி அவ்வாறே அழைக்கபடுவேன்.
நான் எந்த தவறும் செய்யவில்லை.
கருப்பு நட்ச்சத்திரம் நாவலில் எந்தவொரு மதத்தையும் பற்றி கூறவில்லை.பிறகு எப்படி அது
நாவலில் இடம்பெற்றது? .பிரின்ட் செய்யும் இடத்தில் மாற்றியிருப்பார்கள். ஐஞ்சு பத்து
துட்ட கொடுத்ததும் அத கவ்விகிட்டு , அந்த சதாசிவம் சொன்ன மாதிரி அடிச்சுருப்பான். ச்சே
பப்ளிஷ் செய்றதுக்கு முன்னாடி நான் அத ஒருதடவ படிச்சருக்கனும் என் தப்புதான்’.சரி ரென்டாவது
குற்றம்,சிறையில் இருந்து தப்பினாம்? எதற்கு நான் தப்பிக்கனும்?என் மனைவிய பாக்கவா?எனக்குதான்
திருமணமே ஆகலையே.சிறை செல்லும் வரை ‘பேனாவும் பேப்பரும்தான் என் மனைவி மகன் எல்லாமே.
இனி என்னால் பேனாவை தொடஇயலாது.ஏன்?மீண்டும்
பேனாவை எடு.அதனை கொண்டு எழுத்து என்னும் என் ஆயுதத்தினால் எழுதி அவனை பாக்டீரியா பாக்டீரியாவாக
கொல்லபோகிறேன்.அடிமுட்டாளே நீ என்னா கல்கியா? சிறையில் இருந்து வந்தவனை பத்திரிக்கையில்
எழுத அனுமதிக்க?.
வேனுவின் காலனிற்கு வந்தான்.பல
வீடுகள் புதிதாய் எழுப்பபட்டிருந்தன.எதிரே இருந்த மளிகைகடையின் ஓனர் மாரியம்மாள் இறந்திருக்கவேன்டும்,அதனால்தான்
அவள் மருமகள் கல்லாவில் மகிழ்ச்சிகரமாகஅமர்திருக்கின்றால்.எதிர் எதிர் வீட்டில் காதலன்
காதலியாக ‘செல்லசண்டை’ இட்டுகொன்டிருந்தவர்கள்
தற்போது கணவன் மனைவியாக ஒருவரையொருவர்‘கொல்ல’சண்டை இட்டுகொன்டிருக்கின்றனர்.என்னை
அனைவரும் மறந்துவிட்டனர்.என்னை பார்ப்பதே அ்பூர்வம் .நான் ‘வென்வானம்’ பத்திரிக்கையின்
எழுத்தாளன்{இப்போது அல்ல} என்பதை கண்டுபிடிக்கபோவதில்லை. மளிகை கடையில் இருந்த போன்
மூலம் மகேந்திரனை வரசொல்லி கட்டளையிட்டேன்.
என் ஓன்டா வாகனம் ஓல்டர் வாகனமாக
கரைபடிந்து கிடந்தது.வீட்டை திறந்தேன் பல மாதங்கள் பூட்டிகிடந்ததால் சிலந்தைகளும் கரப்பான்களும்
கொசுக்களும் வாடகை தராமல் குடியேரிருந்தன.அருகே இருந்த புத்தகஅலமாரியும் கண்களுக்கு
தென்படவில்லை.
வெளியே சென்று ‘புல்லட் உணவகத்தில்
நான்கு தோசை சாப்பிட்டார்.அங்கே சுவரில்,மாநாட்டிற்கு வருகை தரவிறுக்கும்’’’விண்ணுலகமும்
மண்ணுலகமும் பொண்ணுலகமாக மாற அயராது உழைக்கும் கர்னனே.நாட்டிற்கு நல்லதை படைக்கும்
பிரம்மனே, கெட்டதை துடைக்கும் எமனே. மனிதன் எழுச்சி கட்சியின் தலைவரே’’ நீவிர் வருக..அருகில்
சதாசிவம் இரு கைகளையும் கூப்பி சிரித்தவாரு ஒரு புகைப்படம். சகித்துகொன்டுவாறே வீட்டிற்கு
சென்றான்.மகேந்திரன் அவனை வருக வருக என வரவேற்றான்.
நீ எப்படா வீட்டுக்குள்ள வந்த?
இப்பதான்.நீ எப்படா ஜெயில்ல இருந்து
வீட்டுக்கு வந்த?அவங்க அனுப்பிவச்சாங்களா இல்ல நீயே வந்துட்டியா?
என்ன பாத்தா தப்பிச்சுவந்த மாதிரியா
இரு்ககு?
கோவபடாத,சும்மதான் காமெடி. உனக்கு
ஒரு விஷயம் தெரியுமா? உன்ன வெண்மேகம் பத்திரைக்கையில இருந்து தூக்கிட்டாங்களாம்,எடிட்டர்
மணி சொன்னாப்ல
அது நான் ஜெயிலுக்கு போகும்போதே
தெரிஞ்சதுதான.
இருவரும் பேசிகொன்டிருந்தபோதே,
சதாசிவத்தின் செயலாளர் பனிவேந்தனும் அவருடன் மூன்று அடியாட்களும் வந்தனர்.வேணுவும்
மகேந்திரனும் முகத்தில் கோவத்தை அப்பிகொன்டனர்
வணக்கம் எழுத்தாளரே, நலமா? ஜெயில்ல
வசதியெல்லாம் எப்படி இருந்துச்சு,நீங்க ரிலீஸ் ஆனதா பசங்க சொன்னானுங்க.
டேய் சும்மா நல்லவனுங்க மாதிரி
நடிக்காதடா,எனக்கு எல்லாம் தெரியும்.என்மேல பொய்கேஸ் போட்டது நீங்கதானு.
ஆமா நாங்கதான்.எங்க தலைவர் தான்.
எதுக்கு இப்படி செஞ்சிங்க?
அதான் உனக்கு தெரியுமே. எங்க கட்சி
பன்ற தவறெலாம் நீ தெரிஞ்சுகிட்டு பத்திரிக்கைல எழுதின,எங்க தலைவரும் எவ்ளோதடவ உன்ன
வார்ன் பண்ணாரு,ஆனா நீ அவர் வார்த்தைய மதிக்காம எழுதிட்டேயிருந்த.அதான்,உன் எழுத்துக்கு
முழுக்குபோட நினச்சோம், செயல்படுத்திட்டோம்.இப்ப பாரு , நீ எழுதின ‘காவலுக்கு விடுதலை’ நாவலோட கதை மாதிரியே உன் கதையும் மாரிருச்சு.ஹாஹா
உடனிருந்த மூன்று அடியாட்களுக்கும்
ஒன்றும் விலங்கவில்லை,ஆனாலும் சம்பளம் வாங்குவதற்காக சிரித்தனர் ஹா ஹா ஹா
மகேந்திரனுக்கு கோபம்தலைக்கேரியது.
சதாசிவத்தை பிடித்து வெளிதள்ள
முயற்சிசெய்தான்,ஆனால் தோழ்வியே.மூன்று அடியாட்களும் அவனை ஓர் பொம்மையை தூக்குவதுபோல்
தூக்கிபோட்டனர்.வேணுவிற்கு என்ன செய்வதறியாமல் நின்றான்,
இனி ஏதாவது ஒன்னு விவகாரமா உனக்கு
நடந்துகிட்டேயிருக்கும்,எதிர்கொள்ள தயாராயிரு.பனிவேந்தனும் அவன் அடிதாங்கிகளும் அங்கிருந்து
சென்றனர்.
மகேந்திரன் வேணுவை அவன் வீட்டிற்கு
அன்று இரவு அழைத்து சென்றான்.காலை வீடு திரும்பியதும் அந்த விவகாரங்கள் அரங்கேற்றப்பட்டிருந்தன.அவன்
ஹோன்டா வாகனம் போண்டாவை போல் பிரித்துமேய்க்கபட்டிருந்தன.வீட்டினுள் அவன் உயிராக நினைத்த
புத்தகங்கள் எல்லாம் தீயில் எறிக்கபட்டு சடலங்கலாக கிடந்தன.வேணுவிற்கு கோபம் வந்ததே
தவிர அவனால் சதாசிவத்தை ஒன்றும் செய்யயிலாது என்று நன்கு தெரியும்.
காலையும் மதியமும் உணவு உட்கொள்ளவில்லை
, சூரியன் தன் வேலைகளை கட்ச்சிதமாக முடித்துவிட்டு மறைந்து கொன்டிருந்த நேரம்.வேனு
அவனை பார்த்தான்.தற்சமயம் வேனுவின் எதிரி, ம.எ.க கட்சியின் தலைவர்.காரில் அமர்திருந்தவாரே
ஒருவனிடம் பேசிகொன்டிருந்தான்.
வேணுகோபால்’இதை விடகூடாது இதற்கு
ஒரு முடிவு இன்றே தெரியவேன்டும், என்னுடைய அனைத்து நாவல்களிலும் வரும் முடிவை போல்
‘மகிழ்ச்சி’யாக வேன்டும்.சதாசிவத்தை நெருங்கினான்.
வேணுவை பார்த்ததும் தன் நீண்டநாள்
சினேகிதனை பார்ப்பது போல் ‘’அட வேணு, எழுத்தாளர் வேணு வாப்பா எப்ப வந்த?எட்டு மாசம்
ஏதோ விவகாரத்துல மாட்டி ஜெயில்ல இருந்தியாம்?
‘உனக்கு தெரியாது பாரு, அனுப்பிவச்சதே
நீதான.’ என்று மனதில் எண்ணிகொன்டான்
பசங்க சொன்னானுங்க நீ இன்னைக்கு
ரிலீஸ்னு அதான் எப்படி இருக்கனு விசாரிச்சுட்டு வர பசங்கள உன் வீட்டுக்கு அனுப்பிவச்சன்.
ஏன் இப்படி பன்ற?
எப்படி?
நான் உங்களுக்கு என்னா பன்னன்?
நீயும் உன் கட்சி பன்ன தப்பல்லாம் எழுதனன்,அதுக்கு என் வாழ்க்கையே இப்படி ஒன்னும் இல்லாத
மாதிரி பன்னிட்ட.ஜெயில்க்கு அனுப்பன இப்ப வீட்ட நாசம் பன்ன.அடுத்தது என்னா பன்ன போர.இதுக்கு
என்னதான் முடிவு?
முடிவா?
ஆமா உனக்கும் எனக்கும் இருக்கர
பிரச்சனைக்கான முடிவு
‘முடிவுதான..இன்னைக்கு நைட் பாக்கதானபோர’,என்று
கூறிவிட்டு மாநாட்டிற்கு காரில் பறந்தார்.
நைட் முடிவு தெரியும்??என்ன முடிவு?
மகிற்க்கு போன் செய்து அழைத்தான்.அவன் வருகைக்காக மாரியம்மாள் கடையில் காத்திருந்தான்.அங்கே
ஒரு பழைய செய்திதாள்.படிக்கதொடங்கினான்,முதல் பக்க பொய்கள் சுவாரசியம் அளிக்கவில்லை.மூன்றாம்
பக்க செய்தி சுவாரசியமும் கூடவே கோபமும் அளித்தன.’’பிரபல பத்திரிக்கை எழுத்தாளரும்
நாவலாசிரியருமான வேணயம்கோட்டை ‘வேணுகோபால்’ கைது.மேலும் படிக்க ஆறாம் பக்கம் பார்க்க
கடந்தவாரம் வேணுகோபால் எழுதி வெளிவந்த
‘கறுப்பு நட்ச்சத்திரம்’ என்ற நாவலில் மதங்களை பற்றியும் மதவெறியற்கள் பற்றியும்தரகுறைவாக
எழுதியதால் இவரை போலீசார் கைதுசெய்தனர்.மேலும் மதம் குறித்து அம்மாபேட்டை பகுதியில்
இரு பிரிவினரிடையே அடிதடி ஏற்பட்டதால் அந்த பகுதியில் கலவரம் ஏற்பட்டது. மத பிரச்சனையை
தூன்டும் அளவிற்கு எழுதியதால் ,சமீப காலமாக
சேலத்தில் நடமாடிவரும் ‘போர்வீரர்கள்’ இயக்கத்தை இவர் சார்ந்தவரா? என்ற இன்னொரு பார்வையிலும்
போலீசார் விசாரனை நடத்திவருகின்றனர்
வேணுகோபால் சட்டென செய்திதாளை
இரண்டாக,நான்காக,எட்டாக கிழித்து எறிந்தார்.போலீசார் கூறிய பொய்களை எவ்வளவு அழகாகவும்,
கற்பனையாகவும் மெருகேற்றியுள்ளனர். இவ்வளவு நாட்கள் நண்பர்களாக தெரிந்த பத்திரிக்கை
நண்பர்கள் இன்று வேணுவிற்கு எதிரிகளாகவே தெரிந்தனர்.
மகி வந்தான்,இருவரும் வீட்டினுள்
சென்றனர்.
மதியம் சதாசிவத்த பாத்தன்
என்னடா சொல்ற?அவன பாத்தியா? அப்படினா
இன்னேரம் நியூஸ் வந்திருக்கனமே, ‘ம.எ.க. கட்சியின் சதாசிவம் அடையாலம் தெரியாத நபரால்
கொலை’ னும் ,கடையெலாம் பந்த் ஆரமிச்சுருக்கனுமே?
டேய் கொலை பன்ற அளவுக்கு நான்
பைத்தியம் இல்ல
ஓ..அப்போ அவன்கிட்ட போய், ஐயா
நீங்கள் எனக்கு செய்த உதவிகளுக்கு என்னா கைமாறு செய்யபோரன்னு தெரிலனு அவன் கால்ல விழுந்திட்டுவந்தயா?
டேய் நீ டென்ஷன கெலப்பாத.கண்டிப்பா
அவன எதாவது பன்வன்.இன்னைக்கு ஒரு முடிவு தெரியனும்னு சொன்னன்
சரி அவன் என்னா சொன்னான்?
இன்னைக்கு நைட் முடிவு தெரியும்னு
சொன்னான்.அதான் ஒரே குழப்பமா இருக்கு.
சரி இரு,நான் போய் சாப்பாடு வாங்கிட்டு
வந்தரன்.சாப்பட்டுகிட்டே யோசிக்கலாம்,என்று கூறி புல்லட் உணவகத்திற்கு சென்றான்.
வேணு சிந்தனையில் ஆழ்ந்தார் .நைட்
முடிவு தெரியும்.‘முடிவு’?
சடவென்று கதவுகள் தட்டபடும் சத்தம். தப் தப் தப்
மகியா இருப்பானோ? இல்லை இது கதவை
ஒரு கை தட்டும் சத்தம் போல் இல்லை பல கைகள் தட்டுவதை போல் உள்ளது,பயத்தில் உறைந்து
போய்நின்றான்.சட்டென கதவுகள் உடைத்துகொன்டு காலையில் பனிவேந்தனுடன் வந்த அடியாட்கள்
இந்தமுறை கொல்லவேன்டும் என்ற உணர்வுகளோடு வந்தனர்.கையில் கட்டையுடனும்,ஒருவன் கத்தியையும்
வைத்திருந்தான்.அந்த கட்டை வேணுவை பார்த்து சிரிப்பது போலிருந்தது, மற்றும் ,அவனை பார்த்து
’நான் உயிரற்றவன்தான் ஆனால் இன்று உன் உயிரை பறிக்கபோகின்றேன்’ என்று கூறுவதாக சிந்தித்தான்.
மூவரும் அவனை பார்த்து ஏளனமாக
சிரித்துகொன்டே அவனை நெருங்க , வேணுவோ அவர்களில் சற்று பலம் குறைந்தவனை அடையாளம் கண்டு
அவர்கள் சுதாரிப்பதற்குள் அவனை தள்ளிவிட்டு
கதவை அடைந்து வீதியை அடைந்தான்.பிறகு ஓடு ஓடு மரணம் துரத்துகிறது ஓடு என்று தனக்குள்
கூறிகொன்டே ஓர் எழுச்சிகொன்ட இளைஞனை போல் ஓடினான்.மூன்று ரௌடிகளும் தன் வாழ்நாளிலே
எதற்கு இவ்ளோ பெரிய உடம்பை வளர்த்தோம் என்று வேதனையை எண்ணிகொன்டே அவனை துரத்தினர்.
ஒரு குறுக்குசந்தை கண்டு அதனுள்
ஓடிய வேணுகோபாலுக்கு பிறகுதான் யோசித்தான், இந்த பாதையின் கோடியில் ‘இரண்டு ஆள் உயரத்திர்கு
சுவர் இருக்கின்றதே’ என்று. இப்போது அவன் மூளையில் , ‘’இதே போல் நீ எழுதிய ஒரு நாவலில்
கதைநாயகன் இதே பாதையில் செல்வான்.அவனையும் கொல்வதற்காக ஐந்து ரௌடிகள் பின் தொடர்வார்கள்.கதைநாயகன்
இதே பெரிய சுவரை தான்டினால் போதும் அந்த பக்கம்
இவன் காதலி இருப்பால் அவளுடன் சேர்ந்து விடலாம்.ஆனால் நீயோ உன் கையாலே அவன் அந்த சுவரை
தான்டவிடாமல் கொன்றுவிட்டாய்’ அதன் பாவம்தான் இன்று உன்னை பின்தொடர்கிறது நிச்சயம்
உனக்கு இறப்பு நிச்சயம்.’ அந்த சுவரை தான்டமுடியுமா?என்ற சந்தேகத்திலே அதை நோக்கி ஓடினான்.
பின்னே திரும்பினால், ‘ மவனே இன்னும்
ஓரிரு நிமிஷத்துல என் கைல சாவபோரடா என்று ஒருவன் ஆவேசமாக கூறி்கொன்டே வந்தான்,அவனை
பின்தொடர்ந்து மற்ற இருவரும் வந்தனர்.
சுவர் அருகே வந்தது. அதன் அருகே
பல செங்கள்கல் அடுக்கிவைக்கபட்டுருந்தன.வேணுவையும் அரியாமல் அவன் கால்கள்கல் அதில்
வைத்து இரு கைகளையும் சுவரின்மேல் அழுத்தி ஒரே தாவு,சுவரின் மறுபுரத்தை அடைந்தான்.அவனே
இப்போது நடந்ததை நம்பமுடியாமல் மேலும் ஓடதொடங்கினான் ..பின்னே திரும்பினால் அவர்கள்
வரவில்லை.
ஒரு கடையின் பின்னே நின்று யோசித்தான்’’
சதாசிவம் நைட்டு முடிவு தெரியும்னு சொன்னயே, இதான் அந்த முடிவா?. இதே நைட்ல உனக்கு
உன் ‘’முடிவ காட்றன்டா’’
வீடு பாதுகாப்பில்லை, மளிகை கடையின்
பின்னே ஒளிந்துகொன்டான்.அவன் வீட்டின் முன்னே இருவர் நின்று பேசிகொன்டிருந்தனர்.யாரென்று
தெரியவில்லை.வீதியில் விசில் அடித்து கொன்டே உணவுடன் நடந்து வந்த மகேந்திரனை அழைத்து
நடந்த விபரீதத்தை கூறினான்.மகியின் முகம் மிளகாயாய் மாறியது.இருவரும் பேசிகொன்டே மகியின்
வீட்டை நோக்கி நடைபயணம் மேற்கொன்டனர்.
வேணு அவன் உன்ன கொலபன்ற அளவுக்கு
வந்துட்டான்.இனி அவன் உன்ன கொல்லாம விடமாட்டான்.அதுக்குமுன்னாடி நானும் அவன கொல்லாம
விடமாட்டன்
டேய் முட்டாள் மாதிரி பேசாத .கொலை
பன்றானாம்
பின்ன காந்திய போல பேசரதா?எத்தனை
தவறுகள் பிறந்தாலும் எத்தனை உயிர்கள் இறந்தாலும் நான் அகிம்சை வழியில்தான் சதாசிவத்தை
வெல்வேன்.
காமெடி பன்ற நேரமா இது?ஏற்கனவே
நான் டென்சனா இருக்கன்.
ஆமா நாங்களாம் அப்படியே பென்ஷன்
வாங்கிட்டு ஜாலியா இருக்கோம் பாரு
மகி நீ ஒன்னு யோசிச்சுயா?நிஜமாலுமே
சதாசிவம்தான் என்ன கொல்றது்ககு ஆளு அனுப்பியிருப்பானா?இல்ல வேரயாராவது அனுப்பனாங்களா?
ஏன் இந்த திடீர் சந்தேகம்?
மகி நீ பர்ஸ்ட்ல இருந்து யோசிச்சு
பாரு.சதாசிவம் என்ன கொல்னும்னு நினச்சுருந்தா அவன பத்தி எழுதன அப்பவே கொன்றுப்பானே?
சோ சிம்பள் லாஜிக்டா வேணு.உன்ன
அணு அணுவா கொல்னும்.
இல்லடா எனக்கு வேர யாரோதான் பன்னராங்கனு
தோனுது..
ஓ அப்படியா ஷெர்லாக். யாருனு கண்டுபிடிங்க..
இப்போ வீடு வந்துருச்சு , சாப்டலாம் வா.
இருவரும் உணவு உண்டனர்,வேணு ஓய்வு
எடுப்பதற்காக ஒரு அறைக்கு சென்றான்.
30நிமிடத்திற்கு பிறகு.மகி தன்
போனை எடுத்து டயல் செய்தான்.மறுமுனையில் போன் எடுக்கபட்டது.
'எப்படி சார் இந்த தடவ தப்பிச்சான்?
பக்காவா எந்த பக்கம் வந்தா அவன தூக்கலாம்னு ப்ளான் எல்லாம் சொன்னனே இப்படி சொதப்பிட்டிங்களே?
…....
இல்ல சார்.உங்கமேல அவனுக்கு எந்த
சந்தேகமும் வரல.
…....
ஆமா சார்.அவன் வேரயாரோதான் பன்னிர்காங்கனு
யோசிச்சுட்டு இருக்கான்.
......
ம் என் வீட்லதான் இருக்கான்.வந்திங்கனா
இப்பவே அவன இடுகாட்டுக்கு கூட்டிட்டு போய்ரலாம்.
..
ம் சார் எப்படியாவது இந்த தடவ
எனக்கு போஸ்டிங் வாங்கிகொடுத்துருங்க .ம் வச்சரன்.சீக்கிரம் பசங்கள அனுப்பிவைங்க.
போன் துண்டிக்கபட்டது.
அதோடு மகியின் நட்பும் துண்டிக்கபட்டது.ஏனென்றால்
மகியின் பின் இருந்த சுவரில் ஒளிந்துகொன்டிருந்த வேணு அனைத்தையும் கேட்டுவிட்டான்.
வேணுவிற்கு இந்த கனம் ‘ உலகமே
வெளிச்சத்தில் ஒலிர இவன் இருந்த பகுதி மட்டும் இருளாக உணர்ந்தான்.இந்த உலகத்தில் தனியாக
தவிப்பதாக உணர்ந்தான். இனி இந்த வீட்டில் இருந்தால் என் உடலில் உயிர் இருக்காது.நண்பன்
எதிரியாக இருந்தால் பரவாயில்லை,துரோகியாக இருந்தால்?துரோகி. எப்படிடா இப்படி மனுஷங்க
தங்கள் சுயநலத்துகாக மத்தவங்க உயிர எடுக்ர அளவுக்கு மாறறாங்களோ?இதற்கெலாம் காரணம் சதாசிவம்.என்
பேனா முள்ள ஒடச்ச இப்ப நண்பன எதிரியாக்கிட்ட. உன்ன விடமாட்டன்டா.இப்பவே வரன்.
மகியிடம் வேணுவின் வீட்டிலிருக்கும்
அவன் வண்டியை எடுத்துவரசொன்னான்.அவனும் சிறிது நேரத்தில் வந்துவிடலாமென்று சென்றான்.
வேணு இப்போது தீவிரமாக தேடும் முயற்சியில் இருந்தான்.தேடுதல்.பணம் தேடுதல் ..8000ரு
எடுத்துகொன்டு வேகமாக மகியின் வீட்டை விட்டு வெளியேரினான்.பணம் கிடைத்துவிட்டது.சதாசிவம்
காத்துகொன்டிரு உன் மரணத்திற்காக.இதோ எமன் தன் வாகனத்தில் வந்துகொன்டிருக்கின்றான்
உன் உயிரை கொன்டுசெல்ல, மகி நீயும் தான்.தன் யோசனையிலிருந்து வெளியேரி சிங்கமெத்தை
இடத்திற்கு நடந்தே சென்றான்.அதில் ‘வேட்டையன்’ வீதியில் நுழைந்தான்.
அங்கே ஓடுகளால் நிரப்பபட்ட ஒரு
சிறிய பெரிய வீடு. வெளியில் ஒரு காவலன், அவனிடம் வேணு சென்றான்
டாபிடிய பாக்கனும்
நீங்க?
வேணுகோபால். வேணயம்கோட்டை வேணுகோபால்னு
சொல்லு அவருக்கு நான் பரீட்சையம்
உள்ளே சென்று திரும்பியவன், ‘
சார் நீங்களா? எழுத்தாளரா?அண்ணா உங்கள உல்ல வரசொன்னாரு. நீங்க உள்ள போங்க. உள்ளே சென்றான்
வேணு
டாபடி அமர்ந்துகொன்டிருக்க, அவன்
பின்னே இரு அடியாட்கள்
என்னா சார் இந்த பக்கம்?மறுபடி
எதாவது கதைக்கு தகவல் எதாவது தேவபடுதா?
இல்ல இனி அது தேவபடாது.
வேற?ஆமா சார் நீங்க ஜெயிலுக்கெலாம்
போய்ட்டு வந்துங்களாம்?பேப்பர்ல பாத்தன்.ஆடிபோய்ட்டன்.எதோ மதத்தையெலாம் பத்தி தப்பா
எழுதினங்களாமாம்? இத்தினி வருஷமா நான் கள்ளதுப்பாக்கி சப்பளை பன்ற தொழில் பன்றன்.நானே
இன்னும் ஒருதடவ கூட ஜெயிலாம் போனதில்ல. எப்படி இருக்கு ?
ம் பரவால நல்லாதான் இருந்துச்சு.
டாபடி இப்ப நான் இங்க வந்தது கொஞ்சம் சீரியஷ்
என்னா மேட்டருன்னு சொல்லுங்க
, சீரியஷா இல்லயானு நான் சொல்ரன்.
எனக்கு ஒரு துப்பாக்கி வேணும்
டப்பு டப்பு துப்பாக்கியெலாம்
நான் விக்கறதில்ல.அதெலாம் பக்கத்துல அண்ணாச்சி கடைலதான் விக்கறாப்புல.
தீவாளி துப்பாக்கி நான் கேக்கல.நான்தான்
சொன்னல.இது சீரியசான மேட்டருனு.எனக்கு ஒரிஜினல் துப்பாக்கி வேனும்.ட்ரிக்கர அழுத்தனதும்
ஒரு தோட்டா ஒளியின் வேகத்துல போய் ஒரு உயிர பறிக்குமே, அது வேணும்.
ஆச்சரியத்தில் வியந்தான் டாபடி.எதுக்கு
சாரே திடீர்னு உங்களுக்கு துப்பாக்கியெலாம்?
ஒருத்தன கொல்னும்.இல்ல இல்ல இரன்டு
மூனு பேர கொல்னும்.
ஓ அப்படினா தாராளமா உங்களுக்கு
தரலாம்.என்னா ரேட்ல எதிர்பாக்கரிங்க?
ஏழாயிரம்.
அச்சோ.நம்மலான்ட ஸ்டார்டிங்கே
பத்துதான.
எதாவது பாத்து பன்னு டாபடி.
சரி வேன்டபட்டவங்க அதனால தரன்,
பின்னால் இருந்தவனிடம் திரும்பி எம்1911 எடுத்துவா என்று கட்டளையிட்டான்.அவன் உள்ளே
மறைந்தான்.
இப்படிதான் ஒரு வாரத்துக்கு முன்னாள
இரன்டு பசங்க வந்தானுங்க.பெரிய துப்பாக்கி வேனும்னு கேட்டானுங்க. ஏ.கே 47, சொலயா ஒரு
லட்சம் கொடுத்தானுங்க.நானும் பட்டுனு வாங்கிட்டு சட்டுனு பொருள கொடுத்துட்டன். அப்பறம்
நேத்துதான் அம்மாபேட்டை இன்ஸ் போன் பன்னாப்பள .,’’ இரன்டு பசங்களுக்கு ஏ.கே துப்பாக்கி
கொடுத்தியானு கேட்டாப்ள. நானும் ஆமானு சொன்னன்.
டேய் முன்டம்.அறிவிறுக்கா?பணத்துகாக
யாரு என்னானு கூட விசாரிக்காம துப்பாக்கிய எடுத்து கொடுத்துர்வியா?அவனுங்க ‘போர்வீரர்கள்’
இயக்கத்த சேர்ந்தவங்களாமே?இப்ப என்னா சார் நா பன்றதுனு கேட்டன்?ம் அவனுங்க கொடுத்த
பணத்துல பாதிய காலைல என் வீட்டுக்கு அனுப்பிவச்சரு மீதியை நான் பாத்துக்ரன்னு சொல்லி
வச்சுட்டாரு.
இதையெலாம் அசுவாரசியமாக கேட்டுகொன்டிருந்தார்
வேணு.துப்பாக்கி வந்துவிட்டது.பணத்தை கொடுத்துவிட்டு அதை வாங்கினான்.
டேய் மஜா சாருக்கு அந்த துப்பாக்கிய
பத்தியும் எப்படி அத யூஷ் பன்னனும்னு சொல்லி கொடு.
தேவயில்ல. இந்த பிஸ்டல் எம்.1911
ஏசிபி ரகத்த சேர்ந்தது.மேடு இன் யு.எஸ்.மொத்தம் பன்னிரன்டு புல்லட் லோட் பன்னலாம்,
அன்ட் 45 வரைக்கும் ஏசிபி லெவல்.செம்ம பையன்.என் வேலைய முடிக்க கச்சிதமான ஆளு இவன்தான்’’
என்று கூறி அந்த பாதரச நிற பிஸ்டலை பின்னால் சொருகி்கொன்டார்.அங்கிருந்த மூவரும் ஆச்சரியத்தில்
இருந்தனர்.
சரி வரன் என்று கூறி அந்த இடத்தை
விட்டு வெளியேரினார்.
வெளியில் காவலுக்காக இருந்த இருவரும்
ஏதோ கதையடித்து கொன்டிருந்தனர்.வேணுவை பார்த்ததும் ஒருவன் ஓடிவந்தான்.
‘சார் ஒரு நிமிஷம் .நீங்கதான என்
தலைவனோட படத்துக்கு வசனம் எழுதிகொடுத்திங்க?குணா சொன்னான்.
யாரு உங்க தலைவன்?
அதோ அங்க பாருங்க, என்று அவன்
டூவீலரை காட்டினான்.அதில் அவன் தலைவன் சிரித்துகொன்ட மாதிரி புகைபடம் டூமில் ஒட்டபட்டிருந்தது.
இந்த மக்கள் மூடர்கள் என்று எண்ணியவாரே.
ம் ஆமா நான்தான் இவர் படத்துக்கு வசனம் எழுதினன்
சார் என்னமா வசனம் எழுதினிங்க.பிச்சுட்டிங்க.
அதும் எங்க தலைவரு வில்லன்கிட்ட பேசர வசனம் ரிப்பீட் க்ளாப்ஷ்.’’உனக்கு உன் உயிர் வேனுமா
இல்ல உன் உடம்பு வேணுமா ? யுவர் ஜாய்ஷ்’’ அப்பறம்
அந்த அரசியல் வசனம் ‘’ அரசியல் ஒரு சாக்கடை. அதுல நல்லதண்ணி கலந்தாலும் சரி கடல்தண்ணி
கலந்தாலும் சரி,பாதிப்பு சாக்கட தண்ணிகிள்ள’’.என்னா தத்துவம். எங்க தலைவன் மட்டும்
அரசியலுக்கு வரட்டும், வசனம் நீங்கதான்
வேணுகோபாலிற்கு முதலில் துப்பாக்கியெடுத்து
இதுபோல் உள்ள மூடர்களை கொல்லவேன்டும் போலிருந்தது.எல்லாத்தையும் அடக்கிகொன்டான்.அங்கிறுந்து
எதும் கூறாமல் நகர்ந்தான்.
மறுபக்கம்
மகி தன் போனையெடுத்து எண்களை தட்டினான்.அண்ணா
நாம நினைச்ச மாதிரியே நடக்குது.உங்களுக்கு செம்ம மூளைனா.நான் சதாசிவம்கிட்ட பேசற மாதிரி
நடிச்சுத உடனே அவன் நம்பிட்டான்.இப்போ அவன் சதாசிவத்த கொல்றதுக்கு வந்திட்டுருக்கான்.
ம் இந்த பனிவேந்தன் நினைச்சா அத
முடிப்பான்டா.அவன் சதாசிவத்த கொல்னும்னு எவ்ளோ ப்ளேன் பன்னன். அவன ஜெயிலுக்கு அனுப்பினது,
அவன் வீட்ட நாசம் பன்னது , அடியாள அனுப்பி அவன கொல்ற மாதிரி நடிக்கசொன்னது. அவன் அப்போ
சதாசிவமேல கோவம் வந்து அவன கொல்வானு நினச்சன். ஆனா அவன் ‘ இதெலாம் பன்றது சதாசிவமில்லனு’
யோசிக்க ஆரமிச்சுட்டான். அதான் நீ சதாசிவம் ஆளு மாதிரி நடிக்க சொன்னன்.இப்போ அவனுக்கு
வேர வழியே இல்ல, அவன்கூட யாருமே இல்ல. சோ கண்டிப்பா சதாசிவத்த போட்றுவான்.
செம்ம அண்ணே.சரி நீங்க எங்க இருக்கிங்க?
வேணுவ கண்டுபிடிச்சு அவன கூட்டிட்டு வரன்
கோகுலம் ரைஷ் மில்லுல நானும் சதாசிவமும்
இருக்கோம்.சீக்கிரம் அவன கூட்டிட்டு வா.
அத நான் பாத்துக்ரன் அண்ணா.போன்
துண்டிக்கபட்டது.எங்க போய்ர்ப்பான் இவன்?யோசித்துகொன்டே நடந்தான்.சிறிது தூரத்தில்
வேணு நடந்து செல்வது தெரிந்தது.அவனை சட்டென ஓடி பிடித்தான்.
வேணு நில்லுடா எங்க போர?
அந்த சதாசிவத்த கொல்றதுக்கு என்று
கூறினான்.அப்படியே உன்னையும் கொல்வன்டா என்று மனதில் எண்ணிகொன்டான்.
என்னாது சதாசிவத்த கொல்லவா, என்று
போலியான ஆதிர்ச்சியை வெளிபடுத்தினான்.
ஆமா.
அவன் எங்க இருக்கானு தெரியுமா?
உனக்குதான் தெரியுமே.சொல்லு அவன்
எங்க இருக்கான்?
எனக் எனக்கு அவன் எங்க இருக்கானு
எப்ப எப்படிடா தெரியும்?
சும்மா நடிக்காத. நீ அவன்கிட்ட
போன்ல பேசிட்டிருந்தத நான் கேட்டுட்டன்.
நீ நினைக்கர மாதிரிலாம் எதுமில்லடா.
நாம ரெண்டு பேரும் பதினொரு வருஷமா
ஃப்ரென்ட்ஸா இருக்கோம்.எப்படிடா இப்படி துரோகம் பன்ன மனசு வருது?
சாரிடா எல்லாம் பதவிக்கு ஆசபட்டுதான்.சதாசிவம்
இப்போ கோகுலம் ரைஷ்மில்ல இருக்கான்.
அதைநோக்கி இருவரும் நடந்தனர்.
மில்லில் வேலை எதுவும் நடக்கவில்லை.உள்ளே
சுற்றிலும் பணத்திற்கு ஏற்றவாரு மூட்டைகள் அடுக்கிவைக்கபட்டிருந்தன.அதன் நடுவே 60வாட்ஷ்
பல்பின் உதவியுடன் சதாசிவமும் பனிவேந்தனும் பேசிகொன்டிருந்தனர்.
வேணுவும் மகியும் அவர்களை அடைந்தனர்.சதாசிவம்
வேணுவை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தான்.
வேணுகோபால் இங்க என்னா பன்றிங்க?நான்
உங்கவீட்டுக்கு பசங்கள அனுப்பிவச்சனே பாத்திங்களா?
பதில் கூறாமல் தன் பின்னே உறங்கிகொன்டிருந்த
பிஸ்டலை எடுத்தான்.பனிவேந்தன் பொய்யான அதிர்ச்சியும் மனதில் மெய்யான சந்தோசத்தையும்
கொன்டான்.
பனிவேந்தன் ‘வேணு எதுக்கு இந்த
துப்பாக்கியெலாம்’
உங்கள கொல்லதான்டா.
சதாசிவம் பயம் தொற்றியது.‘’என்னா
எங்கள கொல்லபோரியா’ என்னா சொல்ற?
உண்மைய சொல்றன்.டேய் துரோகி மகி
நீயும் அவங்க ஆளுதான. அவங்ககூட போய் நில்லு.
சதாசிவத்திற்கு என்னா நடக்கிறது
என்றே புரியவில்லை.
வேணு நீ என்னா பன்றனே எனக்கு புரியல.
ம் இன்னமுமா புரில. நைட் முடிவு
தெரியும்னு சொன்னில. கொஞ்சநேரத்துக்கு முன்னாடி நான் பாத்தன், இப்போ நீ பாக்கபோர, என்று
கூறி பிஸ்டலை லோட் செய்தான்.
பனிவேந்தன்’ ’வேணு வேனாம்.எங்க
தலைவர உன்னால கொல்ல முடியாது.நாங்க கட்சில இருக்ரவங்க’.
அவன் கூறியதை கேட்காமல் ட்ரிக்கரை
ஒரே அழுத்து .சதாசிவம் என் உயிர் நண்பனே இதோ வந்துவிட்டேன் என்று கூறிகொன்டே புல்லட்
அவனை நோக்கி சென்றது.இதோ அவன் இதயத்தில் குடியேறிவிட்டது அந்த புல்லட்.
சதாசிவம் இறந்துவிட்டார்.
நான் என் எழுத்துகளோடு எவ்வளவு
சந்தோஷமா இருந்தன்டா ஆனா நீங்கலாம் சேர்ந்து என் வாழ்க்கைய அழிச்சுட்டிங்களே?
பனிவேந்தனும், மகியும் இப்போது
பலமாக சிரித்தனர்.
எதற்கு இப்படி இவர்கள் சிரிக்கிறார்்கள்
என்று வேணு முளித்துகொன்டிருந்தார்.வேணுவின் பிஸ்டல் இப்போது மகியின் பக்கம் திரும்பியது.
மகி ஒரு நிமிடம் சிரிப்பதை மறந்துவிட்டான்.பயம்
முளைத்துகொன்டது.
பனிவேந்தன் ‘’ வேணு ஒரு நிமிஷம்.நான்
உங்கிட்ட ஒரு சில உண்மையை சொல்லனும்.நீ இப்போ கொன்னயே சதாசிவம் அவன் ரொம்ப நல்லவன்தான்.உன்கிட்ட
நைட் முடிவு தெரியும்னு சொன்னானே அது என்னா முடிவுனு தெரியுமா? நீ திரும்ப பத்திரிக்கைல
எழுதனும்னு வென்மேகம் பத்திரிக்கைல இருந்து உன்கிட்ட பேசரதுக்காக நைட் உங்கவீட்டுக்கு
ஆளுங்கள அனுப்பிவச்சான்
மகி ‘அட அதான் உன்வீட்டு முன்னாடி
இரண்டு பேரு நின்னானுங்களா?’
உன்மேல பொய்கேஷ் போட்டு உள்ளதல்லனது,
வீட்ட நாசம் பன்னது , உன்ன கொல்ல ஆளு அனுப்பிச்சது எல்லாம் நான்தான்.இதுக்கு எலாம்
ஒரே காரனம் நீ சதாசிவத்த கொல்லனும்.அதுக்காகதான் இவ்ளோ ப்ளான்.
என்னா நடக்குது என்று தெரியாமலும்.முகத்தில்
ஆச்சரிகுறியை கொன்டும் பனிவேந்தன் சொல்வதை கேட்டுகொன்டிருந்தான்.
ஏன் நீ சதாசிவத்த கொல்ல வச்சம்னா,
ரென்டு காரணம் இருக்கு.
ஒன்னு சதாசிவம் இறந்தா அவனோட தலைவர்
போஷ்டிங் எனக்கு வரும். ஆனா மிகமுக்கியமான காரணம் , நீ எங்க கட்சிக்கு வசனகர்த்தாவா
வரனும். மேலெடுத்து உத்தரவு.
என்னது உங்க கட்சில சேரனுமா?
ஆமா, உன்னமாதிரி ஒரு எழுத்தாளன
, சிந்தனையாளனும் கிடைக்க இந்த நாடு கொடுத்துவச்சருக்கனும். உன்ன யாரும் சரியாவே பயன்படுத்துக்கள.
நீ மட்டும் எங்க கட்சில இருந்தா போதும், எதிர்கட்சிலாம் வாய பிளக்ர மாதிரி பிரசார பேச்சுகள்
மாறிவிடும்..இதுக்கெலாம் நீ எழுதனும். எங்க கட்சிகாக எழுதனும்’
வேணு என்னா செய்றது அறியாமல் இருந்தான்
உனக்கு எல்லாமே திருப்பிதரன்.நீ
தொடர்ந்து பத்திரிக்கைல எழுதுர மாதிரி ஏற்பாடு பன்றன்.எங்க கட்சில சேர்ந்துரு.அப்பறம்
நீ நாட்டுக்கு என்னா நல்லது செய்யனும்னு நினைக்கரயோ அதெலாம் செய்யலாம்.முடியாதுனு சொன்னினா
, தோ அங்க மூலைல ஒரு கேமரா இருக்குபாரு. அதுல நீ சதாசிவத்த கொன்னது எலாம் பதிவாயிரிக்கு.
வேணு சற்றுநேரம் யோசித்தான்.பின்’’
நா பத்திரிக்கைல கடைசியா ஒரு விசயம் எழுதனும் ஏற்பாடு பன்னு.அதுக்கு அப்பறம் என் முடிவ
சொல்றன்.ஆமா இப்போ சதாசிவத்த கொன்னது யாருனு போலீஸ் விசாரிப்பாங்களே?
ஹாஹா ஹா நாளைக்கு நியூஷ் பேப்பர்
பாரு தெரியும்.
மறுநாள் செய்திதாள்
‘ வேணயம்கோட்டை ஊறாட்சி மன்ற ம.ந.க
கட்சியின் ஆளுங்கட்சி தலைவர் நேற்று இரவு ‘ போர்வீர்ரகள் இயக்கத்தை சேர்ந்த இருவராள்
கொலை செய்யபட்டார்’ அடுத்த தலைவராக பனிவேந்தன் நியமனம்’’
நான்காம் பக்கத்தில்.
அரசியல் ஒரு சாக்கடைதான்.ஆனால்
அதை உருவாக்குவது மக்களே.அதில் இறங்கி சுத்தம் செய்தால் அதில் உள்ள கிறுமிகளை அழித்தாலே
அந்த தண்ணீர் குடிக்கதற்கு உகந்தது என்பதை நாம் மறந்துவிட்டோம்.அதனால் இப்போது நான்
அதில் இறங்கி சுத்தம் செய்யபோகிறேன்.
- வேணுகோபால்
இருபது வருடத்திற்கு பிறகு
பிரபல பத்திரிக்கை ஒன்றில்
சுவிஸ் வங்கி இந்தியாவில் கருப்புபணம்
வைத்துள்ளோர்களின் பெயர்பட்டியலை அவர்கள் பெயர்களின் முதல் எழுத்தும் கடைசி எழுத்தும்
வெளியிட்டுள்ளது.. இதில்
முதல் இடம் ; வ . கு
இரண்டாம் இடம் ; சி. எம்
மூன்றாம் இடம் ; வே . கோ