Friday, 1 April 2016

ஏ.ஆர் முருகதாஸ் – இயக்குனர் Part-2




ஒவ்வொரு முறையும் முருகதாஸை பற்றி படிக்கும் போதும் , எழுதும் போதும் எனக்குள் புது இரத்தும் ஓடுகிறதோ ? என்ற சந்தேகம் ஏற்படும் . அந்த அளவுக்கு என்னை ஈர்த்தவர் . இல்லை இல்லை அவரால் நான் கவரபட்டவன் . இந்தியாவில் எத்தனையோ இயக்குனர்கள் இருந்தும் நான் ஏன் முருகதாஸின் மேல் இவ்வளவு காந்தவிசை ஏற்பட்டதென்று ஒவ்வொரு தடவையும் என்னையே கேட்டுகொன்டிருக்கின்றேன் .

இவர் இயக்குனராக அவதரிக்கும் முன் என்னா செய்தார், இவரின் தூண்டுதல் யாரென்று பார்ப்போம் . மற்றும் இவரின் துணைஇயக்குனர்கள் பற்றியும் ஒரு அலசு அலசுவோம் .

முருகதாஸ் பள்ளியில் படிக்கும் காலத்திலே கதைகள் தயார்செய்து அதை மற்றவர்களிடம் கூறுவதில் வல்லவர் . இதனால் இவருக்கு கள்ளகுறிச்சி ஊரில் ‘கதை பைத்தியம்’ ( இயக்குனராக அவதரிக்கும் முன்பு ) என்ற பட்டமும் உண்டு . அதன் பிறகு மாயை உலகில் விளையாடுவதை பொழுதுபோக்காக கொன்டவர் . புரியவில்லையா? அதாங்க ‘ஸ்கெட்ச்-ட்ராயிங்’ . ஸ்கெட்ச்-ட்ராயிங்கில் அசுர புலியென்றே இவரை குறிப்பிடலாம் . இது இவரின் மற்றொரு பொழுதுபோக்கு . இப்போதும் இவர் ஷூட்டிங் இல்லா நாட்களில் வீட்டில் ஸ்கெட்ச் – ட்ராயிங் செய்வாராம் ( ஒரு பேட்டியின் போது கூறினார் ) .

இவரின் குடும்பத்திற்குள் சென்றால் ‘ஆ’வென்று வாயை பிழந்தாலும் ஆச்சரியப்பட இடமில்லை . அப்பா பாத்திரைக்கடை வைத்து நடத்திவந்தார் . இவரின் கூடபிறந்தவர்கள் மொத்தம் 5 பேர். மூன்று அக்கா , 2 தம்பிகள் . இவர்களுக்கிடையே ஒவ்வொரு நாளும் போட்டிநடந்த கொன்டேயிருக்கும் . எதற்கென்று கேட்கிறீர்களா ? இவரின் வீட்டில் இருப்பதோ ஒரே ஹால்தான்  மற்றும் ஒரே ஃபேன் தான். அதில்தான் இவர்கள் 8 பேரும் உறங்கவேண்டும் . அதனால் அந்த ஃபேனிற்கடியில் யார் தூங்கவேண்டுமென்று ஒவ்வொரு நாள் இரவும் போட்டி நிலவுமாம் .

முருகதாஸின் கனவு உருவா(க்)கியவர் யாரென்றால் , அது அவரின் அப்பாதான் (ஆறுமுகம்) . முருகதாஸின் ஒவ்வொரு ஸ்கெட்ச்-ட்ராயிங் மற்றும் சிறுகதைகளை படித்துவிட்டு மிகவும் சந்தோஷபடுவாராம் . மேலும் ‘இன்னும் நல்லா நிறையா எழுதனுமென்று’ ஊக்கபடுத்துவாராம் . முதலில் ‘நீ ஜார்னலிஸ்ட் ஆகலாமென்று’ கூறியவர் , அதன்பிறகு ‘நீ இயக்குனர்தான் ஆக வேண்டுமென்று’  முருகதாஸின் மனதில் விதையை விதைத்தார் . ஆனால் ‘போதிய வருமானம் பாத்திர தொழிலில் வராததால் , முருகதாஸை நல்லா படிக்கனும் , அப்புறம் அப்பா கூட போய் வேளைய பாக்கனும்’னு பல வாய்கள் ஊரில் அறிவுரைகள் பேச ஆரமித்தன . ஆனால் அவர் அப்பா ‘நீ கடைக்கெளாம் வரவேணாம் நீ நல்லா கதை எழுதுபா’வென்று உற்சாகமூட்டினார் .

அதன்பிறகு கல்லூரி முடிந்ததும் சினிமா கல்லூரியில் அப்ளிகேசன் போட்டும் கிடைக்காததால் , சினிமா வாய்ப்பு கிடைக்க சென்னை வந்தார் .  என்னாதான் கலைமணியிடம் துணைஎழுத்தாளராக சேர்ந்தாலும் சாப்பாடுக்கு காசு கிடைச்சருமா ? அதனால் அவர் தந்தை மாதாமாதம் 400 ரூபாய் இவருக்கு அனுப்பிவைப்பார் ,அதன் கூடவே ஒரு மோட்டிவேஷன் லெட்டரும் எழுதி அனுப்பிவைப்பாராம். அதில்தான் இவரின் சாப்பாடு மற்றும் பயண இதர செலவுகள்ள. ஆனால் பணதேவைகள் அதிகம் தேவைபட்டதால் நான் ஏற்கனவே கூறியபடி துணி துவைக்கும் வேளை பார்த்தார் .



இப்போது முருகதாஸ் கூறுவது ‘நான் ஒரு சினிமா கல்லூரியில் படித்திருந்தால் எப்படி படம் எடுக்கவேண்டுமென்று அதிகமாகவும் , எப்படி ஒரு ஸ்கிரிப்ட் எழுதவேண்டுமென்று குறைவாகவும் கற்றியிருப்பேன்’ ‘ .
அப்பாவை பற்றி குறிப்பிடும் போது ‘ நான் இங்க வொர்க் பண்ணும் போதுகூட எங்கிட்ட 10பைசா கூட வாங்காமல் என் மூன்று அக்காங்களுக்கும் சொந்தகாஷில் திருமணம் செய்துவைத்தவர் . அவரிடமிருந்துதான் கஷ்டங்களையும் சந்தோஷமாக ஏற்றுகொள்ள கற்றுகொன்டேன் ’ என்றார்

அதனால் “என்னோட இந்த இயக்குனர் அவதாரத்தை ஆரமித்துவைத்தவர் , என் தந்தையே” என்று பெருமையாக கூறுவார் முருகதாஸ் .

சரி குடும்பம் மற்றும் கஷ்டத்தை பற்றி பார்த்தோம் . அடுத்து இவரின் படங்களை பற்றி கூறவேண்டுமென்றால் அதற்கு தனிபதிவே வேண்டும். அதனால் இவரின் உதவி மற்றும் துணைஇயக்குனர்களை பற்றி பார்ப்போம் .( எனக்கு தெரிந்தவர்களை பற்றி சொல்கிறேன் , நான் குறிப்பிடாத பிறரை உங்களுக்கு தெரிந்தால் கீழே கமெண்டில் குறிப்பிடுங்கள் )

1 . சரவணன்

 

இவர் ‘எங்கேயும் எப்போதும்’ என்ற படத்தின் மூலம் மிகபிரசத்தி பெற்றவர் .அதன் பிறகு ‘இவன் வேறமாதிரி’ படமும் ஹிட் .ஆனால் இவர் அடுத்து எடுத்த ‘வலியவன்’ படம் மட்டுமே தோழ்வியடைந்தது.இப்போது  தெலுங்கில்  பிஸியான இயக்குனராக இருக்கிறார்..முருகதாஸின் ரமணா மற்றும் கஜினி ஆகிய படங்களுக்கு உதவிஇயக்குனராக பணியாற்றியவர்  நாமக்கலை சேர்ந்தவரான இவர்தான் முருகதாஸின் ஃபேவரட் . முருகதாஸின் எந்தவொரு தவருகளையும் வெளிப்படையாக கூறுபவர் . உதாரணமாக கஜினி படத்தில் தமிழில் இரண்டு கெட்டப்பில் வில்லன் இருப்பார் .ஆனால் இந்தியிலோ ஒரு கெட்டப்தான் . காரணம் இந்த சரவணன்தான் , இவர் வில்லன் இரண்டு கெட்டப்பில் இருந்தால் மக்கள் ஏற்றுகொள்ளமாட்டார்கள் என கூறினார். ஆனால் அதை முருகதாஸ் ஏற்றுகொள்ளவில்லை . இறுதியில் படத்தின் ஒரே ட்ராபேக்காக குறிப்பிட்டது இரண்டு கெட்டப்தான். அதனால் அந்த தவரை ஹிந்தி ரீமேக்கில் சரிசெய்துகொண்டார்

சரி இந்த உதவிஇயக்குனருக்கு முருகதாஸ் செய்த உதவிதான் என்னா?   இவரின் முதல் திரைப்படமான ‘ எங்கேயும் எப்போதும் ‘ படத்தின் தயாரிப்பளாரே முருகதாஸ்தான் .


 

இன்னும் பலர் இருக்கிறார்கள் அவர்களை பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

பயணம் தொடரும் …

No comments:

Post a Comment