Monday, 2 May 2016

முருகதாஸ் - இயக்குனர் பாகம் 3



முதலில் அனைவரும் என்னை மன்னிக்கவேண்டும் . ஏனென்றால் கடந்த ஒரு மாதமாக நான் ஏதும் எழுதவில்லை . ஆன்ட்ராய்ட் ஃபோனில் சிக்கி சின்னாபின்னாகமானேன் . எதும் தோன்றவில்லை . வாட்ஷ்அப் , ஃபேஸ்புக் என மாயவலையில் சிறிய பூச்சிப்போல் மாட்டிகொன்டேன் . அதிலிருந்து மீண்டுவரவே இந்த கடந்த 15 நாட்களாக போராடி ,இப்போது அந்த சிறையிலிருந்து வெளிவந்துள்ளேன் . ஆண்ட்ராய்டில் பல நல்ல விஷயங்கள் இருக்கின்றன  ஆனால் அனைவருடைய மனமும் கெட்ட விஷமங்களை நாடி செல்கின்றன என்பதை தெளிவாகபுரிந்துகொன்டேன் . இனி எப்பவும் போல் பல சினிமா தகவல்களை தினமும் எழுதவேண்டுமென்ற குறிக்கோளுடன் ஆரமிக்கின்றேன் .

கடந்த இரண்டு பதிவுகளாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸை பற்றி பார்த்துகொன்டிருந்தோம் . இப்போது அவருடைய துணைஇயக்கனுர்களை பற்றி பார்ப்போம்.
குறு எவ்வளியோ சிஷ்யனும் அவ்வழியே என்ற பழமொழி இவருக்கும் இவரின் துணைஇயக்குனர்களுக்கும் பொறுந்தும் . ஏனென்றால் பெரும்பாலும் இவரிடம் உதவிஇயக்குனராக இருப்பவர்கள் இவரை போலவேதான் உள்ளனர் .இவரின் ஆரம்பகட்ட படங்களில் பணியாற்றிய உதவி மற்றும் துணை இயக்குனர்கள் என்னா ஆனார்கள் என்றே தெரியவில்லை .ஆனால் கஜினி படத்திலிருந்து இவரின் படங்களில் பணியாற்றும் உதவி மற்றும் துணைஇயக்குனர்கள் தற்போது வெற்றிகரமான இயக்குனர்களாக உள்ளனர் .

TEAM  AR MURUGADOSS


( என் இமைகளுக்கு தெரிந்தவர்களை எழுதியுள்ளேன் . உங்களுக்கு இன்னும் பலர் தெரிந்திருந்தால் கூறவும் . ஆவலுடன் காத்திருக்கின்றேன் )

1 . சரவணன்




இவர் எங்கேயும் எப்போதும் என்ற படத்தின் மூலம் மிகபிரசத்தி பெற்றவர் அதன் பிறகு இவன் வேறமாதிரி படமும் ஹிட் .ஆனால் இவர் அடுத்து எடுத்த வலியவன் படம் மட்டுமே தோழ்வியடைந்தது. இப்போது  தெலுங்கில்  பிஸியான இயக்குனராக இருக்கிறார். முருகதாஸின் ரமணா மற்றும் கஜினி ஆகிய படங்களுக்கு உதவிஇயக்குனராக பணியாற்றியவர்  நாமக்கலை சேர்ந்தவரான இவர்தான் முருகதாஸின் ஃபேவரட் . முருகதாஸின் எந்தவொரு தவறுகளையும் வெளிப்படையாக கூறுபவர் .

உதாரணமாக கஜினி படத்தில் தமிழில் இரண்டு கெட்டப்பில் வில்லன் இருப்பார் .ஆனால் இந்தியிலோ ஒரு கெட்டப்தான் . காரணம் இந்த சரவணன்தான் , இவர் வில்லன் இரண்டு கெட்டப்பில் இருந்தால் மக்கள் ஏற்றுகொள்ளமாட்டார்கள் என கூறினார். ஆனால் அதை முருகதாஸ் ஏற்றுகொள்ளவில்லை . இறுதியில் படத்தின் ஒரே ட்ராபேக்காக குறிப்பிட்டது இரண்டு கெட்டப்தான் ( ஒரு இயக்குனர் என்னிடம் இவ்வாறாக கூறியிருந்தார் ). அதனால் அந்த தவறை ஹிந்தி ரீமேக்கில் சரிசெய்துகொண்டார்



சரி இந்த உதவிஇயக்குனருக்கு முருகதாஸ் செய்த உதவிதான் என்னா?   இவரின் முதல் திரைப்படமான எங்கேயும் எப்போதும் படத்தின் தயாரிப்பளாரே முருகதாஸ்தான் .



2. திருக்குமரன்



இவர் முருகதாஸின் 7ம் அறிவு மற்றும் துப்பாக்கி படங்களில் துணைஇயக்குனராக பணியாற்றியவர் . பின்பு 2013ம் ஆண்டில் ஏ.ஆர்.முருகதாஸின் கதையில் ஆர்.செந்தில்குமார் ( எதிர்நீச்சல் . காக்கிசட்டை படத்தின் இயக்குனர் ) வசனத்தில் ‘மான்கராத்தே’ என்னும் படத்தையெடுத்து இயக்குனரானார் . 2014ம் ஆண்டு வெளியான இந்தபடம் வணிகரீதியில் வெற்றிபடமாக அமைந்தது . மேலும் கடந்த பொங்கலன்று உதயநிதி நடிப்பில் வெளிவந்த ‘கெத்து’ படத்தின் இயக்குனரும் இவரே .

இவருக்கு முருகதாஸ் செய்த உதவி. ‘ மான் கராத்தே ‘ படத்திற்கு கதையளித்தது மட்டுமல்லாமல் , தயாரிப்பாளர் பி.மதனுடன் இணைந்து இந்தபடத்தை தயாரிக்கவும் செய்துள்ளார் .

3. ஆனந்த் சங்கர்



இவரும் முருகதாஸின் 7ம் அறிவு மற்றும் துப்பாக்கி படங்களில் முதன்மை துணை இயக்குனராக பணியாற்றியவர் . மேலும் 2014ம் ஆண்டு வெளிவந்த ‘ அரிமா நம்பி ‘ படத்தின் மூலம் இயக்குனர் அவதாரமெடுத்தார் . இப்படம் ரசிகர்களிடையும் வினியோகஸ்தர்களிடமும் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இப்போது இவர் விக்ரம் நடிப்பில் ‘இருமுகன்’ படத்தை இயக்கிவருகிறார் .

இவருக்கு முருகதாஸ் செய்த உதவி , ‘ துப்பாக்கி ’ படத்தின் தயாரிப்பாளாரான கலைப்புலி எஸ்.தாணுவிடம் இவரை அறிமுகபடுத்திவைத்தார் . அதன்பிறகு உருவானாதே ஆனந்த் சங்கரின் ‘அரிமா நம்பி’ .


4 . R அஜய் ஞானமுத்து



7ம் அறிவு மற்றும் துப்பாக்கி படங்களில் உதவிஇயக்குனராக பணியாற்றியவர், 2015ம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளிவந்த படம். தமிழ சினிமா உலகத்தை மட்டுமின்றி ரசிகர்களையும் திரும்பிபார்க்கவைத்தார் . ‘டிமான்டி காலனி’ படத்தை இயக்கி மிகபெரிய பெயரை பெற்றவர் இவர் . பேய்களுடன் விளையாடி கொண்டிருந்த தமிழ்சினிமாவிற்கு நிஜ பேயையும் , அதில் லாஜிக்காக பல விஷயங்களையும் புகுத்தியிருந்தார் . இப்போது இவர் ‘டிமான்டி காலனியின் இரண்டாம்பாகம் ‘ இயக்குவதாக பேச்சுவார்த்தைகள் அடிபடுகின்றன.

5. TN சந்தோஷ்



இவர் 7ம் அறிவு மற்றும் துப்பாக்கி படங்களில் துணைஇயக்குனராக பணியாற்றியவர் . இவர் கடந்த பிப்ரவரி மாதம் வெளிவந்து வசூல் வேட்டை நடத்திய ‘கணிதன்’ படத்தின் இயக்குனராவார் . மேலும் இப்படத்தின் கதை மிகப்பெரிய சமுதாய பிரச்சனையை கூறுவதால் , இவர் பலதரப்பட்ட விமர்சனர்களிடம் நன்பெயரையும் பெற்றார் .

6.ராஜ்குமார் பெரியசாமி



துப்பாக்கி படத்தின் துணைஇயக்குனராக பணியாற்றியவர் இவர் . தற்போது ஏ.ஆர் முருகதாஸின் தயாரிப்பில் ‘ரங்கூன்’ என்னும் திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார் .


6.விஜய் பாலாஜி


ஏ.ஆர். முருகதாஸின் பட்டறையிலிருந்து வெளிவரவிருக்கும் மற்றொரு இயக்குனர் . இவர் தற்போது ‘உல்ட்டா’ என்னும் திரைப்படத்தை இயக்கிகொன்டிருக்கின்றார் .


7. வெங்கட் மோகன்

இவர் முருகதாஸின் தமிழ் மற்றும் ஹிந்தியென 4 படங்களுக்கு இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். இன்னும் இவர் தனித்து படம் இயக்கவில்லை


மேலும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் , அவரின் துணை மற்றும் உதவிஇயக்குனர்களின் அனைத்து பட ப்ரோமோஸன் விழாக்களில் கலந்துகொள்வது மட்டுமல்லாமல் , அவர்களின் துணைநின்று உதவியும் செய்துவருகின்றார் .

இனி அடுத்த பகுதியில் முருகதாஸின் படங்களை பற்றி காண்போம்.

முருகதாஸ் - இயக்குனர் பாகம் 1.

முருகதாஸ் - இயக்குனர்  பாகம் 2



No comments:

Post a Comment