Saturday, 7 May 2016

24 - திரைவிமர்சனம்


முதலில் நாம் 5 வருடத்திற்கு முன்பு டைம் ட்ராவல் செய்து பார்த்தால் இந்த படம் விக்ரம் நடிப்பதாக இருந்தது . ஆனால் பல காரணங்களால் சூர்யா நடிக்கின்றார் என்பது 2 வருடத்திற்கு முன்புதான் தெரிந்தது .மேலும் இத்திரைப்படத்தின் இயக்குனர் விக்ரம் கே குமாரை திரும்பிபார்க்கவைத்த திரைப்படம் ‘யாவரும் நலம்’. இந்த திரைப்படத்திற்கு பிறகு , எப்போது அடுத்த படம் இயக்குவார் என்ற ஆர்வம் அனைவருடத்திலும் முளைவிட்டது . அதுமட்டுமில்லாமல் சூர்யா நடிப்பில்  வெளிவந்த மாற்றான், சிங்கம்-2( நார்மலாகதான் ஓடியது) ,அஞ்சான், மாஸீ என்கிற மாசிலாமணி ,போன்ற படங்கள் தோல்வியே . அதனால் தன் சொந்த 2D நிறுவனத்தின் மூலம் இந்த படத்தை தயாரித்ததால் இப்படம் மிக பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியது . அனைவரும் எதிர்பார்த்த ’24’  இன்று உலகம் முழுவதும் தமிழ் சினிமாவை மாற்றியமைக்க வெளிவந்துள்ளது .

கதையும் அதன் பாதையும்

1990-ல் சேதுராமன் என்ற விஞ்ஞானி, ‘ப்ராஜக்ட் 24’ என்னும் காலத்தை மாற்றியமைத்து டைம் ட்ராவல் செய்யும் ஒரு வாட்ச்சை கண்டுபிடிப்பார், ஆனால் அவருடைய அண்ணன் ஆத்ரியன் அந்த வாட்ச்சை அடையவேண்டுமென்பதற்காக சேதுராமனின் மனைவியை கொன்றுவிட்டு சேதுராமனையும் மற்றும் அவர் குழந்தையையும் கொல்வதற்காக அவரை தேடிசெல்வார் . சேதுராமன் அவருடைய வாட்ச் மற்றும் அவர் குழந்தையை ஒரு கேட்ஜட்டில் வைத்துக்கொன்டு ஒரு ட்ரையினில் ஏறிவிடுகிறார்  மற்றும் அதிலிருக்கும் ஒரு பெண்ணிடம்( சரண்யாமோகன்) குழந்தையை கொடுத்து வளர்க்க சொல்லிவிடுவார் . குழந்தையுடன் சேர்த்து வாட்ச்சிருக்கும் பாக்ஸையையும் கொடுத்துவிட்டு ஆத்ரியனிடம் மாட்டிவிடுகிறார் . சேதுராமனை கொன்றுவிட்டு ஆத்ரியன் குழந்தையை கொல்லநினைக்கும் போது , அந்த குழந்தை இருந்த கேட்ஜட்டில் கௌன்டன் ஓட, அதை பாம்ப் என்று எண்ணி ட்ரெயினிலிருந்த குதித்துவிடுகிறார் . அதனால் கோமாவிற்கு சென்றுவிடுகிறார் ஆத்ரியன் .

26 ஆண்டுகளுக்கு பிறகு ..2016-ல் ,

மணி தன் அம்மா சத்யாவுடன் (சரண்யா மோகன்) மகிழ்ச்சியாக ,வாட்ச் மெக்கானிக்காக வேளை செய்துகொண்டிருக்கின்றார் . டைம்ட்ராவல் செய்யும் வாட்ச் இருக்கும் க பாக்ஸை திறக்க சாவியில்லாமல்,அந்த பாக்ஸ் ஒரு வீணான பொருளாகவே அங்கிருந்தது . மறுபக்கம் கோமாவிலிருந்த ஆத்ரியன் மீண்டுவர, தன் 26 வருட காலத்தையும் அனுபவிக்கவேண்டுமென்பதற்காக , ‘ப்ராஜக்ட் 24’ டாக்குமென்டுகளை வைத்து , அதைபோலே ஒரு புதிய வாட்ச்சை உருவாக்கநினைப்பார் . அப்போது அந்தவீட்டை சுத்தம் செய்யும் போது பாக்ஸை திறக்கும் சாவி , விதியின் காரணமாக மணியை வந்தடைகின்றது ,அதன்பின் வாட்சை ஆக்டிவேட் செய்தவுடன்தான் தெரிகின்றது , அதன்மூலம் டைம் ட்ராவல் மற்றும் டைம் ஃப்ரீஸிங் செய்யலாமென்று அறிகின்றான் மணி .

மற்றொரு புறம் வாட்ச்சை செய்யமுடியாமல் திணறும் நேரத்தில் ,ஒரு ஐடியாவின் மூலம் வாட்ச் மணியிடம் இருக்கின்றது என்பதை  அறிந்த ஆத்ரேயன், மணியை கொன்றுவிட்டு வாட்ச்சை அடைகின்றான்.
………………………………………………    I N T E R V A L   ……………………………..

இதன்பிறகு நடக்கும் பல சுவாரசியமான , வில்லதனமான வியூகங்களையும் , கலர்ஃபுல்லான காதல் சம்பவங்களையும் படத்தை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.


எழுத்தும் இயக்கமும்

விக்ரம் கே குமார்  ( அலை , யாவரும் நலம் , இஷ்டம் , மனம் ஆகிய படத்தின் இயக்குனர் )
இயக்குனர் விக்ரம் கே குமார் அவர்கள் இத்திரைப்படத்தை 2009ம் ஆண்டே நடிகர் விக்ரமை வைத்து எடுப்பதாக இருந்தது. படத்தின் பூஜையன்று , விக்ரம் இப்படத்தின் திரைக்கதையை  மாற்றியமைக்கவேண்டுமென்று கூற, அவருடன் தயாரிப்பாளரும் சேர்ந்துகொள்ள படம் பூஜையுடனே ட்ராபானது .எப்பவும் போல் விக்ரம் இந்த மெகா ஹிட் படத்தை கோட்டைவிட்டுவிட்டார் .

அதன்பிறகு தெலுங்கில் பிஸியாகிவிட்டார் இயக்குனர் . அங்கிருந்தவாரே 3 வருடங்கள் படத்தின் திரைக்கதையில் பல டெக்னாலஜி மற்றும் கேரக்டரைஷேசன் மாற்றங்களை கொண்டுவந்தார் . இறுதியில் 2014 ம் ஆண்டு சூர்யா தன் சொந்த தயாரிப்பிளே படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார் .

அதன் பிறகு ஹாலிவுட் தரத்தில் உருவாக்கவேண்டுமென்று பல இடங்களில் படத்தின் ஷூட்டிங் நடத்தபட்டது . படத்தில் 60% VFX பணிகள் இடம்பெற்றதால் பெரும்பாலும் ஹாலிவுட் கலைஞர்களே பயன்படுத்தபட்டனர் .

‘24’ என்று படத்தின் டைட்டில் போட்டதுதான் நியாபகமிருந்தது அதற்குள் INTERMISSION போட்டுவிட்டனர் . அதன்பிறகு ஆரமித்ததும் தெரியவில்லை முடிந்ததும் தெரியவில்லை . ஆனால் படத்தின் ரன்னிங் டைம் 160 நிமிடங்கள் .  இப்படத்தில் டைம் ட்ராவல் , மற்றம் ஆத்ரியா கேரக்டர் உருவாக்கிய விதம் மிக மிக மிக அருமை .
அதும் மணி கேரக்டர் , ஃப்ரீஸிங் டைம் ஆன் செய்ததும்  , நிச்சயம் நீங்கள் அனைவரும் ஃப்ரீஸ் ஆவிர்கள் . படத்தின் இரண்டாம்பகுதி , நாமொன்று நினைப்போம் ,ஆனால் விக்ரம் குமார் ஒன்று காட்டுவார் . நிச்சயம் ‘அடேங்கப்பா’ என்று வாய் பிழப்பிர்கள் .
படத்தின் ஒரே பிழை , காதல் . தமிழ் சினிமாவில் புது கதைகள் சொல்லவருபவர்கள் செய்யும் தவறை இவர் சிறிது தான் செய்துள்ளார் . ஆனால் படம் செல்லும் வேகத்திற்கு காதல் காட்சிகள் சிறிது ‘ஸ்பீட் ப்ரேக்கரே’  , மற்றும் பெரிய பிழை சூர்யா 15 தடவை பேசும்வசனம் ‘ BASICALY AM A WATCH MECHANIC, எனக்கு இதெலாம் சர்வ சாதாரணம்’ . இந்த வசனம் மக்களிடையே ரீச் ஆகும் என்று நினைத்து விக்ரம் குமார் வைத்திருந்தால் , அது அவரின் பிழையே .

நடிகர் நடிகைகள்

சூர்யா
சேதுராமன் , மணி , ஆத்ரேயன் ஆகிய மூன்று கேரக்டரில் நான்கு கெட்டப்பில் , ஒவ்வொரு ஃப்ரேமிலும் வருகிறார் சூர்யா . மொத்ததில் இது சூர்யா படமே மற்றும் சொந்த படம் என்பதால் ரொம்பவே கஷ்டப்பட்டுள்ளார் . ஆத்ரேயன் கேரக்டர் , வில்லனாக நடிக்க மூயற்ச்சி செய்துள்ளார்  நன்றாகவும் வந்திருக்கின்றது . மொத்ததில் இந்த படம் சூர்யாவின் திரைபயணத்தில் வித்தியாசமான மற்றும் வசூல் சாதனை செய்யபோகும் படம்

சமந்தா
ப்ப்ப்ப்பா..என்னா அழகு , இதுவரை சமந்தாவை இவ்வளவு அழகாக எந்தவொரு படத்திலும் நான் கண்டதில்லை . இன்னும் சமந்தா கண்ணுக்குள்ளே நிற்கின்றார். ஆனால் எப்பவும் போல் இவரையும் காதலிற்காகவும் , இரண்டு பாடலுக்காகவும் மட்டுமே இயக்குனர் பயன்படுத்தியுள்ளார் .
அதுமட்டுமில்லாமல் , நித்யா மேனனுக்கும் படத்தில் வேளையில்லையென்றே கூறவேண்டும்.

அஜய்
ஆத்ரேயனின் நண்பராக படத்தில் கூடவே பயணிக்கிறார் . தன் அனுபவ நடிப்பை , வயதான மற்றும் இளைஞர் கேரக்டர்களை நன்றாக வெளிபடுத்தியுள்ளார்

இசையமைப்பாளர்

ஏ.ஆர்.ரகுமான்
விண்ணைதான்டி வருவாயா ஓ காதல் கண்மணி ஆகிய காதல் படங்களுக்கு இசையமைத்த , இசைப்புயலுக்கு இத்திரைப்படம் சவாலாக அமைந்துள்ளது . காரணம் , ‘காலம் என் காதலியோ ‘ பாடலை கேட்கும் போது தெரியும் , இப்படத்தின் பாடல் மற்றும் BGM வேறொரு பரிணாமத்திலிருக்கவேண்டுமென்று . ஆனால் அதை அசால்ட்டாக செய்துவிட்டார் ரகுமான் . படத்தின் இசை மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது .

ஒளிப்பதிவு

திருநாவுக்கரசு

‘ஹே ராம்’ ‘ஆளவந்தான்’ ‘க்ரிஷ்-3’ போன்ற 28 படங்களில் தன் ஒளிப்பதிவின் பலத்தை காட்டியவர் திரு என்கிற திருநாவுக்கரசு . இத்திரைப்படத்திலும் மிக பெரிய தூணாக இருக்கின்றார் . காதல் காட்சியில் கண்சிமிட்டாமல் பார்க்கவைக்கின்றார் , வயதான ஆத்ரியனின் காட்சியில் பயம் கொள்ள வைக்கின்றார் . 'காலம் என் காதலியோ' பாடல் காட்சி புது வித பறிஞாமமே ., மேலும் படத்தை ஹாலிவுட் தரத்திற்கு கொன்டுசெல்கிறது இவரின் ஒளிப்பதிவு, மொத்ததில் இவருக்குஒரு பெரிய சல்யூட்

எடிட்டர் ப்ரவீன் புட்டியும் மிகச்சிறப்பாகவே தன் வேளையை செய்துள்ளார் . ஆனால், I am a watch mechanic வசனத்தை கட் செய்யலாமென்று , இயக்குனருக்கு ஆலோசனை கூறியிருக்கலாம்.

VFX கலையிக்கனர்களின் வேளைகள் மிகமிக பாராட்டவேண்டிய ஒன்று .

ரசி்கனின் பார்வை

‘படம் போனதே தெரியலடா’ ஆனா காதல் பாடல்களும் ( ஏனென்றால் , படம் செல்லும் வேகத்திற்கு இவை தேவைதான, என்று கேட்கவைக்கும்) , இரண்டாம் பகுதியில் வரும் காதல் காட்சிகள் மட்டுமே பொறுமையை சோதித்தன.

என் பார்வை

தமிழ் சினிமாவை பொறுத்தவரை, சயின்ஸ் ஃபிக்ஷன் படங்களுக்கும், புதிய முயற்சிகளுக்கும் ரசிகர்கள் இடம் கொடுக்கின்றனர்( இன்று நேற்று நாளை ,பீட்சா, சூதுகவ்வும்) . ஆனால் பலபடங்கள் தோல்வியடைய காரணம், சரியான திரைக்கதையில்லாததே .இந்த ‘24’ படம் கொடுத்ததற்காக விக்ரம் கே குமாருக்கும் , சூர்யாவிற்கும் மிகப்பெரிய நன்றி . இதில் மிக வேகமான திரைக்கதையும், எதிர்பார்க்காத திருப்பங்களையும் கையாண்டுள்ளார் விக்ரம் கே குமார் மற்றும் காதலிலும் டைம்ட்ராவல் செய்வது புதுவித காதல். மொத்தத்தில் அனைவரும் பார்த்து இத்திரைப்படத்தை பார்த்து ஃப்ரீஸ் ஆவிர்கள் . 

No comments:

Post a Comment