சூப்பர் ஸ்டார் ரஜினி பா.ரஞ்சித் இயக்கத்தில் இணைந்தது தெரிந்தது முதல் போன மாதம் வெளிவந்த நெருப்புடா டீஸர் வரை பரபரப்பு கொளுந்துவிட்டு எரிந்தது. படம் எப்போது வெளிவருமென்று உலகமே காத்துகொண்டிருந்து ஒருவழியாக இன்று இந்தியா முழுவதும் வெளிவந்துள்ளது. கோடிகணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்துள்ளாதா? என்று பார்க்களாம்
கதையும் அதன் பாதையும்
தமிழர்களுக்காக போராடும் போராளியாக உருவெடுத்து பின்பு கேங்ஷ்டராக மாறிகிறார் . அவருக்கும் தன் எதிரியாளியான “43” என்ற வில்லன்களின் கேங்கிற்கும் இடையே நடக்கும் சண்டையின் போது கொலைகேஷில் ரஜினியை சிறைக்குஅனுப்பபட்டு 25 வருடங்களுக்கு பிறகு வெளிவருகின்றார் . மலேசியாவில் ‘43’ கேங்கின் கீழ் மாணவர்கள் போதைக்கு அடிமையாதல் , விபச்சாரம் மற்றும் பல பிரச்சனைகள் வளர்ந்திருக்கின்றன. சிறையிலிருந்து வெளிவந்த சூப்பர் ஸ்டார் இறுதியில் தன் குடும்பங்களுக்கு என்னா ஆனது என்பதை கண்டுபிடித்தாரா ? 43 கேங்கை ஒழித்துகட்டினாரா ? என்பதே படத்தின் இரண்டாம்பாதி.
எழுத்தும் இயக்கமும்
‘அட்டகத்தி’ என்ற தரமான படத்தையும் ‘மெட்ராஸ்’ என்ற அருமையான படத்தயும் உருவாக்கி புகழ் பெற்றவர் பா.இரஞ்சித். இவரின் படங்களில் சமூக பிரச்சனைகளை யதார்த்தமாக காட்டுவார். அதனாலே இவருகென்று தனி ரசிகர்கள் உள்ளனர் . இப்போது , ரஜினி என்ற மாஸ் கெத்து என்பதை அதிகமாக காட்டாமல் , இது ரஞ்சித்தின் படம் என்று இந்த கபாலியை காட்டியுள்ளார் . இதற்கு ஒரு தனிதைரியம் வேண்டும் .
படத்தின் முதல் நொடி முதல், கடைசி நொடி வரை இவரின் படமாகதான் தெரிந்தது. உண்மையை கூறவேண்டுமென்றால் படத்தின் முதல் 30 நிமிட வேகம் பிற்பாதியில் இல்லை . திரைக்கதையில் அழுத்தமில்லையென்றே சொல்லவேண்டும் . திரைக்கதை சொதப்பல் என்பது வேறு, யதார்த்தமனா திரைக்கதை என்பது வேறு. ஆனால் இது இரண்டையும் கலந்த திரைக்கண்ணோட்டத்தை படத்தில் காணலாம் . படத்தின் 8 மாத கால எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தைதான் தந்தது. என்னதான் உலகசினிமா பார்ப்பவர்கள் படம் செம்ம என்று சொன்னாலும் , படம் பார்க்கபோகும் 95% மக்கள் சாதாரண மக்களே . அதனால் அவர்களின் பார்வையில் படம் நன்று, சுமார் .
மெட்ராஸ் படத்தில் பணியாற்றிய அனைத்து ஆர்டிஷ்டும் இதிலும் வருவதால் என்னவோ , மெட்ராஸ் நியாபகங்களிலிருந்து விடுபடமுடியவில்லை. படத்தில் ரஜினி தமிழ் மக்களை பற்றியும் , நம்மை எவ்வாறு மற்றவர்கள் பார்க்கிறார்கள் என்பதை பற்றியும் கூறும் வசனம் க்ளாப்ஷ் விசில்களையும் அள்ளுகின்றது. மற்றபடி திரைக்கதையில் அதிக வேகமில்லை.
நடிகர் நடிகைகள்
சூப்பர் ஸ்டார்
சூப்பர் ஸ்டாரை திரையில் காண தான் கடந்த ஒரு வருடமாக தமிழ்சினிமாவே காத்துகொண்டிருந்தது. கபாலி மொத்தபடமும் நகர காரணமானவர் . கேங்ஷ்டராக கேரக்டராக இவர் வரும்போது நம் உடல் சிலிர்க்கின்றது. வயதானாலும் அழகும் ஸ்டைலும் மட்டும் மாறவேயில்லை. க்ளாப்ஸ் க்ளாப்ஸ் ,,,சாதாரண சீனையும் மாஸாக மாற்றும் திறமை இவரிடமே உண்டு. காதல் காட்சியும் , தத்ரூபமாக வாழ்ந்தவராக அருமையாக செய்துள்ளார் . ப்ளாஸ்பேக் காட்சிகள் ரஜினியை 1980 களில் கண்டது போல் செம்மயாக உள்ளார்.
ராதிகா ஆப்தே
படத்தில் காதல் காட்சிகளும் சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் , சிறப்பாக செய்துள்ளார்
தன்ஷிகா
செம்ம ரோல் . யோகி என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக செய்துள்ளார் .
கிஷோர் வின்ஷ்டன் சா ,
வில்லன்களாக மிரட்டுகின்றனர் . ஆனால் இன்னும் நன்றாக இவர்களை பயன்படுத்திற்களாம் .
அட்டகத்தி தினேஷ் , கலையரசன் ஆகியோரை வேண்டுமென்றே போட்டது போல் உள்ளது.
படத்தில் அனைவரும் நன்றாக , முடிந்தளவு தன் பங்களிப்பை கொடுத்துள்ளனர்.
இசை
சந்தோஷ் நாராயணின் இசையில் வெளிவந்த பாடல்களில் நெருப்புடா பாடல் ஏற்கனவே பட்டிதொட்டியெங்கும் பட்டயகெளப்பியது. மற்றபாடல்கள் படத்திற்காக கொடுக்கபட்டது என்று கூறினாலும் சுமார் ரகமே . ஆனால் எப்போதும் பின்னனி இசையில் சூப்பராக செய்பவர் இப்படத்தின் பின்னனி இசை சொல்லும்படியாக இல்லை. நன்றே . சூப்பர் ஸ்டாருக்கு உண்டான மாஸை ஓரிரு இடங்களில தன் இசையால் நிரப்பியுள்ளார் . ஆனால் மற்றவை எடுத்துகொன்டால் , ஜி உங்களுக்கு என்னதான் ஆச்சு ? என்ற கேள்வியே எழும்பும்
ஒளிப்பதிவு
படத்தின் தூணாக நிற்கின்றார் முரளி . தன் கேமரா மூலம் சூப்பர் ஸ்டாரை சூப்பராக காட்டுவதிலும் , மலேசியா , பாங்காக், ஆகிய இடங்களை தன் யதார்த்த பாணியை மீறாமலும் , மிக அருமையாக காட்டியுள்ளார்
எடிட்டர் பிரவீன் கே . எல் படத்திற்கு தேவையானதை கட் செய்து கொடுத்துள்ளார் .
ரசிகன் பார்வை
‘மச்சி படம் சுமார்தான்டா’ ஆனா ‘சூப்பர் ஸ்டார் திரும்பவந்துட்டாருனு சொல்லு ‘என்று போனில் தன் நண்பர்களிடம் கூறியவர்கள் பல பேர் .
என் பார்வை
இது சூப்பர் ஸ்டார் படம் இல்லை . ஆனால் ரஞ்சித் படமும் இல்லை . யதார்த்தம் என்ற பெயரில் கொஞ்சம் இழுத்துவிட்டார் . சூப்பர் ஸ்டார் என்ற சிகரம் தன் கையில் பொக்கிஷமாக கிடைத்தும் அதை ஓரளவே பயன்படுத்தியுள்ளார் . மொத்ததில் பல வருடங்களுக்கு பிறகு ஒரு முழு நீள சூப்பர் ஸ்டார் (க்ராபிக்ஷ் எதுமில்லாமல் ) படம் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.
ReplyDeleteKabali is a fantastic movie for Rajini acting and Ranjit concept. But somebody said it is a Dalit movie. I say strongly that It's not Dalit movie. It's a movie for all oppressed and suppressed. Be a honest to say any about this movie. ***Watch more***
Makizhchi!!! We should always support good thing. We can just forget the bad thing. But good thing should be supported when some one intentionally try to damage it.
After 10-20 years, people will realize the impact of Kabali movie. Because at that time also, common people will be oppressed and suppressed by some one.
Kabali says to fight for ur right; Go and fight yourself; don't expect others will fight for you (that's what the last scene says that when Rajini tells students "why you complain to me"). It means all should involve fighting for equal rights while taking care of family and business and personal life. It's a great concept!
Watch more Kabali!
By the way, I am not related to any way with Kabali movie or any one involved with that movie. But I was little frustrated to see the reviews when people write bad review with prejudice mind. Pa. Ranjit has clearly spoken about his vision yesterday. We need to bring the social change through mainstream cinema. It's one of the forethought of The Great CN Annnadurai. That's why he encouraged Kalaignar Karunanithi and MGR in politics. Cinema is an entertainment, but it is also a medium of change. It should not be just only for seeing girls interior skin or something else. So we should support the directors like Pa. Ranjit.