Saturday, 23 July 2016

அப்பா - திரைவிமர்சனம்



நான்கு நாட்களுக்கு முன்பு ‘அப்பா’ படத்திற்கு சென்றாகவேண்டுமென்று ( ஏனென்றால் கபாலி படம் அடுத்தநாள் வெளியாக இருந்தது , கண்டிப்பாக தியேட்டரை விட்டு அப்பா படத்தை துரத்திவிடுவார்கள் ) தியேட்டருக்கு சென்றுருந்தேன் . படம் வெளியாகி 20 நாட்களாகிவிட்டதே யாரும் வரமாட்டார்களென்று நினைத்தேன் , ஆனால் தியேட்டர் ஹெவுஷ்ஃபுல் காட்சிகாளாகதான் தொடங்கியது , அப்போது இந்த அப்பா மீது மேலும் நம்பிக்கை பூண்டது . இயக்குனர் சமுத்திரகனி மீது அளவற்ற ஈர்ப்பு ஏற்படக் காரணம் அவரின் இயக்கிய ‘ நாடோடிகள் ‘ மற்றும் ‘ நிமிர்ந்து நில் ‘  ஆகிய படங்களே . ஆனால் சமுத்திரகனி யாரென்று கேட்டால் , அவர் நடிப்பில் போது வெளிவந்த ‘சாட்டை’ படமே முதலில் கண்களுக்கு முன்வரும். அப்போது அவரின் மீது ஒரு மரியாதை எனக்கு ஏற்பட்டது. தொடர்ந்து அவர் நடித்த படங்களான ‘காடு’ , ‘வேளையில்லா பட்டதாரி’ , 'நீர்பறவை' , 'புத்தனின் சிரிப்பு' , 'விசாரணை' ஆகிய படங்களில் இவரின் கதாபாத்திரம் மதிப்பிற்குரியதாக இருந்தன  . அவர் தேர்வு செய்யும் கதாபாத்திரங்களும் சமுதாயத்தை சார்ந்த கதாபாத்திரமாகவே இருந்தன . ஆனால் சமீபகாலமாக அவர் நடித்த ‘பாயும் புலி’  ‘காதலும் கடந்து போகும் ‘  ‘ரஜினி முருகன் ‘  'அம்மா கணக்கு 'ஆகிய படங்களில் அவர் கேரக்டர் பேசும்படியாக இல்லை. ஏனோ அப்படங்களை அவர் தேர்வு செய்யக்காரணம் , ‘அப்பா’ படத்தை தயாரிப்பதற்காகவே எனக்கு தோன்றின . ‘ அப்பா ‘ படத்தின் ட்ரைலரிலே படத்தின் கதையை தெரிவித்துவிட்டார் . படம் பார்க்காதவர்களுக்கு படத்தை பற்றி கூறுகின்றேன் வாருங்கள் .

கதையும் அதன் பாதையும்


எனக்கு என் பையன் நான் நினைச்ச மாதிரிதான் இருக்கனும் , நான் சொல்றததான் செய்யனும் , கேக்கனும்னு நினைப்பவர் தம்பி ராமைய்யா . என்னா நடந்தா நமக்கு என்னா ? நாம உண்டு நம்ம வேளை உண்டுனு இருக்கனும்னு நினைப்பவர் நமோ நாராயணன் . இவர்கள் இருவர் செய்யும் தவறுகளை சுட்டிகாட்டியும்  , ஒரு அப்பாவாக மகன்களை எப்படி வளர்க்கவேண்டுமென்று உதாரணமாக இருக்கின்றார் சமுத்திரகனி . ஒரு தந்தையின் கடமைகள் , பொறுப்புகள் என்னாவென்பதையும் வெளிப்படையாக காட்டியுள்ளார் இந்த அப்பா.

எழுத்தும் இயக்கமும்



'உன்னை சரண்டைந்தேன்' படம் இவரின் முதல் படமாக அமைந்தாலும் 'நாடோடிகள்' படமே இவரை வெளிஉலகிற்கு அறிமுகம் செய்தது  . அதன் பிறகு 'போராளி' 'நிமிர்ந்துநில் 'ஆகிய படங்களை இயக்கினார் . ஆனால் இவை இரண்டும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லையென்றாலும் , இவரின் மதிப்பு மேலும் கூடியதே .

வெறும் 34 நாட்களில் இப்படத்தின் படபிடிப்பை எடுத்துமுடித்தனர் என்று கூறினால் நம்பும்படியாகதான் இருக்கும் . ஒரு இயக்குனராக தனக்கு என்னா வேண்டுமென்பதை அனைவருக்கும் நடித்து காட்டியே வேளை வாங்கியுள்ளார் .  ‘ அதிக மதிப்பெண் கொடுக்கம் பள்ளிகள் எவ்வாறு மாணவர்களை ட்ரீட் செய்கின்றன என்பதையும் இறுதியில் காட்டினாலும் , படத்தின் திரைக்கதை வழித்தவறிவிட்டதோ என்றே தோன்றுகின்றது ‘ . படத்தில் வசனங்கள் குண்டூசியைப் போல் கூர் தீட்டப்பட்டுள்ளன .  மேலும் இது ஒரு படமாக தோன்றவில்லை , ஒவ்வொரு காட்சியும் ஒரு செய்தியை கூறுவதாகவே இருந்தன . ஆனால் இப்படியொருபடத்தை கொடுத்ததற்கு மிகப்பெரிய நன்றி சமுத்திரகனி அவர்களே .

நடிகர் நடிகைகள்

சமுத்திரகனி

நடிக்கும் ஆசையில் சினிமாவிற்குள் நுழைந்தவர் , உடலமைப்பு சரியில்லை மேனரிசம் சரியில்லையென்று அனைவரும் இவரை ஒதுக்க , ‘நான் யாருன்னு திரையால் காட்டறன்டா ‘ என்று கூறி , விசாரணை படத்திற்கு தேசிய விருதே வாங்கிவிட்டார் . இப்படத்திற்கு என்னா தேவையென்பதை இவருக்கு தெரியுமென்பதால் , நடிப்பில் குறை கூறமுடியாது .

தம்பி ராமைய்யா

ஒவ்வொரு படத்திலும் இவரின் நடிப்பு உயர்ந்துகொண்டேபோகின்றன . சிறப்பான நடிப்பை இப்படத்தில் வெளிபடுத்தினாலும் , கொஞ்சம் ஓவர் ஆக்டிங் போல் சில காட்சிகள் தோன்றுகின்றன..

விக்னேஷ்

யாருனு தெரியுதா ! அட , நம்ம பெரிய காக்கா முட்டை விக்னேஷ்ங்க . குறைகூறமுடியாத அளவிற்கு நடித்துள்ளார் . உங்களுக்கு நல்ல எதிர்காலமுன்டு ஜி .

ராகவ்

தம்பி ராமையாவின் மகனாக நடித்திருக்கும் இவருக்குதான் கொஞ்சம் நடிப்பை வெளிபடுத்தவேண்டிய கட்டாயமிருந்தது . காரணம், படம் முழுவதும் பயத்தோடும் , திடீர் சிரிப்போடும் , அழுகையோடும் இருக்கவேண்டும் . அதை நன்றாக இவர் செய்திருக்கின்றார் .

நசத்

காமெடி கேரக்டரிலும் , சென்டிமென்டாக பேசுவதிலும் க்ளாப்ஷ் அள்ளுகின்றார் . அருமையான நடிப்பு திறமை .

கேப்ரியல்லா சார்ல்டான் , யுவ லக்ஷ்மி  , வினோதினி ஆகிய அனைவரும் நன்றே .

( ஆனா க்ளைமாக்ஷ்ல படம் சீரியஸா போய்ட்டுருக்கும் போது எதுக்கு சார், டாக்டர் ரோல்ல சசிகுமார்  வராரு ? ? தேவையில்லாதது )

இசையமைப்பாளர்
இசைஞானி இளையராஜா

படத்தின் மிகபெரிய பலமாகவும் , காட்சியமைப்பிற்கு பாலமாகவும் இருக்கின்றார் இசையின் அப்பா . பின்னணி இசை அட்டகாசம் .

ஒளிப்பதிவு  - ரிச்சர்ட் எம். நாதன்



அங்காடி தெரு , பானா காத்தாடி, கோ , சமர் , நான் சிகப்பு மனிதன் ,த்ரிஷா இல்லைனா நயன்தாரா ஆகிய படங்களை சிறப்பாக ஒளிப்பதிவு செய்த ரிச்சர்டா இது ? என்று கேள்வி எழுப்பவைக்கின்றது . என்னா சார் ஆச்சு உங்களுக்கு ? லென்ஷ் எதும் சமுத்திரகனி சார் வாங்கிதரலயா ? 5டி லென்ஷ்ல எடுத்தாற்போல் படம் உள்ளது . இது சமுத்திரகனியின் தவறா ? இல்லை, இவரின் தவறா ? என்றே தெரியவில்லை .

எடிட்டர் ஏ.எல் ரமேஷ் தன் பணியை நன்றாகவே செய்துள்ளார் .

ரசிகர் பார்வை

படம் முடிந்து வெளிவரும் போது , பாதி ஆடியன்ஷின் கண்களில் தூசி பட்டது போல் கண்களை தேய்த்துக்கொண்டு வெளிவந்தனர் . ஆனால்  , இப்படிலாம் யாருடா இருக்கமுடியும் ? மகனுக்கு பிடிச்ச பொண்ண எந்த அப்பாவாது வீட்டுக்கு கூட்டிட்டு வந்து பேசவிடுவாரா ? லாஜிக் நிறையா இடத்துல இடிக்குது .

என் பார்வை

படத்தின் டைட்டுல் கார்டிலிருந்து  தொடங்கிய ரசிகர்களின்  கைத்தட்டல் , இறுதியில் சமுத்திரகனி என்று வரும்வரை அடங்கவில்ல. இதுவே படத்தின் மிகபெரிய வெற்றி . ஓரிரு லாஜிக் இடித்தாலும் , நல்ல படம் .இன்று 25வது நாட்களை வெற்றிகரமாக கடந்து திரையில் ஓடிகொண்டிருக்கின்றது . வாழ்த்துகள் சமுத்திரகனி சார் .  அனைவரும் தியேட்டருக்கு ( எங்கயாவது ஒரு தியேட்டர்ல ஓடும் பாஸ் ) சென்று பாருங்கள் .

1 comment:

  1. Kandippa pakkanum parkavi inimel than. But your review realistic!!

    ReplyDelete