Thursday, 28 July 2016

இயக்குனர்கள் - ஒரு பார்வை பாகம் 2

நான் இங்கே குறிப்பிடும் இயக்குனர்கள் அனைவரும் இப்போதுள்ள கரெண்ட் இயக்குனர்களே   அதனால்  , மகேந்திரன் சார் , பாக்கியராஜ் சார் , பாண்டியராஜன் , பாரதிராஜா சார் , பாலுமகேந்திரா சார் ...etc  எங்கனு  கேக்காதிங்க . அப்பறம் இயக்குனர்களை பற்றி குறிப்பிட தகுதியென்பது அவசியமே இல்லை , இவர்கள் ஒரு திறந்த புத்தகம் , அதை நான் படித்து  என் பார்வையில்தான் இதையெலாம் குறிப்பிடுகின்றேன் . நான் எதையாவது விட்டுவிட்டாலோ , தவறான தகவல்களை குறிப்பிட்டிருந்தாலோ கமெண்டில் குறிப்பிடலாம் .

சென்ற பதிவில் இயக்குனர் ஷங்கர் மற்றும் ஏ.ஆர். முருகதாஸை பற்றி பார்த்தோம். அவர்கள் தயாரித்த படங்களையும் பார்த்தரலாம்

ஷங்கர் தயாரித்த படங்கள் (முதல்வன் இவர் தயாரித்த முதல் படம் )

1.காதல் ( பாலாஜி சக்திவேல் )
2.இம்ஸை அரசன் 23-ம் புலிகேசி ( சிம்பு தேவன் )
3.வெயில் ( வசந்தபாலன் )
4.கல்லூரி ( பாலாஜி சக்திவேல் )
5.அறை எண் 305-ல் கடவுள் ( சிம்பு தேவன் )
6. ஈரம் ( அறிவழகன் )
7.ரெட்டைசுழி ( தாமிரா )
8.ஆனந்தபுரத்து வீடு ( நாகா )
9.கப்பல் ( கார்த்திக் ஜி.க்ரிஷ் )

ஷங்கர் இயக்கும் படங்கள்தான் பிரமாண்டகளாக இருக்கும் போல  , ஆனால் இவர் தயாரத்த படங்களனைத்தும் சிறுபட்ஜெட் படங்களே ( இ.அ. 23ம் புலிகேசியை தவிர .காரணம் அந்த படத்தின் இயக்குனரே ஷங்கரின் துணை இயக்குனராக பணியாற்றிய சிம்பு தேவன் ). ஷங்கர் தயாரித்த படங்களை பார்த்தால் மேக்ஷிமம்  நெஞ்சினை உருகும் படங்களாகதான் இருக்கின்றன , ( 2. 5, 9,ஐ தவிருங்கள்  அவையனைத்தும் நெஞ்சை சிரிக்கவைக்கும் படங்கள் .)

முருகதாஸ் தயாரித்த படங்கள்

1.எங்கேயும் எப்போதும் ( சரவணன் )
2.வத்திக்குச்சி ( கின்ஷ்லின் )
3.ராஜா ராணி ( அட்லி )
4.மான்கராத்தே ( திருக்குமரன் )
5.10 எண்றதுக்குள்ள ( மில்டன் )
6.ரங்கூன் ( ராஜ்குமார் பெரியசாமி –ஃபில்மிங் )

கமர்ஷியல் கலைஞரென்றால் அது முருகதாஸ்தான் . தமிழ் , ஹிந்தி , தெலுங்கு என இந்தியாவின் முன்னனி மொழிகளில் படமியக்கும் வல்லமை கொண்டவர் . இவர் காலடியெடுத்து வைத்தால் அந்த படம் நிச்சயம் வெற்றிதான் . ஆனால் இவன் தயாரித்த படங்களில் எங்கேயும் எப்போதும் . ராஜாராணியை தவிர மற்றவை தோல்விதான்  (மான் கராத்தே சுமார் லிஸ்ட்தன் பாஸ் ) .

சரி இனி அடுத்ததற்கு போகலாம்..
இந்த பதிவில் சினிமாவை தனி ட்ராக்கில் பயணம் செய்யும் , நிருத்தமுடியாத மூன்று இயக்குனர்களை பார்க்கலாம் . உலக சினிமா ரசிகர்களுக்கு இந்த மூன்று பேரையும் பிடிக்காமல் இருக்காது.

பாலா




புகழ் பிடிக்காது , பணம் பிடிக்காது , ஆடம்பரம் தேவையில்லை , புது டெக்னால்ஜிகள் தேவையில்லை ( புது மியூஷிக் இன்ஷ்ட்ரூமென்ட்ஷ் கூட பயன்படுத்தமாட்டார் )  , ‘கர்வம்’ பிடித்த இயக்குனர் என்றே என் நண்பர்கள் இவரை குறிப்பிடுவதுண்டு . அதற்கு காரணம் பல விருது நிகழ்ச்சிகளில் பார்த்தால் உங்களுக்கு புரியும் . ஆனால் மிக மிக மிக சாதாரண மனிதர் . சினிமாவில் பொறுத்த வரை அசாதாரண மனிதர் . கீழ்வர்க்க தொழில்கள் , நாம் சாதாரண பார்ப்பதை வேருன்றி பார்ப்பவர் . இவர் படங்களனத்தும் சாதாரண கதையை கொண்டதே .ஆனால் மேக்கிங் என்றது முற்றிலும் மாறுபட்ட ஃபார்முலா . நிஜகாட்சிகள் போல நடிகர்களை மாற்றி , ஆர்ட் டைரக்டரிம் வேளைவாங்கி , இசை , நடனம் , நடிப்பு எல்லாம் எதார்த்தமாகவே இருக்கும் , படத்திற்காக என்று தனியாக எதுவுமே இருக்காது  , கொஞ்சம் கமர்ஷியலை பார்க்கலாம் ( வீட்டுக்கு பெயின்ட் அடிக்கனுமுனா பட்டி போட்டுதான ஆகனும் ) . உலக சினிமா ரசிகர்கள் இவரின் படங்களுக்கு ரசிகராக இல்லாமல் இருக்கமாட்டார்கள் ..

ரசிகர்கள் இப்போது விக்ரமை மிகபெரிய நடிகர் என்று கொண்டாட காரணம் இவர்தான் . அதுபோல , நடிக்கவே தெரில என்று விமர்சனத்திற்கு உள்ளாக்கபட்ட ஆர்யாவையும் அவன் இவன் படத்தில் நடிக்கவைத்தார் . மேலும் ஃபார்ம் அவுட்டிலிருந்த அதர்வாவை பெரிய அளவிற்கு கொண்டுவந்தார் . பெரிய பெரிய நடிகர்கள் இவரின் படத்தில் நடிக்க பயப்படுகின்றனர் , காரணம் நான் கூறிதெரியவேண்டியதில்லை , உங்களுக்கே தெரியும் .



பெரும்பாலும் இவரின் படங்களுக்கு இசையமைப்பாளரென்றால்  இளையராஜாதான் .ஆனால் ‘தாரை தப்பட்டை ‘ படத்தின் போது இருவருக்கும் எதிர்வீட்டு பிரச்சனை போல் என்றார்கள் . ‘பரதேசி’ படத்தில் ஜிவி யுடனும் , ‘அவன் இவன்’ படத்தில் யுவனையும் இசையமைப்பாளராக பயன்படுத்தினார் .


இவரின் படங்கள்

1.சேது
2.நந்தா
3.பிதாமகன்
4.நான் கடவுள்
5.அவன் இவன்
6.பரதேசி
7.தாரை தப்பட்டை

தாரைதப்பட்டை படம் மட்டும்தான் சுமார் ரகத்தை சேர்ந்தது . மற்ற அனைத்தும் டார்க்லி ஹிட் லிஸ்ட் சேர்ந்தது . அவன் இவன் படத்தை தவிர மற்ற அனைத்தும், அவார்டு வாங்கததே கிடையாது ( தாரைதப்பட்டை இந்த வருடம்தான் வந்தது ) , விருது விழா என்றால் , விருதுகளுக்கு பாலாவை மிக பிடிக்கும் போல  , ஓடி வந்து குழந்தையை போல் ஒக்காந்துகொள்கின்றது .

தயாரித்த படங்கள்

1.மாயாவி ( சிங்கம் புலி )
2.பிசாசு ( மிஷ்கின் )
3.சண்டி வீரன் ( சற்குணம் )
 பிசாசுவை தவிர மற்றவை பெரிதாக இல்லை . சண்டிவீரன் சுமார் லிஸ்ட் . மாயாவியை எதில் சேர்ப்பது என்றே தெரியவில்லை .


மிஷ்கின்



இரவு என்றாலே அனைவரும் அஞ்சுவார்கள் . ஆனால் இந்த மனிதர் தன் வாழ்க்கையே இருட்டில்தான் வாழ்கிறார் போல, இருட்டு என்றால் கொள்ளைஇஷ்டம் போல , சாதாரண மனிதனின் பகல் வாழ்க்கையையே இருட்டாக காட்டும் சினிமா கலைஞர் . தனக்கென்று ஒரு தனி ட்ராக்கை தான்னே உருவாக்கி , அதில் பயணிக்கும் மாயமான இருள் ரெயிலே இந்த மிஷ்கின் . ‘’ இவன்தான் மிஷ்கின் , இப்படிதான் கண்ணாடி போட்டுகிட்டே இருப்பான் , இப்படிதான் என் படம் இருக்கும் ‘’  . எவ்வளவு பெரிய கூட்டதிலும் மனதில் நச்சென்று நறுக்கென்று பேசி (ஏசி) யேவிடிவார் .

தனக்கென்ற கேமரா உக்தி , நடிப்பு , கலை என்று தன்னை தனிமையில் செதுக்கிகொண்டவர் . சினிமாவை சுவாசிப்பவர் , ஆளமாக சுவாசிப்பவர் ( ஆக்ஸிஜன கூட இவ்ளோ ஆளமா சுவாசிக்கமாட்டாங்க ) . பெரிய பெரிய நடிகன் தேவையில்லை , பெரிய பெரிய டெக்னீஷியன் தேவையில்லை , சிறு பொடியனாக இருந்தாலும் , அவனிடம் வேளைவாங்கும் அசாத்திய திறமைய கொண்டவர் . முடிந்தால் ‘பிசாசு’ படத்தின் மேக்கிங் வீடியோவை பாருங்கள் , பூவும் கல்லாய் மாறிவிடும் , மனிதனா இவர் ? என்று கேட்காதவர்கள் யாருமிருக்கமாட்டார்கள் . இவருக்கென்று தனி ரசிகர்  படையே உள்ளது  , தமிழ் சினிமா மட்டுமில்லாமல் , ஹாலிவுட் இயக்குனர் ஒருவர் ‘ உங்கள் படத்திற்கு நான் ரசிகன் ‘ என்று கூறவைத்தவர் ( பெயர் தெரியவில்லை ) .

இவரின் படங்கள்

1.சித்திரம் பேசுதடி
2.அஞ்சாதே
3.நந்தலாலா
4.யுத்தம் செய்
5.முகமூடி
6.ஓனாயும் ஆட்டுகுட்டியும்
7.துப்பறிவாளன் ( ஃப்லிமிங் )



இதில் நந்தலாலா ,யுத்தம் செய் ,முகமூடி ஆகிய படங்கள்  ரசிகர்களை மிகபெரிய ஏமாற்றத்திற்கு உண்டாக்கியது , அடுத்த அந்த வெற்றிடத்தை நிரப்பவேண்டுமென்று இயக்கிய ‘ஓனாயும் ஆட்டுகுட்டியும்’ என்ற படம் இதுவரை இனிமேல் அப்படியொரு படம் வருமா என்று தெரியவில்லை , ஆனால் விளம்பரங்கள் அதிகம் செய்யபடாமலோ என்னவோ, அந்த படம் ‘புதுபேட்டை’ போல ஆகிவிட்டது . வெளிவந்தபோது ஃப்ளாப் என்று கூறி , டிவியில் வெளிவந்தபோது ப்ப்ப்ப்ப்பாஆஆ என்னா படம்டா , என்று வாய் பிளக்கும் ரசிகர்கள் இருக்கதான் செய்கிறார்கள் . பிசாசு என்ற ஆசுவாசமான படம் அனைத்து ரசிகர்களையும் உருகசெய்தது . அடுத்த ‘துப்பறிவாளன்’ படத்திற்காக அனைவரும் வெய்ட்டிங் சார் .


செல்வராகவன்




தனிமனிதர்களின் வாழ்க்கையை துல்லியமாகவும் , காதலை வேறுபடுத்தியும் காட்டுவதில் வல்லவர் . காதல் படம் எடுப்பார் காதல் கலந்த காமெடி படமும் எடுப்பார் , ஹிஷ்டரிக்கல் ஃபேண்டஷி படமும் எடுப்பார் . இவர் இன்னும் ஆக்ஷன் படங்களில் மட்டும்தான் கால் வைக்கவில்லை . முதன் முதலில் காதலில் உள்ள காமத்தையும் , யாரும் கூறமுடியாத இளைஞர்களின் மறுபக்கத்தையும் வெளிச்சமாக காட்டிது இவரின் எழுத்தில் வெளிவந்த ‘ துள்ளுவதோ இளமை ‘ . அதன் பிறகு இவரின் இயக்கத்தில் வெளிவந்த ‘காதல் கொண்டேன் ‘  ‘ 7ஜி ரெயின்போ காலனி , மிகபெரிய ஹிட்டடித்து. இளைஞர்களின் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் பெரிதாக பேசபட்டார் . ஆனால் ‘ புதுபேட்டை ‘ படம் அப்போது வெளிவந்த படங்களிலே பெரிய ‘ப்ளாப்’ படமென்று கூறினர் . இப்போது ‘இதான் மச்சான் படம்’ என்று இளைஞர்கள் லாப்டாப்பிலும்  , ஃபேவரட் படமாகவும் , டிவியிலும் பார்த்துகொண்டிருக்கின்றனர் .

இவர் காதலை வேறுவிதமாக பார்ப்பவர் ( காமத்தை கூறவில்லை , வலியை உணர்த்தரன் பாஸ் ) . அதன்பிறகு இவர் எழுதிய ‘யாரடி நீ மோகினி’ திரைப்படம் மிகபெரிய ஹிட் . ஆனால் உயிரை கொடுத்து இயக்கிய  ‘ ஆயிரத்தில் ஒருவன் ‘ ‘மயக்கம் என்ன’ ‘இரண்டாம் உலகம்’ ஆகிய படங்களை விமர்சகர்கள் கொண்டாடினாலும் ,ரசிகர்கள் தூக்கியெரிந்தனர் . இப்போது ‘ நெஞ்சம் மறப்பதில்லை ‘ படத்தை இயக்கி முடித்தியுள்ளார் .



இவர் இயக்கிய படங்கள்

1.காதல் கொண்டேன்
2.7ஜி ரெயின்போ காலனி
3.புதுபேட்டை
4.ாயிரத்தில் ஒருவன்
5.மயக்கம் என்ன
6.இரண்டாம் உலகம்
7.நெஞ்சம் மறப்பதில்லை ( ஃப்லிம்மிங் )

இவர் எழுதிய படங்கள்

1.துள்ளுவதோ இளமை
2.யாரடி நீ மோகினி
3.மாலை நேரத்து மயக்கம்

No comments:

Post a Comment