ஒரு கல் ஒரு கண்ணாடி
படத்தின் வெற்றிக்கு பிறகு உதயநிதி நடித்த எந்த படமும் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை
கொடுக்கவில்லை. ஏதோ அந்த படமெல்லாம் அவர் நடிக்கவும், நடனம் கற்றுக்கொள்ளவும் எடுக்கப்பட்டதாகவே தெரிகின்றது. ஆனால் உதயநிதி நடித்தால்
நிச்சயம் ஒரு தடவையாவது பார்க்கலாம் என்ற நம்பிக்கை எல்லோரிடமும் இருக்கின்றது . இதுவரை
காமெடியன்கள் மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஷ் ஜெயராஜை மட்டுமே உதயநிதியின் படங்களில்
ஆதராவாக இருந்தனர் . முதல்முறையாக இவர்கள் யாருமில்லாமல் சோலோ ‘மனிதன்’ஆக களமிறங்கியுள்ளார் .
அதுமட்டுமில்லாமல்
இப்படத்தின் இயக்குனர் ‘ஐ.அஹமத்’ ‘என்றென்றும் புன்னகை’ என்ற வெற்றிப்படத்திற்கு பின்பு
இயக்கியிருக்கும் படம் என்பதாலும் , மேலும் இந்தபடம் ஹிந்தியில் வெற்றிபெற்ற ‘ஜாலி LLB’ படத்தின்
ரீமேக் என்பதாலும் , இசையமைப்பாளர் சந்தோஷ்நாராயணன் இசையமைத்த எந்தவொரு படமும் இதுவரை
தோல்வியடைந்ததில்லை , சுமாராகாவது இருக்கும் என்பதாலும் ,எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது
. சரி படத்திற்குள் செல்வோம் .
கதையும் அதன் பாதையும்
ஜெயிலுக்குள் செல்லவேண்டுமா?
கோர்ட்டில் பெய்ல் கிடைக்காமல் இருக்கவேண்டுமா? லாயர் சக்தியை (உதயநிதி) அணுகுங்கள்
, இதுபோன்று பொள்ளாச்சியே கலாய்க்கும் தோல்வி லாயராகவுள்ளார் உதயநிதி . இப்படி இருக்கும்
நேரத்தில் அவருடைய மாமா பொண்ணான ஹன்சிகாவை காதலிக்கிறார் . ஹன்சிகாவை பொறுத்தவரை உதயநிதி
,ஒரு கேஸிலாவது வெற்றிபெற்று நல்லபெயரை பெறவேண்டுமென்று நினைக்கின்றார் .உதயநிதியோ
அறியாமையான லாயராக இருப்பார். கோர்ட்டில் எப்படி வாதாடவேண்டும்? என்று கூட முழுமையாக
தெரியாதவர் . அதனால் ஹன்சிகா அவரை திட்ட, அந்த மனகாயத்தால் , நான் ஒரு நல்ல லாயர் என்ற
பெயரை பெறாமல் பொள்ளாச்சிற்கு வரமாட்டேன்,என்று சபதம் செய்துவிட்டு சென்னையிலிருக்கும்
அவருடைய மாமா விவேக் வீட்டிற்கு வந்துவிடுகிறார் . மூன்று மாதம் சென்னையில் ஒரு கேஸும்
கிடைக்காததால் ஊருக்கு திரும்பிவிடலாமென்று நினைக்கும் நேரத்தில்தான் , வான்ட்டடாக
ஒரு கேஷ் வருகின்றது .
சென்னையே உலுக்கிய
ஒரு சம்பவம்தான் , “ஒரு பெரிய பணக்கார வீட்டு மகன் குடிபோதையில் கிண்டி ப்ளாட்ஃபாமில்
தூங்கிகொண்டியிருந்த 6 பேர் மீது கார் ஏற்றி கொன்றுவிடுகிறார்” . ஆனால் அவருக்கு ஆதரவாக
கோர்ட்டில் லாயராக ஆஜராகிறார் பிரகாஷ்ராஜ் . இதுவரை பிரகாஷ்ராஜை எதிர்த்து யாரும் வென்றதில்லை
. அதனால் எளிதாக அந்த பணக்கார பையனை வெளியே கொண்டுவருகிறார் ,ஆனால் பிரகாஷ்ராஜ் எதிர்பார்த்த
பணம் அவர்களிடமிருந்து கிடைக்காததால், சாமர்த்தியமாக உதயநிதியை அந்த கேஷில் பொதுநல
வழக்கறிஞராக ஆஜராகவைக்கின்றார் . அதன்பிறகு பல சூழ்ச்சிகள் செய்கிறார் பிரகாஷ்ராஜ்
. அந்த சூழ்ச்சிகளிலிருந்து விடுபட்டு உண்மைக்காகவும் நேர்மையாகவும் கோர்ட்டில் போராடுகின்றார்
உதயநிதி.
இறுதியில் , கோர்ட்டின்
தீர்ப்பு பணம் பக்கமா? அல்லது ஏழைகளின் ( இறந்த
6 பேர் ) பக்கமா? என்பதே பரபரப்பாகவும் கலகலப்பாகவும் நகர்த்திச்செல்கின்றார் இயக்குனர்
அஹமத் .
எழுத்தும் இயக்கமும்
ஐ.அஹமத்
இவர் ஏற்கனவே ‘’வாமணன்’’ மற்றும் ‘’என்றென்றும்
புன்னகை’’ படத்தை இயக்கியுள்ளார்.
‘மனிதன்’ இப்படம் முழுக்க 'கோர்ட் ட்ராமா'வை அடிப்படையாக கொண்டு எடுத்துள்ளார்
அஹமத் . இந்த மாதிரியான படங்கள் நான் பார்த்தவரை கடந்த 5 ஆண்டு காலமாக ( தெய்வத்திருமகள்
பார்த்ததாக நியாபகம் ) எந்தவொரு படமும் தமிழில் வரவில்லை. அதனாலே இவருக்கு ஒரு பெரிய
க்ளாப்ஸ் . ஹிந்தி ரீமேக்காக இருந்தாலும் தமிழில் மாற்றியமைக்க சற்று சிரமபட்டுள்ளார்
மனிதர் . இவருக்கு பக்கப்பலமாக இருந்துள்ளார் இப்படத்தின் வசனகர்த்தா அஜயன் பாலா . இப்படத்தின் பலம் ‘சோர்வடைய செய்யாத திரைக்கதையே’ மற்றும் கொஞ்சம் மட்டுமே காதலை திணித்துள்ளது சிறப்பு
. அதுமட்டுமில்லாமல் கோர்ட்டில் வெறும் வாதாடல் மட்டுமிருக்காது , பல காமெடி காட்ச்சிகளும்
அதில் இடம்பெறும் என்பதையும் கூறியுள்ளார் . படத்தின் வசனங்கள் குறைவே. ஆனால் படத்திற்குள்
பொறுந்தும் . குறிப்பாக ஒரு சில வசனங்களும் , க்ளைமாக்ஷில் உதயநிதி ‘நீதிமன்றங்களை பற்றி ஒரு மனிதனின் மனநிலையை’ அப்படியே சொல்லும் வசனங்களும் ,அதன் பிறகு ராதாரவி பேசும் வசனமும் தமிழ்நாடு
நீதீ துறைக்கு நெத்தியடியாக அமைகின்றது . ‘கோர்ட் என்றால் பணம் கொடுத்தால் வெளியே வந்துவிடலாம்
, தண்டனையிலிருந்து தப்பிவிடலாம் என்று நினைக்காதீர்கள் , உண்மை நிச்சயம் வெல்லும்’(வெறும்
படத்தில்தான் நடக்கும்) , என்பதை இந்தபடத்தில் காட்டுகிறார் அஹமத்.
நடிகர் நடிகைகள்
உதயநிதி
இந்தபடத்திற்கு
இவர் சரியான தேர்வா என்று தெரியவில்லை . நிச்சயம் மற்ற நடிகர்கள் நடித்திருந்தால் இன்னும்
சிறப்பாகவே நடித்திருப்பார்கள் , இருந்தாலும் உதயநிதி இந்தபடத்தில் நன்றாகவே நடித்துள்ளார்
. ஆனால் இறுதிக்காட்சியில் இவர் பேசும் வசனத்திற்கு மட்டும் , இவரின் முகபாவனைகளை மாற்றியிருக்கலாம்
. அழும் காட்சிகள் இவருக்கு நடிக்க வரவில்லையென்றே சொல்லவேண்டும். ஆனால் இந்தபடத்திற்கு
தேவையானதை தந்திருக்கின்றார் உதயநிதி.
பிரகாஷ்ராஜ்
& ராதாரவி
இவர்களின் நடிப்பை
பற்றி குறைசொல்ல வேண்டுமென்றால் ஒருவர் பிறந்துதான் வரவேண்டும் . தங்கள் அனுபவ நடிப்பால்
பிரகாஷ்ராஜ் ஒரு க்ரிமினல் லாயராகவும் , ராதாரவி கோர்ட்டில் ஜட்ஜாகவுமே வளம் வருகின்றார்
. பிரகாஷ்ராஜ் கோர்ட்டை எதிர்த்து பேசும் வசனமும் சரி, உதயநிதியை மிரட்டும் காட்சிகளிலும்
சரி , சபாஷ் . இவரின் பல காமெடியான முகபாவனைகளை
படத்தில் காணலாம் . மேலும் இவர் பேசும் ஒவ்வொரு வசன உச்சரிப்பும் மிக புத்திசாலியான
லாயராகவே காட்டுகின்றன . மொத்தத்தில் மிக மிக மிக சரியான தேர்வு .
ராதாரவி சாரும்
மிக மிக கச்சிதமே . எந்தவொரு குறைகளுமில்லை .
ஹன்சிகா
& ஐஷ்வர்யா ராஜேஷ்
ஹன்சிகா எப்பவும்
போல் காதல் வலம்தான் வருகின்றார் . ஆனால் உதயநிதி சென்னை வர காரணமாகவும் இருக்கின்றார்
. இவருக்கு காட்சிகள் பல இல்லையென்றாலும் , தன் பங்களிப்பை முடிந்தவரை செலுத்தியுள்ளார்
ஐஷ்வர்யா ராஜேஷ்
ஒரு டிவி ரிப்போர்ட்டராகவும், பிரகாஷ்ராஜை பழிவாங்கவேண்டுமென்ற ஒரு எதிரியாகவும் வருகின்றார்
.முதலில் உதயநிதியை வெறுப்பதும் , பிறகு அவருக்கு உதவி செய்ய வரும் காட்சிகளும் நல்லது.
விவேக் காமெடியில்
கலகலக்க வைக்கிறார் .
முக்கிய
கதாபாத்திரமாக , படத்தின் க்ளைமாக்ஷில் கமலக்கண்ணனாக வரும் கேரக்டர் என்னை மிகவும்
பாதித்தது. அவரின் நடிப்பிற்கு ஒரு மிக பெரிய சல்யூட் . நிச்சயம் உங்களை கோலிவுட் பயன்படுத்திகொள்ளும்
.
இசையமைப்பாளர்
சந்தோஷ்
நாராயணன்
படத்தின் மிக பெரிய
பலமாக வருகின்றார் . ‘முன் செல்லடா’ ‘அவள்’
ஆகிய பாடல்கள் திரும்ப திரும்ப கேட்க தோன்றுகின்றன . பிண்ணனி இசையில் பிண்ணியெடுக்கின்றார்
. யதார்த்தையும் சரி, கோர்ட் காட்சிகளும் சரி, உயிர் கொடுக்கின்றார்.
ஒளிப்பதிவாளர்
மதி
இவரை கைத்தட்டி
பாராட்ட இரண்டு கைகள் பத்தாது . காரணம் ,இவரின் கேமரா நம்மையும் கோர்ட்டிற்குள் அழைத்து
செல்கின்றது . படத்திற்கு பக்க பலமாக இருந்துள்ளார்.( மேலும் இவர் , நான்மகான் அல்ல
, ஜீவா, என்றென்றும் புன்னகை, பையா , ஆகிய பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்
)
ரசிகனின் பார்வை
‘’நல்ல ஒரு படம்டா,
படம் நல்லாவேயிருக்கு’’ 2,3 தடவ பார்க்கலாம்’’ என்று வெளியே வந்த இருவர் பேசிகொன்டனர்.
என் பார்வை
‘ஏழைகளும் நடுத்தர
மக்களும் தங்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டுமென்று ‘ நாடிசெல்வது நீதிமன்றங்களே ..ஆனால்
அங்கேயும் பணம்தான் ஆளுகின்றன என்பதை தெளிவாக இப்படத்தில் திரையிட்டுள்ளார் . ஒரு அருமையான
சமுதாய படத்தை , கொஞ்சம் காமெடியுடன் கூறியுள்ளார் அஹமத் . ஆனால் முதல் 30 நிமிடம்
சற்று மெதுவாக நகர்கின்றன . மற்றும் உதயநிதி சென்னையிலிருந்து பொள்ளாச்சிற்கு வந்ததும்
‘கொண்டாட்டம்’ பாடல் தேவையில்லாதது,
மொத்ததில் இந்த
‘மனிதனை’ தாராளமாக அனைவரும் பார்க்கலாம்.
PLS CHANGE DILOGUE WRITER NAME ..விஜயன் பாலா இல்லை அஜயன்பாலா
ReplyDeleteநன்றி அண்ணா...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete