Friday, 1 April 2016

இன்று வெளியான படங்களை பற்றிய ஒரு பார்வை

ஏற்கனவே பிச்சைக்காரன் , காதலும் கடந்து போகும் , தோழா ஆகிய படங்கள் வெற்றிகரமாக திரையில் ஓடிகொண்டிருக்கின்றன . இதில் இன்று டார்லிங் – 2 , ஹலோ நான் பேய் பேசரன் , நாரதன் , உயிரே உயிரே மற்றும் ஹாலிவுட் படமான குங்ஃபூ பான்டா - 3 ஆகிய திரைப்படங்கள் களம் இறங்கியுள்ளன. இதில் வெளிவந்துள்ள 4 தமிழ்படங்களுமே அறிமுக இயக்குனர்கள்தான் இயக்கியுள்ளனர். 
  

இவற்றில் மக்கள் விரும்பும் மற்றும் பெரிதும் எதிர்பார்க்கும் படங்கள் என்னா என்னாவென்று பார்ப்போம்

1.ஹலோ நான் பேய் பேசுறேன்

          
இன்று தினத்தந்தி பேப்பரில் சினிமா பக்கம் சென்றதும் முதலில் கண்ணில் பட்டது இந்த படம்தான் . பேப்பரில் பாதி பக்கத்தை குத்தகைக்கு வாங்கியதுபோல் இதன் போஸ்டர் அச்சிடப்பட்டிருந்தது . காரணம் இந்த படத்தின் தயாரிப்பாளர் சுந்தர்.சி . ‘’ பேய் படங்கள் ( பேய்படங்களுக்கு  உண்டான மரியாதை உங்களாள போச்சேடா ) எடுத்தாளே கிட்டதட்ட போட்டபணத்தையெடுக்க தியேட்டர் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை தமிழ்சினிமாவில் பரவிவிட்டது . அதும் காமெடி டைரக்டர் சுந்தர்.சி தயாரிப்பு என்றால் நிச்சயம் நாம் லாபம் அள்ளிவிடலாமென்று ‘’ விநியோகஷ்தரர்களும் தியேட்டர் உரிமையாளர்களும் போட்டிபோட்டு கொண்டு இத்திரைப்படத்தை வாங்கியுள்ளனர் . அவ்னி மூவிஷ் சார்பில் சுந்தர்.சி தயாரிப்பிள் ,ஶ்ரீ தேனான்டால் ஃப்லிம்ஷ் இன்று தமிழகமெங்கும் வெளிவிடுகிறது . சேலத்தில் இத்திரைபடமே பல தியேட்டர்களை ஆக்கரிமித்துள்ளது.

ஹூரோவாக வைபவ் , மற்றும் ஹீரோயினாக ஐஸ்வர்யா ராஜேஷ் ,ஓவியா நடிக்க காமெடியர்களாக வி.டி.வி கணேஷ் மற்றும் கருணாகரன் மற்றும் சிங்கம்புலி நடித்துள்ளனர் . இந்த படத்தை S.பாஸ்கர் இயக்கியுள்ளார் . இவருக்கு இது முதல் படமே . பெறும்பாலான பேய் படங்கள் அறிமுக இயக்குனர்களாளே எடுக்கபடுகின்றன ( ஒரு பேய் படத்தை எடுத்து ஈசியா சினிமாவில் முத்திரை பதிக்குவேண்டுமென்ற நினைப்பு ) . இந்தபடத்தின் இசையமைப்பாளர் இதற்குதானே ஆசைபட்டாய் பாலகுமாரா புகழ் சித்தார்த் விபின் ஆவார் . அதனால் நிச்சயம் பாடல்கள் சுமாராவதிருக்கும் . மேலும் படத்தின் ஒளிப்பதிவை ஏற்றுகொன்டுள்ளார் பானு முருகன் . மங்காத்தா , தடையற தாக்க ,மீகாமன் போன்ற பல படங்களுக்கு எடிட் செய்த N.B.ஶ்ரீகாந்த் இந்தபடத்திற்கு எடிட் செய்துள்ளார் . இப்படம் காமெடி மற்றும் ஹர்ரர் படமாக உருவாகியுள்ளது.

ஹலோ நான் பேய் பேசுறேன் படம் ‘ மக்களால் பேசபடுமா ? என்று இன்று தெரிந்துவிடும் .


2. டார்லிங் – 2



சாம் ஆண்டனின் இயக்கத்தில் கே.ஞானவேல் ராஜா தயாரிப்பிள் போனவருடம் வெளிவந்த ‘டார்லிங்’ என்ற வெற்றிபடத்தின் சீக்குவளாக உருவாகியுள்ளது டார்லிங்-2 . ஆனால் இப்படத்தின் இயக்குனர் சாம் ஆண்டன் அல்ல , சதீஷ்சந்திரசேகரன் ஆவார் . இவர் சிறுவயதில் தன் நண்பர்களுடன் ஒரு ட்ரிப் சென்றுள்ளார் . அங்கே நடந்த சம்பவங்களை அடிப்படையாக கொன்டே உருவானதுதான் இந்த டார்லிங்-2 .

கலையரசன் , ரமீஷ்ராஜா , மாயா , காலி வெங்கட் மற்றும் ஹரி நடித்திருக்கிறார்கள் . ரதன் இசையமைத்துள்ளார் , விஜய கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார் . இவரின் சிறப்பான ஒளிப்பதிவு படத்தின் ட்ரைலரிலே நான் அறிந்துகொன்டேன் . மற்றும் படத்திற்கு எடிட் செய்துள்ளார் மதன் .
இதுவும் பேய் படமாக உருவாகியுள்ளதால் மக்களுக்கு எத படத்திற்கு செல்லலாம் என்ற குழப்பம் ஏற்படலாம்

இன்று தெரிந்துவிடும் இந்த டார்லிங் மக்கள் மனதை வருடுகிறாலான்று.


3. நாரதன்




நகுள் ,பிரேம்ஜீ மற்றும் ஹீரோயினாக நிகிஷா நடிக்கும் இப்படத்தை டைரக்ட் செய்துள்ளார் நாகா வெங்கடேஷ் . மணி சர்மா இசையமைத்துள்ளார் . சஞ்சய் லோக்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார் ,மற்றும் சிஜீத் குமரன் எடிட் செய்துள்ளார் .இப்படத்தை வெற்றிவேல் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் சஜீத் வி நம்பியார் தயாரித்துள்ளார் .

2013ஆம் ஆண்டே பூஜை போட்ட இப்படம் நடிகர்கள் மற்றும் நடிகையின் கால்ஷீட் காரணமாக வாலு படம் போல் இழுத்துகொன்டே போனது .ஆனால் ஒருவழியாக படத்தின் இயக்கனரின் விடாமுயர்ச்சியால் வெற்றிகரமாக இப்படம் முடிக்கபட்டு இன்று வெளியாகியுள்ளது .ஆனால் மக்கள் மத்தியில் இப்படத்திற்கு மூன்றாமிடமே கொடுக்கபட்டுள்ளது

இந்த நாரதனை மக்கள் ஏற்றுகொள்வார்களா ? முடிவு இன்று தெரிந்துவிடும்


4.உயிரே உயிரே




விக்ரம் கே குமார் எழுத்து மற்றும் இயக்கத்தில் தெலுங்கில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைபடமே இஷ்க் . இந்த படத்தின் தழுவலே உயிரே உயிரேவாக உருவாகியுள்ளது . இப்படத்தை இயக்கியுள்ளார் A.R. ராஜசேகர் .தயாரித்துள்ளார் ஜெயபிரதாப் மற்றும் அமர் சிங் . இப்படத்தில் ரசிகர்களின் ஒரே எதிர்பார்ப்பு ஹீரோயினாக ஹன்சிகா நடித்துள்ளார் . அனூப் ரூபன் இசையமைத்துள்ளார்  . R.D.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார் . சுராஜ் கவி எடிட் செய்துள்ளார் .

ஒரு வெற்றிபடத்தின் தழுவல் என்பதால் இப்படம் சுமாராகவாது இருக்கும்.
பொறுத்திருந்து பார்ப்போம்

5.குங்ஃபூ பாண்டா-3



ஹாலிவுட் படங்களை இன்றைய கல்லூரி இளைஞர்களும் , விமர்சகர்கள் மட்டும்தான் தியேட்டரில் சென்று பார்க்கிறார்கள் .

ஏற்கனவே இந்தபடத்தின் 1 மற்றும் 2ஆம் பாகங்கள் பெரியவெற்றியை பெற்றவை. ஆதலால் இதன் மூன்றாம் பாகமும் பெரிய அளவில் எதிர்பார்க்கபட்டது . இப்படம்  கடந்த ஜனவரி மாதம் ஆங்கிலத்தில் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்தது. ஆனால் தமிழில் இன்றே வெளியாகியுள்ளது . நிச்சயம் ரசிகர்கள் இந்த படத்தை தமிழ் ரசிகர்கள் விரும்புவார்கள் என நம்புகிறேன் .

இந்த 5 படங்களில் எந்த படத்தை மக்களால் காணபடு்கின்றன, எந்த படங்கள் காணாமல் போகபடுகின்றனவென்பது நாளை முழுவிவருமும் தெரிந்துவிடும் .

No comments:

Post a Comment