குறிப்பு ; ( இந்த
சிறுகதையின் மூலக்கதையை கூறி, இதை எழுத தூண்டிய என் நண்பன் சி.பிரசாத் அவர்களுக்கு
என் நன்றிகளை தெறிவித்துகொள்கிறேன். )
மேலும் ; இக்கதை
சிறிது NON-LIENEAR முறையில் எழுதபட்டுள்ளது. அதனால் சற்று பொறுமையாக படிக்கவும் .
கனவுகள்
கலைவதேனோ
-பார்கவி தி
கன்னியாகுமரி மாவட்டம்
, ஊர் பெயர் சரியாக அவனுக்கும் , அவளுக்கும் தெரியவில்லை. அவன் நண்பன் பிரபா அவற்றை
கூறினான்.
‘மச்சி சந்துரு
, நீ எதுக்கும் கவலபடாதடா. இது நம்ம ஃப்ரென்ட் வீடுதான் . ஒருத்தனுக்கும் தெரியாது
.
சந்துரு ‘அதுக்கிலடா
பிரபா, எனக்கு என் பேரண்ட்ஷ நினைச்சுலாம் பயமில்லடா , மகிழினியோட பேரன்ட்ஷ நினைச்சாதான்
பயமா இருக்கு.
அவன் அருகிலிருந்த
மகிழினி தற்போது சற்று பயத்துடன் , மகிழனின் கைகளை பற்றி கொன்டால்.
சிறிது தூரம் நடைபயணத்திற்கு
பிறகு , அவர்கள் தேடிவந்த வீடு வந்தது.
பிரபா ‘ சரி மச்சி
நீயும் அவளும் நல்லா வீட்ல ரெஸ்டெடுங்க . நான் நாமக்கல்ல இருக்க நம்ம பசங்ககிட்ட உங்க
வீட்ல என்னா நிலவரம்னு கேட்டுபாக்ரன்.
மிகிழினி ‘ அண்ணா
அப்படியே எங்க வீட்லயும் என்னா நடக்குதுனு கேட்டுசொல்லுங்கனா . எனக்கு எங்க அப்பாவ பாக்கனும்போல இருக்கு.’
எனக்கு தெருஞ்ச
ஒரு ஃப்ரெண்ட் சேலத்துலதான் இருக்கான் , அவன்கிட்ட கேட்டுபாக்ரன்மா . நீங்க டென்ஷன்
ஆகாமா நல்லா ரெஸ்ட்டெடுங்க.
பிரபா சென்றதும் அந்த வீட்டினுள் இருவரும் ஒருவரையொருவர்
யாரென்று தெரியாது போல் தனிதனியாக இருந்தனர் . ஏனென்றால் இருவரின் தனிமை என்னா செயல்
செய்யுமென்று இருவருக்கும் நன்றாகவே தெரியும்.
இயற்கை காற்றும்
செயற்கை காற்றும் சேர்ந்து ஒரு புதுவிதமான கன்னியாகுமரி காற்றை தரித்துகொன்டிருந்தன.
ஆனால் அந்த காற்று இருவரையும் கவரவில்லை.
மகிழினி தன் நினைவுகளுடன்
வாழ ஆரமித்தால்
அப்பா அதெலாம்
எதும் பண்ணகூடாது. இதோ இங்க கைபிடிக்கர சைஷ்ல இருக்கு பாருங்க இதான் மௌஷ் . அப்பறம்
குட்டி குட்டி சதுரம் சதுரமா இந்த செவ்வகத்துல இருக்குபாருங்க இதான் கீபோட் .
அப்பா எனக்கு ஷ்கூட்டி
வேணும் . என் ஃப்ரெண்ட்ஷெலாம் வாங்கிட்டாங்க. அடுத்த நாள் வீட்டினுள் ஷ்கூட்டி.
அப்பா , ‘அம்மா
என்ன திட்டிட்டேயிருக்காங்க’
அடுத்த நிமிடமமே
அம்மாவிற்கு திட்டு
அப்பா நான் ஆன்ட்ராய்டு
க்ளாஷ் ஜாய்ன் பண்லாம்னிருக்கன் . இங்க சேலத்துல எதுமே இல்ல. கோயமுத்தூர்தான் .
…………………………. (
அவளின் அப்பா பேசும் வசனங்கள் , அவரின் நினைவுகளில் வரும் )
அப்பா இரண்டு நாளா
எதுமே நீங்க சொல்லல. எனக்கொன்னுமாகாதுபா.
நான் எங்க போனாலும் , இதோ உங்க இதயத்துல தான்
இருப்பன் . அதான் என்னோட ஆத்மா இருக்ர இடம். கோயமுத்தூர் ,இங்கிருந்து ஜஷ்ட் 150 கே
. ம் தான. என்ன பாக்கனும்னு தோனுச்சுனா இரண்டு மணி நேரத்துல பாத்தர்லாம் . அவ்ளோதான்
.....…………………………
அடுத்த மூன்று
வாரத்தில்
அப்பா நான் சந்துருனு
ஒருத்தர லவ் பண்றன் . அவரதான் கல்யாணம் பண்ணிப்பன் . இன்னும் ஒன் மன்த்ல அவர் ஜாப்ல
ஜாய்ன் பண்ணிருவாரு .
…………………………
இல்ல நீங்க என்னா
சொன்னாலும் அவரதான் நான் கல்யாணம் பண்ணிப்பன்
அவள் நினைவுகளிலிருந்து
விடுபட்டு காஃபி தயார்செய்ய சென்றால்
இப்போது சந்துருவின்
நினைவுகளில்
கோயமுத்தூர் ,
இன்னும் கொஞ்சநாள் இங்க இருந்தா போதும் பிரபா, நான் ஜாப் மட்டும் வாங்கமாட்டன் ஃப்ரியா
ஆஸ்துமாவும்தான் வாங்குவன் . ட்ராபிக்ல மாட்டிகிட்டா அவ்ளோதான் அப்படியே சுடுகாட்டுல
போய் படுத்துக்கலாம் போல இருக்குடா.
இப்போது பிரபா
தான் தங்கியிருந்த வீட்டு மாடிக்குசென்றான்
அங்கே எதிர்வீட்டு
மாடியில் அவள் போனில் பேசிகொன்டிருந்தால்
‘ ஓ காட் , நீ
இந்த மாதிரியும் இவ்ளவு அழகா பொன்ன படைப்பியா ? அவ , போன்ல பேஷ்ரது அவங்க அப்பா அம்மா
இல்ல ஃப்ரெண்ட்ஷா இருக்கனும் . அவளுக்கு ஆளுமட்டுமில்லமிருந்தா கடவுளே நீ எங்கிருந்தாலும்
( விநாயகரா மாரியம்மா , செல்லாயி , ஆஞ்சனேயா
, பெருமாளா , இல்ல சர்ச்சா இல்ல மஸ்ஜீத்தா ) உனக்கு பெரிய சன்மானம் வந்து தரன் .
ஒருவாரத்திற்கு
பிறகு அவள் மாடிக்கு வந்த போது , அவன் அங்கிருந்த கரிதுண்டொன்றையெடுத்து ஒரு கவிதையெழுத
ஆரமித்தான் .
‘காலங்கள் காத்துகொன்டிருக்கின்றனடி
கண்ணே உன் கண்மனியில்
சற்று தன்னை காணவேண்டுமென்று ‘
அடுத்த நாள்
‘உன் பாதங்கள்
பட்டால் மலைகள் நிறைந்த பாலைவனமும்
மலர்கள் நிறைந்த
சோலைவனமாக மாறிவிடுமடி ‘
இப்படியே கவிதைகள்
தொடர்ந்தன
ஒரு நாள் , என்னை
மாற்றியமைத்த நாள் , என்னையும் காதல் என்னும் அற்புதமான அழகான உலகத்திற்குள் அழைத்துசென்ற
நாள் . அன்பையும் காதலயும் விளக்க இந்த உலகில் எவ்வித மொழிகளிலும் பாவனைகளாலும் வார்த்தை
இல்லை என்றுணர்ந்த தருணம் அது .
உன் பெயர் என்னா?
என்று அவளிருந்த மாடியில் எழுதபட்டிருந்தது.
அதன்பிறகு பேச
ஆரமித்தோம் . அவள் பேச்சுகள் என் மனதில் வெறுமை மலர்களுக்கு தண்ணீர் ஊற்றி பசுமை மலர்களால்
மாற்றியமைத்தன .
எங்கள் இருவருக்கும்
பேர்பொறுத்தம் , இந்த உலகத்தில் யாருக்குமில்லை போன்ற உணர்வு . அவள் பெயர் மகிழினி
. என் பெயர் சந்துரு
வாரமொருமுறை அவளிருந்த
வீட்டிற்கு ஒரு பெரியவர் வந்த செல்வார் . யாரென்று கேட்டபோது ‘உன் மாமனார் ‘ என்று
கூறினால் .
நீ உங்க வீட்ல
நம் லவ் விசயத்த சொல்லிபாரு மகிழ் ,என்று கடைசியாக கூறினான்
அதன் பிறகு . இப்போது
இங்கே , வீட்டிற்கு தெரியாமல் ஒடிவந்து , வாழ்க்கையில் மொத்த பிரச்சனையையும் தலையில்
ஏற்றிகொன்டுள்ளோம் .
ஏன் ? இந்த உலகத்துல
நமக்கு பிடிச்ச வாழ்க்கையை வாழ்றதுக்கு இவ்ளோ பிரச்சனையை எதிர்நோக்குனுமா ?
இருவரும் காஃபியை
பறுகினர்
மறுபக்கம்
சேலம் , அறங்கொத்துகனி
கிராமம்
அந்த அழகான வீட்டினுள்
பல சத்தங்கள் , பெறும்பாலும் ராஜமாணிக்கத்தின் உறவினர்களே .
அண்ணா , நான் பொண்ணு
காலேஜ் முடிச்சதுமே என் பையன் சுரேஷ்க்கு கல்யாணம் பண்ணிகொடுனு கேட்டனே ,அப்பவே பண்ணிவச்சுருந்தா
இன்னைக்கு எவனோரு தெள்ளவாரி இழுத்துட்டுஓடியிருப்பானா ? நீதான் அவ எதோ ஆப்பாய்ளு படிக்க கோயமுத்தூர் போரா
, படிச்சுமுடிச்சதும் கல்யாணம் வச்சுகலாம்னு சொன்னயே என்னா ஆச்சு?
ராஜமாணிக்கம் தான்
தங்கை கேட்கும் கேள்விகள் செவியில் வாங்காமல் திண்ணையில் தன் நினைவுகளோடு வாழ தொடங்கினார்
.
……………….
அதுக்கிலமா கோயமுத்தூர்
இங்க இருந்தாலும் எனக்கு பயமா இருக்குமா.
………………………
சரி போய்ட்டு வா
…………………..
ஒரு வாரத்தில்
ம் ரூம்லாம் நல்லாதான்
இருக்கு ( கோயமுத்தூர் ) . நல்லா சாப்டுமா , உடம்ப பாத்துக்கோ . அடுத்தவாரம் திருவிழாக்கு
வந்துரு . சரியா நான் வரம்மா .
…………………………….
மகிழ் என்னா சொல்ற?
என்னா இது லவ்வு கிவ்வுனுட்டு . இப்போலாம் ஒரு செல்லு கைல வச்சுருந்தா போதும் லவ்வு
மனசுல முலச்சுருது.
.......................….
இல்ல நீ நம்ம சுரேஷதான்
கல்யாணம் பண்ணிக்கனும் .
நினைவு முடிந்தது.
ராஜமாணிக்கத்தின்
வீட்டின் வெளியே .
கே.கு.கா கட்சி
தலைவர் , அவனருகில் இருந்த தொன்டரிடம் ‘ நா விசாரிக்க சொன்னனே என்னா ஆச்சு ? பையன்
எந்த இடம்?
அண்ணா பையன் கொஞ்சம்
மேலெடம் . அவங்க ஆளுங்கட்சி காரனுங்க. நீங்க நினைச்ச மாதிரியே வேற ஜாதிதான் .
ஆளுங்கட்சிய எப்படி
கீழறக்குறதுனு தெரியாம இருந்தன் . இந்த ஒரு விஷயம் போதும்டா. சரி நீ சீக்கிரம் பொன்னும் பையனும் இருக்கர இடத்த
விசாரிக்க சொல்லு. எங்க இருக்காங்கனு தெரிஞ்சதும் முத தகவல் எனக்கு கொடு. அவங்கள என்னா
பண்றதுனு நான் சொல்றன் .
இப்போது வீட்டினுள்
நுளைந்து ராஜமாணிக்கத்திற்கு அறிவுரை கூறுவது போல் நஞ்சை அவர் நெஞ்சில் விதைத்தார்.
மறுபக்கம் .
சந்துரு , நான்
என் அப்பாகிட்ட பேசனும்டா.
ஏய் என்னடி சொல்ற?
ப்ளீஷ் நான் அப்பாகிட்ட
பேசனும் . அவர் என்மேல வச்சுருந்த நம்பிக்கையெலாம் ஒடச்சுட்டன் . அவர் மனச ஒடச்சுட்டன்
. அவர் வார்த்தைகள ஒடச்சுட்டன் . அவர்கிட்ட பேசனும்டா , அழுதுகொன்டே கூறினால்
என்னா செய்வதறியாமல்
இருந்தான் சந்துரு .
சரி நீ பேசு. பட்
நாம இருக்ர இடத்த மட்டும் சொல்லாத மகிழ்
இல்ல இல்ல , சொல்லமாட்டன்
சொல்லமாட்டன் , என்று சற்று உற்சாக குறளோடு செல்போனை பிடுங்கிகொன்டு ஓடினால்.
மறுமுனையில்
பலரது வார்த்தைகளை
கேட்கமுடியாமல் தவித்துகொன்டிருந்தார் ராஜமாணிக்கம்
செல்போன் அடித்தது.
அவரின் மனைவி எடுத்தார்.
ஐலோ
ஐலோ அம்மா அம்மா
நான் மகிழ் பேசரன்மா
அடியே சண்டாலி
பாவி எங்கடி இருக்க , ஏண்டி இப்படி பண்ண ?
அம்மா என்ன மன்னிச்சுருமா
, அம்மா அப்பாகிட்ட போன குடுமா ப்ளீஷ்மா.
அவர் இப்போ பேசர
நிலமையிலாடி இருக்காரு ? இங்க வந்து ஒருநிமிஷம் உங்க அப்பா முகத்த பாருடி , எவனவனோ
வந்து பேசிட்டுபோறான்டி.
அம்மா ப்ளீஷ்மா
அப்பாகிட்ட போன குடுமா .
ம் இரு தரன்.
ராஜமாணிக்கத்திடம்
மெதுவாக சென்று காதினுள் விஷயத்தை சொன்னார்.
போனை வாங்கிகொன்டு
வீட்டின் பின்பக்கம் சென்றார்
மகிழ் நல்லாயிருக்கியாதா
?
அப்பா என்ன மன்னிசுருங்கபா.
சாப்டியாமா ? பசியோட
இருக்காதமா உடம்பு கெட்டுபோய்ரும் .
அப்பா ப்ளீஷ்பா
இந்த மாதிரிலாம் பேசாதிங்கபா. என்ன திட்டுங்கபா எதாவது திட்டுங்கபா.
எப்படிமா உன்ன
திட்றது ? இது வரைக்கும் உன்ன திட்டனதுஇல்லமா இனிமேலும் திட்டபோறதுல்லமா.
மகிழு நீ எங்கமா
இருக்க ?
கன்னியாகுமரிபா
அப்பாக்கு உன்ன
பாக்கனும் போல இருக்குடா
அவள் அட்ரஸ் சொன்னால்
சரிமா சரி நீ பத்தரமா
இரு .
போன் துண்டிக்கபட்டது.
ராஜாவிற்கு இப்போது சற்று கோபம் முகத்தில் காணபட்டது.
யாருக்கும் சொல்லாமல்
பேருந்துநிலையத்திற்கு சென்று பஸ் பிடித்தார் . கன்னியாகுமரி .
அவள் கூறிய ஊருக்கு
வந்து சேர்ந்தார் . அங்கிறுந்து சரியாக ஒன்றறை கிலோமீட்டர் தூரத்தில் அந்த வீடிருந்தது
.
காலிங்பெல் அடித்தார்
மகிழினி ஃப்ரெஷாகிருந்தால்
. நேற்றைய அழுகையில் சற்று கன்னம் கூடியிருந்தது.
அப்பா ???? நீங்க
எப்படி
உன்ன பாக்கனும்னு
சொன்னன்ல
அப்பா இவருதான்
சந்துரு.
ம் தெரியும் தம்பிய
ஏற்கனவே பாத்துருக்கன் . நீ கோயமுத்தூர்ல இருக்கும் போது நீ தங்கியுருந்த வீட்டுக்கு
எதுதாப்புள தம்பி தங்கியிருந்தாரு . அடிக்கடி உன்ன எட்டிபாப்பாபுல
சார் சாரி சார்
எங்கள மன்னிசுருங்க.
அட எதுக்குபா இதெலாம்?
மகிழ் திருவிழாக்கு வந்தப்பவே சொன்னா , ‘ நான் ஒருத்தர லவ் பண்றன் கல்யாணம் பண்ணிவைங்கனு
, நான் அப்பவே அவ சொன்னத கேட்டுருந்தா இவ்ளோ தூரம் வந்துருக்குமா.
சார் நீங்க சொல்றத
கேட்கும் போது சந்தோஷமா இருக்கு .இருந்தாலும் நாங்க ஓடிவந்ததும் தப்புதான் .எங்கள மன்னிசுருங்க
ஆமா அப்பா எங்கள
மன்னிசுருங்க
‘சரிமா மன்னிச்சுருரன்
.மகிழ் நான் உன்ட்ட தனியா பேசனும்மா ’ . சந்துரு தற்போது சற்று வித்தியாசமாக அவரை பார்த்தான்
.
தம்பி பயப்படாதிங்க
இவ மனச மாத்தி உங்ககிட்ட இருந்து கூட்டிடெலாம் போய்ற மாட்டன்.
ஐயோ சார் நான்
அப்படிலாம் எதும் நினைக்கல .நீங்க தாராளமா பேசலாம்
அவரும் மகிழினியும்
அருகிலிருந்த ரூமிற்கு சென்றனர்
ஒருமணிநேரத்திற்குமேலாக
சென்றவர்கள் திரும்பவில்லை .
சந்துருவிற்கு
குழப்பங்கள் பயங்களும் காற்றை போல் சூழ்ந்தன .
ரூமின் கதவு உள்பக்கமாக
தாளிடபட்டிருந்தன.
தன் நண்பனிற்கு
போன் செய்தான் ‘ மச்சி பிரபா வீட்டுக்கு வாடா ‘ உன்ட்ட முக்கியமா ஒரு விஷயம் சொல்லனும்
வீட்டிற்கு வந்தவனிடம்
நடந்ததை கூற , அவனும் சந்துருவும் கதவை மாறி மாறி இடிக்க . கதவு திறந்தது.
கே.கு.கா கட்சி
தலைவருக்கு விஷயம் தெரிந்தது . ‘’ நான் நினைச்ச மாதிரியே நடந்துருச்சு .இப்படிலாம்
நடக்கும்னுதான்டா அந்த ராஜாவுக்கே தெரியாம உன்ன , அவன ஃபாளோ பண்ண சொன்னன் . இப்ப நீ
என்னா பண்றனா அந்த பசங்க இரண்டு பேரையும் போட்று . போட்டுட்டு நம்ம பசங்கல ஒருத்தன
போலீஷ்ஸ்டேஷன்ல ‘ சார் அந்த சந்துரு பையனும்
எங்க பொன்னும் இரண்டு பேரும் லவ் பண்ணாங்க . ஆனா அவங்க ஜாதி கொஞ்சம் பெருசு ,நாங்க
கொஞ்சம் கீழ . அதனால அந்த சந்துரு பையனோட ஃப்ரென்ட வச்சு அவங்க அப்பா ,எங்க ராஜா அண்ணனயும் மகிழ் பாப்பாவையும் கொல பண்ணிட்டான்
சார் , அந்த உணர்ச்சியலதான் நான் அவங்கள கொன்னுட்டன் சார் னு ‘’ சொல்லி சர்ரன்டர் ஆக
சொல்லிரு .
அப்படியே தமிழ்நாட்ல
இருக்குர நம்ம கட்சி காரங்க எல்லாரையும் கலவரம்பண்ண சொல்லு . அந்த ஆளுங்கட்சில பூகம்பம்
வெடிக்கனும் . அப்பறம் நம்ம இன்ஷ்பெக்டர அங்க வரசொல்றன் ,எதாவது தடயம் கெடச்சுரபோகுது
.
கதவு திறந்ததும்
உள்ளே மகிழினி கத்தியால் குத்தபட்டு இரத்த்தால் நினைந்திருந்தால் . அருகில் அவர் அப்பா
கழுத்து அறுக்கபட்டிருந்தது. அவர் கையில் கத்தி .
இருவரும் உறைந்திருந்தனர்
. மகிழினியை பார்த்து விம்மிவிம்மி அழுதுகொன்டிருந்தான் சந்துரு . மிரண்டிருந்த பிரபா திடீரென கீழே சரிய , அவன் பின்னே இருவர் கத்தியுடன்
நின்றுகொன்டிருந்தார்கள் .
சந்துரு உதாசிப்பதற்குள்
அவன் முதுகிலும் அவன் வயிற்றிலும் கத்திகள் இறக்கப்பட்டன .
சந்துரு அப்படியே
சரிந்தான் , இறக்கும் தருவாயில் அவன் கைகள்
மகிழினியின் கைகளை பிடித்திருந்தன .
சார் ஐம் ஃப்ரம்
சேலம் பி2 போலீஷ்ஸ்டேசன் . இந்த கொலை கேஷூல சம்மந்தபட்ட மகிழினியும் , ராஜமாணிக்கமும்
எங்க ஸ்டேசனுக்கு கீழதான் வர்ராங்க . சோ அவங்களோட கொலை சம்மந்தபட்ட டீட்டெய்ல்ஷ் வேணும்
.இந்த வீட்ல எதாவது தடயம் கிடச்சுதா ?
இல்ல சார் .எல்லாம்
தெளிவான மற்றும் அராஜ்சகமான கொலைகள் . கண்டிப்பா ஜாதி வெறிதான் . கொலபண்ணவனே வந்து
ஸ்டேசன்ல சர்ரன்டர் ஆகிட்டான் .
சரி நானும் ஒருதடவ
செக் பண்ணிக்ரன், இஃப் யூ கிவ் மி எ பர்மிஷன் ?
அஃப்கோர்ஷ்
அந்த இன்ஷ்பெக்டர்
கோவிந்தன் கொலை நடந்த அறைமுழுவதும் அலசினார் . எதும்கிட்டவில்லை . அறையிலிருந்து திரும்பியபோது
அங்கே ஒரு ஷூவினுள் பேப்பர் போலிருந்தது. அதை எடுத்து படிக்க ஆரமித்தார் .
அந்த பேப்பரினுள்
ஐயா நான் ராஜமாணுக்கம்
. என் பொன்னு மகிழினி . குழந்த மாதிரி பாத்துக்கிட்டங்க . அவ நினைச்சபடி நான் நடந்துகிட்டன்
. அவ மனசு மாதிரி நான் இருந்தன் . அவ கேட்டது நினைச்சது எலாம் வாங்கிகொடுத்தன் .ஆனா
அவ இப்படி பண்ணத , என்னால ஒத்துக்கமுடில . இவ்ளோ நாள் என்ன மட்டுமே ஈரோவா பாத்தவ ,
இன்னைக்கு யாரோ ஒருவனுக்கு தன் மனச கொடுக்ரனு சொல்றா . என்னால தாங்கமுடில .எல்லாரும் எதேதோ அவன் வேற ஜாதி, வேற குலம், வேற
குளோத்தரம், வேற ஜாதகம்னு, சொல்றாங்க ,ஆனா
எனக்கு அதெலாம் வேணாங்க . இந்த அப்பாவே வேணாம்னு தூக்கியெருஞ்சுட்டு போற அளவுக்கு
நான் ஒரு நல்ல அப்பாவா நடந்துக்களயா ? எல்லாமே
நல்லாபாத்துகிட்ட எனக்கு ,அவளுக்கு ஒரு நல்ல துணைய தேடி தரமுடியாதா ? அந்த ஒரு உணர்வு
, வெறுப்பு , என்ன இப்போ கொலை செய்ய தூண்டிருக்கு . இனி என்னாலயும் இந்த உலகத்துல இருக்கமுடியாது
. அதனால என் சாவுக்கும் , என் மகள் மகிழினியின் சாவிற்கும் நானே காரணம் .
இப்படிக்கு
ராஜமாணிக்கம்
படித்துமுடித்த
இன்ஷ்பெக்டர் கோவிந்தன் அந்த லெட்டரை , தூள் தூளாக கிழித்தெரிந்தார்
இன்றைய முக்கிய
செய்திகள்
‘வேற்று ஜாதியின்
காரணமாக காதலர்கள் அவர்கள் உறவினர்களும் குமரி மாவட்டத்தில் கொடூரகொலை . சம்மந்தபட்ட
ஜாதிபிரிவினர்கள் தமிழ்நாடு முழுவதும் வன்முறையில் ஈடுபட்டனர் . இதனால் மக்கள் கடும்
அச்சத்திலும் பீதியிலும் உள்ளனர்’
முற்றும்
No comments:
Post a Comment