இது என் முதல்
திரைப்பட விமர்சனம். என்னாடா இவன் முடிஞ்சுபோன கல்யானத்துக்கு மோளம் கொட்ரானேனு நினைக்காதிங்க,
கல்யானம் முடிஞ்ச அப்பறம்தான் அதுக்கு வேளையே இருக்குனும் மறக்காதிங்க. கடந்த மாதம்
மட்டுமே 15 படம் வெளிவந்திருக்கின்றன . இதில் 7 படங்கள் வெளியான ஓரிரு நாட்களிலே தியேட்டர
விட்டு வெளியேற்றபட்டிருக்கின்றன. இப்படி வாரம் 3,4 படம்னு ( வெளிவந்த 2வது ஷோவே திருட்டு வி.சி.டி-லயும் )
வந்தால் , ரசிகனின் பணமும் ,சினிமா உலகமும்
நம் பூமியை போன்று கொஞ்சம் கொஞ்சமாக அழிய வேன்டியதுதான்.
சரி படத்திற்கு
வருகிறேன்
முதலில் சுதா கங்காரா
பிரசாத்திற்கும் இறுதிச்சுற்றின் குழுவிற்கும்
என் வாழ்த்துகள். ஏனென்றால் ஒரு திரைபடத்தைத் தான் நினைத்தவாரு
எடுப்பது மிக எளிய விடயம் அல்ல; அதும் ஊழல் பற்றி வெளிப்படையாக கூற வேண்டுமென்றால்
சாதாரணமன்று. இம்மாதிரி படம் எடுப்பதைவிட கஷ்டம்
என்னவென்றால் இந்த காலத்தில் படம் வெளிவர கடவுளின் கருனை வேண்டும் .
கதையும் அதன் பயணமும்
இந்தியன் பாக்சிங் அஷோசியேசனில் முக்கிய பதவியில்
இருப்பவர் ஜாகிர்ஹுசைன். இவர் பாக்சிங் பயிற்சியாளரான
மாதவனின் மேல் பொறாமை கொண்டு மாதவனை தர்மஷேனாவிலிருந்து சென்னைக்கு இடமாற்றம் செய்துவிடுவார்.
மாதவனும் ‘நான் ஒரு சாம்பியனை உருவாக்கிக் காட்றேன்’னு சவாலோட வருகிறார். மாதவனை பற்றி
கூறவேன்டுமென்றால் மத்தவங்க கண்ணுக்கு பைத்தியகார
பயிற்சியாளர். மாதவனோ ஏனோ தானோவென்று பாக்சிங் விளையாடும் அரைகுறை ஆசாமிகள் ,ஊழல் பன்றவங்க
,எவனையும் மதிக்கமாட்டார். மாதவனின் ப்ளாஷ்பேக்கினுள் நுழைந்தால், பலரின் அரசியலால் தான் பங்கேற்க இருந்த
NATIONAL BOXING MATCHல் வேறு ஒருவனை ஆடவைத்தால்,அவரின் மனைவி வேறு பாக்சருடன் ஓடிவிடுவாள்.
சென்னையில் குப்பத்ததில் வாழும் பெண்ணாகவும்,
மீன் விற்கும் பெண்ணாகவும் வருகிறார் ரித்திகா. ரித்திகாவின் அக்கா மும்தாஜ், எப்படியாவது
போலீஸ் ஆகவேன்டும் என்ற கனவுடன் இருப்பவர். அதனால் மும்தாஜ் பாக்சிங் கற்றுக்கொள்வார்.
ஒரு போட்டியின் போது வெற்றிபெற்ற மும்தாஜ் தோற்றுவிட்டதாக கூற, அதனால் கோபம் கொன்டு
ரெப்ரியை ரித்திகா தான் கற்ற அரைகுறை பாக்ஸங் மூலம் பந்தாட, அதைப் பார்த்து கொண்டிருந்த
மாதவன் ரித்திகாவிடம் இயல்பாகவே பாக்ஸங் திறமை இருப்பதை கன்டறிகிறார். தினம் 500ரூ
கொடுத்து ட்ரைனிங் வர சொல்கிறார். பின்பு ரித்திகாவிற்கு பயிற்சியளித்து தேசியபோட்டியில்
பங்கேற்க வைக்கிறார். அதன்பின் போட்டியில் ரித்திகா வென்றாரா என்பதை காதல், எதார்த்தம் , ஊழல், பலரின் சுயநலத்தோடு, பாக்ஸிங்
வாழ்க்கை,ஒரு குப்பத்து பெண்ணின் வாழ்க்கை எனப்பல விஷயங்களைக் கலந்துகட்டி, ஒரு கலக்கல்
காக்டெய்லாக திரையில் படைத்துள்ளார் இயக்குனர் சுதா கங்காரா பிரசாத்.
எழுத்தும்
இயக்கமும்
‘இத்திரைபடத்தில் வரும் பல காட்சிகள் உண்மை சம்பவத்தை
அடிப்படையாக கொன்டதே’ என்று படத்திலே கூறிவிட்டனர். நம் நாட்டில் ஊணுக்குத்தான் பஞ்சமே
தவிர ஊழலிற்கு அல்ல. இன்னும் பல தலைமுறைகள் படம் எடுக்க இப்படத்தில் சரக்குண்டு. (
இந்தியா ஊழல் மிகுந்த நாடுகளில் 9 இடங்கள் முன்னேறி கடந்த ஆண்டு 76வது இடத்தை பெற்றுள்ளது
)
இயக்குனர் மணிரத்தனத்தின்
பல படங்களில் துணை இயக்குனராக பணியாற்றிய இவர்,
2010ல் துரோகி என்னும் படத்தை எடுத்திருந்தார் . BEST FEATURE FILM IN
ENGLISH எனும் தேசிய விருதை வாங்கிய mitr my friend எனும் படத்தின் எழுத்தாளரும் இவரே.
அதன் பின் 2011ல் ஆரமித்து 2 வருடங்களாக இப்படத்திற்கு பலரின் வாழ்க்கையைக் கேட்டு
அதன் பிண்ணனியில் திரைக்கதை எழுதியுள்ளார். இத்திரைக்கதையில் சுனந்தா ரகுநாதன்,ராஜ்குமார்
ஹிரானியின் எழுத்துகளும் அடங்கும்.
தமிழ்,ஹிந்தி ஆகிய
2 மொழிகளிலும் தயாரானதால் ஒன்றரை வருடங்கள் ஆனது. தமிழில் அருண் மாதேஷ்வரன் எழுதிய
வசனங்கள் சிறிய வாக்கியங்களே ஆனால் அவை சொல்லும் அர்த்தங்கள் பல. நேர்த்தையான வசனங்கள்
, நெத்தியடியான வார்த்தைகள்.
நடிகர்,நடிகைகள்
மாதவன் தன் ஒரு வருட உழைப்பினால் உண்மையான பாக்சர்
போலவே காட்சியளிக்கிறார். அவரின் இந்த உழைப்பும்,வெற்றியடைய வேண்டும் என்ற கனவும் பாக்டீரியா
அளவிலும் வீணாகவில்லை. யதார்த்தமான நடிப்பிலும் , வசனம் பேசும் தோரணையும் கைத்தட்டல்கள்
அள்ளுகிறார்.
ரித்திகா
சிங்
படத்திற்கு உயிர்
கொடுக்கும் கதாபாத்திரம். அனைவரையும் திரும்பி பார்க்கவைத்த நடிப்பு. தன் காதலை வெளிப்படுத்தும்
இடத்திலும் சரி, முகபாவனைகள், மாதவனுக்காக களத்தில் இறங்கி அடித்தல், அடிவாங்குதல்
என இவரின் நடிப்பு அனைத்துமே பெரிய பலம். கண்டிப்பாக இவரை தமிழ் சினிமா கொண்டாடும்
இருவருக்கும் இது
‘இறுதிச்சுற்று’ அல்ல. ‘முதல் சுற்றே’
மற்றவர்கள்
நாசர், வில்லனாக
ஜாகிர் ஹுசைன்; அக்காவாக மும்தாஜ் என அனைவரும் கேரக்டர்களுக்கு ஏற்ப கனகச்சிதமான தேர்வு.
குறிப்பாக சாமிக்கண்ணாக வரும் காளி வெங்கட்டின் காமெடி சரவெடி. ராதா ரவி கேரக்டருக்கு
அவர் தேவையா என்று கேட்க வைக்கின்றது.
இசையும்,ஒளிப்பதிவும்
நான் படத்திற்கு செல்ல மிகப்பெரிய தூன்டுதல் சந்தோஷ்
நாராயணின் பாடல்களே. பாடல்களும் பிண்ணனி இசையும் படத்திற்கு மேன்மேலும் மெருகேற்றின.
உசுறு நெரம்புல பாடல் மட்டுமே திசையும் இழந்தேனே பாடலின் ( ஜிகர்தன்டா ) SEQUAL மாதிரி
உள்ளது
படத்தின் ஒளிப்பதிவாளர் சிவக்குமார் விஜயன். விடியும்
முன் படத்தின் மூலம் மிகவும் பேசபட்டவர். இப்படத்திலும் மிக கச்சிதமாகவும் அதற்கு மேலாகவும் தன் பணியை
செய்துள்ளார். P.C.ஸ்ரீராமின் துணை ஒளிப்பதிவாளராக பணியாற்றியதால் என்னவோ ,
அவரின் லைட்டிங் பாணி இதில் வெளிபடுகிறது.
எடிட்டர் சதீஷ்
சூரியும் தன் வேளையை சரியாக செய்துள்ளார்
பார்த்தவரின்
பார்வை
‘நான்தான் முத நாளே சொன்னல அந்த படம் வேணா இந்த படத்துக்கு
வரலாம்னு. எல்லாமே சூப்பர் ஆனா அடிக்கடி சன்ட தான் வருது’ என்று திரையரங்கிலிருந்து
வெளிவந்திருந்த இருவர் பேசிக்கொண்டே வந்தனர். இதன்மூலமே அறியலாம்; படத்தின் தாக்கத்தினை.
என் பார்வை
படத்தை ஆராய்ந்தால் இந்தியாவிற்கு எதிரி இந்திய மக்களே , ஒரு சிலரின் சுயநலமே என்பது அழுத்தமாக தெரியும் .ஆனால் ஹீரோயின் சண்டையிடுவது நாட்டிற்க்காக அல்ல , மாதவனுக்காக மட்டுமே. இது மட்டும் தான் எனக்கு உருத்தலாகவே இருந்தது
இருந்தும் பாக்கெட்ல
பைசா இருந்துருந்தா அடுத்த ஷோ சென்றிருப்பேன்.
No comments:
Post a Comment