Sunday, 13 March 2016

பிச்சைக்காரன் - திரைவிமர்சனம்


படத்திற்கு என்றில்லாமல் ஏனோ கெத்திற்காகவும் வித்தியாசமாகவும் படதலைப்பை வைக்கவேண்டும் என்று நினைக்கும் இயக்குனர்கள் மத்தியில் ‘பிச்சைக்காரன்’ என்ற ஒரே வார்த்தையில் திரையுலகையும் , ரசிகர்களையும் வியக்கவைத்தார் படத்தின் இயக்குனர் சசி. முருகதாஸ் போன்ற பல இயக்குனர்களும் நண்பர்கள் தலைப்பை மாற்றசொல்லியும் ‘எனக்கு இந்த தலைப்புதான் வேண்டும், தலைப்பை மாற்றமாட்டேனென்று மனிதன் ஒற்றை காலில் நங்கூரமாக நின்றுள்ளார். படத்தின் மற்றொரு எதிர்பார்ப்பு விஜய் ஆண்டனி. இவர் தேர்ந்தெடுத்து நடித்த ‘நான்’ ‘சலீம்’ ஆகிய இரு படங்களும் வணிகரீதியாகவும், ரசிகர்களிடையும் வெற்றிபெற்றது. இவரின் படங்களுக்கு தனிமார்கெட் உள்ளது. சரி படத்திற்கு வருவோம்.


கதை

பல கோடி பணத்திற்கு சொந்தகாரராக இருக்கின்றார் விஜய் ஆண்டனி. அம்மாதான் உலகமாக வாழ்கிறார். திடீரென ஒரு எதிர்பாராத விபத்தில் அவரின் அம்மா தலையில் அடிபட, கோமா நிலைக்கு சென்றுவிடுகிறார் . இதனால் மனமுடைகின்ற விஜய் ஆண்டனி , அம்மாவிற்கு எல்லா மருத்துவமும் பார்க்கிறார்.ஆனால் எதும் குணபடுத்தவில்லை. ஒரு நாள் ஒரு சம்பவத்தின் போது ஒரு சாமியாரை சந்திக்க நேருடிகிறது. அவர் ‘ உன் அம்மா பிழைக்கவேண்டுமென்றால் நீ உன் பணம் அடையாளம் அனைத்தியும் துறந்து , 48 நாட்கள் பிச்சையெடுக்கவேண்டுமென்று கூறிகிறார். அம்மாவை காப்பாற்ற வேறிவழியில்லாமல் பிச்சையெடுக்கிறார் விஜய் ஆண்டனி.

இதனிடையே விஜய் ஆண்டனியின் மாமா சொத்தை கைபற்ற திட்டமிடுதல், பிச்சையெடுக்குமிடத்தில் அங்கே ஒரு சில பிரச்சனைகள் நடக்கின்றன. இறுதியில் அம்மா கோமாவிலிருந்து வெளிவந்தாரா? பிரச்சனைகளிலிருந்து விடுபட்டாரா என்பதே இந்த ‘பிச்சைக்காரன்’.


கதை செல்லும் பாதை

இயக்குனர் சசி தனக்கேயுரிய பாணியை கையான்டுள்ளார்யதார்த்தமான பிச்சைக்காரர்களின் வாழ்க்கை , காதல் , நகைச்சுவை , என திரைக்கதையை குண்டுகுளியமற்ற , புதிதாக அமைத்த அழகான சாலையில் கதையை பயனித்துள்ளார்படத்தின் பலமே வசனங்கள்இந்த உலகத்தில் பணக்காரன்ஏழைபிச்சைக்காரன் எல்லோருக்கும் ஒரே எதிரி பசி. அதுமட்டுமில்லாமல் நகைச்சுவைகளுக்கு படத்தில் பஞ்சமில்லை. போலீசிடம் விஜய் ஆண்டனி நான் பிச்சையெடுக்ரன் சார் என கூறுவதும், ராயல் பிச்சைக்காரனிடம் அடிவாங்கும் ரௌடிகள் செய்யும் அட்டகாசங்கள் கலகலப்பு. மற்றும் விஜய் ஆண்டனியின் மாமாவும் அவரின் கார் ட்ரைவர் செய்யும் காமெடி சிரிப்பு.

பிச்சைக்கார்களின் வாழ்க்கையை கண்முன் பார்க்கும் நாம் , அவர்களின் வாழ்க்கையை நம் மனத்திற்குள் சிரிக்கவைத்தும் சிந்திக்கவைத்தும் கொன்டுசெல்கிறார் இயக்குனர் சசி.

எழுத்தும் இயக்கமும்

சசி – சொல்லாமலே, ரோஜா கூட்டம் , பூ , டிஷ்யூம் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர் சசி. ‘பிச்சைக்காரன்’ இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொன்டு உருவாக்கபட்ட படமென்று இயக்குனர் சசி கூறியுள்ளார் . அதனால் இந்த படத்திற்கு  திரைக்கதை எழுத ஒரு வருடமாக உழைத்துள்ளார். இறுதியில் இவர் ‘டிஷ்யூம்’ படத்தில் விஜய் ஆண்டனியுடன் பணியாற்றிதால் , அவர்தான் இந்த படத்திற்கு சரியானவர் என்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து படத்தை இய்ககியுள்ளார். கடந்த 2015 ஜனவரி தொடங்கி 11 மாதங்கள் சுமந்து இறிதியில் திரைக்கு ரசிகர்கள் முன் கொன்டுவந்துள்ளார்.
உண்மையான பிச்சைகார்களையும் , பல சூழ்நிலைகளால் பிச்சைக்கார்களாக நடிக்க தள்ளபடும் மனிதர்களையும் திரையில் காட்டியதற்காக ‘ஹேன்ட்ஸ் அப்’ சசி சார்.
வசனம் எழுதியதற்காக வைடூரியங்களால் தான் உங்கள் விரலுக்கு மோதிரம் செய்யவேண்டும். வசனத்தை நான் எழுதி நீங்கள் படிப்பதை விட , படத்தோடு பாருங்கள்.


நடிகர் நடிகைகள்

விஜய் ஆண்டனி

"நான்" மற்றும் "சலீம்" ஆகிய படங்களுக்கு தன் அலவான அழகான நடிப்பை வெளிபடுத்திய விஜய் ஆண்டனி, இந்த படத்திலும் கச்சிதமாக செய்துள்ளார். பிச்சைக்காரனாகவும் யதார்த்த மனிதனாகவும் வாழ்ந்துள்ளார். வசனத்தை பேசும் தோரனையிலும் , பிச்சைக்காரனாக மாறும் போது ஏற்படும் கஷ்டத்தையும் ,அம்மாவை காப்பாற்ற போராடும் மனிதனாகவும் , நடிப்பா இது? இல்லை உண்மையான ஒருத்தனின் வாழ்க்கையை கேமிரா வைத்து எடுத்துவிட்டாரா ? என்று கேட்கவைக்கின்றது, விஜய் ஆண்டனியின் நடிப்பு.
ஒரே பிழை, ஆக்ஷன் இவருக்கு தேவையா? ஆக்ரோஷமாக பேசும் வசனங்கள் இவருக்கு வரவில்லை என்றே கூறவேன்டும்.

சாட்னா 

பிச்சைக்காரன் என்று தெரியாமல் காதலிக்கும் சாட்னா , பிச்சைக்காரன் என்று தெரிந்ததும் வெறுத்தும் , வெறுக்கமுடியாமலும் தவிக்கும் பெண்ணாக ரசிகர்களை காதலில் விழவைக்கின்றார். சாட்னாவிற்கு நடிக்கும் வாய்ப்பு கொஞ்சம் கிடைத்துள்ளது. கண்டிப்பாக இவர் தமிழில் நடிக்கும் வாய்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக வரவிருக்கின்றன. சாட்னா தயாராயிருங்கள்

பிச்சைகாரர்களாக நடித்தவர்களை முழுமனதோடு பாராட்டலாம் .மற்ற நடிகர்கள் அனைவருமே சரியான தேர்வே.



ஒளிப்பதிவாளர்

பிரசன்னா குமார்   ஒரு வேளை சோற்றுக்கு’ என்னும் பாடலில் பிச்சைக்கார்களையும் , பசி என்றால் என்னவென்று இவரின் கேமிரா பளிச்சென்று காட்டுகிறது. இவரின் உழைப்பு படத்தின் மிகபெரிய பலம்



இசையமைப்பாளர்

விஜய் ஆண்டனியின் இசையில் வெளியான பாடல்களில் ‘ஒரு வேளை சோற்றுக்கு’ ‘நெஞ்சோரத்தில்’  ‘உனக்காக வருவேன்’ மிக அருமை. இந்த பாடல்களை கேட்க்கும் போது எங்கோ மனதின் ஒரு மூலையில் வலிக்கின்றது. பின்னனி இசை படத்திற்காக என்னா வேன்டுமென்று முழுவதும் அறிந்து அதை கொடுத்துள்ளார். ஆனால் சிறிது "நான்" மற்றும் "சலீம்" படங்களின் பின்னணி இசையும் பின்னாலே வருகின்றது.


ரசிகன் பார்வை

இரு ரசிகர்கள் பேசியது  ;
'மச்சான் படம் இந்த அளவுக்கு நல்லாயிருக்கும்னு நான் நினைக்கள. என்னா கொஞ்சம் ஆக்ஷன் பில்டப் இல்லாமிருந்திருக்கலாம்'.


என் பார்வை

பிச்சைக்காரன்’ படத்திற்கு ஏற்ற தலைப்புஇனி அனைத்து மக்களும் பிச்சைக்காரனை திரும்பிபார்ப்பர்கலகலப்பாகவே அவர்களின் வாழ்க்கையை கூறி அனைத்து விதமான ரசிகர்களும் , விமர்சகர்கள் மனதிலும் ஒரு எதிர்பாராதா வித்தியாசமான அனுபவத்தை கொடுத்துள்ளான் இந்த பிச்சைக்காரன்.  


1 comment: