முதலில் இந்த படத்திற்கு
செல்ல மிக முக்கியமான விடயம்….இன்று நான் பயலும் கல்லூரியில் பயோ கெமிஷ்ட்ரி அஷெய்ன்மென்ட்
சப்மிட் பன்னனும்னு சொன்னாங்க (நம்ப முடியாது தான் ஆனால் சொல்வதெலாம் நிஜம்) , நானோ
அஷெய்ன்மென்ட் நோட்டை மிக மிக சுத்தமாக வைத்திருந்தேன். அதனால் நானும் என் நன்பனும்
இன்று கல்லூரியை கட் அடித்துவிட்டு புகழ் படத்திற்கு சென்றோம். படம் 11 மணிக்கு ஆரமித்துவிடுவார்கள்
. தியேட்டரில் இரண்டே பேர் தான் அமர்ந்திருந்தனர் (நானும் என் நண்பனும் ) . என் மனதில்
ஆச்சரியம் அச்சாகிவிட்டது. நான் இதுவரை பார்த்த படங்கள் ( மொக்க படத்திற்கு கூட 10பேராவது
வருவாங்க) குறைந்தது 15 பேராவது இருப்பார்கள். ஆனால் இங்கோ? . சரி படத்தை பற்றி விக்கிபீடியாவில்
பார்த்தோம். இயக்குனர் மணிமாறன் , என்றதும் சற்று நம்பிக்கை என்னும் கரு மனதில் உருவானது.
( ஜெய் நடிப்பில் தற்போது வெளிவந்த எந்த படமும் சரியாக அல்ல, முழுமையாகவே தோழ்வி கடலில்
மூழ்கிவிட்டது ). படம் ஆரமித்ததும் ஆருதலாக 3 பேர் வந்தனர், மொத்தம் 4 பேருடன் புகழ் படம் ஆரமித்தது.
கதையும் அதன் பயணமும்
ஒரு விளையாட்டு
மைதானத்தை ஆக்கிரமித்து அதில் பில்டிங் கட்ட நினைக்கும் அரசியல்வாதிகளுக்கும், அதை
எதிர்கும் ஜெய் மற்றும் அவரின் நண்பர்களுக்கும் இடையே நடக்கும் சுவாரசியங்களான சம்பவங்களே
இந்த புகழ்.
சமுதாயத்தில் நடக்கும்
தவறுகளை எதிர்க்கும் புகழாக வருகிறார் ஜெய். அவரின் பரம்பரை மற்றும் அந்த ஊரை சுற்றியுள்ள
பகுதியில் வசிக்கும் அனைத்து பசங்களும் விளையாடும் ஒரு விளையாட்டு மைதானம் உள்ளது.
அந்த மைதானத்தின்நிலத்தடியில் நல்லநீர் இருப்பதால் , அந்த மைதானத்தை ஆக்கரிமித்து அதில்
பில்டிங் கட்ட நினைப்பார் கல்வித்துறை அமைச்சரின் மருமகன் . இறுதியில் அந்த மைதானத்தில்
பில்டிங் கட்டினார்களா, அதை எப்படி ஜெய் தடுக்கிறார் என்பதை அரசியல் சூட்சமங்களோடு
படத்தின் திரைக்கதையை நகர்த்தியுள்ளார் இயக்குனர் மணிமாறன்.
எழுத்தும் இயக்கமும்
மணிமாறன்
உதயம்
NH4 என்ற திரைபடத்தின் மூலம் நல்ல வரவேற்ப்பை
பெற்றவர் இயக்குனர் மணிமாறன். இப்போது இவரின் இரண்டாவது படம்தான் புகழ் .
முதலில் ‘பொடியன்’
என்ற பெயரில்தான் இப்படம் 2013ல் ஆரமிக்கபட்டது. ஆனால் ஒருசில பல காரணங்களால் படத்தின்
தலைப்பு மாற, அதிலிருந்து மணிமாறனுக்கு மூன்றறை வருட சனி ஆரமித்தது . தமிழ் தெலுங்கு
ஆகிய இரண்டு மொழிகளில் தயாரிப்பதாக இருந்த இப்படம் தமிழில் மட்டும்தான் தயாரானாது.
தமிழில் ஜெய் , பிரியா ஆனந்த் மற்றும் தெலுகில் சித்தார்த் ஹன்சிகா நடிப்பதாக இருந்தது
( தெலுங்கில் எடுக்கவில்லை ). ஆனால் தமிழில் பல காரணங்களால் ,ஹீரோயினாக திரிஷா மற்றும் இசையமைப்பாளராக அனிரூத்தை மாற்ற,
அவர்களின் கால்ஷீட் குளறுபிடியால் , அவர்களுக்கு பதிலாக இறுதியில் சுரபி மற்றும் இசையமைப்பாளராக
விவேக்-மெர்வினை தேர்வுசெய்து , ஒரு வருடத்திற்கு பிறகு 2014 இறுதியில் ஷூட்டிங் ஆரமித்தார் இயக்குனர் மணிமாறன். படத்தை 8 மாதங்களில்
முழு படபிடிப்பு வேளைகள் மற்றும் போஷ்ட்புரொடக்ஷன் வேளைகளை முடித்தார். ஆனால் தயாரிப்பாளர்
தரப்பில் கடன் பிரச்சனை இருந்ததால் 4 மாதங்கள் தள்ளி , தற்போது கடந்த வெள்ளியன்று வெளியானது.
அடங்கப்பா..பிரச்சனையே இவ்ளோவா? ஆமாம்.
சரி படத்திற்கு வருவோம். ‘மெட்ராஷ்’ படத்தின் கதைக்கு
வேற கலர் பெயின்ட் அடிச்சா எப்படி இருக்குமோ அப்படியொரு திரைக்கதையை யதார்த்தமாக கொண்டுசென்றுள்ளார்
அதற்காக இவரை பாராட்டலாம். அதுவும் ‘ ஆத்து மணல அள்ளி அள்ளி விவசாயத்த அழிச்சீங்க,
சுத்திஇருக்கர மலையெலாம் வெடிவச்சு தகர்த்து இயற்கைய அழிக்கிறீங்க’ என்னும் வசனத்திற்கு
ஒரு சல்யூட். பல படங்களில் அரசியல்வாதிகளின்
நிஜமுகத்தை பார்த்ததால் இதில் ஒன்றும் வித்தியாசமில்லை, மொத்ததில் இந்த படம் நன்றே
நடிகர் நடிகைகள்
ஜெய்
தனக்கு கொடுத்த கேரக்டரை உள்வாங்கி செய்பவர் ஜெய்.
யதார்த்தமாக, நம் பக்கத்துவீட்டில் வாழும்
பசங்களில் ஒருத்தராகவே இதில் உள்ளார். காதல் கோபம் நட்பு அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.
வாழ்த்துகள்
சுரபி
அழகு அழகு , நல்ல
நடிப்பு. ஆனால் எப்போதும் திரைக்கதையை நகர்த்த இயக்குனர்கள் பயன்படுத்தும் காதலியாகவே
வருகிறார் .
மற்றவர்கள்
கருணாஷ் சபாஷ்.
அருமையான உத்வேகமான நடிப்பு. சாதாரண அண்ணணுக்கு வரும் கண்டிப்பும் பாசத்திலும் மிக
சிறப்பான நடிப்பு
RJ பாலாஜி சிரிக்கவைக்கவா
வருகிறார்? அப்படியொன்றும் தெரியவில்லை. சிரிப்பே வரவில்லை. பெட்டர் லக் நெக்ஷ்ட் டைம்.
மற்றபடி அரசியல்வாதியாக
நடித்தவர் , ஜெயின் நண்பர்களாக வளம்வருபவர்கள் அனைவரும் கச்சிதம்
ஒளிப்பதிவாளர்
R வேல்ராஜ்
படத்தின் பலமாக
செயல்பட்டுள்ளார் . யதார்த்தமான கதை என்பதால் , தன் பணியை சிறப்பாக செய்துள்ளார்.
இசையமைப்பாளர்
விவேக்-மெர்வின்
இவரின் முதல் படம்
போன்றே தெரியவில்லை. பாடல்கள் அனைத்தும் தரமாக உள்ளது. பிண்ணனி இசை , படத்தில் ஒன்றிசெல்கிறது.
வாழ்த்துக்கள்
மற்றும் படத்தின்
எடிட்டரான G.B. வெங்கடேஷ் , நன்றாகவே படத்திற்கு
கத்திரி போட்டுள்ளார். இருந்தும் ஒரு ரசிகனாக படம் பார்க்கும் போது பல காட்சிகள் ‘இந்த
சீன் படத்திற்கு தேவைதான?’’ என்ற கேள்வயை கேட்கவைக்கின்றது . மணிமாறனிடம் அந்த காட்சிகள்
தேவையில்லையென்று சிறிது சிபாரிசு செய்திருக்களாம்
ரசிகன் பார்வை
‘படம் பரவால இன்னொரு
தடவ திருட்டு விசிடி ல பாக்ர மாதிரியிருக்கு’.
என் பார்வை
ஒரு யதார்த்தமான
படமாக என்னை கவர்ந்தாலும் , ஒரு ரசிகனாக பல காட்சிகள் படத்தில் ஒன்றவில்லை. மொத்ததில் இந்த 'புகழ்' புகழபடவில்லையென்றாலும் பாராட்டுகள் பெறுவான்.
No comments:
Post a Comment