Sunday, 27 March 2016

முருகதாஸ் - இயக்குனர்

ஏ.ஆர் முருகதாஸ் – இயக்குனர்



இன்று இந்தியாவின் தலைசிறந்த இயக்குனர்கள் என்று பட்டியல் எடுத்தால் நிச்சயம் ஏ.ஆர் முருகதாஸின் பெயர் அதில் இடம்பெறும் . என் முதல் இயக்குனர் விமர்சனம் முருகதாஸை பற்றி எழுதகாரணம் ‘தமிழ் சினிமா ரசிகர்கனின் பார்வையும் , விமர்சகனின் பார்வையும் நன்கு தெரிந்துவைத்தவர் என்றால் அது இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸே . அதுமட்டுமின்றி இயக்குனராக வேண்டுமென்று விரும்பும் இன்றைய இளைஞர்கள் பலரின் ரோல்மாடலாக இவர் உள்ள காரணம் ஏன் தெரியுமா?

கள்ளக்குருச்சியில் சாதாரண ஏழைக்குடும்பத்தில் பிறந்த இவர் தன் பள்ளிபடிப்பினை அரசு பள்ளியிலே முடித்தார். அனைத்து இளைஞர்களுக்கும் தன் வாழ்க்கையின் கனவின் பிறப்பிடம்  கல்லூரி காலமே. அதே போல்தான் இவரின் இயக்குனராக வேண்டுமென்ற கனவும் கல்லூரியிலே பிறந்தது.  மேல்படிப்பிற்காக திருச்சி பிஷ்ஷோப் கல்லூரியில் தன்  பி.ஏ தமிழை படிக்கும் காலத்தில் ‘மிமிக்ரி , ஜோக்ஸ் ( ஸ்கெட்ச் ஜோக்ஷில் வல்லவர் ) , ட்ராயிங் , மற்றும் பத்திரிக்கைகளுக்கு கதையெழுதுதல்’ ஆகியவை செய்துவந்தார் . அப்போதுதான் இயக்குனராகவேண்டுமென்ற கனவு இவரின் மூளைக்கு ஆடராக கிடைத்தது. இதனால் தன் சொந்த ஊருக்கு வரும்போதெலாம்  வாரம் 7 படமாவது பார்த்துவிடுவார்.

பி.ஏ முடித்ததும் டைரக்ஷன் டிபார்ட்மென்டில் பயில்வதற்காக சென்னை ‘மெட்ராஷ் ஃபிலிம் இன்ஷ்ட்டியூட்டில்’ அப்பலை செய்தார். ஆனால் அங்கே அவருக்கு சீட் கிடைக்கவில்லை. இருந்தும் துவளாமல்  , ஒரு பக்கம் சிறுகதைகளை எழுதி பத்திரிக்கைக்கு அனுப்பிகொன்டேயிருந்தார். அவரின் சிறுகதைகள் பத்திரிக்கைகளில் பிரசுரமானது. பின் தன் வாழ்வு சினிமாவிற்காகதான் என்றுனர்ந்தவர் தனது 20வது வயதில் ஒரு வழியாக சொந்தஊரை விட்டுவிட்டு சென்னை ஓடிவந்தார். கஷ்டமும் இவரின் கூடவே பயணித்தது.


துணை இயக்குனர்


தமிழ் சினிமாவில் ஒருவருடன் துணைஇயக்குனராக சேரவேண்டுமென்றால் ஒருசில தகுதிபகுதிகளை இயக்குனர்கள் பார்ப்பார்கள் , இவரு்ககும் அதுவே நடந்தது . ஆனால் முருகதாஸ் ஏற்கனவே தான் எழுதிய சிறுகதைகள் பத்திரிக்கையில் பிரசுரம் ஆகியதை காட்டி , பி. கலைமணியிடம் ‘மதுரை மீனாட்சி’ படத்திற்கு துணைஎழுத்தாளரானார் . இவர் முதன் முதலாக துணையிக்குனராக பணியாற்றிய படம் இரச்சகன் , அதே சமயம் தெலுங்கு படத்திற்கும் திரைக்கதை எழுதும் பொருப்பில் இருந்தார் அதன் பிறகு .எஸ்.ஜே சூர்யாவிடம் '1997ல் குஷி' படத்தின் போது துணைஇயக்குனராக சேர்ந்தார். முருகதாஸ் . அவரிடம் சேர்ந்த பிறகுதான் இவரின் வாழ்க்கையே மாறிபோனது. 

( முருகதாஸ் பட்ட கஷ்டங்கள் கொஞ்சமல்ல , ஒரு துணைஇயக்குனருக்கு தயாரிப்பாளர் பேட்டா தருவதே ஆச்சரியமென்பது தங்களுக்கு நன்றாக தெரிந்ததே . அதனால் இவர் என்னா செய்தார் தெரியுமா?  சென்னையில் ஒரு சலவை தொழிற்சாலையில் ஒரு ரூபாய்க்கு ஒரு துணி என்ற கணக்கில் துணி துவைத்துகொண்டிருந்தார் )

முருகதாஸிடம் இருந்த மிகபெரிய திறமையை கண்ட எஸ்.ஜே சூர்யா நடிகர் அஜீத்குமாரிடம் சிபாரிசு செய்தார் ( ஒரு ஏழை கலைஞனின் கஷ்டம் இன்னொரு கலைஞனனுக்குதான் தெரியும் )   .




நடிகர் அஜூத்குமார்  கதை கூற ஏ ஆர் முருகதாஸை அழைத்திருந்தார் . முருகதாஸூம் 45 நிமிடங்கள் கதையும் அதன் திரைக்கதையும் கூற , மனிதருக்கு அந்த கதை பிடித்துவிட்டது . அதுதான் 2001ஆம் ஆண்டு மிகபெரிய வெற்றியை பெற்ற ‘ தீனா’ திரைப்படம் . நடிகர் அஜூத்குமார் முருகதாஸிற்கு ‘இயக்குனர்’ என்னும் பட்டத்தை வழங்கினார் . முருகதாஸ் அஜீத்குமாருக்கு ‘தல’ என்னும் பட்டத்தை வழங்கினார் .

இதன் பிறகுதான் முருகதாஸ் தன் நேர்த்தியான நெத்தியடியான திரைபடங்களை எடுக்க ஆரமித்தார் .

முருகதாஸின் பலமும் பலவீனமும் மற்றும் அவரின் திரைப்பட ஃபார்முளாவையும் அடுத்தவாரம் பார்ப்போம். 


பயணம் தொடரும்…

No comments:

Post a Comment