Wednesday, 16 March 2016

ஆறாதுசினம் - திரைவிமர்சனம்

சரியாக சொல்லவேண்டுமென்றால் படம் வெளியாகி இதோடு 21 நாட்களாகிவிட்டது. முதலில் எப்படி விமர்சனம் எழுதவேண்டுமென்று எனக்கு சரியாக தெரியாது. இப்போதும் ஒரு ரசிகனாகதான் எனக்கு என்னா தோணுகின்றதோ அதை கிறுக்கிகொன்டிருக்கின்றேன் . மேலும் என்னை பொருத்தமட்டில் வெறும் படத்தை பற்றி மட்டும் விமர்சிப்பது மட்டுமில்லாமல், அதில் பணிபுரிந்த அனைவரை பற்றியும் தனி தனியாக விமர்சிக்கவேண்டும். அப்போதுதான் அவர்களும் நம் கண்ணிற்க்கு வந்துசெல்வார்கள் . என் எழுத்துகளில் தவறேதேனும் ( தவறுகளுக்கு என்னிடம் பஞ்சமில்லை) இருப்பின் தயவுசெய்து சுட்டிக்காட்டவும் .

 இறுதிச்சுற்று படத்திற்கு பிறகு விமர்சனம் எழுதவேண்டும் என்று தோன்றிய படங்களின் வரிசையில் முதலிடம் இந்த ஆறாது சினம் படத்திற்கே அளிப்பேன் . ஏனென்றால் ஜனவரி மாதம் வரை ஆறாது சினம் படத்தை பற்றி அவ்வளவு பெரிய அபிப்பராயம் எனக்கு கிடையாது. ஒரு முறை ப்ரௌஸிங் சென்டர் சென்ற போது இதன் ட்ரைலரை டவுன்லோட் செய்து வீட்டிற்கு வந்து பார்த்தேன் . அந்த 1.56 நிமிடங்களே என்னை தியேட்டருக்கு, 2 மணி நேரம் பார்க்க இழுத்துச்சென்றது. அதுமட்டுமின்றி நடிகர் அருள்நிதி , இயக்குனர் அறிவழகன் என்றதும் , படம் வெளியான முதல்நாளே தியேட்டரில் முதல் ஆளாக (ஆப்பரேட்டர் கூட வரவில்லை) டிக்கெட் எடுத்து உள்ளே சென்றேன்

கதையும் அதன் பயணமும்

வெவ்வேறு இடங்களில் நடக்கும் கொலைகள், அதுவும் ஒரே மாதிரியான கொலைகள், இவற்றை யார் செய்தார் ? எதற்கு செய்தார்? இதான் இந்த படத்தின் கதை கரு.

முதலில் ரௌடிகளை என்கவுன்டர் செய்யும் போலீஸ் அதிகாரியாக அருள்நிதி வருகிறார். ஒருசில அரசியல் காரணங்கள் அதில் பிரபல ரௌடியை அருள்நிதியால் என்கவுன்டர் செய்யமுடியாமல் போகிறது. அந்த என்கவுன்டர் ஆப்ரேஷனின் போது எதிர்பாராத விதமாக அந்த ரௌடியின் மனைவி சுடபடுகிறார். இதனால் அருள்நிதியின் மனைவியையும், குழந்தையையும் அந்த ரௌடி கொன்றுவிடுகிறான். இதனால் மனமுடைந்த அருள்நிதி குடியிலே குடியிருக்கிறார் . அந்த சமயத்தில் தொடர்ந்து இரண்டு கொலைகள் தமிழ்நாட்டில் அரங்கேருகிறது. இதனால் உயர் அதிகாரியான ராதாரவி , கொலைசெய்தவர் யாரென்று கண்டுபிடிக்கும் பொறுப்பை அருள்நிதியிடம் ஒப்படைக்கிறார். இறுதியில் யார் கொலைகளை செய்கிறார்? எதற்கு செய்கிறார்? என்பதை த்ரில்லராக குதிரை வேகத்தில் நகரும் தன் திரைக்கதையில் அசத்தலாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் அறிவளகன்.

எழுத்தும் இயக்கமும்


‘ஈரம்’ என்ற ஒரே படத்தின் மூலம் ரசிகர்களையும் விமர்சகர்களையும் எந்தவித குறைகளையுமின்றி பெற்றார் அறிவளகன். இவரின் இரண்டாவது படமான ‘வல்லினமும்  நல்ல பெயரை பெற்றுதந்தது. இந்த இரண்டு படமும் த்ரில்லரை அடிப்படையாக கொன்டது. இப்போது ‘ஆறாது சினம்’ . இந்த படத்திற்கு பிறகு நிச்சயம் இவரின் அடுத்த படங்களுக்கு கண்மூடி கொன்டு தியேட்டருக்கு செல்லலாம் எனும் நம்பிக்கை அளித்துள்ளது. 
மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான ‘தி மெமரிஸ்’ படத்தின் கதையே இந்த ஆறாதுசினம். இதன் திரைக்கதையை பல இடங்களில் தன் எழுத்துக்களால் மாற்றியமைத்து செம்மையாக செதுக்கியுள்ளார் அறிவழகன். உதாரணமாக ,கொலைகளுக்கிடையே உள்ள ஒற்றுமைகளை அருள்நிதி கண்டுபிடிப்பது, வில்லனை நெருங்கும் போது ‘யாராக இருப்பார், யாரு’ என்று ரசிகர்களை பதட்டத்திற்குளும் , படத்திற்குள்ளேயும் செல்லவைக்கிறார். கொலை செய்ய கூறும் காரணமும் ஏற்றுகொள்ளத்தக்கது. அருமையான மற்றும் அட்டகாசமான திரைக்கதை. ஆனால் பிழைகளென்று பார்த்தால் கொஞ்சம் அதிகமே. ‘ரோபோ சங்கரும் , ஐஸ்வர்யா டுட்டாவும் , ரமேஷ் திலக் ஆகிய மூவரும்’ எதற்கு வருகிறார்கள் என்றே தெரியவில்லை. மேலும் அடிக்கடி அருள்நிதியின் மனைவி அவரின் குழந்தையை கொல்லும் காட்சிகள் அவரின் கனவுகளில் வருவது (5-6 முறை வரும்) தேவையில்லாதது. அவர்களின் குடும்ப பாடலும் தேவையில்லை, அதற்கும் கதைக்கும் சமந்தமில்லை. இதை தவிர படத்தில் வேறுகுறையில்லை. அதுவுமில்லாமல் படத்தை 4 மாதங்களிலே முடித்து திரைக்கு கொன்டுவந்துள்ளதே மிகப்பெரிய விடயம்தான்.வாழ்த்துகள் அறிவளகன்

நடிகர்,நடிகைகள்

அருள்நிதி

வம்சம், மௌனகுரு, தகராரு , டிமான்டி காலனி ஆ்கிய மிகவும் தரம் வாய்ந்த படங்களையே அருள்நிதி வழங்கியுள்ளார். இந்த படமும் அதில் முக்கிய இடம் வகிக்குமென்கது சந்தேகமில்லை. குடிகாரராகவும் , குற்றவாளியை கண்டுபிடிக்குமிடங்களிலும் , தன் மனைவி, குழந்தையை பறிகொடுத்த ஒரு மனிதனாகவும் மிக மிக நன்றாக செய்துள்ளார், இதனால் இவரின் அடுத்த படம் என்னாவென்று கூகுளில் தேடுமலவிற்கு இந்த படத்தில் தன் கேரக்ட்டரை உள்வாங்கி செய்துள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஐஸ்வர்யா டுட்டா

ஐஸ்வர்யா ராஜேஷ் மனைவியாக அழகு. ஆனால் படத்தில் 10 நிமிடம்தான் இவரின் பங்கு.

ஐஸ்வர்யா டுட்டா ரிப்போர்ட்டராக வருகிறார். இவரை படத்தில் ஒரே இடத்தில்தான் பயன்படுத்துவார்கள், அதுவும் சொதப்பிவிடும்.

கௌவரவ் நாராயணன்

படத்தின் தலைப்பே ‘ஆறாது சினம்’. வில்லனின் பழிவாங்கும் கோபத்தைதான் தலைப்பாக வைத்துள்ளனர். பலமான .,மிக பலமான கேரக்டர். இவரின் கேரக்டரை படத்தில் பார்த்து தெரிந்துகொல்லுங்கள்

மற்றவர்கள்

ராதாரவி ஜாய்ன்ட் கமிஷ்னராக சரியாக உள்ளார். அருள்நிதியின் அம்மாவாக துளசி சரியான தேர்வு. சார்லி ,ரமேஷ்திலக் மற்றும் ஆதிரா , ஆகியோர் படத்தில் வந்துசெல்ல மட்டுமே பயன்படுத்தபட்டிருக்கின்றனர்.

இசையும்,ஒளிப்பதிவும்

எஸ்.எஸ் தமன்

படத்தின் மிக மிக பெரிய தூணாக உள்ளது இசை. தமனா இது? என்று வாய்பிழந்தவர்கள் (என்னையும் சேர்த்து) அதிகம். அவ்வளவு அருமை .த்ரில்லருக்கு உயிர்கொடுத்திருக்கின்றார். செமத்தியாக ஸ்கோர் செய்துள்ளார். 


அரவிந்த் சிங்

‘டிமான்டி காலனி’ என்ற படத்திற்கு உயிர் கொடுத்தவர் ஒளிப்பதிவாளர் அரவிந்த்சிங். இந்த படத்திற்கும் இவர்தான் உயிர் கொடுத்துள்ளார். படத்தின் ஆரம்ப என்கவுன்டர் சீனிலும் , டைட்டில் கார்ட் ஓடும் இடங்களிலே இவர் யாரென்று காட்டிவிட்டார். பாடல்காட்சியில், அதை  கண்களில் ஒட்டிகொள்ளும் அளவிற்கு இவரின் உழைப்புள்ளது. இயக்குனர் அறிவளகன் கேட்டதைவிட இரண்டு மடங்கு விஷூவலை கொடுத்துள்ளார்.

No comments:

Post a Comment