தவறுகள் ஏதேனும்
இருப்பின் ( எங்கிட்ட அதற்கு பஞ்சமே இல்ல )
இன்றுமுதல் இனி வாரம் ஒரு இயக்குனரை பற்றி விமர்சனம் செய்யபடும். நீங்கள் ஒத்தளித்தால்
விவாதமும் மேற்கொள்ளலாம். ஏனென்றால் இயக்குனர் ஆகவேண்டுமென்று கனவுகளோடும் நினைவுகளோடும்
பல இளைஞர்கள் கோடம்பாக்கத்திலும் , பல சூழ்நிலைகளாலும் , பணபிரச்சனைகளாலும் கோடம்பாக்கத்திற்கு
செல்லமுடியாமல் தவிக்கும் இளைஞர்களும் ஏறாலம். ஒரு கலைஞன்தான் திரைபடத்துறையில் இருக்க
வேண்டுமென்ற காலங்கள் கடலேறிவிட்டது. பணமிருந்தால் இயக்குனர் , சிபாரிசு செய்ய பெரிய
அரசியல்வாதியிருந்தால் இயக்குனர் , ஒரு குறும்படம் எடுத்தாலும் இன்று இயக்குனரே. இவர்களெலாம்
அதிர்ஷ்டசாலிகள் மட்டுமே. உண்மையில் எவனொருவனுக்கு திறமையும் , முயற்சியும் ( பல கஷ்டங்களை
தாங்கும் இடிதாங்கியாகவும் ) இருக்கின்றதோ அவனே இயக்குனராக தன்னை நிலைநிறுத்தமுடியும்.
இயக்குனராகவேண்டுமென்றால்
என்னா செய்யவேண்டும்?
குறும்படங்களை
எடுப்பது. இது எளிதான விடயமல்ல. 10நிமிடத்தில் அனைத்து தரப்பு திரையுலகினறையும் கவரவேண்டும்.
அப்படியே கவர்ந்தாலும் ஒரு தயாரிப்பாளரை சந்தித்து ஃப்யூச்சர் பிலிமிற்கு கதை கூற
, ஒரு மாட்டைவிட அதிகமாக தவுடு திங்கவேண்டும். அதையும் ,தாண்டி இயக்குனரை சந்தித்தால்
, அவர் கூறுவது, ‘சிறிய பட்சட்டில் படமெடுக்கவேண்டும் , அதிக பக்கட்டில் லாபம் தரவேண்டும்’.
இப்படியொரு கதையிருந்தால் சொல்லு’ என்பார்.
நீங்களும் ஆர்வகோலாரில் கிடைத்தவாய்ப்பை பயன்படுத்தவேண்டுமென்று , ‘இருக்கு சார்’ என்று
கூறி, இல்லாத கதையொன்றை கூறி , கடைசியில் அந்த படத்தை எடுக்க தயாரிப்பாளரிடம் பணமில்லாமல்
போனால் , அவ்வளவுதான் . உங்கள் கனவுகள் பகல் கனவாக மாறிவிடும். இன்று செய்திதாளை எடுத்துபாருங்கள்.
30 பட போஸ்டர் இருக்கும். அதில் 20 படம் பல வருடங்கள் போஸ்டராகவேதான் இருக்கும்.
ஒரு இயக்குனருக்கு
வாழ்க்கையளிப்பது , அவனுடைய முதல் படமே.அதனால் நீங்கள் ‘தயார்செய்த கதைகளில் இந்த கதைதான்
அருமையாக வித்தியாசமாக வருமென்று நினைத்தால் அந்த கதையை கூறிவிடுங்கள். ( கையில் வெறும்
ஒரு கதை மட்டும் வைத்திருக்க கூடாது, 4 ,5 கதைகளை தயார் செய்துகொன்டு செல்லவும். அப்போதுதான்
தயாரிப்பாளருக்கு ஒரு கதைபிடிக்கவில்லையென்றாலும் , மற்ற மூன்றில் ஒன்று பிடிக்கலாம்,
அப்படி உருவான படங்கள் பல உள்ளது, உதாரணமாக ‘’மங்காத்தா, மாரி’’ )
இப்படி நான் குறும்படம்
எடுத்து பெறும்பாடு பட விரும்பவில்லையென்று எண்ணுவோர்களுக்கு, இன்னொரு வாய்ப்புள்ளது
. அதுதான் ஒரு இயக்குனரிடம் துணை இயக்குனராக பணியாற்றுவது. இதும் எளிதான விடயம் அல்ல.
தயாரிப்பாளரின் தேர்வு போலவே இதுவும் இருக்கும். பல முறை இயக்குனரின் வீட்டின் முன்பு
காத்திருக்கவேண்டும் . அவரின் வீட்டில் ராஜாவாக வசிக்கும் நாய்க்கு பிஸ்கெட் வாங்கிசெல்லவேண்டும்
( பிஸ்கெட் மட்டும் வாங்கி செல்லவில்லையென்றால் ஒரு மாதம் பெட் ரெஷ்ட் உறுதி ). அதுமட்டுமின்றி
சூடு , சொரனை , வெட்கம் , ஞானம் , மடல், கோபம் , வெறுப்பு , இப்படி தன்னிடமுள்ள அனைத்தையும்
துறக்கும் ஒரு துறவியாக இருக்கவேண்டும்.
அதேபோல் தயாரிப்பாளர்
மற்றும் சினிமாவில் பெரிய தலைகளின் சிபாரிசு மூலம் துணைஇயக்குனராக ஆகி விடலாம் என்று
எண்ணும் நண்பர்களுக்கு ஒரு உதாரணம் . ஒருமுறை இயக்குனர் பாலாவிடம் சிவனேஷ்வர் என்பவரை
துணைஇயக்குனராக சேர்த்துகொள்ளவுமென்று ஒரு பெரிய தலை பாலாவிடம் சிபாரிசு செய்துள்ளது.
அதற்கு அவர் செய்த காரியம் என்னா தெரியுமா ? பாலாவும் அவரை துணைஇயக்குனராகு சேர்த்துகொன்டார்
. ஆனால் அவரை தினமும் ஆபிஸ்லயே உட்காரவைத்துவிட்டு சூட்டிங் சென்றுவிடுவார் . இப்படியே
நாட்கள் உருண்டோடியது. ஒரு நாள் இயக்குனர்
பாலா , ஆபிஸில் அமர்ந்திருந்த சிவனேஷ்வரை பார்த்து ஒரே ஒரு கேள்விதான் கேட்டார் ,
‘தம்பி நீ யாரு ? இங்க ஏன் உட்காந்திருக்க ? இதனால் அவன் தன் சினிமா வாழ்க்கையவே வெறுத்துவிட்டான்..
சிபாரிசு மூலம் செல்லும் அனைவருக்கும் இதான் நிலைமை.
இதையெலாம் மீறி
தன் உழைப்பாளே ஒரு இயக்குனரிடம் துணைஇயக்குனராக சேர்ந்துவிட்டால் , சினிமா என்னும்
மாயஉலகில் உங்கள் திரைபடங்களை எப்படி உருவாக்குவது என்பதை தெளிவாக கற்றுகொள்ளாலாம்.
ஆனால் இது ஒரு கோர்ஷ் படிப்பது போலவே. ஒரு கோர்ஷை முடித்துவிட்டால் அதன் பெயரை ரிசியூமில்
சேர்ப்பது போலதான். தயாரிப்பாளரிடம் ‘நான் இவரிடம் துணைஇயக்குனராக பணியாற்றியுள்ளேன்
( பெரிய இயக்குனர் என்றால் தாராலாமாக கூறலாம், தயாரிப்பாளருக்கு உங்கள் மீது நம்பிக்கை
வந்துவிடும் , ஆனால் பெயரே தெரியாத இயக்குனர் என்றால், முடிந்தஅளவு, தயாரிப்பாளர் உங்களை
தட்டிகளிக்கவே பார்ப்பார் ) . எதுவாக இருந்தாலும் தயாரிப்பாளரை சந்திக்கும்போது மண்டையில்
அதிக அளவு சரக்கோடு ( கதை ) செல்லவும்.
அப்படி முதல் படம்
மட்டும் வெற்றிபெற்றுவிட்டால் ‘ சினிமாவை ஒரு சுற்று சுற்றலாம் ‘ .. பணத்தில் மிதக்கலாம்.
இதோடு நிறுத்திகொள்கிறேன்
இது வெறும் அறிமுகமே. முன்னுரை மட்டுமே கூறியுள்ளேன்.
சரி அடுத்தவாரம் முதல் ,இயக்குனர்களை பற்றி பார்ப்போம்…என் முதல் விமர்சனம்
இயக்குனர் ‘ஏ.ஆர். முருகதாஸை’ பற்றி…காத்திருங்கள் , கற்றுகொள்ளுங்கள்
No comments:
Post a Comment