Thursday, 28 July 2016

இயக்குனர்கள் - ஒரு பார்வை பாகம் 2

நான் இங்கே குறிப்பிடும் இயக்குனர்கள் அனைவரும் இப்போதுள்ள கரெண்ட் இயக்குனர்களே   அதனால்  , மகேந்திரன் சார் , பாக்கியராஜ் சார் , பாண்டியராஜன் , பாரதிராஜா சார் , பாலுமகேந்திரா சார் ...etc  எங்கனு  கேக்காதிங்க . அப்பறம் இயக்குனர்களை பற்றி குறிப்பிட தகுதியென்பது அவசியமே இல்லை , இவர்கள் ஒரு திறந்த புத்தகம் , அதை நான் படித்து  என் பார்வையில்தான் இதையெலாம் குறிப்பிடுகின்றேன் . நான் எதையாவது விட்டுவிட்டாலோ , தவறான தகவல்களை குறிப்பிட்டிருந்தாலோ கமெண்டில் குறிப்பிடலாம் .

சென்ற பதிவில் இயக்குனர் ஷங்கர் மற்றும் ஏ.ஆர். முருகதாஸை பற்றி பார்த்தோம். அவர்கள் தயாரித்த படங்களையும் பார்த்தரலாம்

ஷங்கர் தயாரித்த படங்கள் (முதல்வன் இவர் தயாரித்த முதல் படம் )

1.காதல் ( பாலாஜி சக்திவேல் )
2.இம்ஸை அரசன் 23-ம் புலிகேசி ( சிம்பு தேவன் )
3.வெயில் ( வசந்தபாலன் )
4.கல்லூரி ( பாலாஜி சக்திவேல் )
5.அறை எண் 305-ல் கடவுள் ( சிம்பு தேவன் )
6. ஈரம் ( அறிவழகன் )
7.ரெட்டைசுழி ( தாமிரா )
8.ஆனந்தபுரத்து வீடு ( நாகா )
9.கப்பல் ( கார்த்திக் ஜி.க்ரிஷ் )

ஷங்கர் இயக்கும் படங்கள்தான் பிரமாண்டகளாக இருக்கும் போல  , ஆனால் இவர் தயாரத்த படங்களனைத்தும் சிறுபட்ஜெட் படங்களே ( இ.அ. 23ம் புலிகேசியை தவிர .காரணம் அந்த படத்தின் இயக்குனரே ஷங்கரின் துணை இயக்குனராக பணியாற்றிய சிம்பு தேவன் ). ஷங்கர் தயாரித்த படங்களை பார்த்தால் மேக்ஷிமம்  நெஞ்சினை உருகும் படங்களாகதான் இருக்கின்றன , ( 2. 5, 9,ஐ தவிருங்கள்  அவையனைத்தும் நெஞ்சை சிரிக்கவைக்கும் படங்கள் .)

முருகதாஸ் தயாரித்த படங்கள்

1.எங்கேயும் எப்போதும் ( சரவணன் )
2.வத்திக்குச்சி ( கின்ஷ்லின் )
3.ராஜா ராணி ( அட்லி )
4.மான்கராத்தே ( திருக்குமரன் )
5.10 எண்றதுக்குள்ள ( மில்டன் )
6.ரங்கூன் ( ராஜ்குமார் பெரியசாமி –ஃபில்மிங் )

கமர்ஷியல் கலைஞரென்றால் அது முருகதாஸ்தான் . தமிழ் , ஹிந்தி , தெலுங்கு என இந்தியாவின் முன்னனி மொழிகளில் படமியக்கும் வல்லமை கொண்டவர் . இவர் காலடியெடுத்து வைத்தால் அந்த படம் நிச்சயம் வெற்றிதான் . ஆனால் இவன் தயாரித்த படங்களில் எங்கேயும் எப்போதும் . ராஜாராணியை தவிர மற்றவை தோல்விதான்  (மான் கராத்தே சுமார் லிஸ்ட்தன் பாஸ் ) .

சரி இனி அடுத்ததற்கு போகலாம்..
இந்த பதிவில் சினிமாவை தனி ட்ராக்கில் பயணம் செய்யும் , நிருத்தமுடியாத மூன்று இயக்குனர்களை பார்க்கலாம் . உலக சினிமா ரசிகர்களுக்கு இந்த மூன்று பேரையும் பிடிக்காமல் இருக்காது.

பாலா




புகழ் பிடிக்காது , பணம் பிடிக்காது , ஆடம்பரம் தேவையில்லை , புது டெக்னால்ஜிகள் தேவையில்லை ( புது மியூஷிக் இன்ஷ்ட்ரூமென்ட்ஷ் கூட பயன்படுத்தமாட்டார் )  , ‘கர்வம்’ பிடித்த இயக்குனர் என்றே என் நண்பர்கள் இவரை குறிப்பிடுவதுண்டு . அதற்கு காரணம் பல விருது நிகழ்ச்சிகளில் பார்த்தால் உங்களுக்கு புரியும் . ஆனால் மிக மிக மிக சாதாரண மனிதர் . சினிமாவில் பொறுத்த வரை அசாதாரண மனிதர் . கீழ்வர்க்க தொழில்கள் , நாம் சாதாரண பார்ப்பதை வேருன்றி பார்ப்பவர் . இவர் படங்களனத்தும் சாதாரண கதையை கொண்டதே .ஆனால் மேக்கிங் என்றது முற்றிலும் மாறுபட்ட ஃபார்முலா . நிஜகாட்சிகள் போல நடிகர்களை மாற்றி , ஆர்ட் டைரக்டரிம் வேளைவாங்கி , இசை , நடனம் , நடிப்பு எல்லாம் எதார்த்தமாகவே இருக்கும் , படத்திற்காக என்று தனியாக எதுவுமே இருக்காது  , கொஞ்சம் கமர்ஷியலை பார்க்கலாம் ( வீட்டுக்கு பெயின்ட் அடிக்கனுமுனா பட்டி போட்டுதான ஆகனும் ) . உலக சினிமா ரசிகர்கள் இவரின் படங்களுக்கு ரசிகராக இல்லாமல் இருக்கமாட்டார்கள் ..

ரசிகர்கள் இப்போது விக்ரமை மிகபெரிய நடிகர் என்று கொண்டாட காரணம் இவர்தான் . அதுபோல , நடிக்கவே தெரில என்று விமர்சனத்திற்கு உள்ளாக்கபட்ட ஆர்யாவையும் அவன் இவன் படத்தில் நடிக்கவைத்தார் . மேலும் ஃபார்ம் அவுட்டிலிருந்த அதர்வாவை பெரிய அளவிற்கு கொண்டுவந்தார் . பெரிய பெரிய நடிகர்கள் இவரின் படத்தில் நடிக்க பயப்படுகின்றனர் , காரணம் நான் கூறிதெரியவேண்டியதில்லை , உங்களுக்கே தெரியும் .



பெரும்பாலும் இவரின் படங்களுக்கு இசையமைப்பாளரென்றால்  இளையராஜாதான் .ஆனால் ‘தாரை தப்பட்டை ‘ படத்தின் போது இருவருக்கும் எதிர்வீட்டு பிரச்சனை போல் என்றார்கள் . ‘பரதேசி’ படத்தில் ஜிவி யுடனும் , ‘அவன் இவன்’ படத்தில் யுவனையும் இசையமைப்பாளராக பயன்படுத்தினார் .


இவரின் படங்கள்

1.சேது
2.நந்தா
3.பிதாமகன்
4.நான் கடவுள்
5.அவன் இவன்
6.பரதேசி
7.தாரை தப்பட்டை

தாரைதப்பட்டை படம் மட்டும்தான் சுமார் ரகத்தை சேர்ந்தது . மற்ற அனைத்தும் டார்க்லி ஹிட் லிஸ்ட் சேர்ந்தது . அவன் இவன் படத்தை தவிர மற்ற அனைத்தும், அவார்டு வாங்கததே கிடையாது ( தாரைதப்பட்டை இந்த வருடம்தான் வந்தது ) , விருது விழா என்றால் , விருதுகளுக்கு பாலாவை மிக பிடிக்கும் போல  , ஓடி வந்து குழந்தையை போல் ஒக்காந்துகொள்கின்றது .

தயாரித்த படங்கள்

1.மாயாவி ( சிங்கம் புலி )
2.பிசாசு ( மிஷ்கின் )
3.சண்டி வீரன் ( சற்குணம் )
 பிசாசுவை தவிர மற்றவை பெரிதாக இல்லை . சண்டிவீரன் சுமார் லிஸ்ட் . மாயாவியை எதில் சேர்ப்பது என்றே தெரியவில்லை .


மிஷ்கின்



இரவு என்றாலே அனைவரும் அஞ்சுவார்கள் . ஆனால் இந்த மனிதர் தன் வாழ்க்கையே இருட்டில்தான் வாழ்கிறார் போல, இருட்டு என்றால் கொள்ளைஇஷ்டம் போல , சாதாரண மனிதனின் பகல் வாழ்க்கையையே இருட்டாக காட்டும் சினிமா கலைஞர் . தனக்கென்று ஒரு தனி ட்ராக்கை தான்னே உருவாக்கி , அதில் பயணிக்கும் மாயமான இருள் ரெயிலே இந்த மிஷ்கின் . ‘’ இவன்தான் மிஷ்கின் , இப்படிதான் கண்ணாடி போட்டுகிட்டே இருப்பான் , இப்படிதான் என் படம் இருக்கும் ‘’  . எவ்வளவு பெரிய கூட்டதிலும் மனதில் நச்சென்று நறுக்கென்று பேசி (ஏசி) யேவிடிவார் .

தனக்கென்ற கேமரா உக்தி , நடிப்பு , கலை என்று தன்னை தனிமையில் செதுக்கிகொண்டவர் . சினிமாவை சுவாசிப்பவர் , ஆளமாக சுவாசிப்பவர் ( ஆக்ஸிஜன கூட இவ்ளோ ஆளமா சுவாசிக்கமாட்டாங்க ) . பெரிய பெரிய நடிகன் தேவையில்லை , பெரிய பெரிய டெக்னீஷியன் தேவையில்லை , சிறு பொடியனாக இருந்தாலும் , அவனிடம் வேளைவாங்கும் அசாத்திய திறமைய கொண்டவர் . முடிந்தால் ‘பிசாசு’ படத்தின் மேக்கிங் வீடியோவை பாருங்கள் , பூவும் கல்லாய் மாறிவிடும் , மனிதனா இவர் ? என்று கேட்காதவர்கள் யாருமிருக்கமாட்டார்கள் . இவருக்கென்று தனி ரசிகர்  படையே உள்ளது  , தமிழ் சினிமா மட்டுமில்லாமல் , ஹாலிவுட் இயக்குனர் ஒருவர் ‘ உங்கள் படத்திற்கு நான் ரசிகன் ‘ என்று கூறவைத்தவர் ( பெயர் தெரியவில்லை ) .

இவரின் படங்கள்

1.சித்திரம் பேசுதடி
2.அஞ்சாதே
3.நந்தலாலா
4.யுத்தம் செய்
5.முகமூடி
6.ஓனாயும் ஆட்டுகுட்டியும்
7.துப்பறிவாளன் ( ஃப்லிமிங் )



இதில் நந்தலாலா ,யுத்தம் செய் ,முகமூடி ஆகிய படங்கள்  ரசிகர்களை மிகபெரிய ஏமாற்றத்திற்கு உண்டாக்கியது , அடுத்த அந்த வெற்றிடத்தை நிரப்பவேண்டுமென்று இயக்கிய ‘ஓனாயும் ஆட்டுகுட்டியும்’ என்ற படம் இதுவரை இனிமேல் அப்படியொரு படம் வருமா என்று தெரியவில்லை , ஆனால் விளம்பரங்கள் அதிகம் செய்யபடாமலோ என்னவோ, அந்த படம் ‘புதுபேட்டை’ போல ஆகிவிட்டது . வெளிவந்தபோது ஃப்ளாப் என்று கூறி , டிவியில் வெளிவந்தபோது ப்ப்ப்ப்ப்பாஆஆ என்னா படம்டா , என்று வாய் பிளக்கும் ரசிகர்கள் இருக்கதான் செய்கிறார்கள் . பிசாசு என்ற ஆசுவாசமான படம் அனைத்து ரசிகர்களையும் உருகசெய்தது . அடுத்த ‘துப்பறிவாளன்’ படத்திற்காக அனைவரும் வெய்ட்டிங் சார் .


செல்வராகவன்




தனிமனிதர்களின் வாழ்க்கையை துல்லியமாகவும் , காதலை வேறுபடுத்தியும் காட்டுவதில் வல்லவர் . காதல் படம் எடுப்பார் காதல் கலந்த காமெடி படமும் எடுப்பார் , ஹிஷ்டரிக்கல் ஃபேண்டஷி படமும் எடுப்பார் . இவர் இன்னும் ஆக்ஷன் படங்களில் மட்டும்தான் கால் வைக்கவில்லை . முதன் முதலில் காதலில் உள்ள காமத்தையும் , யாரும் கூறமுடியாத இளைஞர்களின் மறுபக்கத்தையும் வெளிச்சமாக காட்டிது இவரின் எழுத்தில் வெளிவந்த ‘ துள்ளுவதோ இளமை ‘ . அதன் பிறகு இவரின் இயக்கத்தில் வெளிவந்த ‘காதல் கொண்டேன் ‘  ‘ 7ஜி ரெயின்போ காலனி , மிகபெரிய ஹிட்டடித்து. இளைஞர்களின் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் பெரிதாக பேசபட்டார் . ஆனால் ‘ புதுபேட்டை ‘ படம் அப்போது வெளிவந்த படங்களிலே பெரிய ‘ப்ளாப்’ படமென்று கூறினர் . இப்போது ‘இதான் மச்சான் படம்’ என்று இளைஞர்கள் லாப்டாப்பிலும்  , ஃபேவரட் படமாகவும் , டிவியிலும் பார்த்துகொண்டிருக்கின்றனர் .

இவர் காதலை வேறுவிதமாக பார்ப்பவர் ( காமத்தை கூறவில்லை , வலியை உணர்த்தரன் பாஸ் ) . அதன்பிறகு இவர் எழுதிய ‘யாரடி நீ மோகினி’ திரைப்படம் மிகபெரிய ஹிட் . ஆனால் உயிரை கொடுத்து இயக்கிய  ‘ ஆயிரத்தில் ஒருவன் ‘ ‘மயக்கம் என்ன’ ‘இரண்டாம் உலகம்’ ஆகிய படங்களை விமர்சகர்கள் கொண்டாடினாலும் ,ரசிகர்கள் தூக்கியெரிந்தனர் . இப்போது ‘ நெஞ்சம் மறப்பதில்லை ‘ படத்தை இயக்கி முடித்தியுள்ளார் .



இவர் இயக்கிய படங்கள்

1.காதல் கொண்டேன்
2.7ஜி ரெயின்போ காலனி
3.புதுபேட்டை
4.ாயிரத்தில் ஒருவன்
5.மயக்கம் என்ன
6.இரண்டாம் உலகம்
7.நெஞ்சம் மறப்பதில்லை ( ஃப்லிம்மிங் )

இவர் எழுதிய படங்கள்

1.துள்ளுவதோ இளமை
2.யாரடி நீ மோகினி
3.மாலை நேரத்து மயக்கம்

Tuesday, 26 July 2016

இயக்குனர்கள் - ஒரு பார்வை,

ஷங்கர்



ஷங்கரின் மறுபெயரே பிரமாண்டம் . கதை யோசிப்பதற்கு முன்பே எவ்ளோ பட்ஜெட்டில் எடுக்கலாம் என்று யோசிப்பார் போல . சேன் ஃப்ராண்சிஷ்கோவையும் ஆர்ட் டைரக்டர் முத்துராஜூவையும், தோட்டா தரணியும் வைத்து பின்னி மில்லில் ஒரே செட் போட்டு தத்ரூபமாக காட்டுபவர். வேட்டாவை வைத்து கருப்பண்ணனையும் கலிஃபோர்னியா மனிதனாக மாற்றுவார் , கலிஃபோரினியா ஃபிகரையும் காக்கம்பாடி கண்ணமாவாக மாற்றுவார் . கதையை யோசித்தபிறகு , திரைக்கதைகாக அதிகம் மெனக்கெடமாட்டார் . ஒரு சில இன்ட்ரஷ்ட் சீன்களை சிந்திப்பார் , அதனுடன் காதல் , காமெடி , மற்றும் பாடலை புகுத்திவிடுவார் . வசனத்திற்குதான் பாலமுருகன் ,சுஜாதா , சுபா , ஜெயமோகன்  போன்ற எழுத்தாளர்களை பயன்படுத்திக்கொள்வார் . ஆனால் இவரின் ஆஸ்தான எழுத்தாளர் சுஜாதாவே. இவர்கள் இருவரிடையே இருக்கும் புரிதலுணர்வு அதிகமானது.

ஜென்டில்மேன் முதல் கரெண்ட் ப்ராஜக்டான 2.0 படம் வரை எல்லமே அந்த வருடத்தின் பிரமாண்ட பட்ஜக்டாவும் , வசூலாகவும் இருக்கும் . இந்தியாவின் ஜேன்ஷ்கேமரூன் என்று பலர் கூறுகின்றனர் . காரணம் இவரின் தெளிவான சிந்தனையும் , தேடல்களும் , தனக்கு என்னாவேண்டுமென்பதில் கவனமாக இருப்பார் . சினிமாவில் லைட்மேன் தொடங்கி  , சினிமடோக் ஃராபி , எடிட்டிங் , வி எஃப் எக்ஷ் வரை அனைவருக்கும் தனக்கு என்னா வேண்டுமென்பதை தெளிவுபடுத்தும் கம்யூனிகேஷன் லேங்குவேஜ் ( லேங்குவேஜ்னா ஹிந்தி  இங்கிலீஷ் இல்லீங்கோ, இது நாம நினைக்கரத அப்படியே மத்தவங்களுக்கு சொல்லி புரிய வைக்கரது )  தெரிந்துவைத்தவர்.




என்னடா பிரமாண்டமா எடுக்கரதலாம் பெரிய விஷயமா மாப்ள ? என்று பேசுபவர்களுக்கு ஒரு சின்ன சேலஞ் . சிவாஜி படத்துல அதிரடி கார மச்சான் சாங் வருமே , அந்த பாட்டோட விஷூவல்அ அப்படியே ஷ்கிரிப்டா எழுதிபாருங்க ஜீ , உண்மையா ட்ரை பண்ணாலும் நிச்சயம் தோல்வி உறுதி , காரணம் நீங்க கத்துக்க வேண்டியது நிறையா இருக்கு. க்ரிஸ்டோஃபர் நோலனோட இன்ஷப்ஷன் படத்தோட 5 மினிட்ஷ் ஷ்கிரிப்ட்ட என்னால எழுதமுடியல , பட் இப்போ கொஞ்சம் நல்லாவே எழுதறன் )

எனக்கு ஒரே ஒரு டௌட்.  இயக்குனராவதற்கு எதுக்கு சார் நீங்க இன்ஜினியரிங் படிச்சீங்க ? அதும் மெக்கானிக் இன்ஜினியரிங் ?

என்னா படிச்சா என்னா பாஸ் ? படம் நல்லா எடுக்கராரா ? அது போதும் . மேக்கப் வொர்க்கிலிருந்து பேக்கப் வரைக்கும் இவர் நினைக்கரதுதான் நடக்கும் . ( ஒரு டைரக்டரோட மிக பெரிய சவாலே நாம நினைக்கரத மத்தவங்குளுக்கும் புரியவைக்கரதுதான் )

இன்னொரு சவால் , ‘ ப்ராபர் ப்ளானிங் ‘. இன்னைக்கு ஷூட்டிங்ல இந்த சீன் எடுக்கபோரோம் , அதுக்கு ரெக்யூர்மென்ட்ஷ் என்னா வேணும் , எந்த கேமரா லென்ஷ் யூஷ் பண்ணனும் , இந்த டைமுக்குள்ள இந்த சீன மேக் பண்ணனும், ப்ரொடக்ஷன் கம்பெனிலருந்து ரெக்யூர்மென்ட்ஷ் வந்தாச்சா ? , எந்த ஆர்டிஷ்ட் எந்த ஷீன்கு வேணும் அவங்க எப்படி ஆக்ட் பண்ணனும் , இன்னும் நிறையா விசயம் இருக்கு . அப்படி சங்கர் சார்கிட்ட இந்த ப்ளானிங் பக்காவா இருக்கும் .  இந்த விஷயங்கள ரொம்ப கவனமா இருக்கனும், இல்லைனா விஷமமாகிரும் . நீங்க சினிமாவுக்குள்ள என்ட்ரி ஆகிட்டா அதெலாம் கத்துக்கலாம்.

பாடல் காட்சிகளுக்கு விஷூவல் விருந்து கொடுக்க இவரை அடித்துக்கொள்ளமுடியாது.. அந்த அளவிற்கு அருமையான காட்சியமைப்பை கொடுப்பார் . பாடல் காட்சிகளு்காக உலகம் முழுவதும் சுற்றுபவர் . இவரின் அனைத்து பட பாடல் விஷூவல்ஷ்ம் புதுமையாகவே இருக்கும் . புது புது டெக்னாலஜிஷ் பற்றி படிப்பதற்றகாக அமெரிக்கா, லண்டனென்று செல்பவர் .  அதை பற்றி விரிவாக கூற எனக்கு இந்த பதிவு போதாது என்பதால் அடுத்ததிற்கு செல்கின்றேன்.

ஃபைட் ஷீக்குவன்சிலிருந்து சாதாரண ஆர்டிஷ்டின் பாடி லாங்குவேஜ் வரை அனைத்தும் புது விஷயங்களை ஆடியன்ஷிற்கு கொடுக்கனும்னு நினைப்பார் .அதனாலதான் இவர் இந்தியாவின் ஜேம்ஷ் கேமரூன் . ( நா சொல்லல ஜீ , ஆடியன்ஷ் சொல்றாங்க )
இவரின் படங்கள்
ஜென்டில்மேன்
காதலன்
இந்தியன்
ஜீன்ஷ்
முதல்வன்
பாய்ஸ்
அன்னியன்
சிவாஜி
எந்திரன்
நண்பன்

2.0 ( கரென்ட் ப்ராஜக்ட் )

எனக்கு பிடித்த படங்கள்
பாய்ஸ் , ஐ ஆகிய சுமாரான படங்களை தவிர மற்ற அனைத்தும் ஹிட் கேட்டகரியை சேர்ந்தவை .  சமூக பிரச்சனைகளை கொண்டு இயக்கபட்ட சிவாஜி ,முதல்வன் , அன்னியன் மற்றும் இந்தியன் ஆகிய படங்கள்  என்னுடைய ஒன்ஷ் மோர் கேட்டகரியில் சேர்ந்தவை .




ஏ.ஆர் முருகதாஸ்




சினிமாவில் இயக்குனர்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது . அந்த வகையில் , இந்தியாவில் தற்போதைய தலைசிறந்த இயக்குனர் ஷங்கரா ? இல்ல முருகதாஸா ? என்ற  வாய்வார்த்தை சண்டைகள் ஓடிகொண்டிருக்கிறது . இருந்தாலும் இது தல , தளபதி சண்டை போல் பெரிதல்ல . பாலு மகேந்திரா , மகேந்திரன் , மணிரத்னம் இப்படி பல ஜாம்பவான்களெலாம் சூப்பர் ஸ்டார் , கமல்ஹாசன் போல , ஷங்கரும் முருகதாஸும் தல தளபதி போல . அதனால் கரென்ட் சினிமாவில் மிக பெரிய ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்க்கும் படங்கள் இவர்களின் இயக்கத்தில்தான்.
முருகதாஸ் பெயர் திரையில் வரும் போது ரசிகர்களின் கைத்தட்டல்களும் விசிலும் கூடவே வரும்

.ஷங்கரின் வெற்றிக்கு பின்னே பிரமாண்டமான சிந்தனையும் , வசனகர்த்தாகளின் வசனமும் உள்ளது. ஆனால் முருகதாஸின் வெற்றிக்கு முழு காரணமும் இவருடைய கதையும் , திரைக்கதையும் , வசனமும் , இயக்கும் விதமும்தான் . காலத்திற்கேற்ப தன்னை செதுக்குபவர் . இவரின் கதையும் , வசனமும் சமுதாயத்தை அடிப்படையாக சார்ந்துதான் அமையும் .அதுமட்டுமில்லாமல் ,ஹிந்தி , தெலுங்கு என மல்டிபில் லாங்குவேஜ்களில் பட இயக்குனராவார் , இயக்கிய அனைத்து படங்களும் ஹிட் மெகா ஹிட் மற்றும் ப்ளாக்பஸ்டர் லிஸ்டில் இணைந்தவையே . இவரை பற்றி ஒரு ஆர்டிக்களே எழுதியுள்ளேன் , படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
அதனால் இவரை பற்றி இங்கு அதிகம் குறிப்பிடவிரும்பவில்லை.

.ஆர் முருகதாஸ்இயக்குனர் Part-2


முருகதாஸ் - இயக்குனர் பாகம் 3


இவரின் படங்கள் ( தமிழில் மட்டும் )


1.தீனா
2.ரமணா
3.கஜினி
4.7-ம் அறிவு
5. துப்பாக்கி
6. கத்தி
இவரின் அனைத்து படங்களும் எனக்கு ஃபேவரட்தான் .

அடுத்த பதிவில் இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன் , மிஷ்கின் , செல்வராகவன் ஆகியோர்களை பற்றி பார்ப்போம்.

Saturday, 23 July 2016

அப்பா - திரைவிமர்சனம்



நான்கு நாட்களுக்கு முன்பு ‘அப்பா’ படத்திற்கு சென்றாகவேண்டுமென்று ( ஏனென்றால் கபாலி படம் அடுத்தநாள் வெளியாக இருந்தது , கண்டிப்பாக தியேட்டரை விட்டு அப்பா படத்தை துரத்திவிடுவார்கள் ) தியேட்டருக்கு சென்றுருந்தேன் . படம் வெளியாகி 20 நாட்களாகிவிட்டதே யாரும் வரமாட்டார்களென்று நினைத்தேன் , ஆனால் தியேட்டர் ஹெவுஷ்ஃபுல் காட்சிகாளாகதான் தொடங்கியது , அப்போது இந்த அப்பா மீது மேலும் நம்பிக்கை பூண்டது . இயக்குனர் சமுத்திரகனி மீது அளவற்ற ஈர்ப்பு ஏற்படக் காரணம் அவரின் இயக்கிய ‘ நாடோடிகள் ‘ மற்றும் ‘ நிமிர்ந்து நில் ‘  ஆகிய படங்களே . ஆனால் சமுத்திரகனி யாரென்று கேட்டால் , அவர் நடிப்பில் போது வெளிவந்த ‘சாட்டை’ படமே முதலில் கண்களுக்கு முன்வரும். அப்போது அவரின் மீது ஒரு மரியாதை எனக்கு ஏற்பட்டது. தொடர்ந்து அவர் நடித்த படங்களான ‘காடு’ , ‘வேளையில்லா பட்டதாரி’ , 'நீர்பறவை' , 'புத்தனின் சிரிப்பு' , 'விசாரணை' ஆகிய படங்களில் இவரின் கதாபாத்திரம் மதிப்பிற்குரியதாக இருந்தன  . அவர் தேர்வு செய்யும் கதாபாத்திரங்களும் சமுதாயத்தை சார்ந்த கதாபாத்திரமாகவே இருந்தன . ஆனால் சமீபகாலமாக அவர் நடித்த ‘பாயும் புலி’  ‘காதலும் கடந்து போகும் ‘  ‘ரஜினி முருகன் ‘  'அம்மா கணக்கு 'ஆகிய படங்களில் அவர் கேரக்டர் பேசும்படியாக இல்லை. ஏனோ அப்படங்களை அவர் தேர்வு செய்யக்காரணம் , ‘அப்பா’ படத்தை தயாரிப்பதற்காகவே எனக்கு தோன்றின . ‘ அப்பா ‘ படத்தின் ட்ரைலரிலே படத்தின் கதையை தெரிவித்துவிட்டார் . படம் பார்க்காதவர்களுக்கு படத்தை பற்றி கூறுகின்றேன் வாருங்கள் .

கதையும் அதன் பாதையும்


எனக்கு என் பையன் நான் நினைச்ச மாதிரிதான் இருக்கனும் , நான் சொல்றததான் செய்யனும் , கேக்கனும்னு நினைப்பவர் தம்பி ராமைய்யா . என்னா நடந்தா நமக்கு என்னா ? நாம உண்டு நம்ம வேளை உண்டுனு இருக்கனும்னு நினைப்பவர் நமோ நாராயணன் . இவர்கள் இருவர் செய்யும் தவறுகளை சுட்டிகாட்டியும்  , ஒரு அப்பாவாக மகன்களை எப்படி வளர்க்கவேண்டுமென்று உதாரணமாக இருக்கின்றார் சமுத்திரகனி . ஒரு தந்தையின் கடமைகள் , பொறுப்புகள் என்னாவென்பதையும் வெளிப்படையாக காட்டியுள்ளார் இந்த அப்பா.

எழுத்தும் இயக்கமும்



'உன்னை சரண்டைந்தேன்' படம் இவரின் முதல் படமாக அமைந்தாலும் 'நாடோடிகள்' படமே இவரை வெளிஉலகிற்கு அறிமுகம் செய்தது  . அதன் பிறகு 'போராளி' 'நிமிர்ந்துநில் 'ஆகிய படங்களை இயக்கினார் . ஆனால் இவை இரண்டும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லையென்றாலும் , இவரின் மதிப்பு மேலும் கூடியதே .

வெறும் 34 நாட்களில் இப்படத்தின் படபிடிப்பை எடுத்துமுடித்தனர் என்று கூறினால் நம்பும்படியாகதான் இருக்கும் . ஒரு இயக்குனராக தனக்கு என்னா வேண்டுமென்பதை அனைவருக்கும் நடித்து காட்டியே வேளை வாங்கியுள்ளார் .  ‘ அதிக மதிப்பெண் கொடுக்கம் பள்ளிகள் எவ்வாறு மாணவர்களை ட்ரீட் செய்கின்றன என்பதையும் இறுதியில் காட்டினாலும் , படத்தின் திரைக்கதை வழித்தவறிவிட்டதோ என்றே தோன்றுகின்றது ‘ . படத்தில் வசனங்கள் குண்டூசியைப் போல் கூர் தீட்டப்பட்டுள்ளன .  மேலும் இது ஒரு படமாக தோன்றவில்லை , ஒவ்வொரு காட்சியும் ஒரு செய்தியை கூறுவதாகவே இருந்தன . ஆனால் இப்படியொருபடத்தை கொடுத்ததற்கு மிகப்பெரிய நன்றி சமுத்திரகனி அவர்களே .

நடிகர் நடிகைகள்

சமுத்திரகனி

நடிக்கும் ஆசையில் சினிமாவிற்குள் நுழைந்தவர் , உடலமைப்பு சரியில்லை மேனரிசம் சரியில்லையென்று அனைவரும் இவரை ஒதுக்க , ‘நான் யாருன்னு திரையால் காட்டறன்டா ‘ என்று கூறி , விசாரணை படத்திற்கு தேசிய விருதே வாங்கிவிட்டார் . இப்படத்திற்கு என்னா தேவையென்பதை இவருக்கு தெரியுமென்பதால் , நடிப்பில் குறை கூறமுடியாது .

தம்பி ராமைய்யா

ஒவ்வொரு படத்திலும் இவரின் நடிப்பு உயர்ந்துகொண்டேபோகின்றன . சிறப்பான நடிப்பை இப்படத்தில் வெளிபடுத்தினாலும் , கொஞ்சம் ஓவர் ஆக்டிங் போல் சில காட்சிகள் தோன்றுகின்றன..

விக்னேஷ்

யாருனு தெரியுதா ! அட , நம்ம பெரிய காக்கா முட்டை விக்னேஷ்ங்க . குறைகூறமுடியாத அளவிற்கு நடித்துள்ளார் . உங்களுக்கு நல்ல எதிர்காலமுன்டு ஜி .

ராகவ்

தம்பி ராமையாவின் மகனாக நடித்திருக்கும் இவருக்குதான் கொஞ்சம் நடிப்பை வெளிபடுத்தவேண்டிய கட்டாயமிருந்தது . காரணம், படம் முழுவதும் பயத்தோடும் , திடீர் சிரிப்போடும் , அழுகையோடும் இருக்கவேண்டும் . அதை நன்றாக இவர் செய்திருக்கின்றார் .

நசத்

காமெடி கேரக்டரிலும் , சென்டிமென்டாக பேசுவதிலும் க்ளாப்ஷ் அள்ளுகின்றார் . அருமையான நடிப்பு திறமை .

கேப்ரியல்லா சார்ல்டான் , யுவ லக்ஷ்மி  , வினோதினி ஆகிய அனைவரும் நன்றே .

( ஆனா க்ளைமாக்ஷ்ல படம் சீரியஸா போய்ட்டுருக்கும் போது எதுக்கு சார், டாக்டர் ரோல்ல சசிகுமார்  வராரு ? ? தேவையில்லாதது )

இசையமைப்பாளர்
இசைஞானி இளையராஜா

படத்தின் மிகபெரிய பலமாகவும் , காட்சியமைப்பிற்கு பாலமாகவும் இருக்கின்றார் இசையின் அப்பா . பின்னணி இசை அட்டகாசம் .

ஒளிப்பதிவு  - ரிச்சர்ட் எம். நாதன்



அங்காடி தெரு , பானா காத்தாடி, கோ , சமர் , நான் சிகப்பு மனிதன் ,த்ரிஷா இல்லைனா நயன்தாரா ஆகிய படங்களை சிறப்பாக ஒளிப்பதிவு செய்த ரிச்சர்டா இது ? என்று கேள்வி எழுப்பவைக்கின்றது . என்னா சார் ஆச்சு உங்களுக்கு ? லென்ஷ் எதும் சமுத்திரகனி சார் வாங்கிதரலயா ? 5டி லென்ஷ்ல எடுத்தாற்போல் படம் உள்ளது . இது சமுத்திரகனியின் தவறா ? இல்லை, இவரின் தவறா ? என்றே தெரியவில்லை .

எடிட்டர் ஏ.எல் ரமேஷ் தன் பணியை நன்றாகவே செய்துள்ளார் .

ரசிகர் பார்வை

படம் முடிந்து வெளிவரும் போது , பாதி ஆடியன்ஷின் கண்களில் தூசி பட்டது போல் கண்களை தேய்த்துக்கொண்டு வெளிவந்தனர் . ஆனால்  , இப்படிலாம் யாருடா இருக்கமுடியும் ? மகனுக்கு பிடிச்ச பொண்ண எந்த அப்பாவாது வீட்டுக்கு கூட்டிட்டு வந்து பேசவிடுவாரா ? லாஜிக் நிறையா இடத்துல இடிக்குது .

என் பார்வை

படத்தின் டைட்டுல் கார்டிலிருந்து  தொடங்கிய ரசிகர்களின்  கைத்தட்டல் , இறுதியில் சமுத்திரகனி என்று வரும்வரை அடங்கவில்ல. இதுவே படத்தின் மிகபெரிய வெற்றி . ஓரிரு லாஜிக் இடித்தாலும் , நல்ல படம் .இன்று 25வது நாட்களை வெற்றிகரமாக கடந்து திரையில் ஓடிகொண்டிருக்கின்றது . வாழ்த்துகள் சமுத்திரகனி சார் .  அனைவரும் தியேட்டருக்கு ( எங்கயாவது ஒரு தியேட்டர்ல ஓடும் பாஸ் ) சென்று பாருங்கள் .

Friday, 22 July 2016

கபாலி - திரைவிமர்சனம்


சூப்பர் ஸ்டார் ரஜினி பா.ரஞ்சித் இயக்கத்தில்  இணைந்தது தெரிந்தது முதல் போன மாதம் வெளிவந்த நெருப்புடா டீஸர் வரை பரபரப்பு கொளுந்துவிட்டு எரிந்தது. படம் எப்போது வெளிவருமென்று உலகமே காத்துகொண்டிருந்து ஒருவழியாக இன்று இந்தியா முழுவதும் வெளிவந்துள்ளது. கோடிகணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்துள்ளாதா? என்று பார்க்களாம்

கதையும் அதன் பாதையும்

தமிழர்களுக்காக போராடும் போராளியாக உருவெடுத்து பின்பு கேங்ஷ்டராக மாறிகிறார் . அவருக்கும்  தன் எதிரியாளியான “43” என்ற வில்லன்களின் கேங்கிற்கும் இடையே நடக்கும் சண்டையின் போது கொலைகேஷில் ரஜினியை சிறைக்குஅனுப்பபட்டு 25 வருடங்களுக்கு பிறகு வெளிவருகின்றார் . மலேசியாவில் ‘43’ கேங்கின் கீழ் மாணவர்கள் போதைக்கு அடிமையாதல் , விபச்சாரம் மற்றும் பல பிரச்சனைகள் வளர்ந்திருக்கின்றன. சிறையிலிருந்து வெளிவந்த சூப்பர் ஸ்டார் இறுதியில் தன் குடும்பங்களுக்கு என்னா ஆனது என்பதை கண்டுபிடித்தாரா ? 43 கேங்கை ஒழித்துகட்டினாரா ? என்பதே படத்தின் இரண்டாம்பாதி.

எழுத்தும் இயக்கமும்


‘அட்டகத்தி’ என்ற தரமான படத்தையும் ‘மெட்ராஸ்’ என்ற அருமையான படத்தயும் உருவாக்கி புகழ் பெற்றவர் பா.இரஞ்சித். இவரின் படங்களில் சமூக பிரச்சனைகளை யதார்த்தமாக காட்டுவார். அதனாலே இவருகென்று தனி ரசிகர்கள் உள்ளனர் . இப்போது , ரஜினி என்ற மாஸ் கெத்து என்பதை அதிகமாக காட்டாமல் , இது ரஞ்சித்தின் படம் என்று இந்த கபாலியை காட்டியுள்ளார் . இதற்கு ஒரு தனிதைரியம் வேண்டும் .
 படத்தின் முதல் நொடி முதல்,  கடைசி நொடி வரை இவரின் படமாகதான் தெரிந்தது.  உண்மையை கூறவேண்டுமென்றால் படத்தின் முதல் 30 நிமிட வேகம் பிற்பாதியில் இல்லை . திரைக்கதையில் அழுத்தமில்லையென்றே சொல்லவேண்டும் . திரைக்கதை சொதப்பல் என்பது வேறு, யதார்த்தமனா திரைக்கதை என்பது வேறு. ஆனால் இது இரண்டையும் கலந்த திரைக்கண்ணோட்டத்தை படத்தில் காணலாம் . படத்தின் 8 மாத கால எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தைதான் தந்தது. என்னதான் உலகசினிமா பார்ப்பவர்கள் படம் செம்ம என்று சொன்னாலும் , படம் பார்க்கபோகும் 95% மக்கள் சாதாரண மக்களே . அதனால் அவர்களின் பார்வையில் படம் நன்று, சுமார் .
மெட்ராஸ் படத்தில் பணியாற்றிய அனைத்து ஆர்டிஷ்டும் இதிலும் வருவதால் என்னவோ , மெட்ராஸ் நியாபகங்களிலிருந்து விடுபடமுடியவில்லை. படத்தில் ரஜினி தமிழ் மக்களை பற்றியும் , நம்மை எவ்வாறு மற்றவர்கள் பார்க்கிறார்கள் என்பதை பற்றியும் கூறும் வசனம் க்ளாப்ஷ் விசில்களையும் அள்ளுகின்றது. மற்றபடி திரைக்கதையில் அதிக வேகமில்லை.

நடிகர் நடிகைகள்
சூப்பர் ஸ்டார்


சூப்பர் ஸ்டாரை திரையில் காண தான் கடந்த ஒரு வருடமாக தமிழ்சினிமாவே காத்துகொண்டிருந்தது. கபாலி மொத்தபடமும் நகர காரணமானவர் . கேங்ஷ்டராக கேரக்டராக இவர் வரும்போது நம் உடல் சிலிர்க்கின்றது. வயதானாலும் அழகும் ஸ்டைலும் மட்டும் மாறவேயில்லை. க்ளாப்ஸ் க்ளாப்ஸ் ,,,சாதாரண சீனையும் மாஸாக மாற்றும் திறமை இவரிடமே உண்டு. காதல்  காட்சியும் , தத்ரூபமாக வாழ்ந்தவராக அருமையாக செய்துள்ளார் . ப்ளாஸ்பேக் காட்சிகள் ரஜினியை 1980 களில் கண்டது போல் செம்மயாக உள்ளார்.

ராதிகா ஆப்தே

படத்தில் காதல் காட்சிகளும் சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் , சிறப்பாக செய்துள்ளார்

தன்ஷிகா
செம்ம ரோல்  . யோகி என்ற கதாபாத்திரத்தில்  சிறப்பாக செய்துள்ளார் .

கிஷோர் வின்ஷ்டன் சா ,
வில்லன்களாக மிரட்டுகின்றனர் . ஆனால் இன்னும் நன்றாக இவர்களை பயன்படுத்திற்களாம் .

அட்டகத்தி தினேஷ் , கலையரசன் ஆகியோரை வேண்டுமென்றே போட்டது போல் உள்ளது.

படத்தில் அனைவரும் நன்றாக , முடிந்தளவு தன் பங்களிப்பை கொடுத்துள்ளனர்.






இசை


சந்தோஷ் நாராயணின் இசையில் வெளிவந்த பாடல்களில் நெருப்புடா பாடல்  ஏற்கனவே பட்டிதொட்டியெங்கும் பட்டயகெளப்பியது. மற்றபாடல்கள் படத்திற்காக கொடுக்கபட்டது என்று கூறினாலும் சுமார் ரகமே . ஆனால் எப்போதும் பின்னனி இசையில் சூப்பராக செய்பவர் இப்படத்தின் பின்னனி இசை சொல்லும்படியாக இல்லை. நன்றே . சூப்பர் ஸ்டாருக்கு உண்டான மாஸை ஓரிரு இடங்களில தன் இசையால் நிரப்பியுள்ளார் .  ஆனால் மற்றவை எடுத்துகொன்டால் , ஜி உங்களுக்கு என்னதான் ஆச்சு ? என்ற கேள்வியே எழும்பும்

ஒளிப்பதிவு


படத்தின் தூணாக நிற்கின்றார் முரளி . தன் கேமரா மூலம் சூப்பர் ஸ்டாரை சூப்பராக காட்டுவதிலும் , மலேசியா , பாங்காக், ஆகிய இடங்களை தன்  யதார்த்த பாணியை மீறாமலும் ,  மிக அருமையாக காட்டியுள்ளார்

எடிட்டர் பிரவீன் கே . எல் படத்திற்கு தேவையானதை கட் செய்து கொடுத்துள்ளார் .


ரசிகன் பார்வை

‘மச்சி படம் சுமார்தான்டா’ ஆனா ‘சூப்பர் ஸ்டார் திரும்பவந்துட்டாருனு சொல்லு ‘என்று போனில் தன் நண்பர்களிடம் கூறியவர்கள் பல பேர் .

என் பார்வை

இது சூப்பர் ஸ்டார் படம் இல்லை . ஆனால் ரஞ்சித் படமும் இல்லை . யதார்த்தம் என்ற பெயரில் கொஞ்சம் இழுத்துவிட்டார் . சூப்பர் ஸ்டார் என்ற சிகரம் தன் கையில் பொக்கிஷமாக கிடைத்தும் அதை ஓரளவே பயன்படுத்தியுள்ளார் . மொத்ததில் பல வருடங்களுக்கு பிறகு ஒரு முழு நீள சூப்பர் ஸ்டார் (க்ராபிக்ஷ் எதுமில்லாமல் ) படம் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.