Thursday, 28 July 2016

இயக்குனர்கள் - ஒரு பார்வை பாகம் 2

நான் இங்கே குறிப்பிடும் இயக்குனர்கள் அனைவரும் இப்போதுள்ள கரெண்ட் இயக்குனர்களே   அதனால்  , மகேந்திரன் சார் , பாக்கியராஜ் சார் , பாண்டியராஜன் , பாரதிராஜா சார் , பாலுமகேந்திரா சார் ...etc  எங்கனு  கேக்காதிங்க . அப்பறம் இயக்குனர்களை பற்றி குறிப்பிட தகுதியென்பது அவசியமே இல்லை , இவர்கள் ஒரு திறந்த புத்தகம் , அதை நான் படித்து  என் பார்வையில்தான் இதையெலாம் குறிப்பிடுகின்றேன் . நான் எதையாவது விட்டுவிட்டாலோ , தவறான தகவல்களை குறிப்பிட்டிருந்தாலோ கமெண்டில் குறிப்பிடலாம் .

சென்ற பதிவில் இயக்குனர் ஷங்கர் மற்றும் ஏ.ஆர். முருகதாஸை பற்றி பார்த்தோம். அவர்கள் தயாரித்த படங்களையும் பார்த்தரலாம்

ஷங்கர் தயாரித்த படங்கள் (முதல்வன் இவர் தயாரித்த முதல் படம் )

1.காதல் ( பாலாஜி சக்திவேல் )
2.இம்ஸை அரசன் 23-ம் புலிகேசி ( சிம்பு தேவன் )
3.வெயில் ( வசந்தபாலன் )
4.கல்லூரி ( பாலாஜி சக்திவேல் )
5.அறை எண் 305-ல் கடவுள் ( சிம்பு தேவன் )
6. ஈரம் ( அறிவழகன் )
7.ரெட்டைசுழி ( தாமிரா )
8.ஆனந்தபுரத்து வீடு ( நாகா )
9.கப்பல் ( கார்த்திக் ஜி.க்ரிஷ் )

ஷங்கர் இயக்கும் படங்கள்தான் பிரமாண்டகளாக இருக்கும் போல  , ஆனால் இவர் தயாரத்த படங்களனைத்தும் சிறுபட்ஜெட் படங்களே ( இ.அ. 23ம் புலிகேசியை தவிர .காரணம் அந்த படத்தின் இயக்குனரே ஷங்கரின் துணை இயக்குனராக பணியாற்றிய சிம்பு தேவன் ). ஷங்கர் தயாரித்த படங்களை பார்த்தால் மேக்ஷிமம்  நெஞ்சினை உருகும் படங்களாகதான் இருக்கின்றன , ( 2. 5, 9,ஐ தவிருங்கள்  அவையனைத்தும் நெஞ்சை சிரிக்கவைக்கும் படங்கள் .)

முருகதாஸ் தயாரித்த படங்கள்

1.எங்கேயும் எப்போதும் ( சரவணன் )
2.வத்திக்குச்சி ( கின்ஷ்லின் )
3.ராஜா ராணி ( அட்லி )
4.மான்கராத்தே ( திருக்குமரன் )
5.10 எண்றதுக்குள்ள ( மில்டன் )
6.ரங்கூன் ( ராஜ்குமார் பெரியசாமி –ஃபில்மிங் )

கமர்ஷியல் கலைஞரென்றால் அது முருகதாஸ்தான் . தமிழ் , ஹிந்தி , தெலுங்கு என இந்தியாவின் முன்னனி மொழிகளில் படமியக்கும் வல்லமை கொண்டவர் . இவர் காலடியெடுத்து வைத்தால் அந்த படம் நிச்சயம் வெற்றிதான் . ஆனால் இவன் தயாரித்த படங்களில் எங்கேயும் எப்போதும் . ராஜாராணியை தவிர மற்றவை தோல்விதான்  (மான் கராத்தே சுமார் லிஸ்ட்தன் பாஸ் ) .

சரி இனி அடுத்ததற்கு போகலாம்..
இந்த பதிவில் சினிமாவை தனி ட்ராக்கில் பயணம் செய்யும் , நிருத்தமுடியாத மூன்று இயக்குனர்களை பார்க்கலாம் . உலக சினிமா ரசிகர்களுக்கு இந்த மூன்று பேரையும் பிடிக்காமல் இருக்காது.

பாலா




புகழ் பிடிக்காது , பணம் பிடிக்காது , ஆடம்பரம் தேவையில்லை , புது டெக்னால்ஜிகள் தேவையில்லை ( புது மியூஷிக் இன்ஷ்ட்ரூமென்ட்ஷ் கூட பயன்படுத்தமாட்டார் )  , ‘கர்வம்’ பிடித்த இயக்குனர் என்றே என் நண்பர்கள் இவரை குறிப்பிடுவதுண்டு . அதற்கு காரணம் பல விருது நிகழ்ச்சிகளில் பார்த்தால் உங்களுக்கு புரியும் . ஆனால் மிக மிக மிக சாதாரண மனிதர் . சினிமாவில் பொறுத்த வரை அசாதாரண மனிதர் . கீழ்வர்க்க தொழில்கள் , நாம் சாதாரண பார்ப்பதை வேருன்றி பார்ப்பவர் . இவர் படங்களனத்தும் சாதாரண கதையை கொண்டதே .ஆனால் மேக்கிங் என்றது முற்றிலும் மாறுபட்ட ஃபார்முலா . நிஜகாட்சிகள் போல நடிகர்களை மாற்றி , ஆர்ட் டைரக்டரிம் வேளைவாங்கி , இசை , நடனம் , நடிப்பு எல்லாம் எதார்த்தமாகவே இருக்கும் , படத்திற்காக என்று தனியாக எதுவுமே இருக்காது  , கொஞ்சம் கமர்ஷியலை பார்க்கலாம் ( வீட்டுக்கு பெயின்ட் அடிக்கனுமுனா பட்டி போட்டுதான ஆகனும் ) . உலக சினிமா ரசிகர்கள் இவரின் படங்களுக்கு ரசிகராக இல்லாமல் இருக்கமாட்டார்கள் ..

ரசிகர்கள் இப்போது விக்ரமை மிகபெரிய நடிகர் என்று கொண்டாட காரணம் இவர்தான் . அதுபோல , நடிக்கவே தெரில என்று விமர்சனத்திற்கு உள்ளாக்கபட்ட ஆர்யாவையும் அவன் இவன் படத்தில் நடிக்கவைத்தார் . மேலும் ஃபார்ம் அவுட்டிலிருந்த அதர்வாவை பெரிய அளவிற்கு கொண்டுவந்தார் . பெரிய பெரிய நடிகர்கள் இவரின் படத்தில் நடிக்க பயப்படுகின்றனர் , காரணம் நான் கூறிதெரியவேண்டியதில்லை , உங்களுக்கே தெரியும் .



பெரும்பாலும் இவரின் படங்களுக்கு இசையமைப்பாளரென்றால்  இளையராஜாதான் .ஆனால் ‘தாரை தப்பட்டை ‘ படத்தின் போது இருவருக்கும் எதிர்வீட்டு பிரச்சனை போல் என்றார்கள் . ‘பரதேசி’ படத்தில் ஜிவி யுடனும் , ‘அவன் இவன்’ படத்தில் யுவனையும் இசையமைப்பாளராக பயன்படுத்தினார் .


இவரின் படங்கள்

1.சேது
2.நந்தா
3.பிதாமகன்
4.நான் கடவுள்
5.அவன் இவன்
6.பரதேசி
7.தாரை தப்பட்டை

தாரைதப்பட்டை படம் மட்டும்தான் சுமார் ரகத்தை சேர்ந்தது . மற்ற அனைத்தும் டார்க்லி ஹிட் லிஸ்ட் சேர்ந்தது . அவன் இவன் படத்தை தவிர மற்ற அனைத்தும், அவார்டு வாங்கததே கிடையாது ( தாரைதப்பட்டை இந்த வருடம்தான் வந்தது ) , விருது விழா என்றால் , விருதுகளுக்கு பாலாவை மிக பிடிக்கும் போல  , ஓடி வந்து குழந்தையை போல் ஒக்காந்துகொள்கின்றது .

தயாரித்த படங்கள்

1.மாயாவி ( சிங்கம் புலி )
2.பிசாசு ( மிஷ்கின் )
3.சண்டி வீரன் ( சற்குணம் )
 பிசாசுவை தவிர மற்றவை பெரிதாக இல்லை . சண்டிவீரன் சுமார் லிஸ்ட் . மாயாவியை எதில் சேர்ப்பது என்றே தெரியவில்லை .


மிஷ்கின்



இரவு என்றாலே அனைவரும் அஞ்சுவார்கள் . ஆனால் இந்த மனிதர் தன் வாழ்க்கையே இருட்டில்தான் வாழ்கிறார் போல, இருட்டு என்றால் கொள்ளைஇஷ்டம் போல , சாதாரண மனிதனின் பகல் வாழ்க்கையையே இருட்டாக காட்டும் சினிமா கலைஞர் . தனக்கென்று ஒரு தனி ட்ராக்கை தான்னே உருவாக்கி , அதில் பயணிக்கும் மாயமான இருள் ரெயிலே இந்த மிஷ்கின் . ‘’ இவன்தான் மிஷ்கின் , இப்படிதான் கண்ணாடி போட்டுகிட்டே இருப்பான் , இப்படிதான் என் படம் இருக்கும் ‘’  . எவ்வளவு பெரிய கூட்டதிலும் மனதில் நச்சென்று நறுக்கென்று பேசி (ஏசி) யேவிடிவார் .

தனக்கென்ற கேமரா உக்தி , நடிப்பு , கலை என்று தன்னை தனிமையில் செதுக்கிகொண்டவர் . சினிமாவை சுவாசிப்பவர் , ஆளமாக சுவாசிப்பவர் ( ஆக்ஸிஜன கூட இவ்ளோ ஆளமா சுவாசிக்கமாட்டாங்க ) . பெரிய பெரிய நடிகன் தேவையில்லை , பெரிய பெரிய டெக்னீஷியன் தேவையில்லை , சிறு பொடியனாக இருந்தாலும் , அவனிடம் வேளைவாங்கும் அசாத்திய திறமைய கொண்டவர் . முடிந்தால் ‘பிசாசு’ படத்தின் மேக்கிங் வீடியோவை பாருங்கள் , பூவும் கல்லாய் மாறிவிடும் , மனிதனா இவர் ? என்று கேட்காதவர்கள் யாருமிருக்கமாட்டார்கள் . இவருக்கென்று தனி ரசிகர்  படையே உள்ளது  , தமிழ் சினிமா மட்டுமில்லாமல் , ஹாலிவுட் இயக்குனர் ஒருவர் ‘ உங்கள் படத்திற்கு நான் ரசிகன் ‘ என்று கூறவைத்தவர் ( பெயர் தெரியவில்லை ) .

இவரின் படங்கள்

1.சித்திரம் பேசுதடி
2.அஞ்சாதே
3.நந்தலாலா
4.யுத்தம் செய்
5.முகமூடி
6.ஓனாயும் ஆட்டுகுட்டியும்
7.துப்பறிவாளன் ( ஃப்லிமிங் )



இதில் நந்தலாலா ,யுத்தம் செய் ,முகமூடி ஆகிய படங்கள்  ரசிகர்களை மிகபெரிய ஏமாற்றத்திற்கு உண்டாக்கியது , அடுத்த அந்த வெற்றிடத்தை நிரப்பவேண்டுமென்று இயக்கிய ‘ஓனாயும் ஆட்டுகுட்டியும்’ என்ற படம் இதுவரை இனிமேல் அப்படியொரு படம் வருமா என்று தெரியவில்லை , ஆனால் விளம்பரங்கள் அதிகம் செய்யபடாமலோ என்னவோ, அந்த படம் ‘புதுபேட்டை’ போல ஆகிவிட்டது . வெளிவந்தபோது ஃப்ளாப் என்று கூறி , டிவியில் வெளிவந்தபோது ப்ப்ப்ப்ப்பாஆஆ என்னா படம்டா , என்று வாய் பிளக்கும் ரசிகர்கள் இருக்கதான் செய்கிறார்கள் . பிசாசு என்ற ஆசுவாசமான படம் அனைத்து ரசிகர்களையும் உருகசெய்தது . அடுத்த ‘துப்பறிவாளன்’ படத்திற்காக அனைவரும் வெய்ட்டிங் சார் .


செல்வராகவன்




தனிமனிதர்களின் வாழ்க்கையை துல்லியமாகவும் , காதலை வேறுபடுத்தியும் காட்டுவதில் வல்லவர் . காதல் படம் எடுப்பார் காதல் கலந்த காமெடி படமும் எடுப்பார் , ஹிஷ்டரிக்கல் ஃபேண்டஷி படமும் எடுப்பார் . இவர் இன்னும் ஆக்ஷன் படங்களில் மட்டும்தான் கால் வைக்கவில்லை . முதன் முதலில் காதலில் உள்ள காமத்தையும் , யாரும் கூறமுடியாத இளைஞர்களின் மறுபக்கத்தையும் வெளிச்சமாக காட்டிது இவரின் எழுத்தில் வெளிவந்த ‘ துள்ளுவதோ இளமை ‘ . அதன் பிறகு இவரின் இயக்கத்தில் வெளிவந்த ‘காதல் கொண்டேன் ‘  ‘ 7ஜி ரெயின்போ காலனி , மிகபெரிய ஹிட்டடித்து. இளைஞர்களின் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் பெரிதாக பேசபட்டார் . ஆனால் ‘ புதுபேட்டை ‘ படம் அப்போது வெளிவந்த படங்களிலே பெரிய ‘ப்ளாப்’ படமென்று கூறினர் . இப்போது ‘இதான் மச்சான் படம்’ என்று இளைஞர்கள் லாப்டாப்பிலும்  , ஃபேவரட் படமாகவும் , டிவியிலும் பார்த்துகொண்டிருக்கின்றனர் .

இவர் காதலை வேறுவிதமாக பார்ப்பவர் ( காமத்தை கூறவில்லை , வலியை உணர்த்தரன் பாஸ் ) . அதன்பிறகு இவர் எழுதிய ‘யாரடி நீ மோகினி’ திரைப்படம் மிகபெரிய ஹிட் . ஆனால் உயிரை கொடுத்து இயக்கிய  ‘ ஆயிரத்தில் ஒருவன் ‘ ‘மயக்கம் என்ன’ ‘இரண்டாம் உலகம்’ ஆகிய படங்களை விமர்சகர்கள் கொண்டாடினாலும் ,ரசிகர்கள் தூக்கியெரிந்தனர் . இப்போது ‘ நெஞ்சம் மறப்பதில்லை ‘ படத்தை இயக்கி முடித்தியுள்ளார் .



இவர் இயக்கிய படங்கள்

1.காதல் கொண்டேன்
2.7ஜி ரெயின்போ காலனி
3.புதுபேட்டை
4.ாயிரத்தில் ஒருவன்
5.மயக்கம் என்ன
6.இரண்டாம் உலகம்
7.நெஞ்சம் மறப்பதில்லை ( ஃப்லிம்மிங் )

இவர் எழுதிய படங்கள்

1.துள்ளுவதோ இளமை
2.யாரடி நீ மோகினி
3.மாலை நேரத்து மயக்கம்

Tuesday, 26 July 2016

இயக்குனர்கள் - ஒரு பார்வை,

ஷங்கர்



ஷங்கரின் மறுபெயரே பிரமாண்டம் . கதை யோசிப்பதற்கு முன்பே எவ்ளோ பட்ஜெட்டில் எடுக்கலாம் என்று யோசிப்பார் போல . சேன் ஃப்ராண்சிஷ்கோவையும் ஆர்ட் டைரக்டர் முத்துராஜூவையும், தோட்டா தரணியும் வைத்து பின்னி மில்லில் ஒரே செட் போட்டு தத்ரூபமாக காட்டுபவர். வேட்டாவை வைத்து கருப்பண்ணனையும் கலிஃபோர்னியா மனிதனாக மாற்றுவார் , கலிஃபோரினியா ஃபிகரையும் காக்கம்பாடி கண்ணமாவாக மாற்றுவார் . கதையை யோசித்தபிறகு , திரைக்கதைகாக அதிகம் மெனக்கெடமாட்டார் . ஒரு சில இன்ட்ரஷ்ட் சீன்களை சிந்திப்பார் , அதனுடன் காதல் , காமெடி , மற்றும் பாடலை புகுத்திவிடுவார் . வசனத்திற்குதான் பாலமுருகன் ,சுஜாதா , சுபா , ஜெயமோகன்  போன்ற எழுத்தாளர்களை பயன்படுத்திக்கொள்வார் . ஆனால் இவரின் ஆஸ்தான எழுத்தாளர் சுஜாதாவே. இவர்கள் இருவரிடையே இருக்கும் புரிதலுணர்வு அதிகமானது.

ஜென்டில்மேன் முதல் கரெண்ட் ப்ராஜக்டான 2.0 படம் வரை எல்லமே அந்த வருடத்தின் பிரமாண்ட பட்ஜக்டாவும் , வசூலாகவும் இருக்கும் . இந்தியாவின் ஜேன்ஷ்கேமரூன் என்று பலர் கூறுகின்றனர் . காரணம் இவரின் தெளிவான சிந்தனையும் , தேடல்களும் , தனக்கு என்னாவேண்டுமென்பதில் கவனமாக இருப்பார் . சினிமாவில் லைட்மேன் தொடங்கி  , சினிமடோக் ஃராபி , எடிட்டிங் , வி எஃப் எக்ஷ் வரை அனைவருக்கும் தனக்கு என்னா வேண்டுமென்பதை தெளிவுபடுத்தும் கம்யூனிகேஷன் லேங்குவேஜ் ( லேங்குவேஜ்னா ஹிந்தி  இங்கிலீஷ் இல்லீங்கோ, இது நாம நினைக்கரத அப்படியே மத்தவங்களுக்கு சொல்லி புரிய வைக்கரது )  தெரிந்துவைத்தவர்.




என்னடா பிரமாண்டமா எடுக்கரதலாம் பெரிய விஷயமா மாப்ள ? என்று பேசுபவர்களுக்கு ஒரு சின்ன சேலஞ் . சிவாஜி படத்துல அதிரடி கார மச்சான் சாங் வருமே , அந்த பாட்டோட விஷூவல்அ அப்படியே ஷ்கிரிப்டா எழுதிபாருங்க ஜீ , உண்மையா ட்ரை பண்ணாலும் நிச்சயம் தோல்வி உறுதி , காரணம் நீங்க கத்துக்க வேண்டியது நிறையா இருக்கு. க்ரிஸ்டோஃபர் நோலனோட இன்ஷப்ஷன் படத்தோட 5 மினிட்ஷ் ஷ்கிரிப்ட்ட என்னால எழுதமுடியல , பட் இப்போ கொஞ்சம் நல்லாவே எழுதறன் )

எனக்கு ஒரே ஒரு டௌட்.  இயக்குனராவதற்கு எதுக்கு சார் நீங்க இன்ஜினியரிங் படிச்சீங்க ? அதும் மெக்கானிக் இன்ஜினியரிங் ?

என்னா படிச்சா என்னா பாஸ் ? படம் நல்லா எடுக்கராரா ? அது போதும் . மேக்கப் வொர்க்கிலிருந்து பேக்கப் வரைக்கும் இவர் நினைக்கரதுதான் நடக்கும் . ( ஒரு டைரக்டரோட மிக பெரிய சவாலே நாம நினைக்கரத மத்தவங்குளுக்கும் புரியவைக்கரதுதான் )

இன்னொரு சவால் , ‘ ப்ராபர் ப்ளானிங் ‘. இன்னைக்கு ஷூட்டிங்ல இந்த சீன் எடுக்கபோரோம் , அதுக்கு ரெக்யூர்மென்ட்ஷ் என்னா வேணும் , எந்த கேமரா லென்ஷ் யூஷ் பண்ணனும் , இந்த டைமுக்குள்ள இந்த சீன மேக் பண்ணனும், ப்ரொடக்ஷன் கம்பெனிலருந்து ரெக்யூர்மென்ட்ஷ் வந்தாச்சா ? , எந்த ஆர்டிஷ்ட் எந்த ஷீன்கு வேணும் அவங்க எப்படி ஆக்ட் பண்ணனும் , இன்னும் நிறையா விசயம் இருக்கு . அப்படி சங்கர் சார்கிட்ட இந்த ப்ளானிங் பக்காவா இருக்கும் .  இந்த விஷயங்கள ரொம்ப கவனமா இருக்கனும், இல்லைனா விஷமமாகிரும் . நீங்க சினிமாவுக்குள்ள என்ட்ரி ஆகிட்டா அதெலாம் கத்துக்கலாம்.

பாடல் காட்சிகளுக்கு விஷூவல் விருந்து கொடுக்க இவரை அடித்துக்கொள்ளமுடியாது.. அந்த அளவிற்கு அருமையான காட்சியமைப்பை கொடுப்பார் . பாடல் காட்சிகளு்காக உலகம் முழுவதும் சுற்றுபவர் . இவரின் அனைத்து பட பாடல் விஷூவல்ஷ்ம் புதுமையாகவே இருக்கும் . புது புது டெக்னாலஜிஷ் பற்றி படிப்பதற்றகாக அமெரிக்கா, லண்டனென்று செல்பவர் .  அதை பற்றி விரிவாக கூற எனக்கு இந்த பதிவு போதாது என்பதால் அடுத்ததிற்கு செல்கின்றேன்.

ஃபைட் ஷீக்குவன்சிலிருந்து சாதாரண ஆர்டிஷ்டின் பாடி லாங்குவேஜ் வரை அனைத்தும் புது விஷயங்களை ஆடியன்ஷிற்கு கொடுக்கனும்னு நினைப்பார் .அதனாலதான் இவர் இந்தியாவின் ஜேம்ஷ் கேமரூன் . ( நா சொல்லல ஜீ , ஆடியன்ஷ் சொல்றாங்க )
இவரின் படங்கள்
ஜென்டில்மேன்
காதலன்
இந்தியன்
ஜீன்ஷ்
முதல்வன்
பாய்ஸ்
அன்னியன்
சிவாஜி
எந்திரன்
நண்பன்

2.0 ( கரென்ட் ப்ராஜக்ட் )

எனக்கு பிடித்த படங்கள்
பாய்ஸ் , ஐ ஆகிய சுமாரான படங்களை தவிர மற்ற அனைத்தும் ஹிட் கேட்டகரியை சேர்ந்தவை .  சமூக பிரச்சனைகளை கொண்டு இயக்கபட்ட சிவாஜி ,முதல்வன் , அன்னியன் மற்றும் இந்தியன் ஆகிய படங்கள்  என்னுடைய ஒன்ஷ் மோர் கேட்டகரியில் சேர்ந்தவை .




ஏ.ஆர் முருகதாஸ்




சினிமாவில் இயக்குனர்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது . அந்த வகையில் , இந்தியாவில் தற்போதைய தலைசிறந்த இயக்குனர் ஷங்கரா ? இல்ல முருகதாஸா ? என்ற  வாய்வார்த்தை சண்டைகள் ஓடிகொண்டிருக்கிறது . இருந்தாலும் இது தல , தளபதி சண்டை போல் பெரிதல்ல . பாலு மகேந்திரா , மகேந்திரன் , மணிரத்னம் இப்படி பல ஜாம்பவான்களெலாம் சூப்பர் ஸ்டார் , கமல்ஹாசன் போல , ஷங்கரும் முருகதாஸும் தல தளபதி போல . அதனால் கரென்ட் சினிமாவில் மிக பெரிய ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்க்கும் படங்கள் இவர்களின் இயக்கத்தில்தான்.
முருகதாஸ் பெயர் திரையில் வரும் போது ரசிகர்களின் கைத்தட்டல்களும் விசிலும் கூடவே வரும்

.ஷங்கரின் வெற்றிக்கு பின்னே பிரமாண்டமான சிந்தனையும் , வசனகர்த்தாகளின் வசனமும் உள்ளது. ஆனால் முருகதாஸின் வெற்றிக்கு முழு காரணமும் இவருடைய கதையும் , திரைக்கதையும் , வசனமும் , இயக்கும் விதமும்தான் . காலத்திற்கேற்ப தன்னை செதுக்குபவர் . இவரின் கதையும் , வசனமும் சமுதாயத்தை அடிப்படையாக சார்ந்துதான் அமையும் .அதுமட்டுமில்லாமல் ,ஹிந்தி , தெலுங்கு என மல்டிபில் லாங்குவேஜ்களில் பட இயக்குனராவார் , இயக்கிய அனைத்து படங்களும் ஹிட் மெகா ஹிட் மற்றும் ப்ளாக்பஸ்டர் லிஸ்டில் இணைந்தவையே . இவரை பற்றி ஒரு ஆர்டிக்களே எழுதியுள்ளேன் , படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
அதனால் இவரை பற்றி இங்கு அதிகம் குறிப்பிடவிரும்பவில்லை.

.ஆர் முருகதாஸ்இயக்குனர் Part-2


முருகதாஸ் - இயக்குனர் பாகம் 3


இவரின் படங்கள் ( தமிழில் மட்டும் )


1.தீனா
2.ரமணா
3.கஜினி
4.7-ம் அறிவு
5. துப்பாக்கி
6. கத்தி
இவரின் அனைத்து படங்களும் எனக்கு ஃபேவரட்தான் .

அடுத்த பதிவில் இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன் , மிஷ்கின் , செல்வராகவன் ஆகியோர்களை பற்றி பார்ப்போம்.

Saturday, 23 July 2016

அப்பா - திரைவிமர்சனம்



நான்கு நாட்களுக்கு முன்பு ‘அப்பா’ படத்திற்கு சென்றாகவேண்டுமென்று ( ஏனென்றால் கபாலி படம் அடுத்தநாள் வெளியாக இருந்தது , கண்டிப்பாக தியேட்டரை விட்டு அப்பா படத்தை துரத்திவிடுவார்கள் ) தியேட்டருக்கு சென்றுருந்தேன் . படம் வெளியாகி 20 நாட்களாகிவிட்டதே யாரும் வரமாட்டார்களென்று நினைத்தேன் , ஆனால் தியேட்டர் ஹெவுஷ்ஃபுல் காட்சிகாளாகதான் தொடங்கியது , அப்போது இந்த அப்பா மீது மேலும் நம்பிக்கை பூண்டது . இயக்குனர் சமுத்திரகனி மீது அளவற்ற ஈர்ப்பு ஏற்படக் காரணம் அவரின் இயக்கிய ‘ நாடோடிகள் ‘ மற்றும் ‘ நிமிர்ந்து நில் ‘  ஆகிய படங்களே . ஆனால் சமுத்திரகனி யாரென்று கேட்டால் , அவர் நடிப்பில் போது வெளிவந்த ‘சாட்டை’ படமே முதலில் கண்களுக்கு முன்வரும். அப்போது அவரின் மீது ஒரு மரியாதை எனக்கு ஏற்பட்டது. தொடர்ந்து அவர் நடித்த படங்களான ‘காடு’ , ‘வேளையில்லா பட்டதாரி’ , 'நீர்பறவை' , 'புத்தனின் சிரிப்பு' , 'விசாரணை' ஆகிய படங்களில் இவரின் கதாபாத்திரம் மதிப்பிற்குரியதாக இருந்தன  . அவர் தேர்வு செய்யும் கதாபாத்திரங்களும் சமுதாயத்தை சார்ந்த கதாபாத்திரமாகவே இருந்தன . ஆனால் சமீபகாலமாக அவர் நடித்த ‘பாயும் புலி’  ‘காதலும் கடந்து போகும் ‘  ‘ரஜினி முருகன் ‘  'அம்மா கணக்கு 'ஆகிய படங்களில் அவர் கேரக்டர் பேசும்படியாக இல்லை. ஏனோ அப்படங்களை அவர் தேர்வு செய்யக்காரணம் , ‘அப்பா’ படத்தை தயாரிப்பதற்காகவே எனக்கு தோன்றின . ‘ அப்பா ‘ படத்தின் ட்ரைலரிலே படத்தின் கதையை தெரிவித்துவிட்டார் . படம் பார்க்காதவர்களுக்கு படத்தை பற்றி கூறுகின்றேன் வாருங்கள் .

கதையும் அதன் பாதையும்


எனக்கு என் பையன் நான் நினைச்ச மாதிரிதான் இருக்கனும் , நான் சொல்றததான் செய்யனும் , கேக்கனும்னு நினைப்பவர் தம்பி ராமைய்யா . என்னா நடந்தா நமக்கு என்னா ? நாம உண்டு நம்ம வேளை உண்டுனு இருக்கனும்னு நினைப்பவர் நமோ நாராயணன் . இவர்கள் இருவர் செய்யும் தவறுகளை சுட்டிகாட்டியும்  , ஒரு அப்பாவாக மகன்களை எப்படி வளர்க்கவேண்டுமென்று உதாரணமாக இருக்கின்றார் சமுத்திரகனி . ஒரு தந்தையின் கடமைகள் , பொறுப்புகள் என்னாவென்பதையும் வெளிப்படையாக காட்டியுள்ளார் இந்த அப்பா.

எழுத்தும் இயக்கமும்



'உன்னை சரண்டைந்தேன்' படம் இவரின் முதல் படமாக அமைந்தாலும் 'நாடோடிகள்' படமே இவரை வெளிஉலகிற்கு அறிமுகம் செய்தது  . அதன் பிறகு 'போராளி' 'நிமிர்ந்துநில் 'ஆகிய படங்களை இயக்கினார் . ஆனால் இவை இரண்டும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லையென்றாலும் , இவரின் மதிப்பு மேலும் கூடியதே .

வெறும் 34 நாட்களில் இப்படத்தின் படபிடிப்பை எடுத்துமுடித்தனர் என்று கூறினால் நம்பும்படியாகதான் இருக்கும் . ஒரு இயக்குனராக தனக்கு என்னா வேண்டுமென்பதை அனைவருக்கும் நடித்து காட்டியே வேளை வாங்கியுள்ளார் .  ‘ அதிக மதிப்பெண் கொடுக்கம் பள்ளிகள் எவ்வாறு மாணவர்களை ட்ரீட் செய்கின்றன என்பதையும் இறுதியில் காட்டினாலும் , படத்தின் திரைக்கதை வழித்தவறிவிட்டதோ என்றே தோன்றுகின்றது ‘ . படத்தில் வசனங்கள் குண்டூசியைப் போல் கூர் தீட்டப்பட்டுள்ளன .  மேலும் இது ஒரு படமாக தோன்றவில்லை , ஒவ்வொரு காட்சியும் ஒரு செய்தியை கூறுவதாகவே இருந்தன . ஆனால் இப்படியொருபடத்தை கொடுத்ததற்கு மிகப்பெரிய நன்றி சமுத்திரகனி அவர்களே .

நடிகர் நடிகைகள்

சமுத்திரகனி

நடிக்கும் ஆசையில் சினிமாவிற்குள் நுழைந்தவர் , உடலமைப்பு சரியில்லை மேனரிசம் சரியில்லையென்று அனைவரும் இவரை ஒதுக்க , ‘நான் யாருன்னு திரையால் காட்டறன்டா ‘ என்று கூறி , விசாரணை படத்திற்கு தேசிய விருதே வாங்கிவிட்டார் . இப்படத்திற்கு என்னா தேவையென்பதை இவருக்கு தெரியுமென்பதால் , நடிப்பில் குறை கூறமுடியாது .

தம்பி ராமைய்யா

ஒவ்வொரு படத்திலும் இவரின் நடிப்பு உயர்ந்துகொண்டேபோகின்றன . சிறப்பான நடிப்பை இப்படத்தில் வெளிபடுத்தினாலும் , கொஞ்சம் ஓவர் ஆக்டிங் போல் சில காட்சிகள் தோன்றுகின்றன..

விக்னேஷ்

யாருனு தெரியுதா ! அட , நம்ம பெரிய காக்கா முட்டை விக்னேஷ்ங்க . குறைகூறமுடியாத அளவிற்கு நடித்துள்ளார் . உங்களுக்கு நல்ல எதிர்காலமுன்டு ஜி .

ராகவ்

தம்பி ராமையாவின் மகனாக நடித்திருக்கும் இவருக்குதான் கொஞ்சம் நடிப்பை வெளிபடுத்தவேண்டிய கட்டாயமிருந்தது . காரணம், படம் முழுவதும் பயத்தோடும் , திடீர் சிரிப்போடும் , அழுகையோடும் இருக்கவேண்டும் . அதை நன்றாக இவர் செய்திருக்கின்றார் .

நசத்

காமெடி கேரக்டரிலும் , சென்டிமென்டாக பேசுவதிலும் க்ளாப்ஷ் அள்ளுகின்றார் . அருமையான நடிப்பு திறமை .

கேப்ரியல்லா சார்ல்டான் , யுவ லக்ஷ்மி  , வினோதினி ஆகிய அனைவரும் நன்றே .

( ஆனா க்ளைமாக்ஷ்ல படம் சீரியஸா போய்ட்டுருக்கும் போது எதுக்கு சார், டாக்டர் ரோல்ல சசிகுமார்  வராரு ? ? தேவையில்லாதது )

இசையமைப்பாளர்
இசைஞானி இளையராஜா

படத்தின் மிகபெரிய பலமாகவும் , காட்சியமைப்பிற்கு பாலமாகவும் இருக்கின்றார் இசையின் அப்பா . பின்னணி இசை அட்டகாசம் .

ஒளிப்பதிவு  - ரிச்சர்ட் எம். நாதன்



அங்காடி தெரு , பானா காத்தாடி, கோ , சமர் , நான் சிகப்பு மனிதன் ,த்ரிஷா இல்லைனா நயன்தாரா ஆகிய படங்களை சிறப்பாக ஒளிப்பதிவு செய்த ரிச்சர்டா இது ? என்று கேள்வி எழுப்பவைக்கின்றது . என்னா சார் ஆச்சு உங்களுக்கு ? லென்ஷ் எதும் சமுத்திரகனி சார் வாங்கிதரலயா ? 5டி லென்ஷ்ல எடுத்தாற்போல் படம் உள்ளது . இது சமுத்திரகனியின் தவறா ? இல்லை, இவரின் தவறா ? என்றே தெரியவில்லை .

எடிட்டர் ஏ.எல் ரமேஷ் தன் பணியை நன்றாகவே செய்துள்ளார் .

ரசிகர் பார்வை

படம் முடிந்து வெளிவரும் போது , பாதி ஆடியன்ஷின் கண்களில் தூசி பட்டது போல் கண்களை தேய்த்துக்கொண்டு வெளிவந்தனர் . ஆனால்  , இப்படிலாம் யாருடா இருக்கமுடியும் ? மகனுக்கு பிடிச்ச பொண்ண எந்த அப்பாவாது வீட்டுக்கு கூட்டிட்டு வந்து பேசவிடுவாரா ? லாஜிக் நிறையா இடத்துல இடிக்குது .

என் பார்வை

படத்தின் டைட்டுல் கார்டிலிருந்து  தொடங்கிய ரசிகர்களின்  கைத்தட்டல் , இறுதியில் சமுத்திரகனி என்று வரும்வரை அடங்கவில்ல. இதுவே படத்தின் மிகபெரிய வெற்றி . ஓரிரு லாஜிக் இடித்தாலும் , நல்ல படம் .இன்று 25வது நாட்களை வெற்றிகரமாக கடந்து திரையில் ஓடிகொண்டிருக்கின்றது . வாழ்த்துகள் சமுத்திரகனி சார் .  அனைவரும் தியேட்டருக்கு ( எங்கயாவது ஒரு தியேட்டர்ல ஓடும் பாஸ் ) சென்று பாருங்கள் .

Friday, 22 July 2016

கபாலி - திரைவிமர்சனம்


சூப்பர் ஸ்டார் ரஜினி பா.ரஞ்சித் இயக்கத்தில்  இணைந்தது தெரிந்தது முதல் போன மாதம் வெளிவந்த நெருப்புடா டீஸர் வரை பரபரப்பு கொளுந்துவிட்டு எரிந்தது. படம் எப்போது வெளிவருமென்று உலகமே காத்துகொண்டிருந்து ஒருவழியாக இன்று இந்தியா முழுவதும் வெளிவந்துள்ளது. கோடிகணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்துள்ளாதா? என்று பார்க்களாம்

கதையும் அதன் பாதையும்

தமிழர்களுக்காக போராடும் போராளியாக உருவெடுத்து பின்பு கேங்ஷ்டராக மாறிகிறார் . அவருக்கும்  தன் எதிரியாளியான “43” என்ற வில்லன்களின் கேங்கிற்கும் இடையே நடக்கும் சண்டையின் போது கொலைகேஷில் ரஜினியை சிறைக்குஅனுப்பபட்டு 25 வருடங்களுக்கு பிறகு வெளிவருகின்றார் . மலேசியாவில் ‘43’ கேங்கின் கீழ் மாணவர்கள் போதைக்கு அடிமையாதல் , விபச்சாரம் மற்றும் பல பிரச்சனைகள் வளர்ந்திருக்கின்றன. சிறையிலிருந்து வெளிவந்த சூப்பர் ஸ்டார் இறுதியில் தன் குடும்பங்களுக்கு என்னா ஆனது என்பதை கண்டுபிடித்தாரா ? 43 கேங்கை ஒழித்துகட்டினாரா ? என்பதே படத்தின் இரண்டாம்பாதி.

எழுத்தும் இயக்கமும்


‘அட்டகத்தி’ என்ற தரமான படத்தையும் ‘மெட்ராஸ்’ என்ற அருமையான படத்தயும் உருவாக்கி புகழ் பெற்றவர் பா.இரஞ்சித். இவரின் படங்களில் சமூக பிரச்சனைகளை யதார்த்தமாக காட்டுவார். அதனாலே இவருகென்று தனி ரசிகர்கள் உள்ளனர் . இப்போது , ரஜினி என்ற மாஸ் கெத்து என்பதை அதிகமாக காட்டாமல் , இது ரஞ்சித்தின் படம் என்று இந்த கபாலியை காட்டியுள்ளார் . இதற்கு ஒரு தனிதைரியம் வேண்டும் .
 படத்தின் முதல் நொடி முதல்,  கடைசி நொடி வரை இவரின் படமாகதான் தெரிந்தது.  உண்மையை கூறவேண்டுமென்றால் படத்தின் முதல் 30 நிமிட வேகம் பிற்பாதியில் இல்லை . திரைக்கதையில் அழுத்தமில்லையென்றே சொல்லவேண்டும் . திரைக்கதை சொதப்பல் என்பது வேறு, யதார்த்தமனா திரைக்கதை என்பது வேறு. ஆனால் இது இரண்டையும் கலந்த திரைக்கண்ணோட்டத்தை படத்தில் காணலாம் . படத்தின் 8 மாத கால எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தைதான் தந்தது. என்னதான் உலகசினிமா பார்ப்பவர்கள் படம் செம்ம என்று சொன்னாலும் , படம் பார்க்கபோகும் 95% மக்கள் சாதாரண மக்களே . அதனால் அவர்களின் பார்வையில் படம் நன்று, சுமார் .
மெட்ராஸ் படத்தில் பணியாற்றிய அனைத்து ஆர்டிஷ்டும் இதிலும் வருவதால் என்னவோ , மெட்ராஸ் நியாபகங்களிலிருந்து விடுபடமுடியவில்லை. படத்தில் ரஜினி தமிழ் மக்களை பற்றியும் , நம்மை எவ்வாறு மற்றவர்கள் பார்க்கிறார்கள் என்பதை பற்றியும் கூறும் வசனம் க்ளாப்ஷ் விசில்களையும் அள்ளுகின்றது. மற்றபடி திரைக்கதையில் அதிக வேகமில்லை.

நடிகர் நடிகைகள்
சூப்பர் ஸ்டார்


சூப்பர் ஸ்டாரை திரையில் காண தான் கடந்த ஒரு வருடமாக தமிழ்சினிமாவே காத்துகொண்டிருந்தது. கபாலி மொத்தபடமும் நகர காரணமானவர் . கேங்ஷ்டராக கேரக்டராக இவர் வரும்போது நம் உடல் சிலிர்க்கின்றது. வயதானாலும் அழகும் ஸ்டைலும் மட்டும் மாறவேயில்லை. க்ளாப்ஸ் க்ளாப்ஸ் ,,,சாதாரண சீனையும் மாஸாக மாற்றும் திறமை இவரிடமே உண்டு. காதல்  காட்சியும் , தத்ரூபமாக வாழ்ந்தவராக அருமையாக செய்துள்ளார் . ப்ளாஸ்பேக் காட்சிகள் ரஜினியை 1980 களில் கண்டது போல் செம்மயாக உள்ளார்.

ராதிகா ஆப்தே

படத்தில் காதல் காட்சிகளும் சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் , சிறப்பாக செய்துள்ளார்

தன்ஷிகா
செம்ம ரோல்  . யோகி என்ற கதாபாத்திரத்தில்  சிறப்பாக செய்துள்ளார் .

கிஷோர் வின்ஷ்டன் சா ,
வில்லன்களாக மிரட்டுகின்றனர் . ஆனால் இன்னும் நன்றாக இவர்களை பயன்படுத்திற்களாம் .

அட்டகத்தி தினேஷ் , கலையரசன் ஆகியோரை வேண்டுமென்றே போட்டது போல் உள்ளது.

படத்தில் அனைவரும் நன்றாக , முடிந்தளவு தன் பங்களிப்பை கொடுத்துள்ளனர்.






இசை


சந்தோஷ் நாராயணின் இசையில் வெளிவந்த பாடல்களில் நெருப்புடா பாடல்  ஏற்கனவே பட்டிதொட்டியெங்கும் பட்டயகெளப்பியது. மற்றபாடல்கள் படத்திற்காக கொடுக்கபட்டது என்று கூறினாலும் சுமார் ரகமே . ஆனால் எப்போதும் பின்னனி இசையில் சூப்பராக செய்பவர் இப்படத்தின் பின்னனி இசை சொல்லும்படியாக இல்லை. நன்றே . சூப்பர் ஸ்டாருக்கு உண்டான மாஸை ஓரிரு இடங்களில தன் இசையால் நிரப்பியுள்ளார் .  ஆனால் மற்றவை எடுத்துகொன்டால் , ஜி உங்களுக்கு என்னதான் ஆச்சு ? என்ற கேள்வியே எழும்பும்

ஒளிப்பதிவு


படத்தின் தூணாக நிற்கின்றார் முரளி . தன் கேமரா மூலம் சூப்பர் ஸ்டாரை சூப்பராக காட்டுவதிலும் , மலேசியா , பாங்காக், ஆகிய இடங்களை தன்  யதார்த்த பாணியை மீறாமலும் ,  மிக அருமையாக காட்டியுள்ளார்

எடிட்டர் பிரவீன் கே . எல் படத்திற்கு தேவையானதை கட் செய்து கொடுத்துள்ளார் .


ரசிகன் பார்வை

‘மச்சி படம் சுமார்தான்டா’ ஆனா ‘சூப்பர் ஸ்டார் திரும்பவந்துட்டாருனு சொல்லு ‘என்று போனில் தன் நண்பர்களிடம் கூறியவர்கள் பல பேர் .

என் பார்வை

இது சூப்பர் ஸ்டார் படம் இல்லை . ஆனால் ரஞ்சித் படமும் இல்லை . யதார்த்தம் என்ற பெயரில் கொஞ்சம் இழுத்துவிட்டார் . சூப்பர் ஸ்டார் என்ற சிகரம் தன் கையில் பொக்கிஷமாக கிடைத்தும் அதை ஓரளவே பயன்படுத்தியுள்ளார் . மொத்ததில் பல வருடங்களுக்கு பிறகு ஒரு முழு நீள சூப்பர் ஸ்டார் (க்ராபிக்ஷ் எதுமில்லாமல் ) படம் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.

Saturday, 7 May 2016

24 - திரைவிமர்சனம்


முதலில் நாம் 5 வருடத்திற்கு முன்பு டைம் ட்ராவல் செய்து பார்த்தால் இந்த படம் விக்ரம் நடிப்பதாக இருந்தது . ஆனால் பல காரணங்களால் சூர்யா நடிக்கின்றார் என்பது 2 வருடத்திற்கு முன்புதான் தெரிந்தது .மேலும் இத்திரைப்படத்தின் இயக்குனர் விக்ரம் கே குமாரை திரும்பிபார்க்கவைத்த திரைப்படம் ‘யாவரும் நலம்’. இந்த திரைப்படத்திற்கு பிறகு , எப்போது அடுத்த படம் இயக்குவார் என்ற ஆர்வம் அனைவருடத்திலும் முளைவிட்டது . அதுமட்டுமில்லாமல் சூர்யா நடிப்பில்  வெளிவந்த மாற்றான், சிங்கம்-2( நார்மலாகதான் ஓடியது) ,அஞ்சான், மாஸீ என்கிற மாசிலாமணி ,போன்ற படங்கள் தோல்வியே . அதனால் தன் சொந்த 2D நிறுவனத்தின் மூலம் இந்த படத்தை தயாரித்ததால் இப்படம் மிக பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியது . அனைவரும் எதிர்பார்த்த ’24’  இன்று உலகம் முழுவதும் தமிழ் சினிமாவை மாற்றியமைக்க வெளிவந்துள்ளது .

கதையும் அதன் பாதையும்

1990-ல் சேதுராமன் என்ற விஞ்ஞானி, ‘ப்ராஜக்ட் 24’ என்னும் காலத்தை மாற்றியமைத்து டைம் ட்ராவல் செய்யும் ஒரு வாட்ச்சை கண்டுபிடிப்பார், ஆனால் அவருடைய அண்ணன் ஆத்ரியன் அந்த வாட்ச்சை அடையவேண்டுமென்பதற்காக சேதுராமனின் மனைவியை கொன்றுவிட்டு சேதுராமனையும் மற்றும் அவர் குழந்தையையும் கொல்வதற்காக அவரை தேடிசெல்வார் . சேதுராமன் அவருடைய வாட்ச் மற்றும் அவர் குழந்தையை ஒரு கேட்ஜட்டில் வைத்துக்கொன்டு ஒரு ட்ரையினில் ஏறிவிடுகிறார்  மற்றும் அதிலிருக்கும் ஒரு பெண்ணிடம்( சரண்யாமோகன்) குழந்தையை கொடுத்து வளர்க்க சொல்லிவிடுவார் . குழந்தையுடன் சேர்த்து வாட்ச்சிருக்கும் பாக்ஸையையும் கொடுத்துவிட்டு ஆத்ரியனிடம் மாட்டிவிடுகிறார் . சேதுராமனை கொன்றுவிட்டு ஆத்ரியன் குழந்தையை கொல்லநினைக்கும் போது , அந்த குழந்தை இருந்த கேட்ஜட்டில் கௌன்டன் ஓட, அதை பாம்ப் என்று எண்ணி ட்ரெயினிலிருந்த குதித்துவிடுகிறார் . அதனால் கோமாவிற்கு சென்றுவிடுகிறார் ஆத்ரியன் .

26 ஆண்டுகளுக்கு பிறகு ..2016-ல் ,

மணி தன் அம்மா சத்யாவுடன் (சரண்யா மோகன்) மகிழ்ச்சியாக ,வாட்ச் மெக்கானிக்காக வேளை செய்துகொண்டிருக்கின்றார் . டைம்ட்ராவல் செய்யும் வாட்ச் இருக்கும் க பாக்ஸை திறக்க சாவியில்லாமல்,அந்த பாக்ஸ் ஒரு வீணான பொருளாகவே அங்கிருந்தது . மறுபக்கம் கோமாவிலிருந்த ஆத்ரியன் மீண்டுவர, தன் 26 வருட காலத்தையும் அனுபவிக்கவேண்டுமென்பதற்காக , ‘ப்ராஜக்ட் 24’ டாக்குமென்டுகளை வைத்து , அதைபோலே ஒரு புதிய வாட்ச்சை உருவாக்கநினைப்பார் . அப்போது அந்தவீட்டை சுத்தம் செய்யும் போது பாக்ஸை திறக்கும் சாவி , விதியின் காரணமாக மணியை வந்தடைகின்றது ,அதன்பின் வாட்சை ஆக்டிவேட் செய்தவுடன்தான் தெரிகின்றது , அதன்மூலம் டைம் ட்ராவல் மற்றும் டைம் ஃப்ரீஸிங் செய்யலாமென்று அறிகின்றான் மணி .

மற்றொரு புறம் வாட்ச்சை செய்யமுடியாமல் திணறும் நேரத்தில் ,ஒரு ஐடியாவின் மூலம் வாட்ச் மணியிடம் இருக்கின்றது என்பதை  அறிந்த ஆத்ரேயன், மணியை கொன்றுவிட்டு வாட்ச்சை அடைகின்றான்.
………………………………………………    I N T E R V A L   ……………………………..

இதன்பிறகு நடக்கும் பல சுவாரசியமான , வில்லதனமான வியூகங்களையும் , கலர்ஃபுல்லான காதல் சம்பவங்களையும் படத்தை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.


எழுத்தும் இயக்கமும்

விக்ரம் கே குமார்  ( அலை , யாவரும் நலம் , இஷ்டம் , மனம் ஆகிய படத்தின் இயக்குனர் )
இயக்குனர் விக்ரம் கே குமார் அவர்கள் இத்திரைப்படத்தை 2009ம் ஆண்டே நடிகர் விக்ரமை வைத்து எடுப்பதாக இருந்தது. படத்தின் பூஜையன்று , விக்ரம் இப்படத்தின் திரைக்கதையை  மாற்றியமைக்கவேண்டுமென்று கூற, அவருடன் தயாரிப்பாளரும் சேர்ந்துகொள்ள படம் பூஜையுடனே ட்ராபானது .எப்பவும் போல் விக்ரம் இந்த மெகா ஹிட் படத்தை கோட்டைவிட்டுவிட்டார் .

அதன்பிறகு தெலுங்கில் பிஸியாகிவிட்டார் இயக்குனர் . அங்கிருந்தவாரே 3 வருடங்கள் படத்தின் திரைக்கதையில் பல டெக்னாலஜி மற்றும் கேரக்டரைஷேசன் மாற்றங்களை கொண்டுவந்தார் . இறுதியில் 2014 ம் ஆண்டு சூர்யா தன் சொந்த தயாரிப்பிளே படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார் .

அதன் பிறகு ஹாலிவுட் தரத்தில் உருவாக்கவேண்டுமென்று பல இடங்களில் படத்தின் ஷூட்டிங் நடத்தபட்டது . படத்தில் 60% VFX பணிகள் இடம்பெற்றதால் பெரும்பாலும் ஹாலிவுட் கலைஞர்களே பயன்படுத்தபட்டனர் .

‘24’ என்று படத்தின் டைட்டில் போட்டதுதான் நியாபகமிருந்தது அதற்குள் INTERMISSION போட்டுவிட்டனர் . அதன்பிறகு ஆரமித்ததும் தெரியவில்லை முடிந்ததும் தெரியவில்லை . ஆனால் படத்தின் ரன்னிங் டைம் 160 நிமிடங்கள் .  இப்படத்தில் டைம் ட்ராவல் , மற்றம் ஆத்ரியா கேரக்டர் உருவாக்கிய விதம் மிக மிக மிக அருமை .
அதும் மணி கேரக்டர் , ஃப்ரீஸிங் டைம் ஆன் செய்ததும்  , நிச்சயம் நீங்கள் அனைவரும் ஃப்ரீஸ் ஆவிர்கள் . படத்தின் இரண்டாம்பகுதி , நாமொன்று நினைப்போம் ,ஆனால் விக்ரம் குமார் ஒன்று காட்டுவார் . நிச்சயம் ‘அடேங்கப்பா’ என்று வாய் பிழப்பிர்கள் .
படத்தின் ஒரே பிழை , காதல் . தமிழ் சினிமாவில் புது கதைகள் சொல்லவருபவர்கள் செய்யும் தவறை இவர் சிறிது தான் செய்துள்ளார் . ஆனால் படம் செல்லும் வேகத்திற்கு காதல் காட்சிகள் சிறிது ‘ஸ்பீட் ப்ரேக்கரே’  , மற்றும் பெரிய பிழை சூர்யா 15 தடவை பேசும்வசனம் ‘ BASICALY AM A WATCH MECHANIC, எனக்கு இதெலாம் சர்வ சாதாரணம்’ . இந்த வசனம் மக்களிடையே ரீச் ஆகும் என்று நினைத்து விக்ரம் குமார் வைத்திருந்தால் , அது அவரின் பிழையே .

நடிகர் நடிகைகள்

சூர்யா
சேதுராமன் , மணி , ஆத்ரேயன் ஆகிய மூன்று கேரக்டரில் நான்கு கெட்டப்பில் , ஒவ்வொரு ஃப்ரேமிலும் வருகிறார் சூர்யா . மொத்ததில் இது சூர்யா படமே மற்றும் சொந்த படம் என்பதால் ரொம்பவே கஷ்டப்பட்டுள்ளார் . ஆத்ரேயன் கேரக்டர் , வில்லனாக நடிக்க மூயற்ச்சி செய்துள்ளார்  நன்றாகவும் வந்திருக்கின்றது . மொத்ததில் இந்த படம் சூர்யாவின் திரைபயணத்தில் வித்தியாசமான மற்றும் வசூல் சாதனை செய்யபோகும் படம்

சமந்தா
ப்ப்ப்ப்பா..என்னா அழகு , இதுவரை சமந்தாவை இவ்வளவு அழகாக எந்தவொரு படத்திலும் நான் கண்டதில்லை . இன்னும் சமந்தா கண்ணுக்குள்ளே நிற்கின்றார். ஆனால் எப்பவும் போல் இவரையும் காதலிற்காகவும் , இரண்டு பாடலுக்காகவும் மட்டுமே இயக்குனர் பயன்படுத்தியுள்ளார் .
அதுமட்டுமில்லாமல் , நித்யா மேனனுக்கும் படத்தில் வேளையில்லையென்றே கூறவேண்டும்.

அஜய்
ஆத்ரேயனின் நண்பராக படத்தில் கூடவே பயணிக்கிறார் . தன் அனுபவ நடிப்பை , வயதான மற்றும் இளைஞர் கேரக்டர்களை நன்றாக வெளிபடுத்தியுள்ளார்

இசையமைப்பாளர்

ஏ.ஆர்.ரகுமான்
விண்ணைதான்டி வருவாயா ஓ காதல் கண்மணி ஆகிய காதல் படங்களுக்கு இசையமைத்த , இசைப்புயலுக்கு இத்திரைப்படம் சவாலாக அமைந்துள்ளது . காரணம் , ‘காலம் என் காதலியோ ‘ பாடலை கேட்கும் போது தெரியும் , இப்படத்தின் பாடல் மற்றும் BGM வேறொரு பரிணாமத்திலிருக்கவேண்டுமென்று . ஆனால் அதை அசால்ட்டாக செய்துவிட்டார் ரகுமான் . படத்தின் இசை மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது .

ஒளிப்பதிவு

திருநாவுக்கரசு

‘ஹே ராம்’ ‘ஆளவந்தான்’ ‘க்ரிஷ்-3’ போன்ற 28 படங்களில் தன் ஒளிப்பதிவின் பலத்தை காட்டியவர் திரு என்கிற திருநாவுக்கரசு . இத்திரைப்படத்திலும் மிக பெரிய தூணாக இருக்கின்றார் . காதல் காட்சியில் கண்சிமிட்டாமல் பார்க்கவைக்கின்றார் , வயதான ஆத்ரியனின் காட்சியில் பயம் கொள்ள வைக்கின்றார் . 'காலம் என் காதலியோ' பாடல் காட்சி புது வித பறிஞாமமே ., மேலும் படத்தை ஹாலிவுட் தரத்திற்கு கொன்டுசெல்கிறது இவரின் ஒளிப்பதிவு, மொத்ததில் இவருக்குஒரு பெரிய சல்யூட்

எடிட்டர் ப்ரவீன் புட்டியும் மிகச்சிறப்பாகவே தன் வேளையை செய்துள்ளார் . ஆனால், I am a watch mechanic வசனத்தை கட் செய்யலாமென்று , இயக்குனருக்கு ஆலோசனை கூறியிருக்கலாம்.

VFX கலையிக்கனர்களின் வேளைகள் மிகமிக பாராட்டவேண்டிய ஒன்று .

ரசி்கனின் பார்வை

‘படம் போனதே தெரியலடா’ ஆனா காதல் பாடல்களும் ( ஏனென்றால் , படம் செல்லும் வேகத்திற்கு இவை தேவைதான, என்று கேட்கவைக்கும்) , இரண்டாம் பகுதியில் வரும் காதல் காட்சிகள் மட்டுமே பொறுமையை சோதித்தன.

என் பார்வை

தமிழ் சினிமாவை பொறுத்தவரை, சயின்ஸ் ஃபிக்ஷன் படங்களுக்கும், புதிய முயற்சிகளுக்கும் ரசிகர்கள் இடம் கொடுக்கின்றனர்( இன்று நேற்று நாளை ,பீட்சா, சூதுகவ்வும்) . ஆனால் பலபடங்கள் தோல்வியடைய காரணம், சரியான திரைக்கதையில்லாததே .இந்த ‘24’ படம் கொடுத்ததற்காக விக்ரம் கே குமாருக்கும் , சூர்யாவிற்கும் மிகப்பெரிய நன்றி . இதில் மிக வேகமான திரைக்கதையும், எதிர்பார்க்காத திருப்பங்களையும் கையாண்டுள்ளார் விக்ரம் கே குமார் மற்றும் காதலிலும் டைம்ட்ராவல் செய்வது புதுவித காதல். மொத்தத்தில் அனைவரும் பார்த்து இத்திரைப்படத்தை பார்த்து ஃப்ரீஸ் ஆவிர்கள் . 

Tuesday, 3 May 2016

மனிதன் - திரைவிமர்சனம்



ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் வெற்றிக்கு பிறகு உதயநிதி நடித்த எந்த படமும் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. ஏதோ அந்த படமெல்லாம் அவர் நடிக்கவும், நடனம் கற்றுக்கொள்ளவும்  எடுக்கப்பட்டதாகவே தெரிகின்றது. ஆனால் உதயநிதி நடித்தால் நிச்சயம் ஒரு தடவையாவது பார்க்கலாம் என்ற நம்பிக்கை எல்லோரிடமும் இருக்கின்றது . இதுவரை காமெடியன்கள் மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஷ் ஜெயராஜை மட்டுமே உதயநிதியின் படங்களில் ஆதராவாக இருந்தனர் . முதல்முறையாக இவர்கள் யாருமில்லாமல் சோலோ ‘மனிதன்’ஆக  களமிறங்கியுள்ளார் .

அதுமட்டுமில்லாமல் இப்படத்தின் இயக்குனர் ‘ஐ.அஹமத்’ ‘என்றென்றும் புன்னகை’ என்ற வெற்றிப்படத்திற்கு பின்பு இயக்கியிருக்கும் படம் என்பதாலும் , மேலும் இந்தபடம் ஹிந்தியில் வெற்றிபெற்ற ‘ஜாலி LLB’  படத்தின் ரீமேக் என்பதாலும் , இசையமைப்பாளர் சந்தோஷ்நாராயணன் இசையமைத்த எந்தவொரு படமும் இதுவரை தோல்வியடைந்ததில்லை , சுமாராகாவது இருக்கும் என்பதாலும் ,எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது . சரி படத்திற்குள் செல்வோம் .

கதையும் அதன் பாதையும்

ஜெயிலுக்குள் செல்லவேண்டுமா? கோர்ட்டில் பெய்ல் கிடைக்காமல் இருக்கவேண்டுமா? லாயர் சக்தியை (உதயநிதி) அணுகுங்கள் , இதுபோன்று பொள்ளாச்சியே கலாய்க்கும் தோல்வி லாயராகவுள்ளார் உதயநிதி . இப்படி இருக்கும் நேரத்தில் அவருடைய மாமா பொண்ணான ஹன்சிகாவை காதலிக்கிறார் . ஹன்சிகாவை பொறுத்தவரை உதயநிதி ,ஒரு கேஸிலாவது வெற்றிபெற்று நல்லபெயரை பெறவேண்டுமென்று நினைக்கின்றார் .உதயநிதியோ அறியாமையான லாயராக இருப்பார். கோர்ட்டில் எப்படி வாதாடவேண்டும்? என்று கூட முழுமையாக தெரியாதவர் . அதனால் ஹன்சிகா அவரை திட்ட, அந்த மனகாயத்தால் , நான் ஒரு நல்ல லாயர் என்ற பெயரை பெறாமல் பொள்ளாச்சிற்கு வரமாட்டேன்,என்று சபதம் செய்துவிட்டு சென்னையிலிருக்கும் அவருடைய மாமா விவேக் வீட்டிற்கு வந்துவிடுகிறார் . மூன்று மாதம் சென்னையில் ஒரு கேஸும் கிடைக்காததால் ஊருக்கு திரும்பிவிடலாமென்று நினைக்கும் நேரத்தில்தான் , வான்ட்டடாக ஒரு கேஷ் வருகின்றது .
சென்னையே உலுக்கிய ஒரு சம்பவம்தான் , “ஒரு பெரிய பணக்கார வீட்டு மகன் குடிபோதையில் கிண்டி ப்ளாட்ஃபாமில் தூங்கிகொண்டியிருந்த 6 பேர் மீது கார் ஏற்றி கொன்றுவிடுகிறார்” . ஆனால் அவருக்கு ஆதரவாக கோர்ட்டில் லாயராக ஆஜராகிறார் பிரகாஷ்ராஜ் . இதுவரை பிரகாஷ்ராஜை எதிர்த்து யாரும் வென்றதில்லை . அதனால் எளிதாக அந்த பணக்கார பையனை வெளியே கொண்டுவருகிறார் ,ஆனால் பிரகாஷ்ராஜ் எதிர்பார்த்த பணம் அவர்களிடமிருந்து கிடைக்காததால், சாமர்த்தியமாக உதயநிதியை அந்த கேஷில் பொதுநல வழக்கறிஞராக ஆஜராகவைக்கின்றார் . அதன்பிறகு பல சூழ்ச்சிகள் செய்கிறார் பிரகாஷ்ராஜ் . அந்த சூழ்ச்சிகளிலிருந்து விடுபட்டு உண்மைக்காகவும் நேர்மையாகவும் கோர்ட்டில் போராடுகின்றார் உதயநிதி.
இறுதியில் , கோர்ட்டின் தீர்ப்பு பணம் பக்கமா? அல்லது  ஏழைகளின் ( இறந்த 6 பேர் ) பக்கமா? என்பதே பரபரப்பாகவும் கலகலப்பாகவும் நகர்த்திச்செல்கின்றார் இயக்குனர் அஹமத் .

எழுத்தும் இயக்கமும்
ஐ.அஹமத்

இவர் ஏற்கனவே ‘’வாமணன்’’ மற்றும் ‘’என்றென்றும் புன்னகை’’ படத்தை இயக்கியுள்ளார்.
 ‘மனிதன்’ இப்படம் முழுக்க  'கோர்ட் ட்ராமா'வை அடிப்படையாக கொண்டு எடுத்துள்ளார் அஹமத் . இந்த மாதிரியான படங்கள் நான் பார்த்தவரை கடந்த 5 ஆண்டு காலமாக ( தெய்வத்திருமகள் பார்த்ததாக நியாபகம் ) எந்தவொரு படமும் தமிழில் வரவில்லை. அதனாலே இவருக்கு ஒரு பெரிய க்ளாப்ஸ் . ஹிந்தி ரீமேக்காக இருந்தாலும் தமிழில் மாற்றியமைக்க சற்று சிரமபட்டுள்ளார் மனிதர் . இவருக்கு பக்கப்பலமாக இருந்துள்ளார் இப்படத்தின் வசனகர்த்தா அஜயன் பாலா . இப்படத்தின் பலம் ‘சோர்வடைய செய்யாத திரைக்கதையே’  மற்றும் கொஞ்சம் மட்டுமே காதலை திணித்துள்ளது சிறப்பு . அதுமட்டுமில்லாமல் கோர்ட்டில் வெறும் வாதாடல் மட்டுமிருக்காது , பல காமெடி காட்ச்சிகளும் அதில் இடம்பெறும் என்பதையும் கூறியுள்ளார் . படத்தின் வசனங்கள் குறைவே. ஆனால் படத்திற்குள் பொறுந்தும் . குறிப்பாக ஒரு சில வசனங்களும் , க்ளைமாக்ஷில் உதயநிதி ‘நீதிமன்றங்களை பற்றி ஒரு மனிதனின்  மனநிலையை’ அப்படியே சொல்லும்  வசனங்களும் ,அதன் பிறகு ராதாரவி பேசும் வசனமும் தமிழ்நாடு நீதீ துறைக்கு நெத்தியடியாக அமைகின்றது . ‘கோர்ட் என்றால் பணம் கொடுத்தால் வெளியே வந்துவிடலாம் , தண்டனையிலிருந்து தப்பிவிடலாம் என்று நினைக்காதீர்கள் , உண்மை நிச்சயம் வெல்லும்’(வெறும் படத்தில்தான் நடக்கும்) , என்பதை இந்தபடத்தில் காட்டுகிறார் அஹமத்.

நடிகர் நடிகைகள்
உதயநிதி

இந்தபடத்திற்கு இவர் சரியான தேர்வா என்று தெரியவில்லை . நிச்சயம் மற்ற நடிகர்கள் நடித்திருந்தால் இன்னும் சிறப்பாகவே நடித்திருப்பார்கள் , இருந்தாலும் உதயநிதி இந்தபடத்தில் நன்றாகவே நடித்துள்ளார் . ஆனால் இறுதிக்காட்சியில் இவர் பேசும் வசனத்திற்கு மட்டும் , இவரின் முகபாவனைகளை மாற்றியிருக்கலாம் . அழும் காட்சிகள் இவருக்கு நடிக்க வரவில்லையென்றே சொல்லவேண்டும். ஆனால் இந்தபடத்திற்கு தேவையானதை தந்திருக்கின்றார் உதயநிதி.

பிரகாஷ்ராஜ் & ராதாரவி

இவர்களின் நடிப்பை பற்றி குறைசொல்ல வேண்டுமென்றால் ஒருவர் பிறந்துதான் வரவேண்டும் . தங்கள் அனுபவ நடிப்பால் பிரகாஷ்ராஜ் ஒரு க்ரிமினல் லாயராகவும் , ராதாரவி கோர்ட்டில் ஜட்ஜாகவுமே வளம் வருகின்றார் . பிரகாஷ்ராஜ் கோர்ட்டை எதிர்த்து பேசும் வசனமும் சரி, உதயநிதியை மிரட்டும் காட்சிகளிலும் சரி ,  சபாஷ் . இவரின் பல காமெடியான முகபாவனைகளை படத்தில் காணலாம் . மேலும் இவர் பேசும் ஒவ்வொரு வசன உச்சரிப்பும் மிக புத்திசாலியான லாயராகவே காட்டுகின்றன . மொத்தத்தில் மிக மிக மிக சரியான தேர்வு .
ராதாரவி சாரும் மிக மிக கச்சிதமே . எந்தவொரு குறைகளுமில்லை .

ஹன்சிகா & ஐஷ்வர்யா ராஜேஷ்

ஹன்சிகா எப்பவும் போல் காதல் வலம்தான் வருகின்றார் . ஆனால் உதயநிதி சென்னை வர காரணமாகவும் இருக்கின்றார் . இவருக்கு காட்சிகள் பல இல்லையென்றாலும் , தன் பங்களிப்பை முடிந்தவரை செலுத்தியுள்ளார்
ஐஷ்வர்யா ராஜேஷ் ஒரு டிவி ரிப்போர்ட்டராகவும், பிரகாஷ்ராஜை பழிவாங்கவேண்டுமென்ற ஒரு எதிரியாகவும் வருகின்றார் .முதலில் உதயநிதியை வெறுப்பதும் , பிறகு அவருக்கு உதவி செய்ய வரும் காட்சிகளும் நல்லது.

விவேக் காமெடியில் கலகலக்க வைக்கிறார் .

முக்கிய கதாபாத்திரமாக , படத்தின் க்ளைமாக்ஷில் கமலக்கண்ணனாக வரும் கேரக்டர் என்னை மிகவும் பாதித்தது. அவரின் நடிப்பிற்கு ஒரு மிக பெரிய சல்யூட் . நிச்சயம் உங்களை கோலிவுட் பயன்படுத்திகொள்ளும் .

இசையமைப்பாளர்
சந்தோஷ் நாராயணன்

படத்தின் மிக பெரிய பலமாக வருகின்றார் . ‘முன் செல்லடா’  ‘அவள்’ ஆகிய பாடல்கள் திரும்ப திரும்ப கேட்க தோன்றுகின்றன . பிண்ணனி இசையில் பிண்ணியெடுக்கின்றார் . யதார்த்தையும் சரி, கோர்ட் காட்சிகளும் சரி, உயிர் கொடுக்கின்றார்.

ஒளிப்பதிவாளர்
மதி

இவரை கைத்தட்டி பாராட்ட இரண்டு கைகள் பத்தாது . காரணம் ,இவரின் கேமரா நம்மையும் கோர்ட்டிற்குள் அழைத்து செல்கின்றது . படத்திற்கு பக்க பலமாக இருந்துள்ளார்.( மேலும் இவர் , நான்மகான் அல்ல , ஜீவா, என்றென்றும் புன்னகை, பையா , ஆகிய பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் )

ரசிகனின் பார்வை

‘’நல்ல ஒரு படம்டா, படம் நல்லாவேயிருக்கு’’ 2,3 தடவ பார்க்கலாம்’’ என்று வெளியே வந்த இருவர் பேசிகொன்டனர்.

என் பார்வை

‘ஏழைகளும் நடுத்தர மக்களும் தங்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டுமென்று ‘ நாடிசெல்வது நீதிமன்றங்களே ..ஆனால் அங்கேயும் பணம்தான் ஆளுகின்றன என்பதை தெளிவாக இப்படத்தில் திரையிட்டுள்ளார் . ஒரு அருமையான சமுதாய படத்தை , கொஞ்சம் காமெடியுடன் கூறியுள்ளார் அஹமத் . ஆனால் முதல் 30 நிமிடம் சற்று மெதுவாக நகர்கின்றன . மற்றும் உதயநிதி சென்னையிலிருந்து பொள்ளாச்சிற்கு வந்ததும் ‘கொண்டாட்டம்’ பாடல் தேவையில்லாதது,

மொத்ததில் இந்த ‘மனிதனை’ தாராளமாக அனைவரும் பார்க்கலாம்.


Monday, 2 May 2016

முருகதாஸ் - இயக்குனர் பாகம் 3



முதலில் அனைவரும் என்னை மன்னிக்கவேண்டும் . ஏனென்றால் கடந்த ஒரு மாதமாக நான் ஏதும் எழுதவில்லை . ஆன்ட்ராய்ட் ஃபோனில் சிக்கி சின்னாபின்னாகமானேன் . எதும் தோன்றவில்லை . வாட்ஷ்அப் , ஃபேஸ்புக் என மாயவலையில் சிறிய பூச்சிப்போல் மாட்டிகொன்டேன் . அதிலிருந்து மீண்டுவரவே இந்த கடந்த 15 நாட்களாக போராடி ,இப்போது அந்த சிறையிலிருந்து வெளிவந்துள்ளேன் . ஆண்ட்ராய்டில் பல நல்ல விஷயங்கள் இருக்கின்றன  ஆனால் அனைவருடைய மனமும் கெட்ட விஷமங்களை நாடி செல்கின்றன என்பதை தெளிவாகபுரிந்துகொன்டேன் . இனி எப்பவும் போல் பல சினிமா தகவல்களை தினமும் எழுதவேண்டுமென்ற குறிக்கோளுடன் ஆரமிக்கின்றேன் .

கடந்த இரண்டு பதிவுகளாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸை பற்றி பார்த்துகொன்டிருந்தோம் . இப்போது அவருடைய துணைஇயக்கனுர்களை பற்றி பார்ப்போம்.
குறு எவ்வளியோ சிஷ்யனும் அவ்வழியே என்ற பழமொழி இவருக்கும் இவரின் துணைஇயக்குனர்களுக்கும் பொறுந்தும் . ஏனென்றால் பெரும்பாலும் இவரிடம் உதவிஇயக்குனராக இருப்பவர்கள் இவரை போலவேதான் உள்ளனர் .இவரின் ஆரம்பகட்ட படங்களில் பணியாற்றிய உதவி மற்றும் துணை இயக்குனர்கள் என்னா ஆனார்கள் என்றே தெரியவில்லை .ஆனால் கஜினி படத்திலிருந்து இவரின் படங்களில் பணியாற்றும் உதவி மற்றும் துணைஇயக்குனர்கள் தற்போது வெற்றிகரமான இயக்குனர்களாக உள்ளனர் .

TEAM  AR MURUGADOSS


( என் இமைகளுக்கு தெரிந்தவர்களை எழுதியுள்ளேன் . உங்களுக்கு இன்னும் பலர் தெரிந்திருந்தால் கூறவும் . ஆவலுடன் காத்திருக்கின்றேன் )

1 . சரவணன்




இவர் எங்கேயும் எப்போதும் என்ற படத்தின் மூலம் மிகபிரசத்தி பெற்றவர் அதன் பிறகு இவன் வேறமாதிரி படமும் ஹிட் .ஆனால் இவர் அடுத்து எடுத்த வலியவன் படம் மட்டுமே தோழ்வியடைந்தது. இப்போது  தெலுங்கில்  பிஸியான இயக்குனராக இருக்கிறார். முருகதாஸின் ரமணா மற்றும் கஜினி ஆகிய படங்களுக்கு உதவிஇயக்குனராக பணியாற்றியவர்  நாமக்கலை சேர்ந்தவரான இவர்தான் முருகதாஸின் ஃபேவரட் . முருகதாஸின் எந்தவொரு தவறுகளையும் வெளிப்படையாக கூறுபவர் .

உதாரணமாக கஜினி படத்தில் தமிழில் இரண்டு கெட்டப்பில் வில்லன் இருப்பார் .ஆனால் இந்தியிலோ ஒரு கெட்டப்தான் . காரணம் இந்த சரவணன்தான் , இவர் வில்லன் இரண்டு கெட்டப்பில் இருந்தால் மக்கள் ஏற்றுகொள்ளமாட்டார்கள் என கூறினார். ஆனால் அதை முருகதாஸ் ஏற்றுகொள்ளவில்லை . இறுதியில் படத்தின் ஒரே ட்ராபேக்காக குறிப்பிட்டது இரண்டு கெட்டப்தான் ( ஒரு இயக்குனர் என்னிடம் இவ்வாறாக கூறியிருந்தார் ). அதனால் அந்த தவறை ஹிந்தி ரீமேக்கில் சரிசெய்துகொண்டார்



சரி இந்த உதவிஇயக்குனருக்கு முருகதாஸ் செய்த உதவிதான் என்னா?   இவரின் முதல் திரைப்படமான எங்கேயும் எப்போதும் படத்தின் தயாரிப்பளாரே முருகதாஸ்தான் .



2. திருக்குமரன்



இவர் முருகதாஸின் 7ம் அறிவு மற்றும் துப்பாக்கி படங்களில் துணைஇயக்குனராக பணியாற்றியவர் . பின்பு 2013ம் ஆண்டில் ஏ.ஆர்.முருகதாஸின் கதையில் ஆர்.செந்தில்குமார் ( எதிர்நீச்சல் . காக்கிசட்டை படத்தின் இயக்குனர் ) வசனத்தில் ‘மான்கராத்தே’ என்னும் படத்தையெடுத்து இயக்குனரானார் . 2014ம் ஆண்டு வெளியான இந்தபடம் வணிகரீதியில் வெற்றிபடமாக அமைந்தது . மேலும் கடந்த பொங்கலன்று உதயநிதி நடிப்பில் வெளிவந்த ‘கெத்து’ படத்தின் இயக்குனரும் இவரே .

இவருக்கு முருகதாஸ் செய்த உதவி. ‘ மான் கராத்தே ‘ படத்திற்கு கதையளித்தது மட்டுமல்லாமல் , தயாரிப்பாளர் பி.மதனுடன் இணைந்து இந்தபடத்தை தயாரிக்கவும் செய்துள்ளார் .

3. ஆனந்த் சங்கர்



இவரும் முருகதாஸின் 7ம் அறிவு மற்றும் துப்பாக்கி படங்களில் முதன்மை துணை இயக்குனராக பணியாற்றியவர் . மேலும் 2014ம் ஆண்டு வெளிவந்த ‘ அரிமா நம்பி ‘ படத்தின் மூலம் இயக்குனர் அவதாரமெடுத்தார் . இப்படம் ரசிகர்களிடையும் வினியோகஸ்தர்களிடமும் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இப்போது இவர் விக்ரம் நடிப்பில் ‘இருமுகன்’ படத்தை இயக்கிவருகிறார் .

இவருக்கு முருகதாஸ் செய்த உதவி , ‘ துப்பாக்கி ’ படத்தின் தயாரிப்பாளாரான கலைப்புலி எஸ்.தாணுவிடம் இவரை அறிமுகபடுத்திவைத்தார் . அதன்பிறகு உருவானாதே ஆனந்த் சங்கரின் ‘அரிமா நம்பி’ .


4 . R அஜய் ஞானமுத்து



7ம் அறிவு மற்றும் துப்பாக்கி படங்களில் உதவிஇயக்குனராக பணியாற்றியவர், 2015ம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளிவந்த படம். தமிழ சினிமா உலகத்தை மட்டுமின்றி ரசிகர்களையும் திரும்பிபார்க்கவைத்தார் . ‘டிமான்டி காலனி’ படத்தை இயக்கி மிகபெரிய பெயரை பெற்றவர் இவர் . பேய்களுடன் விளையாடி கொண்டிருந்த தமிழ்சினிமாவிற்கு நிஜ பேயையும் , அதில் லாஜிக்காக பல விஷயங்களையும் புகுத்தியிருந்தார் . இப்போது இவர் ‘டிமான்டி காலனியின் இரண்டாம்பாகம் ‘ இயக்குவதாக பேச்சுவார்த்தைகள் அடிபடுகின்றன.

5. TN சந்தோஷ்



இவர் 7ம் அறிவு மற்றும் துப்பாக்கி படங்களில் துணைஇயக்குனராக பணியாற்றியவர் . இவர் கடந்த பிப்ரவரி மாதம் வெளிவந்து வசூல் வேட்டை நடத்திய ‘கணிதன்’ படத்தின் இயக்குனராவார் . மேலும் இப்படத்தின் கதை மிகப்பெரிய சமுதாய பிரச்சனையை கூறுவதால் , இவர் பலதரப்பட்ட விமர்சனர்களிடம் நன்பெயரையும் பெற்றார் .

6.ராஜ்குமார் பெரியசாமி



துப்பாக்கி படத்தின் துணைஇயக்குனராக பணியாற்றியவர் இவர் . தற்போது ஏ.ஆர் முருகதாஸின் தயாரிப்பில் ‘ரங்கூன்’ என்னும் திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார் .


6.விஜய் பாலாஜி


ஏ.ஆர். முருகதாஸின் பட்டறையிலிருந்து வெளிவரவிருக்கும் மற்றொரு இயக்குனர் . இவர் தற்போது ‘உல்ட்டா’ என்னும் திரைப்படத்தை இயக்கிகொன்டிருக்கின்றார் .


7. வெங்கட் மோகன்

இவர் முருகதாஸின் தமிழ் மற்றும் ஹிந்தியென 4 படங்களுக்கு இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். இன்னும் இவர் தனித்து படம் இயக்கவில்லை


மேலும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் , அவரின் துணை மற்றும் உதவிஇயக்குனர்களின் அனைத்து பட ப்ரோமோஸன் விழாக்களில் கலந்துகொள்வது மட்டுமல்லாமல் , அவர்களின் துணைநின்று உதவியும் செய்துவருகின்றார் .

இனி அடுத்த பகுதியில் முருகதாஸின் படங்களை பற்றி காண்போம்.

முருகதாஸ் - இயக்குனர் பாகம் 1.

முருகதாஸ் - இயக்குனர்  பாகம் 2