Wednesday, 30 March 2016

கனவுகள் கலைவதேனோ - சிறுகதை


குறிப்பு ; ( இந்த சிறுகதையின் மூலக்கதையை கூறி, இதை எழுத தூண்டிய என் நண்பன் சி.பிரசாத் அவர்களுக்கு என் நன்றிகளை தெறிவித்துகொள்கிறேன். )
மேலும் ; இக்கதை சிறிது NON-LIENEAR முறையில் எழுதபட்டுள்ளது. அதனால் சற்று பொறுமையாக படிக்கவும் .



கனவுகள் கலைவதேனோ
         
            -பார்கவி தி

கன்னியாகுமரி மாவட்டம் , ஊர் பெயர் சரியாக அவனுக்கும் , அவளுக்கும் தெரியவில்லை. அவன் நண்பன் பிரபா அவற்றை கூறினான்.

‘மச்சி சந்துரு , நீ எதுக்கும் கவலபடாதடா. இது நம்ம ஃப்ரென்ட் வீடுதான் . ஒருத்தனுக்கும் தெரியாது .

சந்துரு ‘அதுக்கிலடா பிரபா, எனக்கு என் பேரண்ட்ஷ நினைச்சுலாம் பயமில்லடா , மகிழினியோட பேரன்ட்ஷ நினைச்சாதான் பயமா இருக்கு.

அவன் அருகிலிருந்த மகிழினி தற்போது சற்று பயத்துடன் , மகிழனின் கைகளை பற்றி கொன்டால்.

சிறிது தூரம் நடைபயணத்திற்கு பிறகு , அவர்கள் தேடிவந்த வீடு வந்தது.

பிரபா ‘ சரி மச்சி நீயும் அவளும் நல்லா வீட்ல ரெஸ்டெடுங்க . நான் நாமக்கல்ல இருக்க நம்ம பசங்ககிட்ட உங்க வீட்ல என்னா நிலவரம்னு கேட்டுபாக்ரன்.

மிகிழினி ‘ அண்ணா அப்படியே எங்க வீட்லயும் என்னா நடக்குதுனு கேட்டுசொல்லுங்கனா  . எனக்கு எங்க அப்பாவ பாக்கனும்போல இருக்கு.’

எனக்கு தெருஞ்ச ஒரு ஃப்ரெண்ட் சேலத்துலதான் இருக்கான் , அவன்கிட்ட கேட்டுபாக்ரன்மா . நீங்க டென்ஷன் ஆகாமா நல்லா ரெஸ்ட்டெடுங்க.

பிரபா  சென்றதும் அந்த வீட்டினுள் இருவரும் ஒருவரையொருவர் யாரென்று தெரியாது போல் தனிதனியாக இருந்தனர் . ஏனென்றால் இருவரின் தனிமை என்னா செயல் செய்யுமென்று இருவருக்கும் நன்றாகவே தெரியும்.

இயற்கை காற்றும் செயற்கை காற்றும் சேர்ந்து ஒரு புதுவிதமான கன்னியாகுமரி காற்றை தரித்துகொன்டிருந்தன. ஆனால் அந்த காற்று இருவரையும் கவரவில்லை.

மகிழினி தன் நினைவுகளுடன் வாழ ஆரமித்தால்

அப்பா அதெலாம் எதும் பண்ணகூடாது. இதோ இங்க கைபிடிக்கர சைஷ்ல இருக்கு பாருங்க இதான் மௌஷ் . அப்பறம் குட்டி குட்டி சதுரம் சதுரமா இந்த செவ்வகத்துல இருக்குபாருங்க இதான் கீபோட் .

அப்பா எனக்கு ஷ்கூட்டி வேணும் . என் ஃப்ரெண்ட்ஷெலாம் வாங்கிட்டாங்க. அடுத்த நாள் வீட்டினுள் ஷ்கூட்டி.

அப்பா , ‘அம்மா என்ன திட்டிட்டேயிருக்காங்க’
அடுத்த நிமிடமமே அம்மாவிற்கு திட்டு

அப்பா நான் ஆன்ட்ராய்டு க்ளாஷ் ஜாய்ன் பண்லாம்னிருக்கன் . இங்க சேலத்துல எதுமே இல்ல. கோயமுத்தூர்தான் .

…………………………. ( அவளின் அப்பா பேசும் வசனங்கள் , அவரின் நினைவுகளில் வரும் )

அப்பா இரண்டு நாளா எதுமே நீங்க சொல்லல. எனக்கொன்னுமாகாதுபா. 
நான் எங்க போனாலும் , இதோ உங்க இதயத்துல தான் இருப்பன் . அதான் என்னோட ஆத்மா இருக்ர இடம். கோயமுத்தூர் ,இங்கிருந்து ஜஷ்ட் 150 கே . ம் தான. என்ன பாக்கனும்னு தோனுச்சுனா இரண்டு மணி நேரத்துல பாத்தர்லாம் . அவ்ளோதான்

.....…………………………

அடுத்த மூன்று வாரத்தில்

அப்பா நான் சந்துருனு ஒருத்தர லவ் பண்றன் . அவரதான் கல்யாணம் பண்ணிப்பன் . இன்னும் ஒன் மன்த்ல அவர் ஜாப்ல ஜாய்ன் பண்ணிருவாரு .

…………………………

இல்ல நீங்க என்னா சொன்னாலும் அவரதான் நான் கல்யாணம் பண்ணிப்பன்

அவள் நினைவுகளிலிருந்து விடுபட்டு காஃபி தயார்செய்ய சென்றால்

இப்போது சந்துருவின் நினைவுகளில்

கோயமுத்தூர் , இன்னும் கொஞ்சநாள் இங்க இருந்தா போதும் பிரபா, நான் ஜாப் மட்டும் வாங்கமாட்டன் ஃப்ரியா ஆஸ்துமாவும்தான் வாங்குவன் . ட்ராபிக்ல மாட்டிகிட்டா அவ்ளோதான் அப்படியே சுடுகாட்டுல போய் படுத்துக்கலாம் போல இருக்குடா.

இப்போது பிரபா தான் தங்கியிருந்த வீட்டு மாடிக்குசென்றான்

அங்கே எதிர்வீட்டு மாடியில் அவள் போனில் பேசிகொன்டிருந்தால்

‘ ஓ காட் , நீ இந்த மாதிரியும் இவ்ளவு அழகா பொன்ன படைப்பியா ? அவ , போன்ல பேஷ்ரது அவங்க அப்பா அம்மா இல்ல ஃப்ரெண்ட்ஷா இருக்கனும் . அவளுக்கு ஆளுமட்டுமில்லமிருந்தா கடவுளே நீ எங்கிருந்தாலும் ( விநாயகரா  மாரியம்மா , செல்லாயி , ஆஞ்சனேயா , பெருமாளா , இல்ல சர்ச்சா இல்ல மஸ்ஜீத்தா ) உனக்கு பெரிய சன்மானம் வந்து தரன் .

ஒருவாரத்திற்கு பிறகு அவள் மாடிக்கு வந்த போது , அவன் அங்கிருந்த கரிதுண்டொன்றையெடுத்து ஒரு கவிதையெழுத ஆரமித்தான் .

‘காலங்கள் காத்துகொன்டிருக்கின்றனடி
கண்ணே உன் கண்மனியில் சற்று தன்னை காணவேண்டுமென்று ‘

அடுத்த நாள்

‘உன் பாதங்கள் பட்டால் மலைகள் நிறைந்த பாலைவனமும்
மலர்கள் நிறைந்த சோலைவனமாக மாறிவிடுமடி ‘

இப்படியே கவிதைகள் தொடர்ந்தன

ஒரு நாள் , என்னை மாற்றியமைத்த நாள் , என்னையும் காதல் என்னும் அற்புதமான அழகான உலகத்திற்குள் அழைத்துசென்ற நாள் . அன்பையும் காதலயும் விளக்க இந்த உலகில் எவ்வித மொழிகளிலும் பாவனைகளாலும் வார்த்தை இல்லை என்றுணர்ந்த தருணம் அது .

உன் பெயர் என்னா? என்று அவளிருந்த மாடியில் எழுதபட்டிருந்தது.

அதன்பிறகு பேச ஆரமித்தோம் . அவள் பேச்சுகள் என் மனதில் வெறுமை மலர்களுக்கு தண்ணீர் ஊற்றி பசுமை மலர்களால் மாற்றியமைத்தன .

எங்கள் இருவருக்கும் பேர்பொறுத்தம் , இந்த உலகத்தில் யாருக்குமில்லை போன்ற உணர்வு . அவள் பெயர் மகிழினி . என் பெயர் சந்துரு

வாரமொருமுறை அவளிருந்த வீட்டிற்கு ஒரு பெரியவர் வந்த செல்வார் . யாரென்று கேட்டபோது ‘உன் மாமனார் ‘ என்று கூறினால் .

நீ உங்க வீட்ல நம் லவ் விசயத்த சொல்லிபாரு மகிழ் ,என்று கடைசியாக கூறினான்

அதன் பிறகு . இப்போது இங்கே , வீட்டிற்கு தெரியாமல் ஒடிவந்து , வாழ்க்கையில் மொத்த பிரச்சனையையும் தலையில் ஏற்றிகொன்டுள்ளோம் .

ஏன் ? இந்த உலகத்துல நமக்கு பிடிச்ச வாழ்க்கையை வாழ்றதுக்கு இவ்ளோ பிரச்சனையை எதிர்நோக்குனுமா ?

இருவரும் காஃபியை பறுகினர்

மறுபக்கம்

சேலம் , அறங்கொத்துகனி கிராமம்

அந்த அழகான வீட்டினுள் பல சத்தங்கள் , பெறும்பாலும் ராஜமாணிக்கத்தின் உறவினர்களே .

அண்ணா , நான் பொண்ணு காலேஜ் முடிச்சதுமே என் பையன் சுரேஷ்க்கு கல்யாணம் பண்ணிகொடுனு கேட்டனே ,அப்பவே பண்ணிவச்சுருந்தா இன்னைக்கு எவனோரு தெள்ளவாரி இழுத்துட்டுஓடியிருப்பானா  ? நீதான் அவ எதோ ஆப்பாய்ளு படிக்க கோயமுத்தூர் போரா , படிச்சுமுடிச்சதும் கல்யாணம் வச்சுகலாம்னு சொன்னயே என்னா ஆச்சு?

ராஜமாணிக்கம் தான் தங்கை கேட்கும் கேள்விகள் செவியில் வாங்காமல் திண்ணையில் தன் நினைவுகளோடு வாழ தொடங்கினார் .

……………….

அதுக்கிலமா கோயமுத்தூர் இங்க இருந்தாலும் எனக்கு பயமா இருக்குமா.

………………………

சரி போய்ட்டு வா

…………………..

ஒரு வாரத்தில்


ம் ரூம்லாம் நல்லாதான் இருக்கு ( கோயமுத்தூர் ) . நல்லா சாப்டுமா , உடம்ப பாத்துக்கோ . அடுத்தவாரம் திருவிழாக்கு வந்துரு . சரியா நான் வரம்மா .

…………………………….

மகிழ் என்னா சொல்ற? என்னா இது லவ்வு கிவ்வுனுட்டு . இப்போலாம் ஒரு செல்லு கைல வச்சுருந்தா போதும் லவ்வு மனசுல முலச்சுருது.
.......................….

இல்ல நீ நம்ம சுரேஷதான் கல்யாணம் பண்ணிக்கனும் .

நினைவு முடிந்தது.

ராஜமாணிக்கத்தின் வீட்டின் வெளியே .

கே.கு.கா கட்சி தலைவர் , அவனருகில் இருந்த தொன்டரிடம் ‘ நா விசாரிக்க சொன்னனே என்னா ஆச்சு ? பையன் எந்த இடம்?

அண்ணா பையன் கொஞ்சம் மேலெடம் . அவங்க ஆளுங்கட்சி காரனுங்க. நீங்க நினைச்ச மாதிரியே வேற ஜாதிதான் .

ஆளுங்கட்சிய எப்படி கீழறக்குறதுனு தெரியாம இருந்தன் . இந்த ஒரு விஷயம் போதும்டா.  சரி நீ சீக்கிரம் பொன்னும் பையனும் இருக்கர இடத்த விசாரிக்க சொல்லு. எங்க இருக்காங்கனு தெரிஞ்சதும் முத தகவல் எனக்கு கொடு. அவங்கள என்னா பண்றதுனு நான் சொல்றன் .

இப்போது வீட்டினுள் நுளைந்து ராஜமாணிக்கத்திற்கு அறிவுரை கூறுவது போல் நஞ்சை அவர் நெஞ்சில் விதைத்தார்.

மறுபக்கம் .

சந்துரு , நான் என் அப்பாகிட்ட பேசனும்டா.

ஏய் என்னடி சொல்ற?

ப்ளீஷ் நான் அப்பாகிட்ட பேசனும் . அவர் என்மேல வச்சுருந்த நம்பிக்கையெலாம் ஒடச்சுட்டன் . அவர் மனச ஒடச்சுட்டன் . அவர் வார்த்தைகள ஒடச்சுட்டன் . அவர்கிட்ட பேசனும்டா , அழுதுகொன்டே கூறினால்

என்னா செய்வதறியாமல் இருந்தான் சந்துரு .

சரி நீ பேசு. பட் நாம இருக்ர இடத்த மட்டும் சொல்லாத மகிழ்

இல்ல இல்ல , சொல்லமாட்டன் சொல்லமாட்டன் , என்று சற்று உற்சாக குறளோடு செல்போனை பிடுங்கிகொன்டு ஓடினால்.

மறுமுனையில்

பலரது வார்த்தைகளை கேட்கமுடியாமல் தவித்துகொன்டிருந்தார் ராஜமாணிக்கம்

செல்போன் அடித்தது. அவரின் மனைவி எடுத்தார்.

ஐலோ

ஐலோ அம்மா அம்மா நான் மகிழ் பேசரன்மா

அடியே சண்டாலி பாவி எங்கடி இருக்க , ஏண்டி இப்படி பண்ண ?

அம்மா என்ன மன்னிச்சுருமா , அம்மா அப்பாகிட்ட போன குடுமா ப்ளீஷ்மா.

அவர் இப்போ பேசர நிலமையிலாடி இருக்காரு ? இங்க வந்து ஒருநிமிஷம் உங்க அப்பா முகத்த பாருடி , எவனவனோ வந்து பேசிட்டுபோறான்டி.

அம்மா ப்ளீஷ்மா அப்பாகிட்ட போன குடுமா .

ம் இரு தரன்.

ராஜமாணிக்கத்திடம் மெதுவாக சென்று காதினுள் விஷயத்தை சொன்னார்.

போனை வாங்கிகொன்டு வீட்டின் பின்பக்கம் சென்றார்

மகிழ் நல்லாயிருக்கியாதா ?

அப்பா என்ன மன்னிசுருங்கபா.

சாப்டியாமா ? பசியோட இருக்காதமா உடம்பு கெட்டுபோய்ரும் .

அப்பா ப்ளீஷ்பா இந்த மாதிரிலாம் பேசாதிங்கபா. என்ன திட்டுங்கபா எதாவது திட்டுங்கபா.

எப்படிமா உன்ன திட்றது ? இது வரைக்கும் உன்ன திட்டனதுஇல்லமா இனிமேலும் திட்டபோறதுல்லமா.

மகிழு நீ எங்கமா இருக்க ?

கன்னியாகுமரிபா

அப்பாக்கு உன்ன பாக்கனும் போல இருக்குடா
அவள் அட்ரஸ் சொன்னால்

சரிமா சரி நீ பத்தரமா இரு .

போன் துண்டிக்கபட்டது. ராஜாவிற்கு இப்போது சற்று கோபம் முகத்தில் காணபட்டது.

யாருக்கும் சொல்லாமல் பேருந்துநிலையத்திற்கு சென்று பஸ் பிடித்தார் . கன்னியாகுமரி .

அவள் கூறிய ஊருக்கு வந்து சேர்ந்தார் . அங்கிறுந்து சரியாக ஒன்றறை கிலோமீட்டர் தூரத்தில் அந்த வீடிருந்தது .

காலிங்பெல் அடித்தார்

மகிழினி ஃப்ரெஷாகிருந்தால் . நேற்றைய அழுகையில் சற்று கன்னம் கூடியிருந்தது.

அப்பா ???? நீங்க எப்படி

உன்ன பாக்கனும்னு சொன்னன்ல

அப்பா இவருதான் சந்துரு.

ம் தெரியும் தம்பிய ஏற்கனவே பாத்துருக்கன் . நீ கோயமுத்தூர்ல இருக்கும் போது நீ தங்கியுருந்த வீட்டுக்கு எதுதாப்புள தம்பி தங்கியிருந்தாரு . அடிக்கடி உன்ன எட்டிபாப்பாபுல

சார் சாரி சார் எங்கள மன்னிசுருங்க.

அட எதுக்குபா இதெலாம்? மகிழ் திருவிழாக்கு வந்தப்பவே சொன்னா , ‘ நான் ஒருத்தர லவ் பண்றன் கல்யாணம் பண்ணிவைங்கனு , நான் அப்பவே அவ சொன்னத கேட்டுருந்தா இவ்ளோ தூரம் வந்துருக்குமா.

சார் நீங்க சொல்றத கேட்கும் போது சந்தோஷமா இருக்கு .இருந்தாலும் நாங்க ஓடிவந்ததும் தப்புதான் .எங்கள மன்னிசுருங்க

ஆமா அப்பா எங்கள மன்னிசுருங்க

‘சரிமா மன்னிச்சுருரன் .மகிழ் நான் உன்ட்ட தனியா பேசனும்மா ’ . சந்துரு தற்போது சற்று வித்தியாசமாக அவரை பார்த்தான் .

தம்பி பயப்படாதிங்க இவ மனச மாத்தி உங்ககிட்ட இருந்து கூட்டிடெலாம் போய்ற மாட்டன்.

ஐயோ சார் நான் அப்படிலாம் எதும் நினைக்கல .நீங்க தாராளமா பேசலாம்

அவரும் மகிழினியும் அருகிலிருந்த ரூமிற்கு சென்றனர்

ஒருமணிநேரத்திற்குமேலாக சென்றவர்கள் திரும்பவில்லை .
சந்துருவிற்கு குழப்பங்கள் பயங்களும் காற்றை போல் சூழ்ந்தன .

ரூமின் கதவு உள்பக்கமாக தாளிடபட்டிருந்தன.

தன் நண்பனிற்கு போன் செய்தான் ‘ மச்சி பிரபா வீட்டுக்கு வாடா ‘ உன்ட்ட முக்கியமா ஒரு விஷயம் சொல்லனும்

வீட்டிற்கு வந்தவனிடம் நடந்ததை கூற , அவனும் சந்துருவும் கதவை மாறி மாறி இடிக்க . கதவு திறந்தது.

கே.கு.கா கட்சி தலைவருக்கு விஷயம் தெரிந்தது . ‘’ நான் நினைச்ச மாதிரியே நடந்துருச்சு .இப்படிலாம் நடக்கும்னுதான்டா அந்த ராஜாவுக்கே தெரியாம உன்ன , அவன ஃபாளோ பண்ண சொன்னன் . இப்ப நீ என்னா பண்றனா அந்த பசங்க இரண்டு பேரையும் போட்று . போட்டுட்டு நம்ம பசங்கல ஒருத்தன போலீஷ்ஸ்டேஷன்ல ‘ சார்  அந்த சந்துரு பையனும் எங்க பொன்னும் இரண்டு பேரும் லவ் பண்ணாங்க . ஆனா அவங்க ஜாதி கொஞ்சம் பெருசு ,நாங்க கொஞ்சம் கீழ . அதனால அந்த சந்துரு பையனோட ஃப்ரென்ட வச்சு அவங்க அப்பா  ,எங்க ராஜா அண்ணனயும் மகிழ் பாப்பாவையும் கொல பண்ணிட்டான் சார் , அந்த உணர்ச்சியலதான் நான் அவங்கள கொன்னுட்டன் சார் னு ‘’ சொல்லி சர்ரன்டர் ஆக சொல்லிரு .

அப்படியே தமிழ்நாட்ல இருக்குர நம்ம கட்சி காரங்க எல்லாரையும் கலவரம்பண்ண சொல்லு . அந்த ஆளுங்கட்சில பூகம்பம் வெடிக்கனும் . அப்பறம் நம்ம இன்ஷ்பெக்டர அங்க வரசொல்றன் ,எதாவது தடயம் கெடச்சுரபோகுது .

கதவு திறந்ததும் உள்ளே மகிழினி கத்தியால் குத்தபட்டு இரத்த்தால் நினைந்திருந்தால் . அருகில் அவர் அப்பா கழுத்து அறுக்கபட்டிருந்தது. அவர் கையில் கத்தி .

இருவரும் உறைந்திருந்தனர் . மகிழினியை பார்த்து விம்மிவிம்மி அழுதுகொன்டிருந்தான் சந்துரு . மிரண்டிருந்த  பிரபா திடீரென கீழே சரிய , அவன் பின்னே இருவர் கத்தியுடன் நின்றுகொன்டிருந்தார்கள் .

சந்துரு உதாசிப்பதற்குள் அவன் முதுகிலும் அவன் வயிற்றிலும் கத்திகள் இறக்கப்பட்டன .

சந்துரு அப்படியே சரிந்தான்  , இறக்கும் தருவாயில் அவன் கைகள் மகிழினியின் கைகளை பிடித்திருந்தன .

சார் ஐம் ஃப்ரம் சேலம் பி2 போலீஷ்ஸ்டேசன் . இந்த கொலை கேஷூல சம்மந்தபட்ட மகிழினியும் , ராஜமாணிக்கமும் எங்க ஸ்டேசனுக்கு கீழதான் வர்ராங்க . சோ அவங்களோட கொலை சம்மந்தபட்ட டீட்டெய்ல்ஷ் வேணும் .இந்த வீட்ல எதாவது தடயம் கிடச்சுதா ?

இல்ல சார் .எல்லாம் தெளிவான மற்றும் அராஜ்சகமான கொலைகள் . கண்டிப்பா ஜாதி வெறிதான் . கொலபண்ணவனே வந்து ஸ்டேசன்ல சர்ரன்டர் ஆகிட்டான் .

சரி நானும் ஒருதடவ செக் பண்ணிக்ரன், இஃப் யூ கிவ் மி எ பர்மிஷன் ?

அஃப்கோர்ஷ்

அந்த இன்ஷ்பெக்டர் கோவிந்தன் கொலை நடந்த அறைமுழுவதும் அலசினார் . எதும்கிட்டவில்லை . அறையிலிருந்து திரும்பியபோது அங்கே ஒரு ஷூவினுள் பேப்பர் போலிருந்தது. அதை எடுத்து படிக்க ஆரமித்தார் .


அந்த பேப்பரினுள்

ஐயா நான் ராஜமாணுக்கம் . என் பொன்னு மகிழினி . குழந்த மாதிரி பாத்துக்கிட்டங்க . அவ நினைச்சபடி நான் நடந்துகிட்டன் . அவ மனசு மாதிரி நான் இருந்தன் . அவ கேட்டது நினைச்சது எலாம் வாங்கிகொடுத்தன் .ஆனா அவ இப்படி பண்ணத , என்னால ஒத்துக்கமுடில . இவ்ளோ நாள் என்ன மட்டுமே ஈரோவா பாத்தவ , இன்னைக்கு யாரோ ஒருவனுக்கு தன் மனச கொடுக்ரனு சொல்றா . என்னால தாங்கமுடில  .எல்லாரும் எதேதோ அவன் வேற ஜாதி, வேற குலம், வேற குளோத்தரம், வேற ஜாதகம்னு, சொல்றாங்க ,ஆனா  எனக்கு அதெலாம் வேணாங்க . இந்த அப்பாவே வேணாம்னு தூக்கியெருஞ்சுட்டு போற அளவுக்கு நான் ஒரு நல்ல அப்பாவா நடந்துக்களயா  ? எல்லாமே நல்லாபாத்துகிட்ட எனக்கு ,அவளுக்கு ஒரு நல்ல துணைய தேடி தரமுடியாதா ? அந்த ஒரு உணர்வு , வெறுப்பு , என்ன இப்போ கொலை செய்ய தூண்டிருக்கு . இனி என்னாலயும் இந்த உலகத்துல இருக்கமுடியாது . அதனால என் சாவுக்கும் , என் மகள் மகிழினியின் சாவிற்கும் நானே காரணம் .
                                 இப்படிக்கு
                                 ராஜமாணிக்கம்


படித்துமுடித்த இன்ஷ்பெக்டர் கோவிந்தன் அந்த லெட்டரை , தூள் தூளாக கிழித்தெரிந்தார்


இன்றைய முக்கிய செய்திகள்
‘வேற்று ஜாதியின் காரணமாக காதலர்கள் அவர்கள் உறவினர்களும் குமரி மாவட்டத்தில் கொடூரகொலை . சம்மந்தபட்ட ஜாதிபிரிவினர்கள் தமிழ்நாடு முழுவதும் வன்முறையில் ஈடுபட்டனர் . இதனால் மக்கள் கடும் அச்சத்திலும் பீதியிலும் உள்ளனர்’



                              முற்றும்

Sunday, 27 March 2016

முருகதாஸ் - இயக்குனர்

ஏ.ஆர் முருகதாஸ் – இயக்குனர்



இன்று இந்தியாவின் தலைசிறந்த இயக்குனர்கள் என்று பட்டியல் எடுத்தால் நிச்சயம் ஏ.ஆர் முருகதாஸின் பெயர் அதில் இடம்பெறும் . என் முதல் இயக்குனர் விமர்சனம் முருகதாஸை பற்றி எழுதகாரணம் ‘தமிழ் சினிமா ரசிகர்கனின் பார்வையும் , விமர்சகனின் பார்வையும் நன்கு தெரிந்துவைத்தவர் என்றால் அது இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸே . அதுமட்டுமின்றி இயக்குனராக வேண்டுமென்று விரும்பும் இன்றைய இளைஞர்கள் பலரின் ரோல்மாடலாக இவர் உள்ள காரணம் ஏன் தெரியுமா?

கள்ளக்குருச்சியில் சாதாரண ஏழைக்குடும்பத்தில் பிறந்த இவர் தன் பள்ளிபடிப்பினை அரசு பள்ளியிலே முடித்தார். அனைத்து இளைஞர்களுக்கும் தன் வாழ்க்கையின் கனவின் பிறப்பிடம்  கல்லூரி காலமே. அதே போல்தான் இவரின் இயக்குனராக வேண்டுமென்ற கனவும் கல்லூரியிலே பிறந்தது.  மேல்படிப்பிற்காக திருச்சி பிஷ்ஷோப் கல்லூரியில் தன்  பி.ஏ தமிழை படிக்கும் காலத்தில் ‘மிமிக்ரி , ஜோக்ஸ் ( ஸ்கெட்ச் ஜோக்ஷில் வல்லவர் ) , ட்ராயிங் , மற்றும் பத்திரிக்கைகளுக்கு கதையெழுதுதல்’ ஆகியவை செய்துவந்தார் . அப்போதுதான் இயக்குனராகவேண்டுமென்ற கனவு இவரின் மூளைக்கு ஆடராக கிடைத்தது. இதனால் தன் சொந்த ஊருக்கு வரும்போதெலாம்  வாரம் 7 படமாவது பார்த்துவிடுவார்.

பி.ஏ முடித்ததும் டைரக்ஷன் டிபார்ட்மென்டில் பயில்வதற்காக சென்னை ‘மெட்ராஷ் ஃபிலிம் இன்ஷ்ட்டியூட்டில்’ அப்பலை செய்தார். ஆனால் அங்கே அவருக்கு சீட் கிடைக்கவில்லை. இருந்தும் துவளாமல்  , ஒரு பக்கம் சிறுகதைகளை எழுதி பத்திரிக்கைக்கு அனுப்பிகொன்டேயிருந்தார். அவரின் சிறுகதைகள் பத்திரிக்கைகளில் பிரசுரமானது. பின் தன் வாழ்வு சினிமாவிற்காகதான் என்றுனர்ந்தவர் தனது 20வது வயதில் ஒரு வழியாக சொந்தஊரை விட்டுவிட்டு சென்னை ஓடிவந்தார். கஷ்டமும் இவரின் கூடவே பயணித்தது.


துணை இயக்குனர்


தமிழ் சினிமாவில் ஒருவருடன் துணைஇயக்குனராக சேரவேண்டுமென்றால் ஒருசில தகுதிபகுதிகளை இயக்குனர்கள் பார்ப்பார்கள் , இவரு்ககும் அதுவே நடந்தது . ஆனால் முருகதாஸ் ஏற்கனவே தான் எழுதிய சிறுகதைகள் பத்திரிக்கையில் பிரசுரம் ஆகியதை காட்டி , பி. கலைமணியிடம் ‘மதுரை மீனாட்சி’ படத்திற்கு துணைஎழுத்தாளரானார் . இவர் முதன் முதலாக துணையிக்குனராக பணியாற்றிய படம் இரச்சகன் , அதே சமயம் தெலுங்கு படத்திற்கும் திரைக்கதை எழுதும் பொருப்பில் இருந்தார் அதன் பிறகு .எஸ்.ஜே சூர்யாவிடம் '1997ல் குஷி' படத்தின் போது துணைஇயக்குனராக சேர்ந்தார். முருகதாஸ் . அவரிடம் சேர்ந்த பிறகுதான் இவரின் வாழ்க்கையே மாறிபோனது. 

( முருகதாஸ் பட்ட கஷ்டங்கள் கொஞ்சமல்ல , ஒரு துணைஇயக்குனருக்கு தயாரிப்பாளர் பேட்டா தருவதே ஆச்சரியமென்பது தங்களுக்கு நன்றாக தெரிந்ததே . அதனால் இவர் என்னா செய்தார் தெரியுமா?  சென்னையில் ஒரு சலவை தொழிற்சாலையில் ஒரு ரூபாய்க்கு ஒரு துணி என்ற கணக்கில் துணி துவைத்துகொண்டிருந்தார் )

முருகதாஸிடம் இருந்த மிகபெரிய திறமையை கண்ட எஸ்.ஜே சூர்யா நடிகர் அஜீத்குமாரிடம் சிபாரிசு செய்தார் ( ஒரு ஏழை கலைஞனின் கஷ்டம் இன்னொரு கலைஞனனுக்குதான் தெரியும் )   .




நடிகர் அஜூத்குமார்  கதை கூற ஏ ஆர் முருகதாஸை அழைத்திருந்தார் . முருகதாஸூம் 45 நிமிடங்கள் கதையும் அதன் திரைக்கதையும் கூற , மனிதருக்கு அந்த கதை பிடித்துவிட்டது . அதுதான் 2001ஆம் ஆண்டு மிகபெரிய வெற்றியை பெற்ற ‘ தீனா’ திரைப்படம் . நடிகர் அஜூத்குமார் முருகதாஸிற்கு ‘இயக்குனர்’ என்னும் பட்டத்தை வழங்கினார் . முருகதாஸ் அஜீத்குமாருக்கு ‘தல’ என்னும் பட்டத்தை வழங்கினார் .

இதன் பிறகுதான் முருகதாஸ் தன் நேர்த்தியான நெத்தியடியான திரைபடங்களை எடுக்க ஆரமித்தார் .

முருகதாஸின் பலமும் பலவீனமும் மற்றும் அவரின் திரைப்பட ஃபார்முளாவையும் அடுத்தவாரம் பார்ப்போம். 


பயணம் தொடரும்…

Tuesday, 22 March 2016

இயக்குனர்



தவறுகள் ஏதேனும் இருப்பின் ( எங்கிட்ட அதற்கு பஞ்சமே இல்ல )


இன்றுமுதல் இனி வாரம் ஒரு இயக்குனரை பற்றி விமர்சனம் செய்யபடும். நீங்கள் ஒத்தளித்தால் விவாதமும் மேற்கொள்ளலாம். ஏனென்றால் இயக்குனர் ஆகவேண்டுமென்று கனவுகளோடும் நினைவுகளோடும் பல இளைஞர்கள் கோடம்பாக்கத்திலும் , பல சூழ்நிலைகளாலும் , பணபிரச்சனைகளாலும் கோடம்பாக்கத்திற்கு செல்லமுடியாமல் தவிக்கும் இளைஞர்களும் ஏறாலம். ஒரு கலைஞன்தான் திரைபடத்துறையில் இருக்க வேண்டுமென்ற காலங்கள் கடலேறிவிட்டது. பணமிருந்தால் இயக்குனர் , சிபாரிசு செய்ய பெரிய அரசியல்வாதியிருந்தால் இயக்குனர் , ஒரு குறும்படம் எடுத்தாலும் இன்று இயக்குனரே. இவர்களெலாம் அதிர்ஷ்டசாலிகள் மட்டுமே. உண்மையில் எவனொருவனுக்கு திறமையும் , முயற்சியும் ( பல கஷ்டங்களை தாங்கும் இடிதாங்கியாகவும் ) இருக்கின்றதோ அவனே இயக்குனராக தன்னை நிலைநிறுத்தமுடியும்.

இயக்குனராகவேண்டுமென்றால் என்னா செய்யவேண்டும்?

குறும்படங்களை எடுப்பது. இது எளிதான விடயமல்ல. 10நிமிடத்தில் அனைத்து தரப்பு திரையுலகினறையும் கவரவேண்டும். அப்படியே கவர்ந்தாலும் ஒரு தயாரிப்பாளரை சந்தித்து ஃப்யூச்சர் பிலிமிற்கு கதை கூற , ஒரு மாட்டைவிட அதிகமாக தவுடு திங்கவேண்டும். அதையும் ,தாண்டி இயக்குனரை சந்தித்தால் , அவர் கூறுவது, ‘சிறிய பட்சட்டில் படமெடுக்கவேண்டும் , அதிக பக்கட்டில் லாபம் தரவேண்டும்’.  இப்படியொரு கதையிருந்தால் சொல்லு’ என்பார். நீங்களும் ஆர்வகோலாரில் கிடைத்தவாய்ப்பை பயன்படுத்தவேண்டுமென்று , ‘இருக்கு சார்’ என்று கூறி, இல்லாத கதையொன்றை கூறி , கடைசியில் அந்த படத்தை எடுக்க தயாரிப்பாளரிடம் பணமில்லாமல் போனால் , அவ்வளவுதான் . உங்கள் கனவுகள் பகல் கனவாக மாறிவிடும். இன்று செய்திதாளை எடுத்துபாருங்கள். 30 பட போஸ்டர் இருக்கும். அதில் 20 படம் பல வருடங்கள் போஸ்டராகவேதான் இருக்கும்.


  
ஒரு இயக்குனருக்கு வாழ்க்கையளிப்பது , அவனுடைய முதல் படமே.அதனால் நீங்கள் ‘தயார்செய்த கதைகளில் இந்த கதைதான் அருமையாக வித்தியாசமாக வருமென்று நினைத்தால் அந்த கதையை கூறிவிடுங்கள். ( கையில் வெறும் ஒரு கதை மட்டும் வைத்திருக்க கூடாது, 4 ,5 கதைகளை தயார் செய்துகொன்டு செல்லவும். அப்போதுதான் தயாரிப்பாளருக்கு ஒரு கதைபிடிக்கவில்லையென்றாலும் , மற்ற மூன்றில் ஒன்று பிடிக்கலாம், அப்படி உருவான படங்கள் பல உள்ளது, உதாரணமாக ‘’மங்காத்தா, மாரி’’ )

இப்படி நான் குறும்படம் எடுத்து பெறும்பாடு பட விரும்பவில்லையென்று எண்ணுவோர்களுக்கு, இன்னொரு வாய்ப்புள்ளது . அதுதான் ஒரு இயக்குனரிடம் துணை இயக்குனராக பணியாற்றுவது. இதும் எளிதான விடயம் அல்ல. தயாரிப்பாளரின் தேர்வு போலவே இதுவும் இருக்கும். பல முறை இயக்குனரின் வீட்டின் முன்பு காத்திருக்கவேண்டும் . அவரின் வீட்டில் ராஜாவாக வசிக்கும் நாய்க்கு பிஸ்கெட் வாங்கிசெல்லவேண்டும் ( பிஸ்கெட் மட்டும் வாங்கி செல்லவில்லையென்றால் ஒரு மாதம் பெட் ரெஷ்ட் உறுதி ). அதுமட்டுமின்றி சூடு , சொரனை , வெட்கம் , ஞானம் , மடல், கோபம் , வெறுப்பு , இப்படி தன்னிடமுள்ள அனைத்தையும் துறக்கும் ஒரு துறவியாக இருக்கவேண்டும்.

அதேபோல் தயாரிப்பாளர் மற்றும் சினிமாவில் பெரிய தலைகளின் சிபாரிசு மூலம் துணைஇயக்குனராக ஆகி விடலாம் என்று எண்ணும் நண்பர்களுக்கு ஒரு உதாரணம் . ஒருமுறை இயக்குனர் பாலாவிடம் சிவனேஷ்வர் என்பவரை துணைஇயக்குனராக சேர்த்துகொள்ளவுமென்று ஒரு பெரிய தலை பாலாவிடம் சிபாரிசு செய்துள்ளது. அதற்கு அவர் செய்த காரியம் என்னா தெரியுமா ? பாலாவும் அவரை துணைஇயக்குனராகு சேர்த்துகொன்டார் . ஆனால் அவரை தினமும் ஆபிஸ்லயே உட்காரவைத்துவிட்டு சூட்டிங் சென்றுவிடுவார் . இப்படியே நாட்கள் உருண்டோடியது.  ஒரு நாள் இயக்குனர் பாலா , ஆபிஸில் அமர்ந்திருந்த சிவனேஷ்வரை பார்த்து ஒரே ஒரு கேள்விதான் கேட்டார் , ‘தம்பி நீ யாரு ? இங்க ஏன் உட்காந்திருக்க ? இதனால் அவன் தன் சினிமா வாழ்க்கையவே வெறுத்துவிட்டான்.. சிபாரிசு மூலம் செல்லும் அனைவருக்கும் இதான் நிலைமை.

இதையெலாம் மீறி தன் உழைப்பாளே ஒரு இயக்குனரிடம் துணைஇயக்குனராக சேர்ந்துவிட்டால் , சினிமா என்னும் மாயஉலகில் உங்கள் திரைபடங்களை எப்படி உருவாக்குவது என்பதை தெளிவாக கற்றுகொள்ளாலாம். ஆனால் இது ஒரு கோர்ஷ் படிப்பது போலவே. ஒரு கோர்ஷை முடித்துவிட்டால் அதன் பெயரை ரிசியூமில் சேர்ப்பது போலதான். தயாரிப்பாளரிடம் ‘நான் இவரிடம் துணைஇயக்குனராக பணியாற்றியுள்ளேன் ( பெரிய இயக்குனர் என்றால் தாராலாமாக கூறலாம், தயாரிப்பாளருக்கு உங்கள் மீது நம்பிக்கை வந்துவிடும் , ஆனால் பெயரே தெரியாத இயக்குனர் என்றால், முடிந்தஅளவு, தயாரிப்பாளர் உங்களை தட்டிகளிக்கவே பார்ப்பார் ) . எதுவாக இருந்தாலும் தயாரிப்பாளரை சந்திக்கும்போது மண்டையில் அதிக அளவு சரக்கோடு ( கதை ) செல்லவும்.

அப்படி முதல் படம் மட்டும் வெற்றிபெற்றுவிட்டால் ‘ சினிமாவை ஒரு சுற்று சுற்றலாம் ‘ .. பணத்தில் மிதக்கலாம். இதோடு நிறுத்திகொள்கிறேன்
இது வெறும் அறிமுகமே.  முன்னுரை மட்டுமே கூறியுள்ளேன்.



சரி அடுத்தவாரம் முதல் ,இயக்குனர்களை பற்றி பார்ப்போம்…என் முதல் விமர்சனம் இயக்குனர் ‘ஏ.ஆர். முருகதாஸை’ பற்றி…காத்திருங்கள் , கற்றுகொள்ளுங்கள்

புகழ் - திரைவிமர்சனம்


முதலில் இந்த படத்திற்கு செல்ல மிக முக்கியமான விடயம்….இன்று நான் பயலும் கல்லூரியில் பயோ கெமிஷ்ட்ரி அஷெய்ன்மென்ட் சப்மிட் பன்னனும்னு சொன்னாங்க (நம்ப முடியாது தான் ஆனால் சொல்வதெலாம் நிஜம்) , நானோ அஷெய்ன்மென்ட் நோட்டை மிக மிக சுத்தமாக வைத்திருந்தேன். அதனால் நானும் என் நன்பனும் இன்று கல்லூரியை கட் அடித்துவிட்டு புகழ் படத்திற்கு சென்றோம். படம் 11 மணிக்கு ஆரமித்துவிடுவார்கள் . தியேட்டரில் இரண்டே பேர் தான் அமர்ந்திருந்தனர் (நானும் என் நண்பனும் ) . என் மனதில் ஆச்சரியம் அச்சாகிவிட்டது. நான் இதுவரை பார்த்த படங்கள் ( மொக்க படத்திற்கு கூட 10பேராவது வருவாங்க) குறைந்தது 15 பேராவது இருப்பார்கள். ஆனால் இங்கோ? . சரி படத்தை பற்றி விக்கிபீடியாவில் பார்த்தோம். இயக்குனர் மணிமாறன் , என்றதும் சற்று நம்பிக்கை என்னும் கரு மனதில் உருவானது. ( ஜெய் நடிப்பில் தற்போது வெளிவந்த எந்த படமும் சரியாக அல்ல, முழுமையாகவே தோழ்வி கடலில் மூழ்கிவிட்டது ). படம் ஆரமித்ததும் ஆருதலாக 3 பேர் வந்தனர்,  மொத்தம் 4 பேருடன் புகழ் படம் ஆரமித்தது.

கதையும் அதன் பயணமும்

ஒரு விளையாட்டு மைதானத்தை ஆக்கிரமித்து அதில் பில்டிங் கட்ட நினைக்கும் அரசியல்வாதிகளுக்கும், அதை எதிர்கும் ஜெய் மற்றும் அவரின் நண்பர்களுக்கும் இடையே நடக்கும் சுவாரசியங்களான சம்பவங்களே இந்த புகழ்.
சமுதாயத்தில் நடக்கும் தவறுகளை எதிர்க்கும் புகழாக வருகிறார் ஜெய். அவரின் பரம்பரை மற்றும் அந்த ஊரை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் அனைத்து பசங்களும் விளையாடும் ஒரு விளையாட்டு மைதானம் உள்ளது. அந்த மைதானத்தின்நிலத்தடியில் நல்லநீர் இருப்பதால் , அந்த மைதானத்தை ஆக்கரிமித்து அதில் பில்டிங் கட்ட நினைப்பார் கல்வித்துறை அமைச்சரின் மருமகன் . இறுதியில் அந்த மைதானத்தில் பில்டிங் கட்டினார்களா, அதை எப்படி ஜெய் தடுக்கிறார் என்பதை அரசியல் சூட்சமங்களோடு படத்தின் திரைக்கதையை நகர்த்தியுள்ளார் இயக்குனர் மணிமாறன்.

எழுத்தும் இயக்கமும்


மணிமாறன்


உதயம் NH4  என்ற திரைபடத்தின் மூலம் நல்ல வரவேற்ப்பை பெற்றவர் இயக்குனர் மணிமாறன். இப்போது இவரின் இரண்டாவது படம்தான் புகழ் .
முதலில் ‘பொடியன்’ என்ற பெயரில்தான் இப்படம் 2013ல் ஆரமிக்கபட்டது. ஆனால் ஒருசில பல காரணங்களால் படத்தின் தலைப்பு மாற, அதிலிருந்து மணிமாறனுக்கு மூன்றறை வருட சனி ஆரமித்தது . தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தயாரிப்பதாக இருந்த இப்படம் தமிழில் மட்டும்தான் தயாரானாது. தமிழில் ஜெய் , பிரியா ஆனந்த் மற்றும் தெலுகில் சித்தார்த் ஹன்சிகா நடிப்பதாக இருந்தது ( தெலுங்கில் எடுக்கவில்லை ). ஆனால் தமிழில் பல காரணங்களால் ,ஹீரோயினாக  திரிஷா மற்றும் இசையமைப்பாளராக அனிரூத்தை மாற்ற, அவர்களின் கால்ஷீட் குளறுபிடியால் , அவர்களுக்கு பதிலாக இறுதியில் சுரபி மற்றும் இசையமைப்பாளராக விவேக்-மெர்வினை தேர்வுசெய்து , ஒரு வருடத்திற்கு பிறகு 2014 இறுதியில் ஷூட்டிங் ஆரமித்தார் இயக்குனர் மணிமாறன். படத்தை 8 மாதங்களில் முழு படபிடிப்பு வேளைகள் மற்றும் போஷ்ட்புரொடக்ஷன் வேளைகளை முடித்தார். ஆனால் தயாரிப்பாளர் தரப்பில் கடன் பிரச்சனை இருந்ததால் 4 மாதங்கள் தள்ளி , தற்போது கடந்த வெள்ளியன்று வெளியானது.

அடங்கப்பா..பிரச்சனையே இவ்ளோவா? ஆமாம்.

 சரி படத்திற்கு வருவோம். ‘மெட்ராஷ்’ படத்தின் கதைக்கு வேற கலர் பெயின்ட் அடிச்சா எப்படி இருக்குமோ அப்படியொரு திரைக்கதையை யதார்த்தமாக கொண்டுசென்றுள்ளார் அதற்காக இவரை பாராட்டலாம்.   அதுவும் ‘ ஆத்து மணல அள்ளி அள்ளி விவசாயத்த அழிச்சீங்க, சுத்திஇருக்கர மலையெலாம் வெடிவச்சு தகர்த்து இயற்கைய அழிக்கிறீங்க’ என்னும் வசனத்திற்கு ஒரு சல்யூட்.  பல படங்களில் அரசியல்வாதிகளின் நிஜமுகத்தை பார்த்ததால் இதில் ஒன்றும் வித்தியாசமில்லை, மொத்ததில் இந்த படம் நன்றே

நடிகர் நடிகைகள்


ஜெய்

தனக்கு கொடுத்த கேரக்டரை உள்வாங்கி செய்பவர் ஜெய். யதார்த்தமாக,  நம் பக்கத்துவீட்டில் வாழும் பசங்களில் ஒருத்தராகவே இதில் உள்ளார். காதல் கோபம் நட்பு அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். வாழ்த்துகள்

சுரபி

அழகு அழகு , நல்ல நடிப்பு. ஆனால் எப்போதும் திரைக்கதையை நகர்த்த இயக்குனர்கள் பயன்படுத்தும் காதலியாகவே வருகிறார் .

மற்றவர்கள்

கருணாஷ் சபாஷ். அருமையான உத்வேகமான நடிப்பு. சாதாரண அண்ணணுக்கு வரும் கண்டிப்பும் பாசத்திலும் மிக சிறப்பான நடிப்பு
RJ பாலாஜி சிரிக்கவைக்கவா வருகிறார்? அப்படியொன்றும் தெரியவில்லை. சிரிப்பே வரவில்லை. பெட்டர் லக் நெக்ஷ்ட் டைம்.
மற்றபடி அரசியல்வாதியாக நடித்தவர் , ஜெயின் நண்பர்களாக வளம்வருபவர்கள் அனைவரும் கச்சிதம்

ஒளிப்பதிவாளர்


R வேல்ராஜ்

படத்தின் பலமாக செயல்பட்டுள்ளார் . யதார்த்தமான கதை என்பதால் , தன் பணியை சிறப்பாக செய்துள்ளார்.

இசையமைப்பாளர்

விவேக்-மெர்வின்

இவரின் முதல் படம் போன்றே தெரியவில்லை. பாடல்கள் அனைத்தும் தரமாக உள்ளது. பிண்ணனி இசை , படத்தில் ஒன்றிசெல்கிறது. வாழ்த்துக்கள்

மற்றும் படத்தின் எடிட்டரான G.B. வெங்கடேஷ் , நன்றாகவே படத்திற்கு கத்திரி போட்டுள்ளார். இருந்தும் ஒரு ரசிகனாக படம் பார்க்கும் போது பல காட்சிகள் ‘இந்த சீன் படத்திற்கு தேவைதான?’’ என்ற கேள்வயை கேட்கவைக்கின்றது . மணிமாறனிடம் அந்த காட்சிகள் தேவையில்லையென்று சிறிது சிபாரிசு செய்திருக்களாம்

ரசிகன் பார்வை

‘படம் பரவால இன்னொரு தடவ திருட்டு விசிடி ல பாக்ர மாதிரியிருக்கு’.

என் பார்வை

ஒரு யதார்த்தமான படமாக என்னை கவர்ந்தாலும் , ஒரு ரசிகனாக பல காட்சிகள் படத்தில் ஒன்றவில்லை.  மொத்ததில் இந்த 'புகழ்' புகழபடவில்லையென்றாலும் பாராட்டுகள் பெறுவான்.



Wednesday, 16 March 2016

ஆறாதுசினம் - திரைவிமர்சனம்

சரியாக சொல்லவேண்டுமென்றால் படம் வெளியாகி இதோடு 21 நாட்களாகிவிட்டது. முதலில் எப்படி விமர்சனம் எழுதவேண்டுமென்று எனக்கு சரியாக தெரியாது. இப்போதும் ஒரு ரசிகனாகதான் எனக்கு என்னா தோணுகின்றதோ அதை கிறுக்கிகொன்டிருக்கின்றேன் . மேலும் என்னை பொருத்தமட்டில் வெறும் படத்தை பற்றி மட்டும் விமர்சிப்பது மட்டுமில்லாமல், அதில் பணிபுரிந்த அனைவரை பற்றியும் தனி தனியாக விமர்சிக்கவேண்டும். அப்போதுதான் அவர்களும் நம் கண்ணிற்க்கு வந்துசெல்வார்கள் . என் எழுத்துகளில் தவறேதேனும் ( தவறுகளுக்கு என்னிடம் பஞ்சமில்லை) இருப்பின் தயவுசெய்து சுட்டிக்காட்டவும் .

 இறுதிச்சுற்று படத்திற்கு பிறகு விமர்சனம் எழுதவேண்டும் என்று தோன்றிய படங்களின் வரிசையில் முதலிடம் இந்த ஆறாது சினம் படத்திற்கே அளிப்பேன் . ஏனென்றால் ஜனவரி மாதம் வரை ஆறாது சினம் படத்தை பற்றி அவ்வளவு பெரிய அபிப்பராயம் எனக்கு கிடையாது. ஒரு முறை ப்ரௌஸிங் சென்டர் சென்ற போது இதன் ட்ரைலரை டவுன்லோட் செய்து வீட்டிற்கு வந்து பார்த்தேன் . அந்த 1.56 நிமிடங்களே என்னை தியேட்டருக்கு, 2 மணி நேரம் பார்க்க இழுத்துச்சென்றது. அதுமட்டுமின்றி நடிகர் அருள்நிதி , இயக்குனர் அறிவழகன் என்றதும் , படம் வெளியான முதல்நாளே தியேட்டரில் முதல் ஆளாக (ஆப்பரேட்டர் கூட வரவில்லை) டிக்கெட் எடுத்து உள்ளே சென்றேன்

கதையும் அதன் பயணமும்

வெவ்வேறு இடங்களில் நடக்கும் கொலைகள், அதுவும் ஒரே மாதிரியான கொலைகள், இவற்றை யார் செய்தார் ? எதற்கு செய்தார்? இதான் இந்த படத்தின் கதை கரு.

முதலில் ரௌடிகளை என்கவுன்டர் செய்யும் போலீஸ் அதிகாரியாக அருள்நிதி வருகிறார். ஒருசில அரசியல் காரணங்கள் அதில் பிரபல ரௌடியை அருள்நிதியால் என்கவுன்டர் செய்யமுடியாமல் போகிறது. அந்த என்கவுன்டர் ஆப்ரேஷனின் போது எதிர்பாராத விதமாக அந்த ரௌடியின் மனைவி சுடபடுகிறார். இதனால் அருள்நிதியின் மனைவியையும், குழந்தையையும் அந்த ரௌடி கொன்றுவிடுகிறான். இதனால் மனமுடைந்த அருள்நிதி குடியிலே குடியிருக்கிறார் . அந்த சமயத்தில் தொடர்ந்து இரண்டு கொலைகள் தமிழ்நாட்டில் அரங்கேருகிறது. இதனால் உயர் அதிகாரியான ராதாரவி , கொலைசெய்தவர் யாரென்று கண்டுபிடிக்கும் பொறுப்பை அருள்நிதியிடம் ஒப்படைக்கிறார். இறுதியில் யார் கொலைகளை செய்கிறார்? எதற்கு செய்கிறார்? என்பதை த்ரில்லராக குதிரை வேகத்தில் நகரும் தன் திரைக்கதையில் அசத்தலாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் அறிவளகன்.

எழுத்தும் இயக்கமும்


‘ஈரம்’ என்ற ஒரே படத்தின் மூலம் ரசிகர்களையும் விமர்சகர்களையும் எந்தவித குறைகளையுமின்றி பெற்றார் அறிவளகன். இவரின் இரண்டாவது படமான ‘வல்லினமும்  நல்ல பெயரை பெற்றுதந்தது. இந்த இரண்டு படமும் த்ரில்லரை அடிப்படையாக கொன்டது. இப்போது ‘ஆறாது சினம்’ . இந்த படத்திற்கு பிறகு நிச்சயம் இவரின் அடுத்த படங்களுக்கு கண்மூடி கொன்டு தியேட்டருக்கு செல்லலாம் எனும் நம்பிக்கை அளித்துள்ளது. 
மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான ‘தி மெமரிஸ்’ படத்தின் கதையே இந்த ஆறாதுசினம். இதன் திரைக்கதையை பல இடங்களில் தன் எழுத்துக்களால் மாற்றியமைத்து செம்மையாக செதுக்கியுள்ளார் அறிவழகன். உதாரணமாக ,கொலைகளுக்கிடையே உள்ள ஒற்றுமைகளை அருள்நிதி கண்டுபிடிப்பது, வில்லனை நெருங்கும் போது ‘யாராக இருப்பார், யாரு’ என்று ரசிகர்களை பதட்டத்திற்குளும் , படத்திற்குள்ளேயும் செல்லவைக்கிறார். கொலை செய்ய கூறும் காரணமும் ஏற்றுகொள்ளத்தக்கது. அருமையான மற்றும் அட்டகாசமான திரைக்கதை. ஆனால் பிழைகளென்று பார்த்தால் கொஞ்சம் அதிகமே. ‘ரோபோ சங்கரும் , ஐஸ்வர்யா டுட்டாவும் , ரமேஷ் திலக் ஆகிய மூவரும்’ எதற்கு வருகிறார்கள் என்றே தெரியவில்லை. மேலும் அடிக்கடி அருள்நிதியின் மனைவி அவரின் குழந்தையை கொல்லும் காட்சிகள் அவரின் கனவுகளில் வருவது (5-6 முறை வரும்) தேவையில்லாதது. அவர்களின் குடும்ப பாடலும் தேவையில்லை, அதற்கும் கதைக்கும் சமந்தமில்லை. இதை தவிர படத்தில் வேறுகுறையில்லை. அதுவுமில்லாமல் படத்தை 4 மாதங்களிலே முடித்து திரைக்கு கொன்டுவந்துள்ளதே மிகப்பெரிய விடயம்தான்.வாழ்த்துகள் அறிவளகன்

நடிகர்,நடிகைகள்

அருள்நிதி

வம்சம், மௌனகுரு, தகராரு , டிமான்டி காலனி ஆ்கிய மிகவும் தரம் வாய்ந்த படங்களையே அருள்நிதி வழங்கியுள்ளார். இந்த படமும் அதில் முக்கிய இடம் வகிக்குமென்கது சந்தேகமில்லை. குடிகாரராகவும் , குற்றவாளியை கண்டுபிடிக்குமிடங்களிலும் , தன் மனைவி, குழந்தையை பறிகொடுத்த ஒரு மனிதனாகவும் மிக மிக நன்றாக செய்துள்ளார், இதனால் இவரின் அடுத்த படம் என்னாவென்று கூகுளில் தேடுமலவிற்கு இந்த படத்தில் தன் கேரக்ட்டரை உள்வாங்கி செய்துள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஐஸ்வர்யா டுட்டா

ஐஸ்வர்யா ராஜேஷ் மனைவியாக அழகு. ஆனால் படத்தில் 10 நிமிடம்தான் இவரின் பங்கு.

ஐஸ்வர்யா டுட்டா ரிப்போர்ட்டராக வருகிறார். இவரை படத்தில் ஒரே இடத்தில்தான் பயன்படுத்துவார்கள், அதுவும் சொதப்பிவிடும்.

கௌவரவ் நாராயணன்

படத்தின் தலைப்பே ‘ஆறாது சினம்’. வில்லனின் பழிவாங்கும் கோபத்தைதான் தலைப்பாக வைத்துள்ளனர். பலமான .,மிக பலமான கேரக்டர். இவரின் கேரக்டரை படத்தில் பார்த்து தெரிந்துகொல்லுங்கள்

மற்றவர்கள்

ராதாரவி ஜாய்ன்ட் கமிஷ்னராக சரியாக உள்ளார். அருள்நிதியின் அம்மாவாக துளசி சரியான தேர்வு. சார்லி ,ரமேஷ்திலக் மற்றும் ஆதிரா , ஆகியோர் படத்தில் வந்துசெல்ல மட்டுமே பயன்படுத்தபட்டிருக்கின்றனர்.

இசையும்,ஒளிப்பதிவும்

எஸ்.எஸ் தமன்

படத்தின் மிக மிக பெரிய தூணாக உள்ளது இசை. தமனா இது? என்று வாய்பிழந்தவர்கள் (என்னையும் சேர்த்து) அதிகம். அவ்வளவு அருமை .த்ரில்லருக்கு உயிர்கொடுத்திருக்கின்றார். செமத்தியாக ஸ்கோர் செய்துள்ளார். 


அரவிந்த் சிங்

‘டிமான்டி காலனி’ என்ற படத்திற்கு உயிர் கொடுத்தவர் ஒளிப்பதிவாளர் அரவிந்த்சிங். இந்த படத்திற்கும் இவர்தான் உயிர் கொடுத்துள்ளார். படத்தின் ஆரம்ப என்கவுன்டர் சீனிலும் , டைட்டில் கார்ட் ஓடும் இடங்களிலே இவர் யாரென்று காட்டிவிட்டார். பாடல்காட்சியில், அதை  கண்களில் ஒட்டிகொள்ளும் அளவிற்கு இவரின் உழைப்புள்ளது. இயக்குனர் அறிவளகன் கேட்டதைவிட இரண்டு மடங்கு விஷூவலை கொடுத்துள்ளார்.

Sunday, 13 March 2016

பிச்சைக்காரன் - திரைவிமர்சனம்


படத்திற்கு என்றில்லாமல் ஏனோ கெத்திற்காகவும் வித்தியாசமாகவும் படதலைப்பை வைக்கவேண்டும் என்று நினைக்கும் இயக்குனர்கள் மத்தியில் ‘பிச்சைக்காரன்’ என்ற ஒரே வார்த்தையில் திரையுலகையும் , ரசிகர்களையும் வியக்கவைத்தார் படத்தின் இயக்குனர் சசி. முருகதாஸ் போன்ற பல இயக்குனர்களும் நண்பர்கள் தலைப்பை மாற்றசொல்லியும் ‘எனக்கு இந்த தலைப்புதான் வேண்டும், தலைப்பை மாற்றமாட்டேனென்று மனிதன் ஒற்றை காலில் நங்கூரமாக நின்றுள்ளார். படத்தின் மற்றொரு எதிர்பார்ப்பு விஜய் ஆண்டனி. இவர் தேர்ந்தெடுத்து நடித்த ‘நான்’ ‘சலீம்’ ஆகிய இரு படங்களும் வணிகரீதியாகவும், ரசிகர்களிடையும் வெற்றிபெற்றது. இவரின் படங்களுக்கு தனிமார்கெட் உள்ளது. சரி படத்திற்கு வருவோம்.


கதை

பல கோடி பணத்திற்கு சொந்தகாரராக இருக்கின்றார் விஜய் ஆண்டனி. அம்மாதான் உலகமாக வாழ்கிறார். திடீரென ஒரு எதிர்பாராத விபத்தில் அவரின் அம்மா தலையில் அடிபட, கோமா நிலைக்கு சென்றுவிடுகிறார் . இதனால் மனமுடைகின்ற விஜய் ஆண்டனி , அம்மாவிற்கு எல்லா மருத்துவமும் பார்க்கிறார்.ஆனால் எதும் குணபடுத்தவில்லை. ஒரு நாள் ஒரு சம்பவத்தின் போது ஒரு சாமியாரை சந்திக்க நேருடிகிறது. அவர் ‘ உன் அம்மா பிழைக்கவேண்டுமென்றால் நீ உன் பணம் அடையாளம் அனைத்தியும் துறந்து , 48 நாட்கள் பிச்சையெடுக்கவேண்டுமென்று கூறிகிறார். அம்மாவை காப்பாற்ற வேறிவழியில்லாமல் பிச்சையெடுக்கிறார் விஜய் ஆண்டனி.

இதனிடையே விஜய் ஆண்டனியின் மாமா சொத்தை கைபற்ற திட்டமிடுதல், பிச்சையெடுக்குமிடத்தில் அங்கே ஒரு சில பிரச்சனைகள் நடக்கின்றன. இறுதியில் அம்மா கோமாவிலிருந்து வெளிவந்தாரா? பிரச்சனைகளிலிருந்து விடுபட்டாரா என்பதே இந்த ‘பிச்சைக்காரன்’.


கதை செல்லும் பாதை

இயக்குனர் சசி தனக்கேயுரிய பாணியை கையான்டுள்ளார்யதார்த்தமான பிச்சைக்காரர்களின் வாழ்க்கை , காதல் , நகைச்சுவை , என திரைக்கதையை குண்டுகுளியமற்ற , புதிதாக அமைத்த அழகான சாலையில் கதையை பயனித்துள்ளார்படத்தின் பலமே வசனங்கள்இந்த உலகத்தில் பணக்காரன்ஏழைபிச்சைக்காரன் எல்லோருக்கும் ஒரே எதிரி பசி. அதுமட்டுமில்லாமல் நகைச்சுவைகளுக்கு படத்தில் பஞ்சமில்லை. போலீசிடம் விஜய் ஆண்டனி நான் பிச்சையெடுக்ரன் சார் என கூறுவதும், ராயல் பிச்சைக்காரனிடம் அடிவாங்கும் ரௌடிகள் செய்யும் அட்டகாசங்கள் கலகலப்பு. மற்றும் விஜய் ஆண்டனியின் மாமாவும் அவரின் கார் ட்ரைவர் செய்யும் காமெடி சிரிப்பு.

பிச்சைக்கார்களின் வாழ்க்கையை கண்முன் பார்க்கும் நாம் , அவர்களின் வாழ்க்கையை நம் மனத்திற்குள் சிரிக்கவைத்தும் சிந்திக்கவைத்தும் கொன்டுசெல்கிறார் இயக்குனர் சசி.

எழுத்தும் இயக்கமும்

சசி – சொல்லாமலே, ரோஜா கூட்டம் , பூ , டிஷ்யூம் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர் சசி. ‘பிச்சைக்காரன்’ இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொன்டு உருவாக்கபட்ட படமென்று இயக்குனர் சசி கூறியுள்ளார் . அதனால் இந்த படத்திற்கு  திரைக்கதை எழுத ஒரு வருடமாக உழைத்துள்ளார். இறுதியில் இவர் ‘டிஷ்யூம்’ படத்தில் விஜய் ஆண்டனியுடன் பணியாற்றிதால் , அவர்தான் இந்த படத்திற்கு சரியானவர் என்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து படத்தை இய்ககியுள்ளார். கடந்த 2015 ஜனவரி தொடங்கி 11 மாதங்கள் சுமந்து இறிதியில் திரைக்கு ரசிகர்கள் முன் கொன்டுவந்துள்ளார்.
உண்மையான பிச்சைகார்களையும் , பல சூழ்நிலைகளால் பிச்சைக்கார்களாக நடிக்க தள்ளபடும் மனிதர்களையும் திரையில் காட்டியதற்காக ‘ஹேன்ட்ஸ் அப்’ சசி சார்.
வசனம் எழுதியதற்காக வைடூரியங்களால் தான் உங்கள் விரலுக்கு மோதிரம் செய்யவேண்டும். வசனத்தை நான் எழுதி நீங்கள் படிப்பதை விட , படத்தோடு பாருங்கள்.


நடிகர் நடிகைகள்

விஜய் ஆண்டனி

"நான்" மற்றும் "சலீம்" ஆகிய படங்களுக்கு தன் அலவான அழகான நடிப்பை வெளிபடுத்திய விஜய் ஆண்டனி, இந்த படத்திலும் கச்சிதமாக செய்துள்ளார். பிச்சைக்காரனாகவும் யதார்த்த மனிதனாகவும் வாழ்ந்துள்ளார். வசனத்தை பேசும் தோரனையிலும் , பிச்சைக்காரனாக மாறும் போது ஏற்படும் கஷ்டத்தையும் ,அம்மாவை காப்பாற்ற போராடும் மனிதனாகவும் , நடிப்பா இது? இல்லை உண்மையான ஒருத்தனின் வாழ்க்கையை கேமிரா வைத்து எடுத்துவிட்டாரா ? என்று கேட்கவைக்கின்றது, விஜய் ஆண்டனியின் நடிப்பு.
ஒரே பிழை, ஆக்ஷன் இவருக்கு தேவையா? ஆக்ரோஷமாக பேசும் வசனங்கள் இவருக்கு வரவில்லை என்றே கூறவேன்டும்.

சாட்னா 

பிச்சைக்காரன் என்று தெரியாமல் காதலிக்கும் சாட்னா , பிச்சைக்காரன் என்று தெரிந்ததும் வெறுத்தும் , வெறுக்கமுடியாமலும் தவிக்கும் பெண்ணாக ரசிகர்களை காதலில் விழவைக்கின்றார். சாட்னாவிற்கு நடிக்கும் வாய்ப்பு கொஞ்சம் கிடைத்துள்ளது. கண்டிப்பாக இவர் தமிழில் நடிக்கும் வாய்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக வரவிருக்கின்றன. சாட்னா தயாராயிருங்கள்

பிச்சைகாரர்களாக நடித்தவர்களை முழுமனதோடு பாராட்டலாம் .மற்ற நடிகர்கள் அனைவருமே சரியான தேர்வே.



ஒளிப்பதிவாளர்

பிரசன்னா குமார்   ஒரு வேளை சோற்றுக்கு’ என்னும் பாடலில் பிச்சைக்கார்களையும் , பசி என்றால் என்னவென்று இவரின் கேமிரா பளிச்சென்று காட்டுகிறது. இவரின் உழைப்பு படத்தின் மிகபெரிய பலம்



இசையமைப்பாளர்

விஜய் ஆண்டனியின் இசையில் வெளியான பாடல்களில் ‘ஒரு வேளை சோற்றுக்கு’ ‘நெஞ்சோரத்தில்’  ‘உனக்காக வருவேன்’ மிக அருமை. இந்த பாடல்களை கேட்க்கும் போது எங்கோ மனதின் ஒரு மூலையில் வலிக்கின்றது. பின்னனி இசை படத்திற்காக என்னா வேன்டுமென்று முழுவதும் அறிந்து அதை கொடுத்துள்ளார். ஆனால் சிறிது "நான்" மற்றும் "சலீம்" படங்களின் பின்னணி இசையும் பின்னாலே வருகின்றது.


ரசிகன் பார்வை

இரு ரசிகர்கள் பேசியது  ;
'மச்சான் படம் இந்த அளவுக்கு நல்லாயிருக்கும்னு நான் நினைக்கள. என்னா கொஞ்சம் ஆக்ஷன் பில்டப் இல்லாமிருந்திருக்கலாம்'.


என் பார்வை

பிச்சைக்காரன்’ படத்திற்கு ஏற்ற தலைப்புஇனி அனைத்து மக்களும் பிச்சைக்காரனை திரும்பிபார்ப்பர்கலகலப்பாகவே அவர்களின் வாழ்க்கையை கூறி அனைத்து விதமான ரசிகர்களும் , விமர்சகர்கள் மனதிலும் ஒரு எதிர்பாராதா வித்தியாசமான அனுபவத்தை கொடுத்துள்ளான் இந்த பிச்சைக்காரன்.